மதியிறுக்கம்
AUTISM
OR
AUTISM SPECTRUM DISORDER (ASD) -மதியிருக்க உருவெளி
உருவக் குறைபாடு
OR
ASPERGER SYNDROME
கட்டுரை
ஆசிரியர்: சு.கருப்பையா, மதுரை.
மதியிறுக்கம் அல்லது ஆட்டிசம் (AUTISM) என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும்
ஒருவித சிக்கலான வளர்ச்சி சார்ந்த குறைபாடு ஆகும். இதனை ஒரு நோய் என்றோ அல்லது
மூளை வளர்ச்சி குறைபாடு என்றோ மற்றும் மனவளர்ச்சிக் குறைவு என்றோ
கருதக்கூடாது. மாறாக , மூளையானது தனக்கு வரும் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து
கொள்ளும் திறனை தடுப்பது ஆகும். அதாவது பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை
சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் குழந்தைகளின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்களே
“மதியிறுக்கம்” என்பதாகும். இதனை குழந்தைகளின்
அறிவுத்திறன், படிப்பாற்றல் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடு என்று எளிமையாக புரிந்து
கொள்ளலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும். தாயின் முகம் பார்த்து சிரிப்பது,
பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு
ஆறுமாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் இருப்பது, 12 மாதங்களான
பின்பும் மழலை சப்தங்கள் செய்யாமலிருத்தல், 18 மாதங்களில் பேசினாலும் ஒரே
சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் போன்றவை மதியிறுக்கத்தின் ஆரம்ப
அறிகுறிகளாகும்.
கூர்ந்து கவனித்தால், 18 முதல் 24 மாதங்களான இக்குழந்தைகள் மற்ற
குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் தனியாகவே இருப்பதை அறியலாம். அதாவது ,
சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும்
பாதிப்பு உடையவர்களாக இருப்பார்கள் ; அவர்களால் பேச்சு மற்றும் உடல்மொழிகளால்
மற்றவர்களோடு தொடர்புகொள்ள முடியாது;
அவர்களுக்கென்று தனி உலகம் இருப்பது போல அவர்களின் செயல்கள் , நடத்தைகள்,
விருப்பங்கள் ஆகியவையும் விநோதமாக இருக்கும் . இதை மனநலக் குறைபாடு என்று பலர் தவறாக
நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது
. இக்குழந்தைகளும் மற்ற குழந்தைகள் போல் சாதாரணமானவர்களே!. இருந்தாலும் பெற்றோர்கள்
இவர்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மதியிறுக்கம் பற்றிய
புள்ளி விபரங்கள்:
தற்போது, இந்த மதியிறுக்க குறைபாடு
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது . குறிப்பாக பெண்
குழந்தைகளை விட , ஆண் குழந்தைகளிடத்தில் தான்
நான்கு மடங்கு அதிகம் காணப்படுகிறது. 2018 இல் எடுத்த
புள்ளிவிரங்களின்படி பார்த்தால் உலகில் பிறக்கும் 59 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு
( 1:59) இந்த குறைபாடு ஏற்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு 1: 37 என்ற சதவீதத்திலும்
பெண் குழந்தைகளுக்கு 1: 151 என்ற சதவீதத்திலும் இந்த குறைபாடு
கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் அறிவுத்திறன் ஆற்றலின்மை 31% சதவீத குழந்தைகளுக்கு 70% சதவீதத்திற்கும் ( IQ
<70) குறைவாக இருக்கிறது. 25% சதவீத குழந்தைகளுக்கு 71-85 சதவீதம் வரையும், 44% சதவீத குழந்தைகளுக்கு சதவீதத்திற்கு மேலாகவும் இருக்கிறது.
இந்தியாவில் மதியிறுக்க குழந்தை பிறப்பு என்பது 1: 90 என்ற சதவீதத்தில் இருக்கிறது என்று புள்ளி
விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு குழந்தைக்கு இந்த மதியிறுக்க
குறைபாடு இருப்பதை எந்த மருத்துவ கருவிகள் மூலமும் கண்டறியமுடியாது. அவர்களின்
நடவடிக்கைகளின் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். முன்பு கூட்டுக்குடும்பங்களாக
இருந்த போது தாத்தா, பாட்டி மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். குழந்தையின் வளர்ச்சியில் தடையோ அல்லது மாற்றமோ தெரிந்தால்
அதை உடனடியாக கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு
, உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சையும் கொடுத்து குணப்படுத்தும் வாய்ப்பு
இருக்கிறது. ஆனால், இன்றுள்ள சூழலில் ,
கூட்டுகுடும்பமில்லாமலும் கணவன் மற்றும்
மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதாலும் குழந்தைகளுக்கு மதியிறுக்கக் குறைபாடு
அல்லது மிகை இயக்கம் இருப்பதை கண்டறிவதற்குள் காலம் கடந்து விடுகிறது. இக்குறைபாட்டை
குழந்தைகளின் இரண்டு வயதிற்குள் கண்டறிந்து முறையான சிகிச்சையும் , பயிற்சியும்
கொடுத்தால் ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் . அதனால் ,
தனிக்குடும்பம் நடத்தும் பெற்றோர்கள்
மிகக் கவனத்துடன் குழந்தைகளை பேணி வளர்க்க வேண்டும்.
