§ 36
If
the two dissimilar diseases meeting together in the human being be of equal
strength, or still more if the older one be the stronger, the new disease will
be repelled by the old one from the body and not allowed to affect it. A
patient suffering from a severe chronic disease will not be infected by a
moderate autumnal dysentery or other epidemic disease. The plague of the
Levant, according to Larry, 1 does not break out where scurvy is
prevalent, and persons suffering from eczema are not infected by it. Rachitis,
Jenner alleges, prevents vaccination from taking effect. Those suffering from
pulmonary consumption are not liable to be attacked by epidemic fevers of a not
very violent character, according to Von Hildenbrand.
Foot
Note-1: Mémoires et Observations,
in the Description de l' Egpte, tom. i.
மனித உடலில், மாறுபட்ட தன்மையுடையதாகவும் , சம வலிமையானதுமான இரண்டு நோய்கள் ஒரே நேரத்தில் சந்திக்கும் போது புதிய நோயை விடப் பழைய நோய் அதிக வலிமை வாய்ந்ததாய்
இருந்தால் பழைய நோய் புதிய நோயை உடலிலே தங்க இடம் கொடுக்காமல் விரட்டி விடுகிறது. நீண்டகால
நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு துயரருக்கு இலையுதிர் காலங்களில்
தோன்றும் வயிற்றுக்கடுப்போ அல்லது பெரிவாரியாக தோன்றும் இயல்புள்ள மற்ற நோய்களோ
ஏற்படுவது கிடையாது. ஊட்டசத்துக் குறைவினால் ஏற்படும் சொறி,கரப்பான் நோயின் பாதிப்பிற்கு (Scurvy) உள்ளானவர்களை லெவெண்ட்
பகுதியைத் தாக்கிய ( கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் வடகிழக்கு
ஆப்பிரிக்காவையும் இணைக்கும் பகுதி ) கொள்ளைநோய் (Plauge) தாக்குவதில்லை என்று மருத்துவர்.லாரி
(Dr.Larry) என்பவர் கூறுகிறார். அதேபோல கரப்பான்புண்
(Eczema) உள்ளவர்களையும் கொள்ளைநோய் தொற்றுவது கிடையாது. ஊட்டசத்துக்குறைவினால்
குழந்தைகளுக்கு வரும் எலும்புநோய்கள் அல்லது கணைநோய் (Rahitis) உள்ளவர்களின் உடலில்
பெரியம்மை தடுப்புமருந்தைச் செலுத்தினால் அம்மருந்து வேலை செய்வதில்லை என்று மருத்துவர்.ஜென்னர் ( Dr.Jenner) வாதிடுகிறார். நுரையீரல் காசநோய் (Pulmonary consumption) உள்ளவர்களை பெருவாரி காய்ச்சல், அவை அதிக கடுமையானதாக
இல்லாவிட்டால் தாக்குவது இல்லை என்று வான்ஹில்டன்
பிராண்ட் (Von
Hildenbrand) குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment