முன்னுரை
:
ஹோமியோபதி மருந்துகளில் நக்ஸ்வாமிக்கா ஒரு மிகச் சிறந்த
மருந்து. பல நோய்களை குணப்படுத்தும்
பல்முனை நிவாரிணிகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் அரசன் என்று இம்மருந்தை அழைக்கலாம்.நாகரீகம் நிறைந்த இக்காலத்தில் சாதாரண
மனிதன் ஒருவன் நடத்தும் வாழ்க்கையின்
நிலைமைகளும் , நக்ஸ்வாமிக்கா
மருந்தின் குறிகளும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறது. அவற்றில்
சில;
- கூர்மையாக கவனம் செலுத்த வேண்டிய மனவேலை.
- . நாற்காலியில் நாள்முழுதும் அமர்ந்து வேலைசெய்தல்.
- . ஊக்கம் தரும் பொருள்களான காபி மற்றும் மிளகு, மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பில்லை, பெருஞ்சீரகம், பெருங்காயம் போன்ற உணவுக்கு சுவைதரும் பொருள்களின் மேல் அதிக விருப்பம்.
- இரவில் அதிகநேரம் கண் விழித்திருத்தல்
- மதுபானங்கள் எடுத்துக்கொள்வதால் சீரணம் பாதிக்கப்படுதல்.
- சீரணக் கோளாறுகளாலும் , மலசிக்களாலும் துன்பமடைவோர்.
- அபின்,கஞ்சா,ஒயின் போன்ற போதைபொருள்கள் உபயோகித்தல் மற்றும் காபி, புகையிலை ,அதிக உப்பும்,உறைப்பும் உள்ளஉணவுகளை அளவுக்குமீறி உண்ணுதல்.
- அதிகமான அலோபதி மருந்துகளும், மலமிளக்கி மருந்துகளும் எடுத்துக்கொண்டவர்கள்.
- திட்டபடியும் கவனமாகவும் காரியம் செய்வார்கள், ஆனால் அல்ப காரணங்களுக்கும் கோபம் வரும்.
- எதற்கெடுத்தாலும் சண்டைபோடும் குணம்,1கடுங்கோபம்.
- பழிவாங்கும் எண்ணம்,பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணம்,பொறாமை ஆகிய குணங்கள் உள்ளவர்கள்.
- உணர்ச்சிகள் அதிகரித்து சத்தம்,இசை, பேச்சு,அதிக வாசனை ஆகியவைகளை தாங்கமுடியாமல் போகுதல்.
மேற்கண்டவாறு
பரபரப்பான நாகரீக
வாழ்க்கையில் ஈடுபட்டு உடலைக் கெடுத்துக்கொள்வது பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால் நக்ஸ்வாமிக்கா ஆண்களுக்கு அதிகம் தேவைப்படும்
மருந்தாக இருக்கிறது.
மனக்குறிகள்(Mind):
சுறுசுறுப்பானவர்.
ஆர்வமும் , வைராக்கியகுணமும்
உள்ளவர், கோபமும் , பொறுமையின்மையும் இவரது சுபாவம்.
. தற்கொலை செய்துகொள்ள எண்ணம் ஆயினும், சாவதற்கு
பயப்படுவார்.
பிறரிடம்
நம்பிக்கையின்மையும் , சந்தேகிக்கும் குணமும் இவரிடம் இருக்கும்
. எந்த விசயத்திலும் சஞ்சலம
மற்றும் உறுதியின்மை,. எதற்கெடுத்தாலும் சண்டைபோடுதல், பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம்; பிறருக்கு கெடுதி செய்யும் எண்ணம் , பொறாமை ஆகிய குணங்களுக்குச் சொந்தக்காரர்.
.. திட்டமிட்டபடியும்
கவனமாகவும் காரியம் செய்வர்கள்.
நேரம் மிக மெதுவாக செல்வதுபோல் தோன்றுதல்.
. உணர்ச்சி மிகுதியால் சத்தம், இசை, பேச்சு , அதிக வாசனை ஆகியவைகளைத் தாங்கமுடியாது.
கத்தியைப்பார்த்தால் பயம்; பெண்களாக இருந்தால் தன்னையோ அல்லது
கணவரையோ கொல்லவேண்டும் என்ற எண்ணம். குழந்தையை
தீயில் தூக்கி எறியவேண்டும் என்று தோன்றும்.
குற்றமில்லாத வார்த்தைகளும் (மனதில்) இவரது
மனதை புண்படுத்தும்,சிறிய கோளாறு இருந்தாலும் அது பெரிதாகத் தோன்றும்.
. வலிகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன என்ற உணர்ச்சியினால் வலியைப் பொறுத்துக்கொண்டு கஷ்டபடுவதைவிட சாவதே மேல் என்று நினைப்பார்.
இவருக்கு ஆறுதல் கூறினால் கோபமடைவார். எரிச்சலுக்கும் , அதிதீய உணர்ச்சிக்கும் உட்படுபவர். தன்னைச் சுற்றிய விசயங்களில்
எப்பொழுதும் திருப்தியடைய மாட்டார்கள்; எதிலும் குற்றம் காணுவார்.இவருக்கு எதிராக யாராவது எதிர்த்து பேசினாலும், மாறுபட்ட கருத்து சொன்னாலும் கடுங்கோபம் வரும்.அச்சமயத்தில் அவரது எதிரில் சேர் இருந்தால் போகும் வழியில் உதைத்துவிட்டு
செல்வார்.
கோபம் வந்தால் எதையும் கிழிக்கவும், எதிரில் உள்ளவர்களை திட்டவும் செய்வார்.
நிர்வாகத் துறையில் உள்ள பலர் நிதானத்தையும்
பொறுமையையும் இழந்து
எந்த விசயத்திற்கும் அவசரப்படுவார்கள்.
வீட்டிற்க்கு சென்றால் சட்டையை கழற்றும்போது
பட்டனில் துணி சிக்கிக்கொண்டால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் இழுத்து
எறிவார்.
ஒவ்வொரு வேலையையும் அவசரமாக செய்தே பழக்கப்பட்டவர். சாப்பிடக்கூட நிதானமோ பொறுமையோ இருக்காது.
இரவில் வெகுநேரம் கண்விழித்து வேலைசெய்வார், தாமதாகவே தூங்கச் செல்வார். பின்னர் காலை 3 மணிக்கெல்லாம் விழித்து கொண்டு
திரும்பவும் தூங்கிவிடுவார். பிறகு வெகு தாமதமாக எழுவார். பொதுவாக இரவில் ஆந்தைகள் போல் வாழ்வார்கள்.
படிக்கும்பொழுது இவரால் மனதை ஒரு நிலைபடுத்த முடியாது.
தனிசிறப்பான குறிகள் (Characteristic
Symptoms)
குளிர்ச்சியான உடல்வாகு; அதனால் குளிர்ச்சியான பருவநிலை , பானங்கள், உணவு இவருக்கு
ஒத்துக்கொள்ளாது
. மனதில் நிறைய எண்ணங்கள் நிறைந்துள்ளதால் காலை மூன்று மணிக்கெல்லாம்
தூங்க முடியாமல் எழுந்து விடுவார். காலை எழுந்தவுடன் தொல்லைகள் அதிகமாகும். மனதில் எரிச்சல் உள்ளபோது தனியாக
இருக்க விரும்புவார்
. வசதியான வாழ்க்கையினால் கிடைக்கும் பலவகை சத்தான உணவுகளாலும் , கிளர்ச்சியைத்
துண்டும் பானங்களாலும் , நாற்காலியில் அமர்ந்தே வேலை செய்வதாலும்
உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாவர்கள்,
நீடித்த மலச்சிக்கல். அடிக்கடி
மலம் கழிக்கவேண்டும் என்ற உந்துதல் இருக்கும் ,
ஆனால் மலம் சிறிது சிறிதுவாக
போகும் , முழுமையாக
வெளியேறாது, போகாமலும்
இருக்கலாம்.