பொதுவாக குழந்தைகளின்
குறைபாடுகளான காது கேளாமை , பேசாத்தன்மை, பார்வைக் குறைபாடு, உடல் உறுப்புகளின்
வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றை எளிமையாக நம்மால் கண்டு கொள்ள முடியும். ஆனால் மதியிறுக்கத்தின் பாதிப்பை
அப்படி எளிமையாக வகைப்படுத்தி விடமுடியாது; குழந்தைகளின் நடவடிக்கையின் மூலம் மிக
நுட்பமாக அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இக்குழந்தைகளைப் பற்றி கி.பி 1943 இல் உலகிற்கு முதன் முதலில் எடுத்துக்
கூறியவர் ஆஸ்திரிய
நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் லியோ
கானர் (LEO KANNER 1894-1981 ) என்பவர் தான்
. அவர் தனது, “அன்பு வளையத்தை சிதைக்கும் மதியிறுக்கத் தொந்தரவுகள்” (Autistic Disturbances of Affective Contact)
என்ற ஆய்வறிக்கையை “நரம்புக்கோளாறுள்ள குழந்தை” ( Nervous Child) என்ற
பத்திரிக்கையில் வெளியிட்டார். அந்த ஆய்வறிக்கை தான் முதன் முதலாக மதியிறுக்க பாதிப்புடைய
குழந்தைகளின் பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்தது. . ஆனால், மருத்துவர் லியோ கானர், பெற்றோர்களின் அரவணைப்பை
குழந்தைப் பருவத்தில் கிடைக்காததால் தான் இந்த
பாதிப்பு ஏற்படுகிறது என்று நம்பினார். இது முற்றிலும் தவறானது என்று பின்னாளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. என்றாலும்
மதியிறுக்கம் எனும் குறைபாட்டை
முதன் முதலாக வரையறை செய்தவர் என்கிற வகையில் மருத்துவர் லியோ கானரின் பங்கு மகத்தானது.
இவரைத் தொடர்ந்து , வியன்னாவைச்
சேர்ந்த (ஆஸ்திரியா) குழந்தைகள் நல மருத்துவர் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (HANS ASPERGER 1906-1980) என்பவரும் இதே குறைபாடுகளை , சற்றே
வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். அவர் குழந்தைகளின்
ஒத்துணர்வாற்றல் குறைபாடு( LACK OF EMPATHY) , மற்ற குழந்தைகளிடம் பழகாத தன்மை,
மற்றவர்களுடன் இயல்பாக பேசாமல் இருப்பது,
அவர்களுக்கு பிடித்ததை மட்டும் செய்வது மற்றும் செயல் நயமற்ற இயக்கங்கள் (CLUMSY
MOVEMENTS) போன்றவற்றை கண்டறிந்து 1944 இல் ஜெர்மானிய மொழியில் ஆய்வறிக்கையை
வெளியிட்டார். அதனால் இவ்வகை மதியிறுக்க (பேசக்
கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டிற்கு “ஆஸ்பெர்ஜர் நோய்க்குறி ஒத்திசைவு” (ASPERGER
SYNDROME) என்று
அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. ஆகவே , மதியிறுக்க குழந்தைகளின் மறுவாழ்விற்கு மருத்துவர்கள் லியோ கானர் மற்றும்
ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் ஆகியோர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
அறிகுறிகள்:
மதியிறுக்க
குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் இருக்காது. இவர்களின்
நடத்தையை உற்று நோக்கிப் பார்த்தால் மட்டுமே குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாகப் பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டைவிரல்
நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர். அதே போல் புலனுணர்வு சார்ந்த கீழ்க்காணும்
சில பாதிப்புகளும் மற்றும் அறிகுறிகளும் இருக்கும்;
Ø குழந்தைகள் கட்டுப்பாடின்றி இருப்பர். அனைவரிடமும் சகஜமாக
பழகாமல், ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பர்.
Ø சமூகத்துடன்
ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு ஏற்படும்.
Ø
அவர்கள் தமது பேச்சு மற்றும்
உடல்மொழி மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடியாது.
Ø
அவர்கள் தனி உலகத்தில் இருப்பார்கள். அவர்களின் செயல்கள், நடத்தைகள்,
விருப்பங்கள் விநோதமாக இருக்கும்.
Ø
இயல்புக்கு மாறான செயல்பாடுகள் (அதாவது, தொடர்ந்து ஒரே மாதிரி செயல்படுதல்,
கார், பொம்மை, சாவிகள் ஆகியவற்றைப் பார்த்து தீவிரமாக கண்காணிப்பது)
Ø
தங்களது விருப்பத்தை பேச்சு மூலமாக வெளிப்படுத்த முடியாமை.
Ø
தனது தேவைகள் குறித்து சைகையில் வெளிப்படுத்துதல்.
Ø
குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது.
Ø
காரணம் இல்லாமல் சிரிப்பது, அழுவது.
Ø
பேசும்போது கண்களைப் பார்ப்பதை தவிர்த்தல்.
Ø தாய்
தன்னைக் கூர்ந்து பார்ப்பதை தவிர்ப்பார்கள்.
Ø
பாடங்களை கற்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படுதல்.
Ø
உடல் அளவில் அதீதமாக அல்லது குறைவாக செயல்படுவது.
Ø
சாதாரண நிலையில் கேள்வி கேட்டால் (பேச்சுக்களுக்கு) பதில் அளிக்க மறுப்பது.
Ø
பொருட்களை சுழற்றிக்கொண்டே இருத்தல். குறிப்பிட்ட பொருட்களைப் பார்த்து
உணர்ச்சிவசப்படுதல்.
Ø
ஆண் குழந்தைகள் தனது பாலுறுப்பை பிசைந்து கொண்டே இருப்பார்கள்.
Ø
வலி ஏற்பட்டால் அதன் உணர்ச்சியை வெளிப்படுத்தாமை அல்லது அதிக அளவில்
உணர்ச்சியை வெளிப்படுத்துவது.
Ø
கூச்சலிடுவது அல்லது அலறுவது.
Ø
கைகளை தட்டுவார்கள்; சிறகடிப்பார்கள்.
