Thursday, 8 June 2017

அன்ஹாலோனியம்

அன்ஹாலோனியம்
 (anh)
ANHALONIUM



நிரூபணம் செய்தவர்கள் :
மரு. வெய்ர் மிட்செல் மற்றும்
மரு. ஹாலே


அன்கோலினம் துயரர்கள் புற உலகத்திலிருந்து  தன்னை  விலக்கிக்  கொண்டு ஒளிமயமான கனவுலத்தில் வாழ்ந்து வருவார்கள். தன்முனைப்புள்ளவர்களாகவும் , யாருடனும் பேசவிரும்பாத மனிதர்களாக இருப்பார்கள்( INTRAVERT). 

தன்னைப்பற்றிய   உயர்வான  எண்ணமும் ,தனக்கு எல்லாம் இருப்பதாகவும் கருதி வாழ்ந்து வருவார்கள். பிளவு மனநிலைப்படைத்தவர்கள் (SPILIT PERSONALITY).

தன்னிலை மறந்தும் ( DEPERSONALIZATION) , இலக்கற்ற நிலையிலும் (DISORIENTATION) வாழ்ந்து வருவார்கள். தான் கைவிடப்பட்டுவிட்டதாகவும் , தனிமையில் இருப்பதாகவும் உணருவார்கள்.

அதிகமான மதச் சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். பிரபஞ்சம் , அண்டவெளி மற்றும்  ஆன்மா பற்றி நிறைய பேசுவார்கள்.

தமது   உடலிலிருந்து  ஆன்மா தனியாக பிரிந்து காற்றில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். தான் இருவராக இருப்பது போன்றும் ,  புறஉலகிலிருந்து பிரிந்து  சென்று,  மேலிருந்து கொண்டு கிழே நடப்பவைகளை கவனிப்பு போல் தோன்றும்.

மனஅழுத்தமும் , தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். தன்னுடன் இருப்பவர்கள் தன்னைப் பார்த்து மனதிற்குள் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் மேல் அவநம்பிக்கையும் , மனக்கசப்பும் இருக்கும். அதனால் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் செய்யவேண்டும் என்ற உந்துதல் இருக்கும்.

 அதீத ஆன்மிகச்  சிந்தனையின் காரணமாக  தன்முனைப்பு , பயம் மற்றும் இழப்புகள் முதலிவற்றைத் துறந்து வாழுவார்கள். குறிப்பாக , தமது குடும்ப உறவுகளைத் துறந்து வாழும்  மதபோதகர் மற்றும் ஆன்மிகக் குருக்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து என்று மரு.ராஜன் சங்கரன் குறிப்பிடுகிறார். இந்த ஆன்மிக வழியில் ஏதாவது தவறு நேர்ந்து அவர்களுக்கு  துன்பம் ஏற்பட்டால் இலகுவாக போதை மருந்திற்கு அடிமையாகி விடுவார்கள்.

இசையின் மீது இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். குறிப்பாக முரசு இசை கேட்டால் மிகுந்த மகிழ்ச்சிப் பரவசமடைவார்கள். இசை கேட்கும்  போது இவர்களது தொல்லைகள் யாவும்  குறையும். ஆனால் சத்தங்கள் இவர்களுக்குப் பிடிக்காது.


இம்மருந்து மூர்ச்சைநோய் (HYSTERIA), தூக்கமின்மை (INSOMNIA), மனப்பிறழ்வுநோய் (SCHIZOPHRENIA), பெண் வயதிற்கு வரும் காலத்தில் ஏற்படும் மருட்சி மனநிலை (HEBEPHRENIA) போன்றவற்றை நலமாக்கும் ஆற்றல் உடையது.

இவர்களுக்கு,  பசி உணர்வு இருந்தும் , அதனால் நாக்கில்  அதிகப்படியான உமிழ்நீர் சுரந்த போதிலும் உணவின் மீது விருப்பம் இருக்காது.

கண்ணில் பல நிறங்கள் தென்படும். பார்க்கும் பொருள்கள் பளிசென்றும் , மிகப்பிரகாசமாகவும் தெரியும். பார்வை நரம்புகளின் கோளாறுகளினால் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும். விழிகள் விரிந்திருக்கும். இமைகள் பலவீனத்தால் மூடிக்கொள்ளும்.


கோணல்மாணலாக பார்வைக் கோளாறுடன்  நெற்றியிலும்( இடது), பின்தலையிலும் தலைவலி இருக்கும். இந்தத் தலைவலி தொடர்ந்து பல நாட்களுக்கு நீடிக்கும், அதனால் இவர்களால் வேலை செய்ய இயலாது.

பக்கவாதம் ஏற்பட்டு நாக்கு செயல் இழந்து போவதாலும் , நினைவுகள் தாமதமாக ஏற்படுவதாலும் இவர்களுக்கு தொடர்ந்து பேசுவதில் சிரமம் இருக்கும்.

பகற்கனவில் இருப்பார்கள் (REVERIE). நேரத்தைக் கணிப்பதில் குறைபாடு இருக்கும். நேரம் மிக நீளமானதாகத் தோன்றும்.  பேசும் போது ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலும் நீண்ட    இடைவெளி இருக்கும்; அதனால் வரியை முடிக்க இயலாது.


அதிகப்படியான காம உணர்வு இருக்கும். இவர்கள் கடடவிழ்த்து விடப்பட்ட சிற்றின்பத்தைப் பரப்பும் இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதனால் பிற்காலத்தில் இவர்களுக்கு புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் மனநோய்கள் உருவாகும் தன்மையுடையவர்களாக  இருந்து , தனக்கு  மட்டுமல்ல சமூகத்திற்கே தவறு இளைக்கும் மனிதர்களாக இருப்பார்கள் என்று மரு.வித்தோல்காஸ் குறிப்பிடுகிறார்.

தன்பாலினமோகம் (HOMOSEXUALS) உள்ள ஆண்களுக்கு உடலுறவின் மீது விருப்பம் இருக்காது. ஆனால் தன்பாலின உறவின் போது அதிக விருப்பம் இருக்கும்.

பெண்களுக்கு அதிகப்படியான காம உணர்வும் , பெண்களிடையே பாலுணர்வு வேட்கையும் இருக்கும் (LESBIANISM).

கண்களை மூடினால் இவர்களது தொல்லைகள் அதிகரிக்கும். அதேபோல் அசைவினாலும் தொல்லைகள் அதிகரிக்கும். அசையும் போது இவர்களுக்கு குமட்டலும் , மயக்கமும் ஏற்படும்; அதனால் நடப்பதற்கு இவர்களுக்கு விருப்பம் இருக்காது.
>இருள்  மற்றும் படுத்திருக்கும் போது இவர்களது தொல்லைகள் குறையும்.


இம்மருந்து , மூளைச்சோர்வு (BRAINFAG) , சித்தபிரமை (DELIRIUM), ஒற்றைத்தலைவலி( MEGRIM) மற்றும் பிரகாசமான பார்வையால் ஏற்படும் பல மாயத்தோற்றங்கள் ( HALLUCINATIONS WITH BRILIYANT VISION)  போன்றவற்றை சரி செய்யும் என்று மரு. வில்லியம் போயரிக் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment