கோலோஸிந்திஸ்
(coloc)
COLOCYNTHIS
வரி குமட்டிக்காய்.
துயரர்கள் வயிற்று வலியை மையமாகக்
கொண்டு நம்மை அணுகினால் முதலில் நமது நினைவுக்கு வரும் மருந்து கோலோஸிந்திஸ். இந்த வலிகள்
பித்தப்பையிலோ (பித்தக்கற்கள்), சிறுநீர்குழாய்
(சிறுநீரகக் கற்கள் ), கருப்பை ( வலியுடன்கூடிய மாதவிடாய்) மற்றும் குடல்களை மையமாகக் கொண்டிருக்கும்.
இடுப்பிலிருந்து கடைசி வரை தெறிக்கும் வலி- மின்னல் மாதிரி தாக்கும். முக்கியமாக இடது இடுப்பு, இடது துடை, இடது முழங்கால் முதலிய இடங்களில் ஏற்படும். (SCIATICA). தாங்கமுடியாத வலி; நோயுள்ள பக்கத்தில் படுத்தால் நலம் தெரியும் அல்லது நன்றாக இருக்கும்.
இவர்கள் மிகச் சரியான மனிதராகவும் , அதிகம்
பேசாதவராகவும் இருப்பார். எது சரி , தவறு
என்பதை சரியாக புரிந்து வைத்திருப்பார். இவரது கருத்துடன் யாராவது மாறுபட்டால்
மனம் நொறுங்கிவிடும். தன்னைக் காயப்படுத்திவிட்டதாக நினைத்து தனது கோபத்தை
மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வார்.
அதாவது கோபம் ஏற்படும் குணம் உள்ளவர்கள்.
மனக்கசப்பு , அவமரியாதையினால் மனம் புழுங்குதல்
போன்றவற்றினால் தொந்தரவுகள் ஏற்படும் .
பிறருடன் பேசுவதற்க்கோ , கேள்விகளுக்கு
பதில் சொல்லவோ அல்லது நண்பர்களை பார்ப்பதற்கோ அல்லது அடுத்தவர்களை பார்ப்பதற்கோ இவர்களுக்கு
பிடிக்காது என்று மரு.லிப்பே
குறிப்பிடுகிறார்.
வலியுடன் மனஅமைதியின்மை இருக்கும், அதே
சமயத்தில் அவர்கள் கஷ்டப்படுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று
கருதுவார்கள்.( ரோஜர் மாரிசன்).
கோபத்தினால் கையில் இருக்கும் பொருளை வெளியே
தூக்கி எறிவார்கள். (ஆலன்)
கடுமையான இறுக்கிப்பிடிக்கும் , வெட்டும்
வலிகள். தாங்க முடியாத வயிற்றுவலி. குனிந்து வயிற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டும் ( டயாஸ்கொரியா இதற்கு எதிரானது ). அமைதியின்றி முறுக்கிக் கொண்டு துடிப்பார்கள். அமுக்கிக் கொண்டால் நலமாக இருக்கும்.இந்த வயிற்று வலியால் வாந்தியெடுப்பதும் , வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் உண்டு-இல்லாமலும் இருக்கலாம்.
கோலோஸிந்திசின் வலிகள்: திடீரென்று தோன்றுதல் , கடுமையாக
இருத்தல், இறுக்கிப்பிடித்தல் , விட்டுவிட்டு
வருதல் என்ற நான்கு தன்மைகளை உடையதாக இருக்கும். அவ்வலிகளை
அடக்குவதற்காக துயரர் உடம்பை முறிப்பார், நெளிப்பார், துடிப்பார் மற்றும் வலியினால் அழுவார்.
வயிற்றுவலி மிகக்கடுமையாக இருக்கும் போது
துயரர் தமது வயிற்றை மேசைகளின் முனைகளிலோ அல்லது படுக்கையின் மேலக்குமிழ் முனைப்பகுதியிலோ
வைத்து அழுத்திக்கொள்ளுவார்கள்
(மரு.ஹெரிங்) .