Ø
தூக்கமின்மை . தூக்கத்தில் பற்களை அரைத்தல் அல்லது கடித்தல்.
Ø
தனிமையை விரும்புவார்கள். மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள்.
Ø
மாற்றத்தை விரும்பாதவர்கள். வீட்டில் இருக்கும் சின்னச் சின்ன
பொருட்களைக் கூட அவர்கள் மாற்றிவைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
Ø
நீங்கள் எவ்வளவு சத்தம் போட்டுப் பேசினாலும் அதற்கு கவனம் செலுத்த
மாட்டார்கள். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு காது கேட்கவில்லை என்று நினைப்பார்கள்.
ஆனால் உண்மையில் மதியிறுக்க குழந்தைகளுக்கு காதில் குறைபாடு இருக்காது.
Ø
.ஆபத்தைப் பற்றிய பயம் இவர்களுக்கு இருக்காது. மதியிறுக்கத்தால் பாதிப்படைந்த குழந்தைகள் பயம், ஆபத்து போன்றவற்றை உணரமாட்டார்கள்.
Ø காரணமில்லாமல் அழுவதும், சோக உணர்ச்சியைக் காட்டுவதும்
அவர்களின் இயல்பு. மனம் போன போக்கில் செயல்பட வேண்டும் என்று நினைப்பர்.
Ø பலமான (வெடி) சப்தத்திற்கு பயப்படுவார்கள்.
Ø திட உணவுகளின் மீது வெறுப்பு இருக்கும்.
Ø
குறிப்பிட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறுவது .நண்பர்களை உருவாக்குவது
, விளையாடுதல் மற்றும் மற்றவர்களோடு பழகுவதற்கு இவர்களுக்குத் தெரியாது.
Ø இவர்களை தொடுவதற்கோ அல்லது தூக்குவதற்கோ விரும்பமாட்டார்கள்.
Ø விளையாட்டுப் பொருள்களின் மீது ( பொம்மை, கார்) அதிக ஆர்வம்
இருக்கும்.
Ø இவர்கள் தன்போக்கிலேயே செயல்படவேண்டும் என்று நினைப்பார்கள் .
தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதனால் சமூகத்திறன்களில்
குறைபாடுடையவர்களாக இருப்பார்கள்.
Ø அவர்களது நடத்தையானது (
மற்றவர்கள் கருத்தை மறுத்துப் பேசுதல், அதிக சத்தத்துடன் பேசுதல், மற்றவர்களோடு
இணைந்து செல்ல மறுத்தல், சிறு இழப்பிற்காகக் கூட அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம்
செய்தல் போன்றவை). மற்றவர்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதை அறிய மாட்டார்கள்.
இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் :
குழந்தைகளுக்கு இந்த
மதியறுக்கக் குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவரும் அல்லது விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் மரபணு தொடர்பான குறைபாடுகளும்
மற்றும் சுற்றுப்புற சூழலும் பெரும் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு
இந்தக் குறைபாடு அவர்களின் மனஅழுத்தத்தினால் ஏற்படுகிறது என்று
முதலில் தவறாக கருதப்பட்டாலும் , பின்னர்
மூளைவளர்ச்சிக் குறைபாட்டினாலும் , மைய
நரம்பு மண்டல செயல்பாட்டுக் குறையினாலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.
மேலும் , குழந்தைகளின்
வளர்சிதை மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது; குறிப்பாக மைய நரம்பு மண்டலம்,
கல்லீரல் மற்றும் இணைப்பு திசுக்களை உருவாக்கும் தாமிர வளர்சிதை மாற்றத்தில்
ஏற்படும் பாதிப்பு பெரிதும் காரணமாக
இருக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கு போடப்படும் நவீன தடுப்பூசிகளும் ( DPT
& MMR ) முக்கிய காரணிகளாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு
தடுப்பூசிகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேலைநாட்டு நீதிமன்றங்கள்
இழப்பீடு வழங்கிய வழக்குகளும் உண்டு. ஆகவே , மதியிறுக்க குழந்தைகள் உருவாவதற்கு தடுப்பூசிகளும் ஒரு
வகையில் காரணமாகிறது.
அதுமட்டுமல்லாமல் , தாய்
கருவுற்றிருக்கும் போது ரூபெல்லா என்னும் தட்டம்மையால் பாதிக்கப்படுவது, மது
அருந்துவது, கொகெயின் போன்ற போதை மருந்துகளை உட்கொள்ளுவது போன்றவைகளும் பிறக்கும் குழந்தைகளுக்கு மதியறுக்கம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.
மருத்துவச்
சிகிச்சை:
அலோபதி மருத்துவத்தில்
இந்த மதியிறுக்க குறைபாட்டை நலப்படுத்த
வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்(ANTI-SEIZURE) மற்றும் மனநோய் சார்ந்த
மருந்துகளையும் (ANTI-PSCYCHOTIC) பரிந்துரைக்கிறார்கள். அத்தோடு உடல் சார்ந்த சிகிச்சை
(PHYSICAL THERAPY) , தொழிற்சார்ந்த சிகிச்சை அதாவது அன்றாட நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி
(OCCUPATIONAL THERAPY) , பேச்சுப் பயிற்சி (SPEECH THERAPY) , செயல்முறை சார்ந்த பழக்க
வழக்கங்களுக்கான பயிற்சி ( APPLIED BEHAVIORAL THERAPY) , வளர்ச்சிக்கான பயிற்சிகள்
(DEVELOPMENTAL THERAPY) , சரியான உணவு கட்டுப்பாடு(FOOD SUPPLIMENTS) , நோய் எதிர்ப்பு
மருந்துகள் (ANTIBIOTICS) மற்றும் சிறப்புக் கல்வியும் (SPECIAL EDUCATION) கொடுக்கிறார்கள்.
ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் இக்குறைபாட்டை களைய நூற்றுக்கணக்கான மருந்துகள்
உள்ளன. மருத்துவர் டைனஸ் ஸ்மிட்ஸ் ( DR. TINUS SMITS) என்பவர் மதியிறுக்கக் குறைபாடு
உள்ள 300 குழந்தைகளை ஆய்வு செய்து , இக்குறைப்பாடு
ஏற்பட என்ன காரணம் என்பதை ஆராய்ந்துள்ளார். அதில் 70% சதவீதம் தடுப்பூசியினாலும் ,
25% சதவீதம் நச்சுத்தன்மையுடைய மருந்துகளை சாப்பிடுவதாலும் , 5% சதவீதம் சில நோய்களாலும்
உருவாகிறது என்பதை கண்டறிந்துள்ளார். மேலும் அதற்கான ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையை
“ CEASE THERAPY” என்ற பெயரில் செய்து
வருகிறார். அதன் மூலம் தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகள், வழக்கமான மருந்துகள் , நச்சுத்தன்மையுடைய
மருந்துகளின் விளைவுகள் மற்றும் பிற நோய்கள் ஆகியவற்றிற்குரிய ஹோமியோபதி மருந்துகளை
பல்வேறு வீரியங்களில் ( 30,200 மற்றும் 1 M) பயன்படுத்தி நலப்படுத்தியுள்ளார்.
ஹோமியோபதி மருத்துவத்தில்
நோயுற்ற குழந்தைகள் ஒவ்வொருவரையும் தனித்துவப்படுத்தி அவர்களின் குறிகளுக்கு தகுந்த
ஒத்த மருந்துகளைக் ( SIMILIMUM) கொடுப்பதால்
இக்குறைபாடு விரைவில் நலமாகிறது. ஆகவே இந்த மதியறுக்க குறைபாட்டை குணப்படுத்த ஹோமியோபதி
மருத்துவமே மிகவும் சிறந்தது. குறிப்பாக , கீழ்காணும் ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக வேலை செய்வதாக பல
துயரர்கள் நலமாக்கல் வரலாறு தெரிவிக்கிறது;
இந்த
மருந்து குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் நன்றாக வேலை செய்கிறது. மனஅமைதியின்மை;
பதட்டம்; பிறருடன் தொடர்பற்று இருப்பார்கள்; மனஉலைவு மற்றும் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இவர்களால் சிந்திக்க இயலாது, மனதை ஒருநிலைப்படுத்த முடியாது, கவனச்சிதறல் இருக்கும்.
குழந்தைகளிடத்தில் கடுந்துயரமும் , அழுகையும் இருக்கும் , அது அவர்களது மனஉலைவை நமக்கு
தெரிவிக்கும்.
குழந்தை
எப்போதும் அழுது கொண்டேயிருக்கும் அதனால் தாய்
சதா பால் கொடுத்துக் கொண்டே இருப்பார். பால் ஒத்துக்கொள்ளாது; குழந்தை வாந்தியெடுக்கும்.
வாந்தி தயிர்போல் திரைந்திருக்கும்.
இந்த மருந்து மனம்
மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடத்தில் மிக நன்றாக வேலை செய்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்பட்டிருக்கும் ;
நடக்கவும் மற்றும் பேசவும் தாமதமாகும்.
சிலர் பாடுவார்கள்; சத்தமிடுவார்கள் ; பாடல்களை முணுமுணுப்பார்கள் மற்றும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
அகிராபிஸ்
நூடேன்ஸ் (AGRA):
குழந்தைகளுக்கு அடிக்கடி
சளி பிடிக்கும்; இருமலும் இருக்கும் ; மூக்கடி சதை வளர்ச்சியால் அவதிப்படுவார்கள்.
மேலும் அடிநா சதையில் பெருத்து வீங்கியும்
, காதுகேளாமை மற்றும் பேசுவதற்கு தாமதமாகும். குழந்தை வாய் வழியாக மூச்சு விடும் கூடவே
தொடர்ந்து எச்சில் வழியும் என்பது இம்மருந்தின் முக்கிய குறியாகும் (MERC., SYPH).
அலுமினா குழந்தைகளுக்கு
தான் யார் என்ற மனக்குழப்பம் இருக்கும் (LOSS OF IDENTITY). நினைவாற்றல் இருக்காது,
ஒத்திசைந்து சிந்திக்க இயலாது. கேள்விகளுக்கு மெதுவாக பதில் சொல்வார்கள்; பதிலும் தெளிவாக இருக்காது. கோபத்தில் தொல்லைகள்
அதிகரிக்கும். கத்தி அல்லது துப்பாக்கி போன்றவற்றைப் பார்த்தவுடன் யாரையாவது கொலை செய்ய தூண்டும் உணர்ச்சி
ஏற்படும்.
இக்குழந்தைகளுக்கு
, செயற்கையான உணவுகள் அல்லது தாய் பாலில்லாமல்
செயற்கைப் பால்பவுடர், பெட்டியில்
அடைத்துவைக்கப்பட்ட உணவு வகைகள்
போன்றவற்றை கொடுப்பதால் கடுமையான மலச்சிக்கல்
ஏற்படும். இக்குழந்தைகள் கரடு முரடான உணவுகள்
மற்றும் செரிமானமடையாத பொருள்களை விரும்புவார்கள். மலம் மென்மையாக இருந்தாலும் வெளியேற்றுவதில்
சிரமம் இருக்கும்; மலம் ஆட்டுப்புழுக்கை போலவும் இருக்கும்.
