Wednesday, 14 August 2019

ஆர்கனான் மணிமொழி-46


§ 46
Many examples might be adduced of disease which, in the course of nature, have been homoeopathically cured by other diseases presenting similar symptoms, were it not necessary, as our object is to speak about something determinate and indubitable, to confine our attention solely to those (few) disease which are invariably the same, arise from a fixed miasm, and hence merit a distinct name.

Among these the smallpox, so dreaded on account of the great number of its serious symptoms, occupies a prominent position, and it has removed and cured a number of maladies with similar symptoms.

How frequently does smallpox produce violent ophthalmia, sometimes even causing blindness! And see! By its inoculation Dezoteux1 cured a chronic ophthalmia permanently, and Leroy2 another.

An amaurosis of two years' duration, consequent on suppressed scald head, was perfectly cured by it, according to Klein.3
How often does smallpox cause deafness and dyspnoea! And both these chronic diseases it removed on reaching its acme, as J. Fr. Closs4 observed.
Swelling of the testicle, even of a very severe character, is a frequent symptom of small-pox, and on this account it was enabled, as Klein5 observed, to cure, by virtue of similarity, a large hard swelling of the left testicle, consequently on a bruise. And another observer6 saw a similar swelling of the testicle cured by it.
Among the troublesome symptoms of small-pox is a dysenteric state of the bowels; and it subdued, as Fr. Wendt7 observed, a case of dysentery, as a similar morbific agent.

Smallpox coming on after vaccination, as well on account of its greater strength as its great similarity, at once removes entirely the cow-pox homoeopathically, and does not permit it to come to maturity; but, on the other hand, the cow-pox when near maturity does, on account of its great similarity, homoeopathically diminish very much the supervening smallpox and make it much milder8, as Muhry9 and many others testify.

The inoculated cow-pox, whose lymph, besides the protective matter, contains the contagion of a general cutaneous eruption of another nature, consisting of usually small, dry (rarely large, pustular) pimples, resting on a small red areola, frequently conjoined with round red cutaneous spots and often accompanied by the most violent itching, which rash appears in not a few children several days before, more frequently, however, after the red areola of the cow-pock, and goes off in a few days, leaving behind small, red, hard spots on the skin; - the inoculated cow-pox, I say, after it has taken, cures perfectly and permanently, in a homoeopathic manner, by the similarity of this accessory miasm, analogous cutaneous eruptions of children, often of very long standing and of a very troublesome character, as a number of observers assert.10

The cow-pox, a peculiar symptom of which is to cause tumefaction of the arm11, cured, after it broke out, a swollen half-paralyzed arm.12

The fever accompanying cow-pox, which occurs at the time of the production of the red areola, cured homoeopathically intermittent fever in two individuals, as the younger Hardege13 reports, confirming what J. Hunter14 had already observed, that two fevers (similar diseases) cannot co-exist in the same body.

The measles bear a strong resemblance in the character of its fever and cough to the whooping-cough, and hence it was that Bosquillon15 noticed, in an epidemic where both these affections prevailed, that many children who then took measles remained free from whooping-cough during that epidemic. They would all have been protected from, and rendered incapable of being infected by, the whooping-cough in that and all subsequent epidemics, by the measles, if the whooping-cough were not a disease that has only a partial similarity to the measles, that is to say, if it had also a cutaneous eruption similar to what the latter possesses. As it is, however, the measles can but preserve a large number from whooping-cough homoeopathically, and that only in the epidemic prevailing at the time.

If, however, the measles come in contact with a disease resembling it in its chief symptom, the eruption, it can indisputably remove, and effect a homoeopathic cure of the latter. Thus a chronic herpetic eruption was entirely and permanently (homoeopathically) cured16 by the breaking out of the measles, as Kortum17 observed. An excessively burning miliary rash on the face, neck, and arms, that had lasted six years, and was aggravated by every change of weather, on the invasion of measles assumed the form of a swelling of the surface of the skin; after the measles had run its course the exanthema was cured, and returned no more.18