பெண்களுக்கு மூத்திரம் எரிச்சலுடன் குறைவாகவும்,அடிக்கடியும் வெளியேறும். மாதவிடாய்
எப்பொழுதும் சரியான நாளில் வெளிவருவதில்லை, காலந்தவறி
வெளியாகும் . அதிகமான
போக்குடன் செரிமான கோளாறுகளும், மலச்சிக்கலும்
இருந்து காலை நேரங்களில்
தொல்லைகள் அதிகமாகவும் காணப்பட்டால் அவர்களுக்கு நக்ஸ்வாமிக்கா மிகச்சிறந்த மருந்தாக இருக்கும் .
வறண்ட இருமல், அத்துடன்
அடிவயிற்றில் இறுக்கமான உணர்வு.
மூலவியாதியால் அவதிபடுவார்; ஆசனவாயில் ரத்தம் வெளிவரும்.
காலையில்
எழுந்தவுடன் குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற தொல்லைகளால் அவதிக்கு உள்ளாவதால் மிகவும் மன அழுத்தத்திற்கு
உள்ளாக நேரிடும்.
குடிபழக்கதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு , வயிற்றில் வலியும் எரிச்சலும் இருக்கும்
அதிகமாக மது அருந்துவதாலும் , காபி சாப்பிடுவதாலும் தலைசுற்றல்
உண்டாகும்.
நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்தே வேலை
செய்வதாலும் , காபி மற்றும் மது வகைகள் உட்கொள்வதாலும் தலைவலி
ஏற்படும் . தலைவலி காலையில் ஆரம்பித்து நாள் முழுவதும் கூடி பின்னர் மலையில்
குறையும். தலைவலியுடன் புளித்த,கசப்பான வாந்தியும், மலச்சிக்கலும் இருக்கும்; இக்குறிகள் சப்தம் , வெளிச்சம் , வெளிக்காற்று மற்றும் உணவிற்கு பிறகு
மோசமாகும். தலைவலி நெற்றிப்
பொட்டில் இருக்கும்; கண்கள் பிதுங்கி
வெளிவருவது போன்ற உணர்வு இருக்கும் அல்லது பின்தலையில் இருக்கும்.
முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் வலிப்பு
ஏற்படும். அப்பொழுது உடலில்
அதிர்வும் , வெட்டி
இழுக்கவும் செய்யும். வலிப்புகள் துயரர் நல்ல உணர்வுநிலையில் இருக்கும்போதே ஏற்படும்.
முகத்தில் அரிப்பும் , ஊறலும் இருக்கும்.
அதுவும் இலச்சக்கணக்கான எறும்புகள் முகத்தில் ஊறுவது போல்
தோன்றும் .
வாய் வறட்சியுடனும் , புண்களுடனும் இருக்கும்.
உமிழ்நீரில் இரத்தம் கலந்து வெளியேறும் < கோபம், மனவெழுச்சி, தொடுதல் , அசைதல்.
பசி ஏற்படும்போது நாக்கில் புளிப்புடன் கூடிய
கசப்புச்சுவை இருக்கும்; சிறிதளவு
சாப்பிட்டவுடன் திருப்தி ஏற்பட்டுவிடும்.
உடலைவிட தலை பெரியதாக இருப்பதுபோன்ற உள்ளுணர்வு.
குடலிறக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற உள்ளுணர்வு.
மூல நோயினால் ஆசன வாயிலிருந்து இரத்தப்போக்கு
இருக்கும். மற்றும் மூல
நோய்க்கு நக்ஸ்வாமிக்கா மிகச்சிறந்த மருந்து.
உணவு உண்டபின்பு
புளிப்புசுவை, அதன்பிறகு ஒன்று
அல்லது இரண்டு மணி நேரங்கழித்து
வயிற்றில் கணம் , வாயில் நீர்
ஊறுதல் , இடுப்பை சுற்றிலும் இறுக்கமான உணர்ச்சி.