பாரிடா கார்பானிக்கம்
(BAR-C):
இவர்களுக்கு
நினைவாற்றல் பலவீனமாக இருக்கும், மூடத்தனமான குழந்தை. தன்னம்பிக்கைக் குறைவுடன் கூச்ச
சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். தனது குடும்பம் அல்லாத வெளியாட்களைப் பார்க்க பிடிக்காது,
யாராவது வந்தால் மேசைக்குப் பின்னால் ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். முகத்தை மூடிக்
கொண்டு விரல் இடுக்குகளுக்கிடையே அவர்களைப் பார்ப்பார்கள். உடலமைப்பில் குள்ளமாகவும்
வளர்ச்சி தடைபட்டும் இருக்கும். திரும்பத் திரும்ப அடிநா அழற்சி அல்லது தொண்டைச்சதை
அழற்சி ஏற்படும். அடிநா சுரப்பிகளின் பின் பகுதிகளில் சீழ்க்கட்டி உண்டாகும்
(QUINSY). குளிர்ந்த காற்றும், பருவ நிலையும் இவர்களுக்கு ஒத்துக்க கொள்ளாது.
குழந்தைத்தனமாக
இருப்பார்கள்; சின்ன விஷயங்களுக்கும் கவலை கொள்வார்கள். உடல் மற்றும் மனவளர்ச்சி குறையுள்ளவர்களாக இருப்பார்கள். மதியிறுக்க குறைபாடு மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு
மிகச் சிறந்த மருந்து.
பெல்லடோன்னா (BELL):
மிகை
இயக்கம் (HYPERACTIVITY) உள்ள குழந்தைகள்,
மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமாட்டார்கள். பிறர்சொன்ன சொற்களை அப்படியே
பின்பற்றிச் சொல்வார்கள் (ECHOLALIA). தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்கிற , கோபத்தில்
குதிக்கிற மற்றும் கடிக்கிற குணம் இருக்கும். தொடர்ந்து முனங்குவார்கள். மற்றவர்கள்
இவர்களை அணுகும் போது அதிக பயம் கொள்வார்கள். கோபத்தில் மற்றவர்கள் முகத்தில் எச்சிலைத்
துப்புவார்கள். சண்டைபிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
அடிக்கடி
பிதற்றல் ஏற்படும்; பயங்கரமான உருவங்கள் தெரியும்; தூக்கத்தில் பற்களை அரைப்பார்கள்,
கடிப்பார்கள். குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போதும் , காய்ச்சலின் போதும் , ஏதாவது
தண்டனை கொடுத்தபிறகும் வலிப்பு ஏற்படும். இக்குழந்தைகள்
ஆரோக்கிய நிலையில் தேவதை போன்றும் , உடல் நலம்
குன்றிய நிலையில் பிசாசு போலவும் நடந்து கொள்வார்கள்.
கல்கேரியா பாஸ்பாரிக்கம்
(CALC-P):
வளர்ச்சி குறைபாடு
இருக்கும்; பல் முளைப்பதில், நடப்பதில் காலதாமதம் இருக்கும் (இக்குழந்தைகள் 15 மாதங்களுக்குப்
பிறகு தான் நடப்பார்கள்). சிறுகுழந்தைகள் எப்போதும் பால்குடித்துக் கொண்டேயிருப்பார்கள்
மற்றும் விரைவாக வாந்தியும் எடுப்பார்கள். உப்பான , ஆவிபிடித்த மாமிசம் மிகவும் பிடிக்கும்.
அதேபோல் பொறித்த உருளைக் கிழங்கை விரும்பி
சாப்பிடுவார்கள்.
இக்குழந்தைகளுக்கு
மனவளர்ச்சிக் குறைவு (MENTAL RETARDATION), மிகை இயக்கம் (HYPERACTIVITY) , கவனக்குறைவு
மிகை இயக்கக் கோளாறு (ADHD), மனஅமைதியின்மை (RESTLESSNESS) , பிடிவாதம், சுலபத்தில் திருப்தியடையாத தன்மை (FASTIDIOUS) போன்றவைகள் இருக்கும்.
இடி சத்தத்தைக் கேட்டால் மன எழுச்சி ஏற்படும்.
தாய் மற்றும் தந்தை
வழியில் புற்றுநோய், நீரழிவு மற்றும் இதயநோய் இருந்திருந்தால், அப்பெற்றோர்களுக்கு மதியிறுக்கக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. இக்குழந்தைகள் சில சமயம் மந்தமானவர்களாக இருந்தாலும் மனதிற்கு உகந்தவராக
மற்றும் அக்கறையுள்ளவராக இருப்பார்கள். இவர்கள் ஆற்றல் மிக்க குழந்தைகளாகவும் அதே சமயத்தில் ஆட்டிப்படைக்கிறவராகவும் இருப்பார்கள்.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடப் பிடிக்காது. தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகள்
இருக்கும். இக்குழந்தைகளுக்கு பால் மற்றும் உப்பான உணவுகளில் விருப்பம் இருக்கும்.
ஹீலியம் (He):
மதியிறுக்கக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஹீலியமே மிகச் சரியான மருந்து என்கிறார் மருத்துவர். ஜான்ஸ் ஸ்கால்ட்டன். அந்த குழந்தைகளுக்கு , இந்த புற உலகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது; அவர்களுக்கே உரிய தனி உலகத்தில் (மனதிற்குள்) வாழ்வார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தையும் , மதிப்பையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்குத் தெரியாது . இவர்களது நடத்தையை மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது. நீங்கள் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், அவர்கள் உங்களிடமிருந்து நழுவிச் சென்று விடுவார்கள். இந்நிலையை மதியிறுக்கக் குழந்தைகளிடமே காண நேரிடும்.
