லாக்கசிஸ்- (LACH)
பிரிவு :
விலங்கினம்
நிருபணம் செய்தவர் : மரு . ஹெர்ரிங்
I.முன்னுரை (Introduction) :
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் வாழும் ஆறு முதல் ஏழு அடி நீளம் உள்ள
சுருக்குக்கு ( Surukuku) என்ற கொடிய பாம்பின் விஷத்திலிருந்து
தயாரிக்கப்பட்ட மருந்து இது. கி.பி.1828 இல் மருத்துவர்.கான்ஸ்டன்டைன் ஹெர்ரிங் தமது உயிரை பணயம் வைத்து இம்மருந்தை
நிருபணம் செய்து ஹோமியோபதி உலகிற்கு அளித்துள்ளார் என்றால் அதில் மிகை இல்லை. உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும்
ஆழ்ந்து மற்றும் நீடித்து வேலைசெய்யும் பல்முனைநிவாரணி என்று அழைக்கப்படும்
மருந்துகளில் இதுவும் ஒன்று. இருந்தபோதிலும்,
மனம், நரம்பு மண்டலம், இருதய ரத்தக்குழாய்கள் , தோல் மற்றும் பூந்தசைகள் , சுவாசகோசங்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் பெண்
பிறப்புறுப்புகளில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. குறிப்பாக
பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்
போதும்,
நின்ற பிறகு (Climaxis) ஏற்படும் மனம்
மற்றும் உடல்ரீதியான தொல்லைகளுக்கு இது
மிகவும் சிறந்த மருந்து. மேலும் இம்மருந்து உடலின்
இடது பக்கத்தைத் பாதிக்கும் தன்மையை உடையது. இம்மருந்திற்குரிய துயரர்கள் வெப்ப உடல்வாகு உடையவர்களாக இருப்பார்கள்.அதனால்
இவர்களுக்கு வெப்பம் அல்லது சூடு ஒத்துக்கொள்ளாது. பெண்கள் அதிகமாக பேசும்
தன்மை உடையவர்களாகவும்,
சந்தேகம் மற்றும்
பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் நகைச்சுவையாகவும், கேலியாகவும் மற்றும்
சத்தமாகவும் பேசுவார்கள். பெண்களுக்கு மாதவிடாயின் ஆரம்பத்தில் அல்லது முடிவடையும்
சமயத்தில் இம்மருந்து கொடுத்தால் சிறப்பாக வேலை செய்கிறது. அதனால் இம்மருந்து
ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உபயோகப்படுகிறது.
II.இம்மருந்துக்கான சிறப்புக் குணங்கள்(Nucleus)
·
இடது பக்கமே தொல்லைகள் காணப்படும் அல்லது இடது பக்கத்திலிருந்து வலது பக்கம்
செல்லும்.
·
தூக்கத்தில் தொல்லைகள் அதிகமாகும் ; அதேபோல் தூங்கி எழுந்த பிறகும் தொல்லைகள் அதிகரிக்கும் ( தொல்லைகளுடன்
விழித்தெழுவார்). நன்றாக தூக்கிய உணர்வு இருக்காது.
·
வெப்ப உடல்வாகு. அதனால் சூரிய வெப்பத்தை இவர்களால் தாங்க இயலாது. அதே போல்
சூடான உணவு அல்லது பானங்கள் தொல்லைகளை அதிகரிக்கும்.
·
கழிவுகள் வெளியேறினால் இவர்களுக்கு நன்றாக இருக்கும்; குறிப்பாக மாதவிடாய் ஏற்பட்ட பிறகு தொல்லைகள் குறையும்.
·
மிகவும் கூருணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் மெதுவாகத் தொட்டாலும்(Touch) , அமுக்கினாலும் (Pressure) தாங்க முடியாத உணர்ச்சி ஏற்படும்.
·
கறுநிறமான ( Dark) ,
கட்டியான
இரத்தப்போக்கு ( மாதவிடாய் மற்றும் மூக்கிலிருந்து வெளிப்படும் இரத்தப்பெருக்கு).
·
மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும் காலங்களில் தொல்லைகள் அதிகரிக்கும் (Climaxis). உடலில் சூடான அலைகள் ஓடுவது போன்ற உணர்ச்சி மற்றும் சூடான வியர்வை தோன்றும்.
·
கட்டுமீறிய,
வாய் ஓயாமல் பேசும்
குணம் ( Frantic Loquacity) அல்லது வெறிபிடித்த
வாயாடித்தனம் என்றும் கூறலாம் ( ஒரு விசயத்திலிருந்து மற்ற விஷயங்களுக்குத்
தாவுவார்).
·
அதிகமான பொறாமை உணர்ச்சி.
·
சந்தேகக்குணம் மற்றும் அவநம்பிக்கை.
·
இறுக்கமான துணிமணிகள் அணியும்போது ஏற்படும் அழுத்தத்தை இவர்களால் தாங்க இயலாது
( குறிப்பாக கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில்) . தளர்ந்த உடை அணிய
விரும்புவார்கள்.
·
அடிபட்ட,
புண்பட்ட அல்லது
பாதிக்கப்பட்ட பகுதிகள் நீலநிறம் அல்லது
கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
·
இதயம் மற்றும் தொண்டைப் பகுதியில் இறுக்கமான உணர்ச்சி.
III.பண்பியல்பு குறிகள் (Characteristic
Symptoms)
லாக்கசிஸ் துயரர் தொடுவது, அல்லது மேலே படுவது ஆகியவைகளுக்கு மிகவும் கூருணர்ச்சி மிக்கவராக இருப்பார் என்பது மிகவும் வினோதமான
குறியாகும். சட்டையின்
கழுத்துப்பட்டை கழுத்தின் மீது உறைவது, இடுப்பு, அடிவயிறு , அரையிடுக்குகள் ஆகிய இடங்களின் மீது இறுக்கமான ஆடை
அணிவது இவர்களுக்குப் பிடிக்காது அல்லது இவர்களால் தாங்க இயலாது. ஆடைகள் தொளதொளவென இருக்கவேண்டும் (Apis).
தொண்டையை அல்லது கழுத்தை எவ்வளவு மெதுவாகத் தொட்டாலும் அல்லது
வெளிப்பகுதியிலிருந்து அழுத்தினாலும் தாங்க முடியாது. தொண்டைபகுதியில் எது
நடந்தாலும் ,
ஏன் படுக்கைவிரிப்பு
மேலே பட்டாலும் வேதனையைக் கொடுக்கும்.
தூங்கிய பிறகு அல்லது நீண்ட தூக்கத்திற்குப் பிறகு விழிப்பு ஏற்பட்டவுடன் தொந்தரவுகள் தோன்றும்
அல்லது அதிகரிக்கும். குறிப்பாக மூச்சு நின்றுவிடும், ஆஸ்த்மா அதிகரிக்கும். தூக்கத்தில் வலிப்பு ஏற்ப்படும் ( Cupr, Bufo) .
தொண்டைஅடைப்பான் (Diphtheria) , தொண்டைச் சுரப்பிகளில்
வேக்காடு (Tonsilities) , முதலிய நோய்த்தாக்குதலின் போது சூடான பானங்கள்
அருந்தினால் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொல்லைகள் அதிகரிக்கின்றன.
இரத்தப்போக்கு ஏற்படும்போது கருகிய வைக்கோல் போல் சிறு சிறு
துணுக்குகள் கலந்த கெட்டுப்போன இரத்தம் வெளிப்படும். அதேபோல் மூக்கு, வயிறு, சுவாசகொசங்கள், கருப்பை, குடல்கள் மற்றும் குழிப்
புண்களின் அடிப்பகுதியிலிருந்தும் வெளியாகும் இரத்தப்போக்கில் இத்தகைய
கறுப்புநிறப்படிவம் (Sediment) காணப்படும்.
தோலில் வெளிப்படும் சொறி,சிரங்கு முதலியவைகள்
கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிகமான குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மூக்கு சிவந்திருக்கும்.அதேபோல்
இருதயநோயின் போது மூக்கு சிவந்திருக்கும்.
முகத்தில் தோன்றிய அக்கி ( Erysipelas) நல்ல சிவப்பாக இருக்கும். ஆனால்
மிகவிரைவில் கருநீல நிறமாக மாறிவிடும். ஈறுகள் நீல நிறமாகி வீங்கி
பஞ்சுபோல் காணப்படும்.
தொண்டைஅடைப்பான் (Diphtheria), சீழ் கொப்புளங்கள் (Boils) இராஜப்பிளவை (Carbuncle) , குழிப்புண்கள் மற்றும்
சுருண்டுகொண்ட அசுத்த இரத்தகுழாய் ( Varicose veins) போன்றவைகள் கருஞ்சிவப்பு
அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்.
லாக்கசிஸ் கல்லீரலைத்தாக்கி மஞ்சட்காமாலை நோயை உருவாக்கும். அதனால் தோல்
மற்றும் கண்களின் வெண்விழிகளும் மஞ்சளாகி விடும்.
வியர்வை குளிர்ச்சியாகவும் , உள்ளாடைகளில் மஞ்சள்கறையை ஏற்ப்படுத்தும் தன்மையுடனும்
இரத்தக் கறைபோன்றும் இருக்கும் (LYC).
உடலின் உட்புறத்தில் அதாவது அடிவயிற்றில் பந்து ( BALL) உருளுவது போன்ற உணர்வு இருக்கும். சிறுநீர்பையிலும் இத்தகைய உணர்வு இருக்கும்.
காற்றின் மீது அதிகவிருப்பம்; ஆனால் காற்று மெதுவாகச் சற்று தூரத்திலிருந்து வந்து உடலின்
மீது படவேண்டும் (வேகமாக பக்கத்தில் வேண்டும்-Carb.v).
கைகளில் மற்றும் கால் பாதங்களில் காந்தள்தன்மை. அதனால் அப்பகுதிகளை மூட
விரும்பமாட்டார்கள் ,
காற்றும்
தேவைப்படும்.
குடிகாரர்களுக்கு அதிக இரத்த
அழுத்தத்துடன் தலை வலி. பெண்களுக்கு
மாதவிடாய்ப் போக்கு வெளி வர ஆரம்பித்தவுடன்
தலைவலி நிற்கும்;
போக்கு நின்றவுடன்
திரும்பவும் வரும். மாதவிடாய்ப் போக்கு நிரந்திரமாக நின்ற பிறகு தலைவலி.
லாக்கசிஸ் மருந்திற்கும் தொண்டைக்கும் மிகுந்த உறவு இருப்பதுபோல்
சினைப்பைகளுக்கும் இருக்கிறது. இரண்டு சினைப்பைகளிலும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் முதலில் இடது சினைப்பையும்
அதன்பிறகு வலது சினைப்பையும் பாதிக்கப்படும். இடது சினைப்பையில் வீக்கமும்
, கட்டியும் இருக்கும். அதே
சமயத்தில் சீழ் பிடித்திருந்தால் அதையும் இம்மருந்து குணப்படுத்துகிறது.
துயரர் டைப்பாய்டு காய்ச்சலினால்
பாதிக்கப்பட்டிருக்கும் போது இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திற்குப் பிறகே
லாக்கசிஸ் தேவைப்படும். அத்தருணத்தில் தான்
முகம் சுருங்கி ,
கீழ்த்தாடை தொங்கி, நாக்கு காய்ந்து மற்றும்
கறுப்பாகி உணர்விழந்த நிலையில் இருப்பார். இந்தச் சமயத்தில் லாக்கசிஸ் மிகவும்
நன்றாக வேலை செய்யும்.
பக்கவாதம் ( Paralysis) உடலின் இடது பாகத்தைத் தாகும்; இடுப்புச்சந்துவாதம் (Sciatica) வலது புறத்தைத் தாக்கும்.
பாம்பைப் போன்று நாக்கு வெளியே வந்து உள்ளே செல்லும்.
பருவ நிகழ்வு ( Periodicity) :
பதினான்கு நாட்களுக்கு ஒரு முறையும், ஒவ்வொரு கோடைகாலத்திலும், வருடத்திற்கு ஒரு முறையும்
துயரர் பாதிப்புக்கு உள்ளாவார்.
மலப் பெருங்குடல் பகுதியிலும் , குதப்பகுதியிலும் அநேக சிறிய சுத்தியல்களால்
அடிப்பது போன்ற உணர்ச்சி இருக்கும்.
