Tuesday, 26 June 2012

பல்சட்டில்லா


 


பிரிவு: தாவரம்.
நிருபணம் செய்தவர்: மரு.ஹானிமன்.
முன்னுரை(Introduction) :

ஹோமியோபதி மருத்துவத்தில் பல்சட்டில்லா பல வியாதிகளுக்கு உபயோகமாகும் மருந்தாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதமாகும். இம்மருந்தின் முக்கிய குறிகளான அமைதியான குணம் , எளிதில் அழும் சுபாவம் போன்றவை பெண்களிடம் காணப்படுவதால் பல்சட்டில்லா பெரும்பாலும் பெண்களுக்கே பயன்படுகிறது. இம்மருந்து கொடுக்கப்பட வேண்டியவர்களின் முக்கியமான குறிகள் இதோ;

       1 . மிருதுவான, அமைதியான, பாசத்துடனும் மற்றவர்களுடன் இணக்கமாகப் போகும்
           தன்மையுள்ளவர்கள்.
       2. மிருதுவான, அமைதியான, பாசத்துடனும் மற்றவர்களுடன் இணக்கமாகப் போகும்
          குணமுடையவர்கள்.
      3. சுலபமாக அழுவார்கள் அல்லது சிரிப்பார்கள். தன்னுடைய வியாதிக்குறியை அழுகை  இல்லாமல்
         இவர்களால் சொல்ல இயலாது.

     4. நோய்க்குறிகள் எப்பொழுதும் இடம் விட்டு மாறிக்கொண்டே இருக்கும்.  சில மணி நேரம் நன்றாக
        இருப்பார்கள்; அடுத்த மணி நேரம் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.   அதேபோல் சிரிப்பும் அழுகையும் மாறி   
         மாறி வரும்.  இந்த மனநிலை அவர்களுக்கு மிகுந்த எரிச்சலை  ஏற்படுத்தும்
      5. மாறுகின்ற மனநிலையை உடையவர்கள்.
    6. நலம்குன்றி நோய்வாய்பட்டிருக்கும் போது தான் நன்றாக இருப்பதாகக் கூறுவார்கள்.
      7. குறிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு விரைவாக இடம் பெயரும்.
      8. அனைத்துத் தொல்லைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாலும் தண்ணீர்  தாகமிருக்காது.
      9. குளிர்ச்சியான, சுத்தமான வெளிக்காற்றை மிகவும் விரும்புவார்கள்; வெளியில்
          நடமாடினால்  இவர்களுக்கு நன்றாக இருக்கும்.
     10. வெப்பமான அறைகள், சூடு மற்றும் சூரிய ஒளி முதலியவைகள் இவர்களது
           தொல்லைகளை  அதிகப்படுத்தும்.
   11. அதிகச் சத்துள்ள உணவை உட்கொள்வதாலும், வெண்ணையையும், கொழுப்புச் சத்துள்ள
            உணவை உட்கொள்வதாலும், சூடான பானங்கள் அருந்துவதாலும் இவர்களது தொல்லை
            அதிகரிக்கும்.
     12. இரவில் வெகு தாமதமாகவே அதாவது நடு இரவிற்குப் பிறகே தூங்குவார்கள். எழ
           வேண்டிய    தருணத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். விழித்து எழுந்தவுடன்
           புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்.

மனக்குறிகள்(Mind):
பயந்த சுபாவம், பணிந்துபோகும் குணம், எளிதில் கண்ணீர் விடுதல், வெளியில் கட்டிக் கொள்ளாமல் உள்ளூர வருந்திக் கொண்டு இருப்பவர்கள் .
மந்தகுணம் உடையவர்கள். சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தயங்கும் சுபாவம் உள்ளவர்கள்.

தன்னுடைய வியாதிக்குறியை அழுகை இல்லாமல் இவர்களால் சொல்ல இயலாது. வருத்தமோ அல்லது சந்தோசமோ எதுவாக இருந்தாலும் அழுகையே வரும்.

அற்ப காரணங்களாலும் கோபம் வரும்.

நோயுற்றவர் சில சமயம் சிடு மூஞ்சியாகவும் உடனே அழுபவராகவும் இருப்பார். அல்லது அமைதியும், குதூகலமும் உள்ளவராகவும் இருப்பார்.

ஆறுதல் கூறினாலும், அவர் மேல் பரிவு அல்லது இரக்கம் காட்டினாலும் அவருடைய தொல்லைகள் குறையும்.

தனியாக இருக்கப் பயம்; பேய், பிசாசுகள் ,ஆண்கள் மற்றும் குறுகலான இடங்களில் பயம்.
 கணவனிடம் எதிர்த்துப் பேசமாட்டார்கள்.
விரும்பத்தகாத செய்திகளால் வருத்தமடைவார்கள்.
கருமித்தனம், சந்தேகம், எரிச்சல் மற்றும் கனிவான அன்பிற்க்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
தலையை கீழே வைத்து படுக்க இயலாது; உயரமான தலையணைகளை வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
 

தனிசிறப்பான குறிகள் (Characteristic Symptoms)

சுத்தமான வெளிக்காற்றைப் பெரிதும் விரும்புவார்கள். காற்றோட்டமில்லாத , வெப்பமான அறைகளில் இருக்கும்போது மிகவும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

எல்லா தொல்லைகளும் மாலை நேரத்தில் அதிகரிக்கும்

நோய்க்குறிகள் மாறி மாறி தென்படும். குளிர்ச்சியான பொருள்கள் மற்றும்  பானங்களால் தொல்லைகள் சமனப்பட்டு நன்றாகவும், வெப்பமான பொருட்களினால் துயர் அதிகரிக்கவும் செய்யும். 
 
இவர்களால்  இரவின் முற்பகுதியில் தூங்க இயலாது. தாமதமாக இரவின் பின்பகுதியில் தான் ( காலை நேரத்தில்) தூக்கம் வரும்.

நரம்பு தளர்ச்சியினால் கர்ப்பபையில் வலியும், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் கூடிய வலியும் ( சூடு பிடிப்பு) ஏற்படும்.

கோடைகாலத்தில் வெப்பமான துணிமணிகள் அணிந்திருக்கும்போது குளிர்ச்சியான உணர்வு இருக்கும். அத்துடன் தலைசுற்றலும், தெறிக்கும் தலைவலியும், வயிற்றில் அழுத்தமும் இருக்கும்.

காலையில் தலையின் ஒரு பக்கத்தில் வலி, அத்துடன் வாயில் சுவை கேட்டுப்போயிருக்கும் (கசப்புசுவை ) . தாகமிருக்காது . இரவில் வயிற்றுப்போக்கும், சிறுநீர் குறைவாகவும் வெளியாகும்.

மாதவிடாய் மிகவும் தாமதமாகவும் , குறைவாகவும் வெளிப்படும் அல்லது பாதங்களின் ஈரதன்மையால் உள்ளமுக்கப்படும் அல்லது இடைவெளி விட்டு விட்டு  வெளி வரும்.

மாதவிடாயின் போது ஈற்படும் கடுமையான வலியினால் அமைதியின்மையும், இங்கு மங்குமாக உருளுவாகள் , புரட்டியும் போடும்.

மாதவிடாயின் இடைக்காலங்களில் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் வெளியாகும். சிலசமயம் ஏராளமாகவும், சிலசமயம் விட்டு விட்டும், கட்டியாகவும் வெளியாகும். அதுவும்  மென்மையான, அழுகும் தன்மையுள்ள பெண்களுக்கு ரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருக்கும். 

பொதுவாக மாதவிடாய் குறைவாகவும் , பிசுபிசுப்பாகவும், தாமதாகவும் வெளிப்படும்.

மாதவிடாய்த் தள்ளிப்போகும் காலங்களில், மாலையில் கடுங்குளிர்ச்சியாகவும் , காலையில் வாயில் கசப்புசுவையாகவும்   அல்லது கெட்டும் போயிருக்கும். 

கடுமையான வலியுடன் கூடிய மாதவிடாய்.  பெண்கள் கடும் வலியினால் கண்ணீர்விட்டு கதறி அழுவார்கள் . இங்கும் அங்குமாக புரளுவார்கள்.  இரத்தபோக்கு கருப்பாகவும், கெட்டியாகவும் வெளிவரும் அல்லது மெலிதாகவும், தண்ணீர் போன்றும் , விட்டு விட்டு வரும், வெப்பமான அறையில் இருக்கும்போது தொல்லைகள் கூடும்.