அதனால் இடுப்புத் துணியை தளர்த்த வேண்டி வருதல்.
இடுப்புவலியினால் படுக்கையில் புரண்டு படுக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து அதன் பிறகு
தான் திரும்பி படுக்க இயலும்.
உணவுடனோ அல்லது மருந்தாகவோ அலோபதி மருந்துகள் , இஞ்சி, மிளகு போன்ற வாசனை திரவியங்கள் போன்றவற்றை எடுத்துக்
கொண்டபிறகு நக்ஸ்வாமிக்கா தேவைப்படும்.
டைபாய்டு காய்ச்சலின் துவக்கத்தில் மட்டுமே
இம்மருந்து வேலை செய்யும்.
காய்ச்சலின் போது அதிக சூடு ; உடம்பு முழுவதும் நெருப்புபோல் சுடுதல். குறிப்பாக முகம்
சிவந்தும் , சூடாகவும்
இருக்கும். இவ்வளவு சூடு
இருந்த போதிலும் துயரரால் உடம்பை அசைக்கவோ அல்லது போர்வையை
சிறிதளவு விலக்கவோ முடியாது.அவ்வாறு செய்தால் சில்லிப்பு
உண்டாகும் .
குளிர் , சூடு, வியர்வை போன்ற சுரத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் போர்த்திக் கொண்டே இருக்க நேரிடும்.
குளிர் , சூடு, வியர்வை போன்ற சுரத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் போர்த்திக் கொண்டே இருக்க நேரிடும்.
கிறுகிறுப்புடன் கூடிய தலைவலி -பின்தலையில் அல்லது கண்களுக்கு மேல். மூளை வட்டமாக சுற்றிவருவது போன்ற
உணர்வு.வெயிலில் செல்வதால் தலைவலி .
பெரும் சப்தம் காதில் வலியையும் கோபத்தையும் ஏற்படுத்தும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து போதல்.
உடலின் ஒரு பக்கம் மட்டும் புளித்த
வியர்வை.
இசிவு , ஐம்புலன்களின் கூருணர்வு , குளிர் ஆகிய மூன்றும் இம்மருந்தின் தனிச் சிறப்பு
பண்புக்குறிகலாகும்
நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):
கோபம், கருத்துவேறுபாடு, மனவேலை, தூக்கம் கெடுதல், சாராயம், மருந்துகள், டீ,
சுயஇன்பம், அதிகபடியான
புணர்ச்சி, மசால் மற்றும்
உயர்தரமான உணவு வகைகள்.
ஆண்கள் (Male): இரவு
தூக்கத்தில் விந்து வெளியேறுதல். உடல் உறவின்போது விந்து முந்துதல். விரைவாக காம
உணர்வுக்கு ஆட்படுபவர் . வயதான ஆண்களுக்கு சுக்கிலசுரப்பிகள் பருத்து
மூத்திரம் ஒழுகிக் கொண்டேயிருக்கும். புணர்ச்சியின்
போது ஆண்குறி தளர்ச்சி
அடைந்துவிடும். மன,
உடல் வேலைகளாலும், சுய
இன்பதினாலும் காம உணர்ச்சி
குறைபாடு உள்ள போது நக்ஸ்வாமிக்கா சிறப்பாகச்செயல்படும்.
பெண்கள் (Female): உடல் உறவின்
மீது அதிக விருப்பம். வலியுடன்கூடிய மாதவிடாய் அச்சமயத்தில் கருப்பையிலிருந்து இசிப்பு உண்டாக்கிற
வலியுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற
உந்துதல். மாதவிடாய் குறித்த நாட்களுக்கு முன்பாகவும், மிக அதிகமாகவும், பல நாட்களுக்கு நீடித்தும் இருக்கும். பிரசவ வலிகள் கடுமையாகவும், விட்டு விட்டும் தோன்றுதல், மயக்கத்தை உண்டாக்கும்; மலம் மற்றும் மூத்திரம் கழிக்க உந்துதல்.