1 Traite de l'inoculation, p.189.
2 Heilkunde fur Mutter, p.384.
3 Interpres clinicus, p.293.
4 Neue Heilart der Kinderpocken. Ulm, 1769, p.68; and Specim., obs. No. 18.
5 Op. cit.
6 Nov. Act. Nat. cur., vol, I, obs. 22.
7 Nachricht Von dem Krankeninstitut zu Erlangen, 1783.
8 A new footnote is added here in the Sixth Edition, as follows:
This seems to be the reason for this beneficial remarkable fact namely that since the general distribution of Janner's Cow-pox vaccination, human small-pox never again appeared as epidemically or virulently as 40-45 years before when one city visited lost at least one-half and often three-quarters of its children by death of this miserable pestilence.
9 Willian, Ueber die Kuhpockenimpfung, aus dem Engl., mit Zusatzen G.P. Muhry, Gottingen, 1808.
10 Especially Clavier, Hurel and Desmormeaux, in the Bulletin des sciencs medicales, publie par les membres de l' Eure, 1808, also in the Journal de medicine continue, vol. xv, p.206.
11 Balhorn, in Hufeland's Journal, 10, ii.
12 Stevenson, in Duncan's Annals of Medicine, lustr. 2, vol. I, pt. 2, No. 9.
13 In Hufeland's Journal, xxiii.
14 On the Veneral Disease, p.4.
15 Cullen's Elements of Practical Medicine, pt. 2, I, 3, ch. vii.
16 Or at least that symptom was removed.
17 In Hufeland's Journal, xx, 3, p.50.
18 Rau, Ueber d. Werth des hom. Heidelb., 1824, p.85.


ஒத்த தன்மையிலான நோய்க்குறிகளை கொண்டிருந்த காரணத்தால் ஏற்கனவே உள்ள நோய்களை ஹோமியோபதி முறைப்படி இயற்கையின் வழியிலே குணமாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளைச் சான்றாகக் கூறலாம் . அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்துக்கூறுவது அவசியமில்லை . ஆனால் உறுதிப்படுத்தப்பட்டவையும் , சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் இருக்கும் சிலவற்றைப் பற்றி பேசுவதே நமது நோக்கமாகும். எனவே, ஒரே படிமமுள்ளதும், அதே தன்மையானதும் , நிலையான மியாசத்திலிருந்து ( நோய்மூலம்) தோன்றியதால் சிறப்பான பெயரிட்டுக் கூறத்தக்க அந்த சில நோய்களைப் பற்றி மட்டுமே நமது கவனத்தை செலுத்துவோம்.

மிகுந்த எண்ணிக்கையிலான அத்தகைய நோய்களில் கவலையுடன் கவனிக்கப்பட வேண்டியதும் , பல குறிகளைக் கொண்டதும் , அதனால் பேரச்சத்தைக் கொடுக்கிற தன்மை கொண்ட பெரியம்மை நோய் மிக முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. அதன் நோய்க்குறிகளுக்கு ஒத்த குறிகளையுடைய வேறு பல நோய்ப் பாதிப்புகளை அது நீக்கியுள்ளது மற்றும் குணபடுத்தியுள்ளது.

பெரியம்மை நோய்த் தாக்குதலின் போது கண்களில் கடுமையான வேக்காடும் , சில சமயங்களில் குருட்டுத் தன்மை ஏற்படுவதும்  நிகழ்ந்துள்ளது. மேலும் பாருங்கள்! நீண்ட காலமாக கண்வேக்காட்டினால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு பெரியம்மைத் தடுப்பூசி மூலம் மருத்துவர் டெஸொட்டி(Dezoteux), அவ்வாறே மருத்துவர்.லெராய் (Leroy) என்பவரும் மற்றொரு நோயாளியைக் குணப்படுத்தியுள்ளார்.

தலையில் ஏற்பட்ட தீக்காயத்தை உள்ளமுக்கியதின் விளைவாக கண்பார்வை மங்கி ( குருட்டுத்தன்மை) இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு அத்தடுப்பூசியினால் குணமானதைப் பற்றி மரு.கிளேயின் (Klein) என்பவர் கூறியுள்ளார்.

மேலும் பெரியம்மையினால் காது செவிடாவதும்  , மூச்சுத் திணறலும் அடிக்கடி உண்டாகியுள்ளனவே! இவ்விரண்டு நாட்பட்ட நோய்களும் பெரியம்மை தோன்றி அதன் உச்சநிலையில் இருக்கும் போது அந்நோய்கள் நீங்கிவிட்டன  என்று மரு. கிளாஸ் (J. Fr. Closs) என்பவர் கூர்ந்து கவனித்துள்ளார்.

