இதயத்தில் வீக்கத்துடனும் , மூல நோயும் மற்றும் உயர் இரத்தஅழுத்தம் போன்ற நோய்க்குறிகளை கொண்ட ஒரு நாற்பது வயது ஆணின் கதை இது. அந்தத் துயரர் உடல் பருமனாகவும் , அழகாகவும் மற்றும் மிக நேர்த்தியாகவும் தெரிந்தார். அழகாக ஆடை அணிந்து , நல்ல கல்வியும் மற்றும் நல்ல பழக்கமும் கொண்டவராக இருந்தார். மிக உயர்ந்த கல்வி கற்றிருந்ததால் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் தனிப்பிரிவு மேலாளர் பதவியில் இருக்கிறார். மென்மையாகவும் , இனிமையான மொழியில் சரளமாகவும் என்னுடன் உரையாடினார். முகத்தில் நிறைய வியர்வை தோன்றியது, அதை தனது கைக்குட்டையால் ( மிகவும் சுத்தமாக இருந்தது) துடைத்துக் கொண்டே இருந்தார்.
அவருக்கு கீழ்காணும் தொல்லைகளும் இருந்தன:
·
காற்று உப்பிசம் ;
சாப்பிட்டவுடன்
அதிகரிக்கும்(<).
·
மலத்துவாரத்தில் வலி ;
மலம் கழித்த பிறகு
அதிகரிக்கும்(<).
·
இதயத்தில் படபடப்பு ;
மனக்கிளர்ச்சி
உண்டானால் அதிகரிக்கும்(<).
·
குடல் புழுக்கள் தொல்லையும் இருந்தது.
மருத்துவச் சோதனைக் குறிப்புக்கள்:
·
X-RAY : இதயத்தில் வீக்கம் இருப்பதை ஊடுகதிர் நிழற்ப்படம் காட்டியது.
·
2D ECHO(எதிரொலி): இதயத்தின் சுவர்ப்பகுதி
கெட்டிப்பட்டு மிகைவளர்ச்சி எனக்காட்டியது.
பொதுவான குறிகள்:
விருப்பம் : இறைச்சி, மசால் உணவு, கொழுப்பு, பருப்பு மற்றும் கொட்டை
வகைகள்.
வெறுப்பு : இனிப்பு.
உணவு (<) : காரமான, உறைப்பான உணவு மற்றும்
முட்டை.
மலம்: : நிறைவாக வெளியேறாத தன்மை.
முதல்ப் பகுதி கெட்டியாகவும், அடுத்து
மிருதுவாகவும் வெளியேறும்.
கனவுகள் : வேலையைப் பற்றி. விபத்தில்
காயமடைந்தவர்களுக்கு அவர் உதவி செய்வது
போல் (SYMPATHETIC).
துயரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவருடைய பதில்களும் :
கேள்வி: உங்களுடைய குழந்தைப்பருவம் எப்படி இருந்தது?
பதில் : திருப்தியாக இருந்தது. எனது தந்தை மாவட்ட இணைக்கலெக்டராக பணியில் இருந்தார். ஆனால், நான் எட்டாவது
படிக்கும் போதே இறந்துவிட்டார். அதன் பிறகு எல்லாமும் மாறிவிட்டது. நாங்கள் நிறைய
கஷ்டத்திற்கு உள்ளானோம். எனது அண்ணனுக்கு வேலை கிடைத்தது. நானும் எனது தம்பியும் , என்னுடைய அம்மாவின் ஓய்வு
ஊதியத்தின் மூலம் படித்து வந்தோம். அப்போதெல்லாம் எனது உறவினர்கள் மூலம்
எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை ( மாமா). எங்கள் சொந்த முயற்சியின்
காரணமாகவே நாங்கள் வாழ்ந்து வந்தோம். பின்னாளில் , நான் வேலையில் சேர்ந்தேன். அத்துடன் கிரிக்கெட் போட்டிகளுக்கு
நடுவராகவும் பணிபுரிவேன் ( கிரிக்கெட்டும் விளையாடுவேன்) . வேலை செய்து கொண்டே
மேற்கொண்டு படித்து B.COM., மற்றும் BSW பட்டங்களையும் பெற்றேன்.