தற்கொலை செய்துகொள்ள அல்லது தன் கணவனையோ , மற்றவர்களையோ
கொலை செய்துவிடக்
கடுமையான தூண்டுதல் இருக்கும். முழுநிலவின்
போது மாதவிடாய் திரும்பவும்
வெளிப்படும். வெள்ளைப்பாடு முடை நாற்றத்துடனும் , மஞ்சள் கறையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
குழந்தைகள்(Child): இளம் குழந்தைகளின் நச்சுதும்மல்கள். அதிகபடியான பசியுடன் உடல் இளைப்பு. மூக்கு அடைப்பினால் சிறு குழந்தைகள் பால் அருந்தச் சிரமம். நன்றாக சாப்பிட்டாலும் உடல் இளைப்பு. இரவில் அழுதல். இடதுபக்க குடலிறக்கம்.
உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks): வயிறு காலியாக இருந்தாலும் உணவின் மீது வெறுப்பு. கொஞ்சம் சாப்பிட்ட உடன் வயிறு நிறைந்த உணர்வு. காபி, புகையிலை,சாராயம், மாமிசம் போன்றவற்றின் மீது வெறுப்பு. பீர், கொழுப்பு , கசப்பான உணவு மற்றும் மசால் உணவு மீது விருப்பம். சூடான பானங்கள் வயிற்று தொந்தரவுகளை சரி செய்யும்.
மாறுமைகள்:
(Modalities
=Agg/Amel):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation): காலையில் கண் விழித்த உடன் உபாதைகள் அதிகமாகும்.
சிறிதளவு குளிர்ந்த காற்று
வீசினாலும் தொல்லைகள் அதிகமாகும். திறந்த
வெளியில் தொல்லைகள் கூடும்(ஆனால் மூக்கடைப்பு சரியாகும்).
கோடைகால வெப்பத்தை தாங்க
இயலாது. காபி, ஒய்ன், குளிர்ந்த உணவு, குளிர்ந்த
தண்ணீர் ஆகியவைகளால் தொல்லைகள் அதிகரிக்கும். அதிகஉணவு
சாப்பிட்டதால் , சத்தம், தொடுவது மற்றும் மணம்
இவைகளாலும் நோய் அதிகரிக்கும். காய்ச்சலின் போது போர்வையை விலக்க
வெறுப்பு.
நோய்க்குறி குறைதல்(Amelioration):
மாலைநேரம் ஓய்வாக
இருக்கும்பொழுது. ஈரமான பருவநிலை. சுலபமாக கழிவுப்பொருள்கள் வெளியேறினால் நலமாக இருக்கும்.குட்டித் தூக்கம் . சூடான பானங்கள், பால் சாப்பிடுவதால் தொல்லைகள் குறையும் .
குளிர்ந்த நீரில் குளித்தால் அல்லது ஆசனவையைக்
கழுவினால் மூலம் மட்டுப்படும்.
இம்மருந்தின் மையக்கருவான குணங்கள்(Nucleus):
1 . கோபம், எரிச்சலுடன் கடும் கோபம்.
2 . தொடுதல் மற்றும் சப்தம் போன்றவற்றிற்கு அதிஉணர்ச்சி.
3 . குளிர் , சூடு, வியர்வை போன்ற சுரத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் போர்த்திக் கொண்டே இருக்க
2 . தொடுதல் மற்றும் சப்தம் போன்றவற்றிற்கு அதிஉணர்ச்சி.
3 . குளிர் , சூடு, வியர்வை போன்ற சுரத்தின் ஒவ்வொரு நிலைமையிலும் போர்த்திக் கொண்டே இருக்க
நேரிடும்.
