1. குழந்தைகள் பார்ப்பதற்கு
அசுத்தமாக இருக்கும். மிகுதியான தொல்லைகள் கொடுக்கும், உதைக்கும், அடிக்கும். எப்பொழுதும்
தன்னைத் தூக்கிக்கொண்டோ அல்லது தாலாட்டிக் கொண்டோ இருக்கச்செய்யும். சதா மூக்கில்
விரலை விட்டுக் குடைந்து
கொண்டேயிருக்கும்.-சினா (CINA).
2. குளிர்ந்த நீரால் கழுவினாலோ
அல்லது சுத்தம் செய்தாலோ சதா அலுத்து கொண்டிருக்கும்- ரஸ்டாக்ஸ்; சல்பர் (RHUS-T;SULPH).
3. யாராவது தன்னைத் தொட்டாலோ
அல்லது கூர்ந்து பார்த்தாலோ குழந்தைகளுக்கு தொல்லையாக இருக்கும்-ஆண்டிமோனியம் குருடம் (ANT-C).
4. குழந்தைகள் சில பொருள்களைக்
கண்டவுடன் அதைக் கேட்டு அழும்; கொடுத்தால் உடனே தூர எரிந்து விடும்- ஸ்டாபிசாக்கிரியா (STAPH).
5. குழந்தைகள் தொட்டிலில்
கீழ்நோக்கி படுக்க வைக்கும் பொழுது அழுதுகொண்டே தாவிப் பிடிக்கும். மாடியிலிருந்து
கீழ்நோக்கி இறங்கி வந்தால்கூட அழும-போரக்ஸ் (BORAX).
6. சாப்பிட எதையும் விரும்பாமல்
தண்ணீரை மட்டும் விரும்பிக் குடிக்கும்-கெல்லிபோரஸ் (HELL).
7. குழந்தை பகல் முழுவதும்
அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் .
இரவு வந்ததும் அமைதியில்லாது தொல்லைகள் கொடுக்கும்- ஜலப்பா (JAL).
8. குழந்தைகளுக்கு கடுமையான
முன்கோபம். எல்லோருடனும் சண்டை போடும். காரணமில்லாமல் ஊளையிட்டுக் கொண்டும் , அழுது கொண்டும் , அவமரியாதையான சொற்களுடன்
ஆத்திரமாகப் பேசுவார்கள்- சாமொமில்லா (CHAM).
9. குழந்தை காய்ச்சலின் போது
படுக்கையிலிருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயத்தினால் படுக்கையை அல்லது தாயாரைப்
பிடித்துக் கொள்ளும்- ஜெல்சிமியம் (GELS).
10. குழந்தை சதா பற்களை அல்லது
ஈறுகளைக் கடித்துக்கொண்டே இருக்கும்- பைடோலக்கா (PHYT).
11. குழந்தை தனியாக இருக்கப்
பயம். கையை யாராவது பிடித்துக் கொள்ள விரும்பும். தலையணையிலிருந்து திரும்பத்
திரும்ப தலையை திடீரென சுண்டிக் கொள்ளும்- ஸ்டிராமோனியம் (STRAM).
12. இரவில் குழந்தைகள் நீலம்
பூரித்து மூச்சுவிடத் திணறும். வாய்வழியாக மூச்சுவிடும். பின்பு தூங்கி விடும்- சாம்புகஸ் (SAMB).
13. படுக்கையில் அசையாமல்
படுத்திருப்பதால் அனுகூலமும் சிறிது அசைவதனாலும் அதிகச் சிரமப்படும்
குழந்தைகளுக்கு-பிரையோனியா (BRY).
14. இனிப்புப் பொருள்களை அதிகமாக
விரும்பி சாப்பிட்டதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு- அர்ஜென்டம் நைடிரிக்கம் (ARG-N).
15. சிறிய ஒலி அல்லது சிறு சச்சரவும்
குழந்தைகளுக்குத் தொல்லையாகத் தென்படும்- நக்ஸ்வாமிக்கா ( NUX-V).
No comments:
Post a Comment