ஆனால் நான் வேளையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கிய உடன் எனது அம்மா ஒரு
விபத்தில் இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் மொத்தம் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. அனைவருக்கும் இடையில் மிக
நல்ல முறையில் உறவு இருந்து வருகிறது. எனது அம்மாவின் மேல் எனக்கு
அளவு கடந்த நம்பிக்கையும் ,
மிகுந்த அன்பும்
இருந்தது.
கேள்வி : உங்களது சுபாவம் எப்படி?
பதில : எனது அலுவலகத்தில் மிகவும் கீழ்படிதலுடனும், கட்டுப்பாடுடனும்
நடந்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனால் வீட்டிற்கு சென்றவுடன் வித்தியாசமானவனாக
மாறிவிடுவேன். வீட்டில் யாரவது எனக்குப் பிடிக்காத வகையில் நடந்து கொண்டால் கோபம்
வந்துவிடும். குறிப்பாக, வீட்டில் உள்ள பொருள்கள் சுத்தமாக
இல்லாவிட்டால் எனக்குப்பிடிக்காது.
கேள்வி : சரி அடுத்து ?
பதில் : பிறகு, வேறொரு பெரிய கம்பெனியில்
எனக்கு வேலை கிடைத்தது. அத்துடன் விரைவாக பதவி உயர்வும் கிடைத்தது (இதற்கு
எனது ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மற்றும்
இரக்கச் சுபாவமுமே காரணம்). அதற்குத் தகுந்தவாறு எனது கம்பெனியின் வருமானத்தைப்
அதிகரிக்கச் செய்தேன்.ஆனால்,
அலுவலகத்தில்
என்னால் சுதந்திரமாக நடந்து கொள்ள முடியவில்லை. அதனாலென்னவோ, என்னுடைய அடக்கி வைக்கப்பட்ட
உணர்ச்சிகளை வீட்டில் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் வீட்டில்
எரிச்சலுடன் நடந்து கொள்வேன்.
கேள்வி : எப்போதாவது செயற்கைத்
தன்மையில் நடந்து கொள்வீர்களா ?
பதில் : திரு.அ , அவர்கள் தினமும்
அலுவலகத்திற்கு தாமதமாகவே வருவது எனக்குத் தெரியும். அதற்காக அவரைத்
தண்டிக்கவேண்டும் என்று உண்மையாகவே விரும்பினேன். (அவர் குடித்து விட்டுத்தான்
அலுவலகத்திற்கு வருவார்).
ஆனால் அவருக்கு
ஆதரவாக சில அதிகாரிகளின் தலையீடு இருந்ததால் அவர் மேல் என்னால் ஒழுங்கு நடவடிக்கை
எடுக்க இயலவில்லை.
இங்கே நான் தவறு
செய்துவிட்டதாகவும் ,
நியாயம் தவறி நடந்து
கொண்டதாகவும் உணருகிறேன். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது. மேலும், என்னிடம் யாராவது பொய் பேசினால் எனக்குப்பிடிக்காது.
அப்போதெல்லாம் எனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயலுவேனே தவிர அவர்களைத்
தண்டிக்க நடவடிக்க எடுக்க மாட்டேன். அத்தகைய தருணங்களில் எனக்கு குற்ற
உணர்ச்சி ஏற்படும். அதேபோல் , கம்பெனியின் நலனைப்
பாதிக்கும் அளவிற்கு ஏதாவது பிரச்னை தோன்றினால் எனக்கு நெஞ்சில் படபடப்பு
தோன்றிவிடும். அந்தச் சமயத்தில் மூச்சை ஆழமாக இழுத்து சுவாசம் செய்து கொள்வேன்.
கேள்வி : வேறு ஏதாவது
மனதைப்பாதிக்கும் நிகழ்வுகள் இருக்கிறதா ?