4. நீடித்த மலச்சிக்கல். அடிக்கடி
மலம் கழிக்கவேண்டும் என்ற உந்துதல் இருக்கும் ,
ஆனால் மலம் சிறிது
சிறிதுவாக போகும் , முழுமையாக வெளியேறாது, போகாமலும் இருக்கலாம்.
5. வலிப்பு
வரும்போது உணர்வுடன் இருப்பார்கள்.
6.வாந்தி
எடுக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
அப்படி வாந்தி எடுத்துவிட்டால் தனக்கு நன்றாக
இருக்கும் என்று நினைப்பார்.
7. காய்ச்சலின்
எல்லா நிலைகளிலும் போர்த்திக்கொள்ள விரும்புவார்.
8. மலம் கழிக்க விரும்பாதவர்களுக்கு இம்மருந்து பொருந்தாது.
8. மலம் கழிக்க விரும்பாதவர்களுக்கு இம்மருந்து பொருந்தாது.
வீரியம்: 1C முதல் 30C ,
200C,1M,10M,50M,CM வரை.
குறைந்த வீரியம் ,
குடிப்பழக்கத்திற்கு அடிமையனர்வர்களிடம் ஏற்படும் மனக்குறிகலான நடுக்கம் , தலைவலி , வயிற்று உப்பிசம் மற்றும் அதிகபடியாக புகையிலை உபயோகித்தல் , கர்ப்ப காலத்தில் வாந்தி போன்றவற்றிக்கு
பயன்படுத்த வேண்டும். மனக்கவலை , வலிப்பு, மலச்சிக்கல் போன்ற துயரங்களுக்கு உயர்ந்த வீரியம் பயன்படுத்தவேண்டும். மலசிக்கலுக்கு தாய்
திரவத்தை பயன்படுத்தக்கூடாது. அதேபோல் அடிக்கடி இம்மருந்தை
கொடுக்ககூடாது. அதுவும் இரவில் மட்டுமே
நக்ஸ்வாமிக்கா கொடுக்கப்படவேண்டும். இம்மருந்து ஏழு நாட்கள் வரை வேலை
செய்யும்.
மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை(Relationship): அனேகமாக
எல்லா வியாதிகளிலும் சல்பர் (Sulph) மருந்திற்கு
முன்பும் பின்பும் நன்றாக வேலை
செய்கிறது.ஆர்சனிகம் ஆல்பம்(Ars) ,இபிகாக் (IP)
, பாஸ்பரஸ்(Phos) , செபியா (Sep) , சல்பர்
ஆகிய மருந்துகளுக்குப்
பிறகு நக்ஸ்வாமிக்கா நன்றாக வேலை செய்யும்.
பிரையோனிய (Bry) , பல்சடில்லா(Puls) , சல்பர் ஆகிய மருந்துகள் நக்ஸ்வாமிகாவுக்கு பிறகு நல்ல குணம் தரும்.
முறிவு மருந்துகள்: காபியாகுருடா , இக்னேசியா, காக்குலஸ் .
சிங்கம் மெட் (Zinc) பகை மருந்தாகும். நக்ஸ்வாமிகாவுக்கு முன்போ அல்லது பிறகோ கொடுக்கக்கூடாது.
முறிவு மருந்துகள்: காபியாகுருடா , இக்னேசியா, காக்குலஸ் .
சிங்கம் மெட் (Zinc) பகை மருந்தாகும். நக்ஸ்வாமிகாவுக்கு முன்போ அல்லது பிறகோ கொடுக்கக்கூடாது.
It was very useful to go through sir since it is in our mother tongue. We are looking forward to see case history along with this article for easy remembrance of this medicine. Thank you sir
ReplyDeleteஎன் மனவைிக்கு சில வருடங்கலாக திடிர் மயககம் உளளது கண் இரண்டும் வெ ரித்து பார்து சம்பந்தம் இல்லாமல் பே சுகிறால் சில நமிடம் கழித்து உறங்கம் பிறகு சுய நிணை வு திரும்புகறால் நான் என்ன செ ய் ய வே ண்டும்
ReplyDelete