IV.மனக்குறிகள்(Mind):
அதிகமாகப் பேசும் குணம் ( Great Loquacity-Agar., Hyos., Stram); எப்பொழுதும் பேசிகொண்டிருக்க
விரும்புவார்.ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவுவார். ஒரு
வார்த்தையை வைத்து ஒரு கதையையே உருவாக்கி விடுவார் அல்லது ஒரு கதைக்குள் மற்றொரு
கதையா நுழைப்பார். குறிப்பாக
சொல்லவேண்டுமென்றால் துயரர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார் மருத்துவர் பேசவோ அல்லது
கேள்வி கேட்கவோ இடைவெளி கொடுக்கமாட்டார்.
மிகவும் பொறாமைக்குணம் ( Jealousy and Suspicious-Apis, Nux-V) ;
காரணமே இல்லாமல்
பொறாமைப்படுதல். பொறாமையும் சந்தேகமும் இவர்களது முழு மனதையும் பிடித்து
ஆட்டுவிக்கும். அதுவும் மாதவிடாய்
நிரந்தரமாக நிற்கும் சமயத்தில் தனது கணவன் தன்னைவிட்டு பிற பெண்களுடன் தொடர்பு
வைத்துக்கொள்வான் என்று சந்தேகம் கொள்வாள்; அவனை கண்காணிக்கவும் செய்வாள். தனது பெண் நண்பர்கள்
மேல் எந்தக் காரணமும் இல்லாமல் சந்தேகம் கொள்வார்கள். தனக்கு இருதய நோய் ஏற்படப்
போகிறது என்றும்,
பைத்தியம் பிடிக்கப்
போகிறது என்றும் கற்பனை செய்து கொள்வார் .தனது கணவன், நண்பர்கள் மற்றும்
குழந்தைகள் ஆகியோர்கள் தனக்கு தீங்கு செய்து விடுவார்கள் என்றும், பைத்தியக்கார இல்லத்திற்கு
அனுப்ப முயற்சிக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்வார். தனது உறவினர்கள்
உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று நினைத்து சாப்பிட மறுத்துவிடுவார்.
அதிக ஞாபகமறதி ; படித்த மற்றும் கேட்ட
விஷயங்களை மறந்து விடுதல். பேசுவதிலும் , எழுவதிலும் தவறு செய்தல். அவசரத்துடனும்
சம்பந்தமில்லாமலும் பேசுதல்.
மனோததுவரீதியாகவும் ,
சமூகம் மற்றும்
தொழில்ரீதியாகவும் தான் மற்றவர்களை விட தகுதி படைத்தவன் என்ற எண்ணம் (ONEUPMANSHIP) .
மோக உணர்வு அதிகம் (Amorous) . காதல் பாங்கு மிக்கவர்கள் (Amative).
தற்கொலை செய்து கொள்வது பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்வாள். குணப்படுத்த இயலாத துன்பம்
நிறைந்த நோயிலிருந்து விடுபட செயற்கை முறையிலான சாவை விரும்புவார்கள் (Euthanasia).
காலையில் எழுந்தவுடன் சோகமாக இருப்பார்கள்; மற்றவர்களோடு கலந்து சேர்ந்திருக்க விருப்பம் இருக்காது. நேரத்தை அல்லது
பொழுதை கணக்கிடுவதில் தடுமாற்றம்.
அதிகமாக படித்ததால் பைத்தியம் பிடித்தல். சமயத் தொடர்புடைய விஷயங்களில்
பைத்தியக்காரமான நம்பிக்கை ( Religious Insanity) .
வளவளவென பேசுதல்,
பாட்டுப்பாடுதல், சீல்க்கை ஒலி எழுப்புதல் , தரையில் ஊர்ந்து செல்லுதல் , அடிக்கடி துப்புதல் , ஒழிந்து கொள்வது அல்லது மறைந்து
கொள்வது மற்றும் காரணமில்லாமல் சிரித்தல்
போன்ற மனக்குறிகளும் இருக்கும்.