இக்குழந்தைகள் உங்களை அருகில் நெருங்கி வர அனுமதிக்காது. அவர்கள் விரும்பியதை நீங்கள் செய்தாலும் அதற்கு எதிர்வினை செய்ய மாட்டார்கள். ஒரு மனிதர் பூட்டிய அறைக்குள் இருப்பது போல், தங்களுடைய மனதிற்குள்ளேயே அவர்களை அடைத்து வைத்துக் கொள்வார்கள், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் வகையிலும் மற்றும் விலகியும் வாழ்வார்கள்.
குழந்தைகளின்
நடவடிக்கைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.
குழந்தைகள் வள வளவென்று நிறைய பேசுவார்கள்; ஆபாசமான பேச்சு இருக்கும்; பொறாமைக்குணம்
கொண்டவர்கள்; முட்டாள்த்தனமான சிரிப்பார்கள்; சண்டைபிடிக்கும் குணம் மற்றும் மிகவும் சந்தேககுணம் கொண்டவர்கள். குதிப்பார்கள்;
ஓடுவார்கள்; தப்பித்து ஓடுவார்கள்.
அதிக
உவகை அல்லது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்; உடலில் ஆடை இல்லாமல் சுற்ற, விளையாட விரும்புவார்கள்;
உடன்பிறந்தவர்களிடம் மீது அளவு கடந்த பொறாமை
இருக்கும் என்பதால் அவர்களை அடிப்பார்கள் . அதனால் இவர்களை கவனமாக வளர்க்க வேண்டும்.
அதேபோல் இக்குழந்தைகளுக்கு காமஇச்சை அதிகம் ஏற்படும் . அதனால் சிறுவயதிலேயே சுயஇன்ப
பழக்கம் இருக்கும். சில குழந்தைகள் மற்றகுழந்தைகளிடம் இரகசியமாக காம விளையாட்டு விளையாடுவார்கள்.
ஆண் குழந்தைகள் தனது பாலுறுப்பை பிடித்து பிசையவும், விளையாடவும் செய்வார்கள்.
சில
குழந்தைகள் பகலிலும், இரவிலும் தங்களது படுக்கையிலும்
, ஆடைகளிலும் சிறுநீர் கழிப்பார்கள். சில சமயம் ஆடைகளிலே மலம் கழிப்பார்கள். இது பெற்றோர்களின் கவனத்தை அவர்களை நோக்கி திருப்புவதற்காக
இருக்கலாம்.
இக்குழந்தைகளுக்கு
சாப்பிடுவதிலும், தண்ணீர் குடிப்பதாலும் பிறழ்ச்சி இருக்கும். இவர்களுக்கு இரவில் இருமல்
விட்டுவிட்டு வரும் , குறிப்பாக பல்முளைக்கும் தருணங்களில் வரும். அதிக காய்ச்சல் ஏற்பட்டால்
வலிப்பு உண்டாகும்.
காலி புரமோட்டம் (KALI-BR):
மதியிறுக்கக் குறைபாட்டை
குணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. இந்தக் குழந்தைகள் காரணமே இல்லாமல் இங்கும் அங்கும்
அலைவார்கள். அமைதியற்ற கைகள், எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள்; கைகளை படபடவென்று அடித்துக் கொள்வார்கள்; விரல்களை
பின்னிக்கொண்டே இருப்பார்கள்.
மிகை இயக்கமும் மற்றும்
கவனமின்மையும் இருக்கும். எழுதும் போதும், பேசும் போதும் வார்த்தைகளை விட்டுவிடுவார்கள்
அல்லது வார்த்தைகளில் குழப்பம் இருக்கும்.
ஞாபக மறதி; சொல்லிக் கொடுத்த வார்த்தைகளை மட்டுமே திரும்பச் சொல்வார்கள், ஆனால் அவர்களால்
தானாக பேச இயலாது.
காலி பார்பாரிக்கம்
(KALI-P):
பலவீனமான, இளைத்த
மற்றும் வயதிற்கு மிஞ்சிய புத்தியுள்ள குழந்தைகள். கடுமையான கோபமும் , எரிச்சல்த்தன்மையும் இருக்கும். யாருடனும் சேர்ந்திருக்கப் பிடிக்காது,
ஆனால் வீட்டில் (அல்லது அருகில்) இருக்க யாராவது வேண்டும். உடல் நலம் குன்றிய குழந்தைகள் பகலில் அழுது கொண்டேயிருக்கும்; இரவில் நன்றாகத்
தூங்கும் ( எதிரான மருந்து ஜலப்பா) . சிறுநீர் கழிப்பதற்கு முன்பு குழந்தைகள் அழுவார்கள்.
இனிப்பு பொருள்களின் மீது அதிக விருப்பம். இவர்களுக்கு சூடான உணவே பிடிக்கும். குளிர்ந்த பானங்கள் ஒத்துக் கொள்ளாது.
இக்குழந்தைகளுக்கு
திக்குவாய் இருக்கும். வாயிலிருந்து ஏராளமான எச்சில் வழியும். வயதிற்கு மீறிய புத்திசாலித்தனம்
இருக்கும். சில குழந்தைகள் நாணமுள்ளவர்களாக இருப்பதுடன் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பார்கள்.
இக்குழந்தைகளுக்கு
நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும், அதனால்
காது வலி, வாய்ப்புண் மற்றும் அடித் தொண்டையழற்சி போன்ற நோய்கள் அடிக்கடி தாக்கும். குழந்தைகள் பிறப்புறுப்பை
பிடித்து இழுப்பார்கள் அல்லது சொரிந்து கொண்டே இருப்பார்கள். பிறப்புறுப்பில் ஏற்படும்
ஒருவகையான அரிப்பு அவ்வாறு செய்யத்தூண்டும்.