பதில் : பொதுவாக , நான் யாருக்கும் தண்டனை
கொடுக்க விரும்புவதில்லை. இருந்தாலும், ஊழியர்கள் யார் மீதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
காலதாமதமாகும் போது எனக்கு மனத்தாக்கலைவு ஏற்படுவதுண்டு. எப்போதாவது எந்த தவறும் செய்யாத நல்ல ஊழியர்களுக்கு தவறுதலாக தண்டனை
கொடுத்துவிடுவேன். அப்போதெல்லாம் எனக்கு குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும். இதுபோன்ற சம்பவம் எப்போதாவது நடந்து
விடுவதுண்டு.
கேள்வி : உங்களது குடும்ப வாழ்க்கை
எப்படி?
பதில் : எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் மிகவும் அழகானவள் என்று கூறாவிடினும் அழகாகவும் , நாகரிகமாகவும் , அனுசரித்து நடந்து கொள்பவளாகவும், சமூகத்தின் மீது அக்கறை
உள்ளவளாகவும் இருக்கிறாள். ஆனால், மிகவும் வெகுளி. அதனால், அவளை யாரவது தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்ற
கவலை எனக்கு அதிகம் உண்டு. அவள் சுதந்திரமான தற்கால நாகரிக வாழ்க்கையை நேசிப்பவளாக
இருக்கிறாள். அடிக்கடி வீட்டிற்கு தாமதமாக
வருவதும் உண்டு. அந்த நாட்களில் நான்
மிகவும் கவலையும்,
பதட்டமும்
அடைவதுண்டு. அதுவே எனக்கு கோபத்தையும் ஏற்படுத்துவதுண்டு.
கேள்வி : வேறேதாவது கூற
விரும்புகிறீர்களா?
பதில் : சில நாட்களுக்கு முன்பு எனது
கம்பெனியில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அந் நிகழ்ச்சி எனது
வேலையையே பாதிக்கும் அளவிற்குப் போய்விட்டது. அப்போது நான் மிகவும் பதட்டமடைந்து
விட்டேன். எனது குடும்பம் பாதுகாப்பற்ற
நிலைக்குப் போய்விடுமோ என்ற உணர்வு ஏற்பட்டது. இதே போன்ற வேறொரு தருணத்தில் தான்
எனக்கு முதல் தடவையாக நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டது. பிறகு, இது எனக்கு எதிராக
நடத்தப்பட்ட சூழ்ச்சி என்று தெரிந்து கொண்டேன். இது போன்ற மற்ற தருணங்களில் நான் உணர்ச்சி வசப்படக்கூடாது
என்று உறுதி செய்து கொண்டேன்.
கேள்வி : வேறேதாவது?
பதில் : காலையில் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும். அதனால்
உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன்.
கிரிக்கெட்டும் விளையாடுவேன்.
கேள்வி : உங்களது கனவுகளைப் பற்றிக்
கூறுங்கள்?
பதில் : பொதுவாக எனக்கு கனவுகள்
வருவதில்லை, எப்போதாவது
அலுவலக வேலைபற்றி கனவு வரும். ஒரு முறை விபத்தைப் பற்றிய கனவு வந்தது ( தெரியாத மனிதர்கள் -சாலை விபத்து). அடுத்தவர்களுக்கு
உதவி செய்ய நான் விரும்புவேன். அப்படியே
நடந்தும் கொள்வேன். எனது கம்பெனியில் வேலைசெய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏதாவது
உதவிகள் செய்துள்ளேன். யாருக்காவது உடல் நலம் குன்றினால் அவர்களை உடனே சென்று
பார்க்க எனது மனம் விரும்பும்.
அலுவலத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குறைந்த பட்சம் அவர்களை
மருத்துவமனையில் சென்று பார்த்து விட்டு வந்துவிடுவேன். அவர்களை பார்ப்பதற்கு எனது
வேலை தடை செய்யமுடியாது.
ஒட்டுமொத்தக் குறிகளின் தொகுப்பு :
·
பொருட்கள் சரியான இடத்தில் இல்லாவிட்டால்
அமைதியற்ற நிலை.
·
உள்ளமுக்கப்பட்ட உணர்ச்சிகள்,
·
கனிவான அல்லது மிருதுவான , வளைந்துகொடுக்கும் தன்மை.