பயம் (Fear) : தூங்குவதற்குப் அல்லது கீழே படுக்கப் பயம்; இதயம் துடிப்பதை
நிறுத்திவிடும் என்ற பயம். பாம்புகளைப் பற்றிப் பயம் (LAC.C) . பைத்தியம் பிடித்துவிடும் என்ற
பயமும் இருக்கும் (Calc,
Cann-i, Manc, Puls)
மனப்பிரமை: தான் மன்னிக்கமுடியாத, மோசமான குற்றத்தை அல்லது பாவத்தை செய்து விட்டோம் என்று நினைப்பார்; விரைவில் சாகப்போகிறோம்
என்றும் ,
செத்தவுடன்
நரகத்திற்குப் போகப்போகிறோம் என்ற பிரமை; தான் இறந்துவிட்டோம் (in typhoid) அதனால் அடக்கம் செய்வதற்கு தயார் செய்கிறார்கள்
என்ற மனப்பிரமையும் உண்டு. தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் (அல்லது மருந்து
வைத்துவிட்டார்கள்),
அதை முறித்து
மீண்டெழுவது கடினம் என்ற மனப்பிரமை லாக்கசிஸ் மருந்தில் மட்டுமே உள்ளது. தான் பலம் பொருந்திய ஒரு சக்தியின்
பிடியில் அல்லது தேவதையின் கண்காணிப்பில் இருக்கிறோம் என்ற எண்ணம்
மேலோங்கியிருக்கும் ( Under SUPERHUMAN control) . அதேபோல் சொர்க்கத்தில் உள்ள
பலம் பொருந்திய ,
ஆட்டிப் படைக்கும்
சக்தி ( தேவதை) தன்னை திருட வைக்கவும்
மற்றும் கொலை செய்ய தூண்டுவதாகவும் கூறுவார்கள்
.
கணவன், தனது
மனைவிக்கும்,
மகனுக்கும் எந்தப்
பரிசுப் பொருளும் வாங்கித் தருவதில்லை அல்லது அவர்கள் மேல் பிரியம் இல்லாமல்
இருத்தல் என்ற தனிக்குறியும் இம்மருந்தில் உள்ளது..
V.நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from)
நீண்ட நாட்களாக நீடித்திருக்கும் ஆழ்ந்த மனத்துன்பம் ( Grief) , வருத்தம் (Sorrow), திடீரச்சம் (Fright),
உணர்ச்சி
புண்பட்டநிலை (Mortification) , பொறாமை (Jealousy) , எரிச்சலடைந்த அல்லது
கவலைமிகுந்த உணர்ச்சி நிலை ( Vexation) மற்றும் காதல் தோல்வி (Disappointed love) (இக்குறிகளை உடைய மற்ற
மருந்துகள். Aur.,
Ign., Nat-M Phos-Ac.) . குத்துப்பட்ட அல்லது விஷத்தன்மை வாய்ந்த காயங்கள் மற்றும்
வெட்டுக் காயங்களுக்குப் பிறகு ஏற்படும் தொல்லைகள். குடிப்பழக்கம். மாதவிலக்கு நிரந்தரமாக நின்ற
பிறகு தான் எல்லா தொல்லைகளும் ஏற்பட்டதாக
துயரர் கூறுவார் ( Never well
since Climaxis) . பிறப்பு உறுப்புகளை கைகளால் கசக்கிச் சிற்றின்பத்தை அடையும் பழக்கத்தினால்
ஏற்படும் கெடுதலான விளைவுகள் (Masturbation).
VI.ஆண்கள் (Male):
ஆண்களுக்கு அதிகப்படியான சிற்றின்ப எண்ணங்கள் இருக்கும் ஆனால் ஆண்குறியில்
விறைப்புதன்மை இருக்காது. உடலுறவின் போது விந்து சரிவர வெளியாவதில்லை அல்லது
சிறிதளவு கூட வெளியாகமலும் இருக்கலாம். இரவில் விந்து வெளியேறிய பிறகு மகிழ்ச்சி
ஏற்படும். விந்து காரமான நெடியுடன் இருக்கும் ( Pungent) . சுய இன்பப்
பழக்கத்தினால் ( Masturbation) தொல்லைகள் ஏற்பட்டிருக்கும். பெண்களின் மேலுள்ள
வெறுப்பினால் திருமணம் செய்துகொள்ள விருப்பமின்மை.
