Wednesday, 14 August 2019

ஆர்கனான் மணிமொழி-48


§ 48

Neither in the course of nature, as we see from all the above examples, nor by the physician's art, can an existing affection or malady in any one instance be removed by a dissimilar morbific agent, be it ever so strong, but solely by one that is similar in symptoms and is somewhat stronger, according to eternal, irrevocable laws of nature, which have not hitherto been recognized.


ஏற்கனவே உடலில் இருக்கிற எந்தவொரு நோயையும் இயற்கையாவோ , மருத்துவரின் திறமையினாலோ அல்லது அந்நோயைக் குணமாக்கும் ஆற்றலில் மாறுபட்ட ( ஒத்திராத) மற்றொரு நோய்ப் பொருளைக் கொண்டு, அது ( மருந்து) எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும்  எந்தச் சமயத்திலும் நீக்க முடியாது என்பதையே மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் மூலமாக நாம் அறிய முடிகிறது. ஆனால், நோய்த்தன்மையை ஒத்திருக்கும் குறிகளை உடையதாகவும் , அதைவிட அதிகம் வலிமை வாய்ந்ததாகவும் உள்ள நோய்ப்பொருளைக் கொண்டு (மருந்தைக்) அந்நோயை முழுமையாக  நீக்க முடியும் என்பது மாற்றமுடியாத , அழிவற்ற , இதுவரை அறியப்படாத இயற்கை விதிகளுக்கு உட்பட்டதாகும்.

No comments:

Post a Comment