நேட்ரம் மூரியாடிக்கம்(NAT-M):
மிகை இயக்ககோளாறுள்ள
குழந்தைகள். திக்குவாய். இருட்டிற்கு மிகவும் பயம்; அறையில் சிறிது வெளிச்சம் அல்லது
யாராவது கூட இருக்க வேண்டும். முகம் திகிலுடன் காணப்படும். வலிப்பு ஏற்படும் போது மிகக்
கடுமையாக நடந்து கொள்வார்கள். அருகில் இருப்பவர்களை அடிக்கவும், கடிக்கவும் விரும்புவார்கள்.
இவர்களுக்கு கடும் கோபம் வரும்.
கடுமையான அதிர்ச்சி
தரும் சம்பவங்கள், வாகன விபத்து மற்றும் பாலியியல் தொந்தரவுகள் போன்றவற்றிற்குப் பிறகு
இவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். தூக்கத்தில் பற்களை அரைப்பார்கள் அல்லது கடிப்பார்கள். ஆண் குழந்தைகள் தனது பாலுறுப்பை பிடித்து பிசையவும், விளையாடவும் செய்வார்கள்.
சோம்பேறித்தனம், ஊக்கமின்மை,
மந்தமான அல்லது பொலிவிழந்த குழந்தைகள். சிந்திக்கும் ஆற்றல் குறைவு. பேசும் போது சரியான
வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள், எழுதுவதில் தவறு இருக்கும். குளிக்க விருப்பமிருக்காது.
மனஅமைதியின்மை, முதுகு வளைந்து கூனி காணப்படுவார்கள்.
மலம் பெருமிதமாக இருக்கும்
, மலம் கழிக்கும் போது வலி ஏற்படும். ஆகவே, குழந்தைக்கு மலம் கழிக்க விருப்பம் இருக்காது. இவர்களுக்கு
சூடு ஒத்துக்கொள்ளாது. நீண்ட நேரம் நிற்கவும்
முடியாது. தடுப்பூசி போட்டபிறகு தொல்லைகள் ஏற்படும் (SIL., THUJ).
சிபிலினம் (SYPH):
டெரெண்டுலா (TARENT):
தனக்குத் தானே அல்லது
மற்றவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் நடத்தியுள்ள
குழந்தைகளுக்கும், மிகை இயக்கக கவனக்குறைவு உள்ள குழந்தைகளுக்கும் மிகச்
சிறந்த மருந்து. இவர்களுக்கு ஒளிவீசும் வண்ணங்கள் குறிப்பாக , சிவப்பு , பச்சை மற்றும் நீலம்
வண்ணங்கள் மிகவும் பிடிக்கும் அல்லது கூருணர்ச்சிமிக்கவர்களாக
இருப்பார்கள். அதேபோல் தாளமிடச்செய்யும் இசையையும் , நடனத்தையும் மிகவும் விரும்புவார்கள்.
தடுப்பூசி
போட்டபிறகு தொல்லைகள் ஏற்படும். குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும்; பேசுவதற்கு வார்த்தைகளைத்
தேடுவார்கள் அதிகம் கோபம் வரும்.
மிகை இயக்கக்கோளாறுள்ள
குழந்தைகளுக்கு இம்மருந்து மிகவும் பயனுள்ளது. மனவளர்ச்சி குன்றியிருக்கும். இக்குழந்தைகள்
ஓரிடத்தில் நிலையாக நிற்காது , எங்காவது பயணம் செய்து கொண்டேயிருக்க இருக்க வேண்டும்.
படுக்கையில்
சிறுநீர் கழிப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு மூன்றாம் மாதத்தில் BCG தடுப்பூசி போட்ட
பிறகு உடல்நலக் குறைவு ஏற்படத் தொடங்கியிருக்கும்.
வீராட்ரம் ஆல்பம்
(VERAT):
மிகை இயக்கக்கோளாறுள்ள குழந்தைகள் . எல்லா இரவிலும்
கூக்குரலிடுவார்கள் (HOWLING). ஒரே வேலையை திரும்பாத திரும்ப செய்வார்கள்.
குறிப்பாக , ஏதாவது பொருள்களை குவித்து வைப்பது, பேப்பரை சிறு சிறு துண்டுகளாக
கிழிப்பது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து
ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களை கடிந்து
கொண்டாலும் , தண்டனை கொடுத்தாலும் எந்த உணர்ச்சியையும்
வெளிக்காட்டமாட்டார்கள். குழந்தைகளின்
நடத்தைக் கோளாறுக்கு மருந்தளிக்கும் போது அனகார்டியம், டெரண்டுலா , ஸ்ட்ராமோனியம்
, சல்பர் மற்றும் ஹயோசியமஸ் போன்ற மருந்துகளோடு இம்மருந்தை வேறுபடுத்துவது சிரமமாக
இருக்கும்.
ஹோமியோபதி மருந்துகாண் ஏட்டில்
(COMPLETE DYNAMICS) மேற்கண்ட
மருந்துகளோடு வேறு சில மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோமியோபதி மருத்துவர்கள் அவற்றையும் கவனத்தில்
கொள்ளலாம். அதன் குறிமொழியும், மருந்துகளும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன;
agar AGRA aloe ALUM androc ars aspart bar-c bos-s brachy-s bufo
cact calc calc-p CARC cham cupr hell kali-br LYC MED merc NAT-M nux-v
plb sac-alb sil staph sulph syph tarent thuj TUB
குறிப்பாக,
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்பட்ட மதியிறுக்கக் குறைபாட்டிற்கு ஏதுஜா(AETH)., பாரிடா
கார்பானிக்கம் (BAR-C)., பூபோ ராணா (BUFO).,
கார்சினோசின்(CARC)., மெர்க்கூரியஸ்
(MERC)., தூஜா (THUJ)
போன்ற மருந்துகளை மருத்துவர் ராபின் மர்பி தமது மருந்துகாண் ஏட்டில் (பக்கம் 1525
) பதிவு செய்திருக்கிறார்.