வயிற்றுப்போக்கின் போது அடிவயிற்றில் வலி
அல்லது தொப்பூழைச் சுற்றி வலி இருக்கும்; அதாவது குடல்களை இரண்டு கற்களுக்குக்கிடையில்
வைத்து நசுக்குவது போல் இருக்கும்.
வாயில்கசப்புச்சுவை
தொடர்ந்து இருக்கும்.
சிறிதளவு உணவோ அல்லது
தண்ணீரோ உட்க்கொண்டாலும் ஒவ்வொரு தடவையும் தவறாமல் மலம் வெளிப்படும் குணமுள்ள
வயிற்றுக்கடுப்பு. வயிற்றுக்கடுப்பில்
மலம்கழிக்கும் போது பயங்கரமான கடுகடுப்பு
. வலியின் கடுமை அதிகமாக ஆக குமட்டலும் அதிகரித்து வாந்தியில் முடியும்.
வலிகள் யாவும் மாலை நான்கு
மணிக்குத் (4-5 PM) தோன்றும்.(LYC, HELL,CAUST) அல்லது காலை ஆறு
மணிக்குத் தோன்றும்.
உருளைக்கிழங்கு
தின்றதால் வயிற்றுவலி.
தலைவலி; கடுமையாக அமுக்கினாலும், காபி
சாப்பிடுவதாலும் குறையும்.
நன்றாக பழுக்காத அல்லது
அழுகிப்போன பழங்களை சாப்பிட்டபிறகு வயிற்றில் ஜீரணம் கெட்டுப்போய் உடனடியாக
தொல்லைகள் ஏற்படும்.
பெண்களுக்கு
வலியுடன்கூடிய மாதவிடாய் இருக்கும்; கடுமையான இழுத்துப்பிடிக்கும் வலியினால்
மடித்து உட்க்கார்ந்து கொள்ளுவார்கள். ஏராளமான மாதவிடாய்ப்போக்கு இருக்கும். கோபத்தினால் மாதவிடாய் உள்ளமுக்கப்படும்.
இவர்களுக்கு தொல்லைகள்
இடது பக்கம் அதிகமாக தாக்கும்;வலது பக்கமும் இருக்கலாம் . குறிப்பாக இடதுகாதில் இடைவிடாத ஓசையும்
சப்தமும்,
முகத்தின்
இடது பக்கத்தில் வலி,
இடது கன்ன
எலும்பில் இறுக்கும்,
அமுக்கும்
உணர்ச்சிஇடது கண் வரை பரவி இருக்கும். இடது சினைப்பையில் வலி , பலமாக நசுக்கப்படும்
உணர்ச்சி மாதவிடாய்ப்போக்கு வெளிவர ஆரம்பித்த உடனே வலி குறையும்.
வலது தொடை நரம்பில்
வேக்காடு. தொடைநரம்பில் இழுக்கும் வலி. இடுப்புக்குக் கீழே தொடையின் பின்பாகம் முழுவதும்
வலி ; பிறகு மதமதப்பும் ஏற்படும்.
இறுக்கி அமுக்கினாலும், சூட்டினாலும் குறையும்.
வயிற்று வலியின்
போது குப்புற படுத்தால் (வயிற்றை அழுத்தி)
வலி குறையும். அதேபோல் வலியுள்ள
பக்கம் படுத்தால் வலிகள் குறையும். காபி
அருந்தினால் தொல்லைகள் குறையும்
(CHAM, IGN).
கோலோஸிந்திற்குப் பிறகு
சாமோமில்லா (கோபம்),
ஸ்டாப்பிசாக்கிரியா
( மனக்கசப்பு) மருந்துகள் நன்றாக வேலை செய்யும். மெர்குரியஸ்(வயிற்றுக்கடுப்பு)
முன்னும் பிறகும் உபயோகப்படும்.
No comments:
Post a Comment