பெரியம்மை நோயில் விரைவீக்கம் எற்படுவதுவும் , அது கிட்டத்தட்ட மிகக் கடுமையான தன்மையில் இருப்பதும் அடிக்கடி காணப்படும் குறிகளாகும். இதன் காரணமாகவே அடிப்பட்டதினால் இடது விரையில் கல் போன்ற கடினமான வீக்கம் இருந்த ஒருவருக்கு அப்பாதிப்பிற்கு ஒத்திருந்த தன்மையினால் தான் பெரியம்மை ஏற்பட்டவுடன் அவர் குணமடைந்ததை மரு.கிளேயின் (Klein) கவனித்துள்ளார்.  அவ்வாறு இன்னொருவருக்கிருந்த விரைவீக்கத்தையும் பெரியம்மை நோய் ஏற்பட்டவுடன் குணமானதை மற்றொரு மருத்துவரும் கண்டுள்ளார்.

பெரியம்மை தாக்குதலின் போது தொல்லை தரும் குறிகளாக இருப்பதில் வயிற்றுக்கடுப்பும் ஒன்றாகும். வயிற்றுக்கடுப்பு இருந்த ஒருவருக்கு பெரியம்மை கண்டவுடன் வயிற்றுக்கடுப்பு அடங்கியதை மரு. வெண்ட் ( Fr. Wendt) என்பவர் கவனித்துள்ளார்.

பெரியம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகு ஒருவருக்கு தோன்றுகிற பெரியம்மை , அதற்கே உரிய பெரிய ஆற்றலினாலும் அதனுடைய ஒத்திருக்கும் தன்மையினாலும் , அதாவது, ஏற்கனவே கூறியபடி கோமாரி அல்லது மாட்டம்மை நோயை ஹோமியோபதி முறைப்படி குணப்படுத்தியவாறு பெரியம்மைக் கொப்பளங்கள் பழுக்கும் நிலைக்குச் செல்வதை அனுமதிப்பதில்லை; ஆனால், இன்னொரு வகையில் கூற வேண்டுமென்றால் , கோமாரி நோய் நன்கு முற்றிய நிலையில் இருக்கும் பொழுது , அதை இடைமறித்து பெரியம்மை நோய் தாக்கும் போது அது ஹோமியோபதி முறைப்படி பெரிய அளவில் ஒத்திருக்கும் தன்மையினால் பெரியம்மைக் கொப்பளங்கள் பழுக்கும் நிலைக்குச் செல்லாமல் மென்மைப்படுகிறது என்று மரு.மூரி ( Muhry) என்பவரும் மற்றும் சிலரும் உறுதிப்படுத்திகிறார்கள்.

பெரியம்மைத் தடுப்பு மருந்து போடும் போது, அதனுடைய நிணநீர் , பெரியம்மை ஏற்படாமல் பாதுகாக்கிற தன்மையைத் தவிர்த்து ,  வேறொரு வகையான  தோல் நோயினை உண்டாக்கும் தன்மையுடன் இருக்கிறது. வழக்கமாக அது சிறிய , வறண்ட  ( மிக அரிதாக பெரியதாகவும் , சீழ் பிடித்தும் ) பருக்களும்   , வேறு சில இடத்தில்  சிவந்த சிறிய   வட்டமான   நிறமாற்றம் , தோல் பகுதியில் சிவந்த செம்புள்ளிகள் போன்றவை  திரும்பத் திரும்பத் தோன்றும் மேலும்     மிகக் கடுமையான அரிப்பும் சேர்ந்தே இருக்கும். சில சிறுவர்களுக்கு , பெரியம்மைக் கொப்பளங்கள் தோன்றிய பல நாட்களுக்குப் பிறகு தோலில் சினைப்பு ஏற்பட்டு , சில நாட்களுக்குப் தோலில் தோன்றிய செம்புள்ளிகளும் , சினைப்புகளும் மறைந்து எந்த இடத்தில் சிறிய, சிவந்த, கடினமான தடங்களே எஞ்சியிருக்கின்றன.  இவ்வாறு உடலினுள் செலுத்திய பெரியம்மை தடுப்பூசியின் விளைவுகள் நீண்டகாலம் நீடித்திருப்பவையாகவும் , மிகுந்த தொல்லைகள் தருவதாக இருப்பினும் கூட , அதனுடைய நோய்மூலக்கூறுகளுக்கு ஒத்ததாகவும், அச்சிறுவர்களின் தோலில் தோன்றிய வெடிப்புகளுக்கு ஒத்த குணம் படைத்த மருந்துகளின் மூலம் , ஹோமியோபதி முறைப்படி முழுமையாகவும் , நிரந்தரமாகவும் குணமாக்க முடியும் என்று பல மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த அம்மை தடுப்பூசிகளுக்குப் பிறகு கைகளில் வீக்கம் ஏற்படுவதும் அதனுடைய விசித்திரமான குறியாகவும் இருக்கிறது. அவ்வாறு   கை  வீங்கியும், பாதி முடக்கமும் உடைய ஒருவருக்கு அம்மைக்கொப்புளங்கள்   வெடித்துக் கிளம்பிய பிறகு அவரது கைவீக்கமும் , முடக்கு வாதமும் குணமாகிவிட்டன.

பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டபிறகு தோலில்  சிவந்த  வட்டவடிவமான  பருக்கள்  தோன்றும் போது காய்ச்சலும் உடன் தோன்றுகிறது. ஏற்கனவே, முறைக்காய்ச்சல் இருந்த இரண்டு பேர்களுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டவுடன் அவர்களுடைய முறைக்காய்ச்சல் , ஹோமியோபதி விதிப்படி  குணமடைந்து விட்டது என்பதைமரு. ஹார்டெஜ்  (HARDEGE) தெரிவிக்கிறார். இது , இரண்டு விதமான காய்ச்சல்கள் ( ஒத்த காய்ச்சல்கள்) ஒரே நேரத்தில் , ஒரே உடம்பில் இருக்க முடியாது என்று மரு. ஹண்டர் (HUNTER)  ஏற்கனவே கவனித்துக் கூறியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.


மற்றும்,  கக்குவான் இருமலில் காணப்படும் காய்ச்சல் மற்றும் இருமலைப் போன்று தட்டம்மையின் இயல்புகளும் ஒத்திருக்கின்றன. அதனால், ஒரே சமயத்தில் இருநோய்களும் பெருவாரியாகப் பரவியிருந்த போது, தட்டம்மையினால் பாதிக்கப்பட்டிருந்த பல குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை மரு. போஸ்குயிலான்  (BOSQUILLON) என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

கக்குவான் இருமல் , தட்டம்மையோடு முழுவதும் ஓத்திருக்கிற நோய் அல்ல; இரண்டிற்கும்  ஒற்றுமை கிடையாது. அதாவது, தட்டம்மை பாதிப்பின் போது தோலில் ஏற்படும் வெடிப்புகள் கக்குவான் இருமலில் ஏற்படுவதில்லை.  கக்குவான் இருமலுக்கும்  தட்டம்மை போன்று தோல் கோளாறுகளை உண்டாக்கும் சக்தி இருந்திருந்தால் , தட்டம்மையினால் தாக்கப்பட்டவர்களுக்கு என்றென்றும் கக்குவான் இருமல் ஏற்படாது.

எனினும் , தட்டம்மையின் தலைமையான  அறிகுறியாகிய தோலில் ஏற்படும் வெடிப்புகள் போன்று ஒத்துள்ள குறியைக் கொண்டிருக்கும்  வேறு எந்த நோயுடனும் தட்டம்மை தொடர்பு கொள்ள நேர்ந்திருந்தால் , சிறிதும் மறுப்பிற்கு இடமில்லாதவாறும், ஹோமியோபதி விதிப்படியும் அந்நோயை தட்டம்மை போக்கியிருக்கும். ஒரு சமயம் , தட்டம்மை பரவிய போது , ஒரு நோயாளியிடம் நீண்ட நாட்களாகக் காணப்பட்ட தோல்புறப்பாடு முழுவதுமாகவும், நிரந்தரமாகவும் ( ஹோமியோபதி விதிப்படி) குணமானதை மரு. கோர்ட்டும் (KORTUM ) கவனித்து பதிவு செய்துள்ளார்.

ஒருவருக்கு , ஆறு ஆண்டுகளாக முகத்திலும் , கழுத்திலும் மற்றும் கைகளிலும் மிகுந்த எரிச்சலைத் தரக்கூடிய மிகச்சிறிய சினைப்புகள் காணப்பட்டன. இத்தொல்லை , ஒவ்வொரு தட்பவெப்ப மாற்றத்திற்குத் தகுந்தவாறு துன்பம் அதிகரிக்கச் செய்தது. அவருக்கு தட்டம்மை தாக்குதல் ஏற்பட்டபோது அவருடைய தோலில் சினைப்புகள் காணப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. தட்டம்மையின் முழுமையான  தாக்கம் முடிந்த பின்பு அந்த தடிப்புக்காய்ச்சல் குணமடைந்தது, அதன் பிறகு எப்போதும் திரும்பி வரவில்லை. 


No comments:

Post a Comment