வெள்ளைப்பாடு எரிச்சலுடன் மெலிதாகவும், கடுகடுப்பான தன்மையுடன் வெளிப்படும்.படுக்கையில் இருக்கும்போது வெள்ளைநிறத்தில் கெட்டியாகவும், சளியுடனும் வெளிப்படும். அல்லது மதவிடாயிற்கு முன்பும், மாதவிடாயின் போதும் அடிவயிற்றில் வெட்டும் வலி இருக்கும்.

பிரசவவலியின்போது , அறையின் கதவு , ஜன்னல்கள் திறந்திருக்கவில்லையென்றால் நெஞ்சு படபடப்பும், மூச்சுத் திணறலும் , மயக்கமும் ஏற்படும்.கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

மார்பகங்கள் பெரியதாக வீங்கியிருக்கும்; வாதநோயில் இருப்பது போன்ற வலி ஏற்பட்டு  நெஞ்சுப்பகுதி சதைகள், புஜங்கள், கழுத்து, அக்குள் மற்றும் கைகளின் கீழ்புறம் வரை அந்தவலி நீண்டு இருக்கும்.அப்போது பயத்துடனும், அழுகையுடனும் இருப்பார்.ஆனால் தாகம் இருக்காது.

மென்மையான, அழும் தன்மையுடைய பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொஞ்சமாகச் சுரக்கும்.

சிறுநீர் வெளியேறமுடியாத நிலையில் இருக்கும்போது , சிறுநீர் பாதையில் வெப்பமாகவும்,சிவந்தும், வெளிப்புறத்தில் கொப்பளதுடனும் காணப்படும்.

நடக்கும்போதும், உட்கார்திருக்கும் போதும் , இருமும் போதும் சிறுநீர் தானாக வெளியேறும்.

சிறுநீர்ப்பையில் நிரந்திரமான வலி இருந்து கொண்டிருக்கும்  ஆனால் சிறுநீர் கழிக்கத் தோன்றாது.கூடவே அடிவயிற்றில் வலியும் இருக்கும்.

நாக்கில் வெள்ளை அல்லது மஞ்சளான மாசு அடர்த்தியாக படிந்திருக்கும்  . அத்துடன் கலையில் ருசி தெரியாது.

அதிகப்படியான கொழுப்பு உணவினாலும், சத்தான விருந்தினாலும் வாந்திபேதி ஏற்படும்.அத்துடன் கடுமையான வலியும் இருக்கும். தொப்புளைசுற்றி வெட்டுவது போன்ற வலி அல்லது இழுப்பது போன்ற வலி; குறிப்பாக மாலையிலும் இரவிலும் ஏற்படும். மேலும் இத்தகைய சத்தான உணவிற்குப்பிறகு புளிப்பான, கசப்பான வாந்தி ஏற்படும். வயிற்றில் உப்பிசம் உருவாகி அதனால் ஏற்பட்ட வலியினால் தொடர்ந்து உட்கர்ந்திருக்கமுடியாது. வழியிலிருந்து விடுபட எழுந்து நடமாட வேண்டும்.

எண்ணெய் , நெய், போன்ற கொழுப்பு நிறைந்த உணவினால் குமட்டலும், புளித்த ஏப்பமும், நெஞ்சுகரிப்பும் மற்றும் உணவின் மீது வெறுப்பும் ஏற்படும்.

கடுமையான மலச்சிக்கல் , குறிப்பாக மிருவான, அழும்  தன்மையுள்ள பெண்களுக்கு. மேலும் இவர்களுக்கு காலையில் எழுந்தவுடன்   வாயில் மோசமான சுவையும் நாற்றமும் இருப்பதால் உடனே வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

வயிற்றுக்கடுப்பு , மலம் இரத்தத்துடன் வெளியேறும். மலம் பல்வேறு தன்மையில் வெளியாகும், அதாவது  சில சமயம் கட்டியாகவும் பின்னர் தண்ணீராகவும்   மாறி மாறி இருக்கும். அதேபோல் முதலில் கட்டியாகவும், தொடர்ந்து வயிற்றுப்போக்கு போல் இருக்கலாம் . இரவில் விக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மோசமடைவார்கள். ஆனால் இந்த தொல்லைகள்யாவும் வெளிக்கற்றில் உலாவினால் குறையும்.

சளி பிடித்திருக்கும்போது மூக்குத் துவாரங்கள் புண்ணாகிவிடும். தண்ணீர் போன்ற சளி வெளிப்படும் அல்லது வறண்டு இருக்கும். சளி முற்றினால் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் வெளியாகும். சளித்தொல்லை குறிப்பாக மாலையில் அதிகரிக்கும்.

குழந்தைகள் ஒருக்களித்து படுத்திருக்கும்போது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். மாலையில் இது அதிகரிக்கும்.

காலையில் இருமல் வரும்.

பலவீனமான கண்கள். அடிக்கடி கண் கட்டிகள் ஏற்படும். குறிப்பாக மேல் இமைகளில் தோன்றும்.
காதுகளில் அதிகமான வலி அத்துடன் காதுகேளாமை. காதுகளில் சீழ் வெளியாகும்.

பல்வலி ஒரு பக்கத்தில் இருக்கும் . வலி குத்திதுளைப்பது போன்றும் , தெறிக்கும் தன்மையிலும் கடுமையாக இருக்கும். வெளிகற்றில் உலாவும்போது நன்றாகவும் , அறைக்குள் வந்தால் வலி திரும்பவும் ஏற்படும்.  இந்தவலி குளிர்ச்சியான தண்ணீரால் சமனப்படும்.

வாதரோகவலி ஒரு பகுதியிலிருந்து  மற்ற பகுதிகளுக்கும் இடம்விட்டு  மாறும்.

பல்சட்டில்லா தட்டம்மைக்கு அடிக்கடி உபயோகமாகும் சிறந்த மருந்து.

பழங்கள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகள். மட்டுறைச்சி , என்னை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

இரத்த நாளங்களில் அழற்சி மற்றும் வீக்கம். வலியுடன் பருத்திருக்கும் .

இவர்களுக்கு இறுக்கமான ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும்.

நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from)

மனம்: அதிகபயம்,கவலை,எதிர்பார்த்தல், பொறாமை, இழிவு படுத்தப்பட்டதால் , நிராசை மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் இவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும்.

உடல்: ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொந்தரவுகள் . சத்தான உணவு, ஐஸ்கிரீம், மாவுப் பொருள்கள் , டீ மற்றும் காபி சாப்பிடுவதால். உள்ளமுக்கப்பட்ட மேகவெட்டை, பாதங்கள் தண்ணீரில் நனைவது போன்ற காரணங்களால் தொல்லைகளுக்கு உள்ளாவார்கள்.

ஆண்கள் (Male):

உள்ளமுக்கபட்ட மேகவெட்டையினால் விரைகளில் வேக்காடு; விரைகளிலும் ,விந்துதாரைகளிலும் வீக்கமும் வலியும் இருக்கும். இடதுபக்க விந்து நாளங்களில் எரிச்சல். விரைவீக்கம் மற்றும் சுக்கிலசுரப்பி அழற்சி.

பெண்கள் (Female)

மாதவிடாய் மிகவும் தாமதமாகவும் , குறைவாகவும் வெளிப்படும் அல்லது பாதங்களின் ஈரதன்மையால் உள்ளமுக்கப்படும் அல்லது இடைவெளி விட்டு விட்டு  வெளி வரும். மாதவிடாய் உள்ளமுக்கப்படுவதால் பித்துப்பிடித்த நிலை ஏற்படும்.

மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலியினால் அமைதியின்மையும், இங்கு மங்குமாக உருளுவாகள் , புரட்டியும் போடும்.

மாதவிடாயின் இடைக்காலங்களில் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் வெளியாகும். சிலசமயம் ஏராளமாகவும், சிலசமயம் விட்டு விட்டும், கட்டியாகவும் வெளியாகும். அதுவும்  மென்மையான, அழுகும் தன்மையுள்ள பெண்களுக்கு ரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருக்கும். 

பொதுவாக மாதவிடாய் குறைவாகவும் , பிசுபிசுப்பாகவும், தாமதாகவும் வெளிப்படும்.

மாதவிடாய்த் தள்ளிப்போகும் காலங்களில், மாலையில் கடுங்குளிர்ச்சியாகவும் , காலையில் வாயில் கசப்புசுவையாகவும்   அல்லது கெட்டும் போயிருக்கும். 

வயதிற்கு வராத  சிறு பெண்களுக்கும் ,   மணமாகாத பெண்களுக்கும், மார்பகங்களில் பால் சுரக்கும்.

மாதவிடாய் காலங்களில் யோனிவழியாக இரத்தபோக்கு ஏற்படாமல் மூக்கில் இருந்தோ அல்லது சுவாச கோசங்களில் இருந்தோ இரத்தம் வெளிப்படும்.

கருவில் இருக்கும் குழந்தை நிலைமாறியிருக்கும்.

தாய்பால் குறைவாகவும் உள்ளமுக்கப்பட்டும் இருக்கும்.

கடுமையான வலியுடன் கூடிய மாதவிடாய்.  பெண்கள் கடும் வலியினால் கண்ணீர்விட்டு கதறி அழுவார்கள் . இங்கும் அங்குமாக புரளுவார்கள்.  இரத்தபோக்கு கருப்பாகவும், கெட்டியாகவும் வெளிவரும் அல்லது மெலிதாகவும், தண்ணீர் போன்றும் , விட்டு விட்டு வரும், வெப்பமான அறையில் இருக்கும்போது தொல்லைகள் கூடும்.

வெள்ளைப்பாடு எரிச்சலுடன் மெலிதாகவும், கடுகடுப்பான தன்மையுடன் வெளிப்படும்.படுக்கையில் இருக்கும்போது வெள்ளைநிறத்தில் கெட்டியாகவும், சளியுடனும் வெளிப்படும். அல்லது மதவிடாயிற்கு முன்பும், மாதவிடாயின் போதும் அடிவயிற்றில் வெட்டும் வலி இருக்கும்.

நீடித்த வெள்ளைப்பாடு தொந்தரவினால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

பிரசவவலியின்போது , அறையின் கதவு , ஜன்னல்கள் திறந்திருக்கவில்லையென்றால் நெஞ்சு படபடப்பும், மூச்சுத் திணறலும் , மயக்கமும் ஏற்படும்.கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.


குழந்தைகள்(Child): குழந்தைகள் அன்பாகத் தடவிக் கொடுப்பதையும் , அற்ப காரணங்களால் ஏற்படும் குதூகலத்தால் அமளிப் படுத்துவதையும் விரும்புவார்கள்சிறு பையன்களுக்கு ஏற்படும் விரைவாததிற்கு பல்சட்டில்லா மிகச்சிறந்த மருந்து.

உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):

அநேகமாக எல்லா கோளாருகளுடனும் தாகமில்லாமை சேர்ந்து காணப்படும். பசி இருக்காது. புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகள், எண்ணெய் பொருள்கள் மற்றும் காரமான மசால் உணவுகள் சாப்பிட விருப்பம்.

தண்ணீர் , கொழுப்பு உணவுகள் , பால், மாட்டு இறைச்சி , சூடான பானங்கள் மற்றும் உணவுகள் மீது வெறுப்பு.  புகைப்பிடித்தல் பிடிக்காது.

கொழுப்பு, சத்தான உணவுகள், ஐஸ்கிரீம், முட்டை மற்றும் வெங்காயம் இவர்களுக்கு ஒத்து கொள்ளாது. 

மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation): சூடான அறைகளிலும், சூடான காற்று, சூடான ஒற்றிடங்கள், சூடான படுக்கை ஆகியவற்றால் தொந்தரவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு பூப்பெய்தும் சமயத்தில் உருவாகும் கோளாறுகள்.

நடமாட ஆரம்பித்தவுடன்; ஓய்வாய் இருக்கும் போது; இடதுபக்கமாக அல்லது  வலி இல்லாத பக்கமாக படுத்தால் ; மாலை நேரங்களில்; சத்துள்ள உணவுகள் அதிகமாக உட்கொள்வதால்; வெண்ணை,கொழுப்பு மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருள்கள் உட்கொண்டபின்னர்  தொல்லைகள் அதிகரிக்கும்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும் , உணவிற்குப்பின் சிறிதுநேரம் கழித்தும் இவர்களுக்கு துயர் அதிகரிக்கும்.

நோய்க்குறி குறைதல்(Amelioration): சுத்தமான, குளிர்ந்த வெளிக்காற்று; உடலை போர்த்திக்கொள்ளாமல் இருக்கும்போது ; மெதுவாகவும் தொடர்ந்தும் நடமாடுவதால் இவர்களுக்கு தொல்லைகள் குறையும்.
குளிர்ந்த உணவு அல்லது பானங்கள் சாப்பிடுவதாலும் மற்றும் குளிர்ந்த ஒற்றிடங்களாலும் உபாதைகள் குறையும். பல்வலி குளிர்ந்த நீரால் சமனமாகும். நன்றாக அழுத பிறகும் இவர்கள் நலமாக இருப்பார்கள். உயரமான தலையணை வைத்து படுப்பதாலும், வலியுள்ள பக்கம் படுப்பதாலும் நலமாக இருக்கும்.


இம்மருந்தின் மையக்கருவான  குணங்கள்(Nucleus):

·          சத்தான கொழுப்பு உணவு, ஐஸ்கிரீம் மற்றும் மாட்டிறைச்சியினால் தொந்தரவுகள் ஏற்படும்.
·          எளிதில் அழுதுவிடும் குணம்.
    தங்கள் நோய்க்குறிகளை கூறும் போது இவர்களால் அழாமல் இருக்க முடியாது.
·          எல்லா தொந்தரவுகளின்  போதும் தாகமிருக்காது .
·          நோய்க்குறிகள் மாறிக் கொண்டிருக்கும்.
·          வலிகள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு இடம்பெயரும். கூடவே குளிர்ச்சியும் இருக்கும்.
·          உடல் குளிர்ச்சியாக இருக்கும்போதும் வெளி காற்றை விரும்புவார்.
·          மாதவிடாய் தாமதமாகவும், மிக குறைவாகவும் வெளியாகும்.
·          மாலை நேரங்களில் தொல்லைகள் அதிகரிக்கும். நடப்பதாலும், மிருதுவான அசைவுகளாலும் தொந்தரவுகள் குறையும்.

வீரியம்: பல்சட்டில்லா மருந்தை குறைந்த வீரியம் முதல் உயர்ந்த வீரியம் வரை பயன் படுத்தலாம் . குறுகியகால தொந்தரவின்போது அடிக்கடி கொடுக்கலாம். உடல்  அமைப்பிற்குரிய தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது உயர்ந்த வீரியம் கொடுத்திருந்தால் திரும்பவும் கொடுக்கக்கூடாது. இம்மருந்து 40  நாட்கள் வரை  உடலில் தங்கி ஆழ்ந்து வேலை செய்யும்.

மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை(Relationship):
அர்ஜண்டம் நைட்ரிகம், லைகோபோடியம் , சல்புரிக் அசிட்  ஆகிய மருந்துகள் பல்சட்டில்லாவிற்க்கு  முன்னும் பின்னும் நன்றாக வேலை செய்யும்.

அர்ஜண்டம் நைட்ரிகம் சரிவர வேலை செய்யாவிட்டால் பல்சட்டில்லவை கொடுக்கவேண்டும்.

காலி-பைக், லைகோப்போடியம் ,செபியா, சிலிகா மற்றும் சல்பர் ஆகிய மருந்துகள் பல்சட்டில்லாவுக்குப் பின் நன்றாக வேலை செய்யும்.

பல்சட்டில்லாவின் செயலை முழுமையாக்கிற மருந்தாக ஆர்சனிகம், காலி-பைக் , செபியா, சிலிக்கா மற்றும் சிங்கம் மெட் போன்ற மருந்துகள் செயல் படும்.
 



1 comment:

  1. nice to study sir if you provide along with a case study it can be still helpful for us
    Thanks sir
    V.Murugan

    ReplyDelete