Saturday, 30 June 2012

ஆர்கனான் மணிமொழி-6


The unprejudiced observer - well aware of the futility of transcendental speculations which can receive no confirmation from experience - be his powers of penetration ever so great, takes note of nothing in every individual disease, except the changes in the health of the body and of the mind (morbid phenomena, accidents, symptoms) which can be perceived externally by means of the senses; that is to say, he notices only the deviations from the former healthy state of the now diseased individual, which are felt by the patient himself, remarked by those around him and observed by the physician. All these perceptible signs represent the disease in its whole extent, that is, together they form the true and only conceivable portrait of the disease*.

* I know not, therefore, how it was possible for physicians at the sick-bed to allow themselves to suppose that, without most carefully attending to the symptoms and being guided by them in the treatment, they ought to seek and could discover, only in the hidden and unknown interior, what there was to be cured in the disease, arrogantly and ludicrously pretending that they could, without paying much attention to the symptoms, discover the alteration that had occurred in the invisible interior, and set it to rights with (unknown!) medicines, and that such a procedure as this could alone be called radical and rational treatment.

Is not, then, that which is cognizable by the senses in diseases through the phenomena it displays, the disease itself in the eyes of the physician, since he never can see the spiritual being that produces the disease, the vital force? Nor is it necessary that he should see it, but only that he should ascertain its morbid actions, in order that he may thereby be enabled to cure the disease. What else will the old school search for in the hidden interior of the organism, as a prima causa morbid, whilst they reject as an object of cure and contemptuously despise the sensible and manifest representation of the disease, the symptoms, that so plainly address themselves to us? What else do they wish to cure in disease but these?

தன் சொந்தக் கருத்திலிருந்து துயரரை அணுகாத மருத்துவர் ( unprejudiced observer-முற்சார்வற்ற நுணுகிகான்பவர் ) தமது எல்லை கடந்த ஊகங்களால் நோயைப் பற்றி உறுதி செய்ய இயலாது  என்பதைத் தன் பட்டறிவினால் உணர்ந்து விழிப்புடன் செயல் பட வேண்டும். ஒவ்வொரு தனித்தனி துயரரிடமும் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களைத்  தவிர (நோய்சார்ந்த குறிப்பிடத் தகுந்த ஒன்று, விபத்துக்கள், துயர்க்குறிகள்)  வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது. ஐம்புலன்களின் துணைகொண்டு வெளிப்படையாக அறியக்கூடிய இம் மாறுதல்களைத் தவிர வேறு எதையும் மருத்துவர் கவனிக்க வேண்டியதில்லை .   துயரரின் முன்பிருந்த நோயற்ற நிலைக்கும் , தற்போதுள்ள நோயுற்ற நிலைக்கும் உள்ள மாறுதல்களின் விபரங்களை துயரர், அவர் அருகில் இருப்போர் ஆகியோரின் வாக்குமூலமாகவும் மற்றும் மருத்துவர் தமது கண்ணோட்டத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளவேண்டும். இந்தக் குறிப்புகளே ( Signs)  துயரின் முழுத் தன்மையையும் , உண்மையான உருவத்தையும் தெரிவிப்பதாக இருக்கின்றது*.

* துயரின் உள்ளார்ந்த அமைப்புகள், உள் உறுப்புகளுக்குள் அல்லது உயிர் ஆற்றலில் என்ன நேர்ந்திருக்கிறது ,துயருக்கான  காரணம் என்ன என்பதை மிகக் கவனமாக , குறிகளின் அடிப்படையில் கண்டு உணராத , அதன் அடிப்படையில் மருந்து தேர்வு செய்யாதவர்கள் சரியான மருந்தைத் தேர்வு செய்வதாகச் சொல்வது  வீம்பு மிக்கதாகவும் , கேலிக்குரிய வகையிலும் மற்றும் பாசாங்கு செய்வதாகும்.   அப்படிப்பட்ட ஒரு மருத்துவ முறையை பழமையானது என்றும் பகுத்தறிவுக்கு உட்பட்டதி என்றும் எவ்வாறு கூறிக்கொள்ளமுடியும்.

ஐம்புலன்களால் அறிந்து கொள்ள இயலாத , நோயைத் தோற்றுவிக்கிற ஆற்றல் உள்ள ஒன்றை -அதாவது உயிர் ஆற்றலை அறிய முற்படுவதை விட்டுவிட்டு  புலன்களால் அறிந்து கொள்ளக்கூடிய , அது வெளிப்படுத்துகின்ற நோய்த் தன்மையை மட்டுமே உணர்ந்து மருந்து கொடுத்தால் தான் நோயைக் குணமாக்க முடியும். அதை விட்டுவிட்டு பழைய மருத்துவ முறையைச் சேர்ந்தவர்கள், (Old school-Allopathy system) ஓர் உயிரியிடத்தில் மறைந்திருக்கும் உட்புலன்களில் என்ன தேடிக்  கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் . நோயின் பிரதிநிதிகளாக வெளிப்படும் குறிகள் அல்லாது வேறு எதனைக் கொண்டு நலமாக்க இயலும்?. 

No comments:

Post a Comment