VII.பெண்கள் (Female):
மாதவிடாய் கறுப்பு இரத்தமுள்ளதாகவும் (Black) , குறைவாகவும் (Scanty) இருக்கும். மாதவிடாய்
உள்ளமுக்கப்பட்டிருக்கும் போது மூக்கிலிருந்து இரத்தம் வெளிப்படும் . மாதவிடாய் ஏற்படும்
முதல் நாளில் கடுமையான வலியுடன் இருக்கும் ( Dysmenorrhoea). மாதவிடாய் சம்பந்தமான
கோளாறுகள் போக்கு வெளியாக ஆரம்பித்தவுடன்
குறை ஆரம்பிக்கும். பெண்கள்,
மாதவிடாய்ப் போக்கு
வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது நன்றாக இருப்பதாகக் கூறுவார்கள். மாதவிடாய்ப் போக்கு
தோன்றுவதற்கு முன்பும் ,
வெளியான பிறகும்
காணப்படும் தொல்லைகள் போக்கு உள்ளபோது மறைந்திருக்கும். போக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இருக்கும். போக்கு நின்றுவிட்ட
சமயத்தில் வலியோ அல்லது தலைவலியோ உண்டாகும். கருப்பையிலும் , சினைப்பையிலும் ஏற்படும்
வலிகள் (Ovariyan tumours) அவ்விடங்களிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால்
குறையும். மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும் காலங்களில் (Climaxis) உடலில் சூடான அலைகள் ஓடுவது
போன்ற உணர்ச்சி, தலையில் அதிக இரத்தம் சேருதல் மற்றும் சூடான வியர்வை
தோன்றும். மார்பகங்களில் உள்ள புற்று நீலநிறமாக இருக்கும். முலைக்காம்புகளைத் தொட்டால்
பொறுக்கமுடியாத வலி உண்டாகும். தாய்ப்பால் தண்ணீர்போல் நீர்த்தும் நீல நிறமாகவும் இருக்கும். பெண்களுக்கு
உடலுறவில் பைத்தியம் பிடித்தது போன்ற காமவெறி தோன்றும் (NYMPHOMANIA).
VIII.குழந்தைகள்(Child)
இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிசன் இல்லாததால் தோல் நீலநிறமாக மாறும் குழந்தைகள் (CYNAOSIS). குழந்தைகள் படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரளும்; தூக்கத்தில் புலம்பும். உதறித் தள்ளுவதைத் தடுக்க குழந்தைகளை கட்டாயம் பிடித்துக்கொள்ளவேண்டும் அல்லது அழுத்திக் கொடுத்தால் நன்றாக உணர்வார்கள். சிறு குழந்தைகள் மிகவும் பயந்து காணப்படுவார்கள், அழுகை அதிகமாக இருக்கும். கீழே படுக்க மாட்டார்கள். ஏராளமான ஏப்பமும், வாந்தியும், அடிக்கடி மலம் கழிக்கவும் செய்வார்கள். அதன்பிறகு உடல் தொடுவதற்கு சூடாக இருக்கும்.
IX.உணவு, ( விருப்பம், வெறுப்பு )
மற்றும் தாகம்
(Food and Drinks)
அதிகமான பசியும் , பசியின்மையும் மாறிமாறி இருக்கும். தாகம் இருக்கும் ஆனால் தண்ணீர் குடிக்க பயமும் இருக்கும்.
அதிகமான பசியும் , பசியின்மையும் மாறிமாறி இருக்கும். தாகம் இருக்கும் ஆனால் தண்ணீர் குடிக்க பயமும் இருக்கும்.
விருப்பம் : மதுபானங்கள் , சிப்பி உணவுகள், காபி.
ஏற்றுக் கொள்ளாத
உணவு: பழங்கள் , அமில உணவுகள் (
வயிற்றுப்போக்கு) மற்றும் சூடான பானங்கள்.
X.மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல் (Aggravation) : தூங்கிய பின்பு (Apis) ; காலையில்; சூடு அல்லது சூரிய வெப்பம்: வெயிலில் நிற்க முடியாது; அறையின் வெப்பத்தையும் தாங்க இயலாது; சூடான பானங்கள். மது பானங்கள் மற்றும் அமில உணவுகள். திரவ உணவுகளை விழுங்கும் போதும் , எச்சில் விழுங்கும் போதும் தொல்லைகள் அதிகமாகும். சட்டையின் கழுத்துப்பட்டை கழுத்தின் மீது உராய்வது, இடுப்பு, அடிவயிறு , அரையிடுக்குகள் ஆகிய இடங்களின் மீது இறுக்கமான ஆடை அணிவது போன்றவற்றை இவர்களால் தாங்க இயலாது. மாதவிடாயின் ஆரம்பத்திலும் , முடியும் தருவாயிலும் தொல்லைகள் கூடும். மாதவிடாய் நிரந்திரமாக நின்ற பிறகும் அதிகரிக்கும் (CLIMAXIS) .