ஆகவே, மதியிறுக்கக் குழந்தைகளை
குணப்படுத்துவதற்கு மேற்கண்ட மருந்துகளிலிருந்து ஏதாவது ஒன்றையோ அல்லது ஹோமியோபதி மருந்து பெட்டகத்திலுள்ள ஏறத்தாழ 8000
மருந்துகளிலிருந்து வேறு ஏதாவது ஒரு மருந்தையோ நோயாளிகளின்
குறிகளுக்குத் தகுந்தவாறு ஹோமியோபதி மருத்துவர்கள் பரிந்துரை செய்யலாம். ஹோமியோபதி நலமாக்கல் என்பது ஒத்தவை விதிகளின்
படி ( LAW OF SIMILARS) நடப்பதால் இம்மருந்துகளை, தூய ஹோமியோபதி மருத்துவர்களின்
ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின்
கடமைகள்:
இந்த மதியிறுக்கக் குறைபாடுள்ள
குழந்தைகளை குணப்படுத்துவதற்கு
பெற்றோர்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டு
மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மதியிறுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று
சொல்லப்படுகிறது. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மதியிறுக்கம்
பற்றிய
விழிப்புணர்வு மிகவும் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளிடம் ஏதாவது வித்தியாசமான நடைமுறை தெரிந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே அறிந்து
, அவர்களை குணப்படுத்த நல்ல மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் ஆலோசனைக்கிணங்க குழந்தைக்கு
பேச்சுப்பயிற்சி மற்றும் பிறருடன் பழகும் விதம்
போன்றவற்றை முறையாக பயிற்றுவிக்க வேண்டும். அத்தோடு அவர்களுக்கு செரிமானக் கோளாறு
ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால்
அவர்களது உணவு பழக்கங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதைவிடுத்து,
பெற்றோர்கள் கணினி , மடிக்கணினி , தொலைக்காட்சி பெட்டி, கைபேசி மற்றும் பிற
பொழுதுபோக்கு அம்சங்களில் கவனத்தை செலுத்தி , குழந்தைகளை புறக்கணித்து
விடக்கூடாது. அதே போல் குழந்தைகளையும் மேற்கண்ட பழக்கத்திலிருந்து ஒதுக்கி வைக்க
வேண்டும். இப்படி, குழந்தைகளின் ஒவ்வொரு
அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து , அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் மதியிறுக்க குறைபாடு உள்ள குழந்தைகளிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.
உங்களுக்கு மதியிறுக்க குழந்தைகள் பிறந்துவிட்டது என்று கவலைப்பட்டு சோர்ந்து விடாதீர்கள். அவர்களை இந்த உலகில் வாழ பழக்கப்படுத்துங்கள் , சுயமாக வாழக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் சின்ன சின்ன தவறுகள் செய்தால் அதை முறைப்படுத்துங்கள். அதே சமயத்தில் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை பாராட்டுங்கள்; அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர்களை ஊக்கப்படுத்துவத்தின் மூலம் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துங்கள். இத்தகைய செயல்களின் மூலம் உங்கள் குழந்தை சுயமதிப்புடனும் , சுயமாகவும் வாழ வழி செய்யுங்கள் .
ஆரம்ப நிலையிலேயே இந்த
குழந்தைகளுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குறைந்தது 18 வயதிற்குள்ளேயே அவர்கள்
சுயமாக தங்கள் வேலையைச் செய்து கொள்ளும் நிலையை உருவாக்க முடியும். அதனால் அவர்களுக்கு
நிபந்தனையற்ற அன்பைத் தருவதும் , மனநிறைவுடன் ஏற்றுக்கொளவதும் தான் அவர்களின்
வெற்றிக்கான படிக்கட்டுகளாக அமையும்.
மேலும் இத்தகைய மதியிறுக்க
குழந்தைகளில் சிலர் மற்ற குழந்தைகளை விட மிகவும் மதிநுட்பம் உள்ளவர்களாகவும் , உலகில்
சாதனை படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அறிவியல் உலகம் கூறுகிறது. ஆகவே, இக்குழந்தைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம்
சரியான மருத்துவச்சிகிச்சை கொடுப்பதன் மூலம் அவர்களை இந்த உலகில் சுயமாக வாழத்
தகுதியானவர்களாக உருவாக்க முடியும் என்பது திட்டவட்டமான உண்மை.
கட்டுரை ஆசிரியர்: சு.கருப்பையா, மதுரை.
இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள் மற்றும் வலைத்தளம்:
2.
Illustrated
Guide to Homeopathic Treatment- Dr. H.S. Khaneja.
3.
Desktop
Guide- Dr. Roger Morrison.
4.
The
Spirit of Homeopathic Medicines-Dr. Didier Grandgeorge.
5.
The
Genius of Homeopathic Remedies- Dr.S.M.Gunavante.
6.
https://homeopathicservices.com
8.
https://www.autismspeaks.org
10.
https://www.completedynamics.com
11.
Homeopathic
Medical Repertory- Dr. Robin Murphy
12.
ஆட்டிசம்:
சில புரிதல்கள் - யெஸ்.பாலபாரதி.
13.
மருத்துவச்
சொல் அகராதி - மருத்துவர். கி.அம்பலவாணன்.
14.
ஹோமியோ
மெடிக்கல் டிக் ஷனரி - மருத்துவர். வி.எஸ். சுப்பிரமணியம்.
வணக்கம் சார்
ReplyDeleteஅற்புதமான கட்டுரைகள்.நான் தங்களிடம் பேச வேண்டும். எனது பெயர் சரவணன் 97914 07535.