·
எளிதில் திருப்தியடையாத தன்மை.
·
இரக்க சுபாவம்.
·
எதிர்பார்ப்பினால் பதட்டம்.
·
விருப்பம் : மசால் உணவு, கொழுப்பு.
·
வெறுப்பு: முட்டைகள்.
துயறரைப் பற்றிய விளக்கம்:
இந்தத் துயரர் எளிதில் திருப்தி அடையாதவராகவும் ( FASTIDIOUS) , மிருதுவான (MILD) மற்றும் பண்பட்ட ( POLITE) மனிதராக இருக்கிறார். இவருடனான உரையாடலுக்குப் பிறகு, நல்ல நிலைக்கு வருவதற்கு
இவர் குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கை முழுவதும் போராடி இருக்கிறார் என்று
தெரிந்து கொண்டேன். மேலும் இவர் மிகவும் இரக்க மனம் படைத்தவர் (SYMPATHETIC).
குழந்தைப் பருவத்திலிருந்து எல்லா விசயங்களிலும் ஆர்வம் மிக்கவராக
இருக்கிறார். அதேபோல் படிப்பதிலும், எல்லா செயல்களையும் சிறப்பான முறையில்
செயல்படுத்துபவராக உள்ளார். பின்னர், கஷ்டப்படும் நாளில் நல்ல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து நிர்வாகத்திற்கும்
ஊழியர்களுக்கும் இடையில் பாலமாக இருந்திருக்கிறார்.
எளிதில் பதட்டமடைபவராக இருப்பதால் பலமுறை நெஞ்சு படபடப்பு ஏற்ப்பட்டுள்ளது.
வேலை பார்க்கும் இடத்தில மேலெழுந்தவாரியாக நடந்து கொண்டதால் அவருடைய மன
உணர்ச்சிகளை உள்ளமுக்கி வைத்துள்ளார். மேலும் அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக
இருக்கிறார்( SENTIMENTAL) .
மருந்துத் தேர்வு: கார்சினோசின் (CARC) 200
வது வீரியத்தில் ஒரு
தடவை மட்டும்.
மருந்திற்குப் பிறகு விளைவுகள்:
கார்சினோசின் 200 வது வீரியத்தில் ஒரு தடவை
மருந்து கொடுத்த உடனே கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. பதினைந்து நாட்களுக்கு
பிறகு அவரது இரத்த அழுத்தம் சரியான அளவிற்கு வந்தது, நெஞ்சு படபடப்பு
ஏற்படவில்லை. அதன்பிறகு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படவில்லை அத்துடன் மூலமும்
தொந்தரவு செய்யவில்லை.
ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் பரோடோவிற்கு தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார்.
அங்கேயே அவருக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. இப்பொழுதும் அவர் தொலைபேசியில்
தொடர்பு கொள்வார். ஆனால் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லை. இந்தத் துயரர் மிகச்
சிறப்பாக நலமடைந்துள்ளார்.
மருந்துகளுக்கிடையே ஒப்பீடு:
ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தும் இந்தத்
துயறருக்கு மிக அருகில் வந்தது.
ஆனால் ஆர்சனிக்கம் மருந்தில்
அதிகமாக மன அமைதியின்மையும் (RESTLESS) ,
எச்சரிக்கைஉணர்வும் (CAUTIOUS) மேலோங்கி இருக்கும் . ஆனால் கார்சினோசின் மருந்தில் அதிக பொறுப்புணர்வும் (RESPONSIBLE) , கடமை உணர்வும் ( DUTY CONSICIOUS) அதிகமாக இருக்கும். அதே
சமயத்தில் அவர்கள் எந்த வேலையையும் மிகச் சரியாக அல்லது முழுநிறைவான வகையில் (PERFECT) செய்ய வேண்டும் என்று சிரத்தை எடுப்பார்கள், அதுவே அவர்களுக்குச்
சிரமத்தைக் கொடுக்கும்.
ஆங்கிலம் : மருத்துவர். அமர் டி நிகாம் ( Dr. AMAR D NIGAM )
No comments:
Post a Comment