நோய்க்குறி குறைதல் (Amelioration): கழிவுகள் வெளியேறினால் இவர்களுக்கு நன்றாக இருக்கும்; குறிப்பாக மாதவிடாய் ஏற்பட்ட பிறகு தொல்லைகள் குறையும். திறந்த வெளிக்காற்று. குளிர்ந்த பானங்கள். குளித்தால் தொல்லைகள் குறையும்.
XI,வீரியம்:
30 வது வீரியம் CM முதல் வரை உள்ளது. ஹோமியோபதி விதிகளின் படி ஒரு
தடவை தான் கொடுக்க வேண்டும். மருந்து 30 முதல் 40 நாட்கள் வரை வேலை செய்யும்.
XII. மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை (Relationship)/ ஒப்பீடு:
நட்பு மருந்துகள்: acon,
ars,bell,carb-v,hep, hyos, kali-bi, lyc, merc, nit-ac, phos, puls, sil,sulph,tarent.
இம்மருந்திற்கு
ஒவ்வாத மருந்துகள்: acet-ac, am-c. carb-ac.
இம்மருந்திற்கு பின்
நன்றாக வேலை செய்யும் மருந்துகள்: hep, lyc, and nit-ac.
ஒப்பீடு:
பெண்களுக்கு
மாதவிடாய்ப் போக்கு வெளி வர ஆரம்பித்தவுடன்
தலைவலி நிற்கும்;
போக்கு நின்றவுடன்
திரும்பவும் வரும்- all-c, zinc.
மாதவிடாய்ப் போக்கு
நிரந்திரமாக நின்ற பிறகு தலைவலி. Cact, glon.
மாதவிடாய்ப் போக்கு
நிரந்திரமாக நின்ற பிறகு தொல்லைகள். Kreos.
மாதவிடாய்
காலங்களில் ஏற்படும் வலிகள்,
போக்கு
ஆரம்பித்தவுடன் குறையும். Mag.p, zinc.
சூரிய வெப்பத்தினால்
தொல்லைகள் அதிகமாகும்: bell, nat-c, ther.
இடது சினைப்பையில்
வலி: caul, sil, sulph, vib.
நாற்றமுள்ள கழிவுகள்
, டைப்பாய்டு காய்ச்சல் : bapt.
காதலில் ஏமாற்றம்
அல்லது தோல்வி: phos-ac.
பொறாமை: apis, hyos,
nux-v, staph.
தொடுவதற்கு மிகவும்
கூருணர்ச்சி : apis, bell, hep. Carbo-ac.
வலிகள் இடது
பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு தாவும்: colch, ip.
இடுப்புப் பகுதியில்
இறுக்கமான ஆடைகள் அணிவதை சகித்துக்கொள்ள இயலாது. Bov, calc, sulph, sep.
தூக்கத்தில்
தொல்லைகள் அதிகமாகும். Apis, op.
கைகளில் மற்றும்
கால் பாதங்களில் காந்தள்தன்மை. அதனால் அப்பகுதிகளை மூட விரும்பமாட்டார்கள் , காற்றும் தேவைப்படும். Med, sulph,phos,sang, sanic.
தொண்டையடைப்பான் தூக்கத்தினாலும் , சூடான பானங்களாலும் அதிகரிக்கும்-lach. ஆனால் தூக்கத்தினாலும் , குளிர்ந்த பானங்களாலும் அதிகரிக்கும்-Lyc.
இரத்தப்பெருக்கை ஏற்படுத்தும் தன்மை மற்றும் வாரக்கணக்கில் இரத்தம்
வெளியாகும். Phos, sec.
பாம்பைப் போன்று நாக்கு வெளியே வந்து உள்ளே செல்லும். Cupr.
தொடர்ந்து பேசுவதற்கு விருப்பம்: Cic. Stram.
கட்டி, நகசுற்று மற்றும்சீழ் கொப்புளங்களில் நீலநிறம். Tarent-c.
தொண்டையை வெளிப்பகுதியிலிருந்து அழுத்தினால் தாங்க முடியாது. Lac-c.
No comments:
Post a Comment