Sunday, 30 June 2013

ஆபத்தான நிணநீர்ச் சுரப்பி வீக்கம் (புற்று) மற்றும் தொண்டை அழற்சி

ஒரு பதிமூன்று வயது சிறுவன் ஆபத்தான நிணநீர்ச் சுரப்பி வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தான்(HODGKIN’S DISEASE). அத்துடன் திரும்பத்திரும்ப டான்சில் கோளம் பாதிக்கப்பட்டதால் பெனிடுரா ( PENIDURA) என்ற ஆங்கில மருந்து பல மாதங்கள் சாப்பிட்டு வந்துள்ளான்.  நலமடையாததால் பின்னர் டான்சில்ஸ் கோளத்தின் சிறு பகுதியை வெட்டியும் எடுத்து விட்டார்கள் ( TONSILLECTOMY) . அதன் பிறகு வாதக் காய்ச்சல் ஏற்பட்டுப் பின்னர் 1992 இல் நீடித்த மூட்டு வேக்காட்டினால் பாதிக்கப்பட்டான் (RHEMATIC ARTHRITIS). என்னிடம் வந்தபோது கீழ்காணும் தொல்லைகள் அவனிடம் இருந்தன;

Ø  கழுத்துப் பகுதியிலுள்ள சுரப்பிகள் பெருத்து வீங்கி வலிகளை தந்ததோடு , தொண்டையிலும் வலி.
Ø  கடந்த ஒன்பது மாதங்களாக கடுமையான மூட்டுவலி, அவ்வப்போது மணிக்கட்டுகளில் வலி.
Ø  உள்ளங்கையிலும்,பாதங்களிலும் அதிகமான வியர்வை.
Ø  விருப்பம்: புளிப்பு மற்றும் இனிப்புகள்
Ø  வெறுப்பு: உப்பு
Ø  சிறுநீர்: தினமும் படுக்கையில் சிறுநீர் கழித்தல்
Ø  கனவுகள்: பாம்பு கடித்தல்

அத்துடன் துயரர் தெரிவித்த விபரங்கள்:

நான் மிகவும் எரிச்சலான சுபாவம் படைத்தவன். என்னை யாராவது திட்டும்போது எனக்கு கோபம் வரும். நான் படிக்காத போதும் அல்லது யாருடனாவது சண்டை போட்டாலும் என்னுடைய அம்மா திட்டுவார்கள். மேலும் , எனது வகுப்பறையில் நண்பர்களுடன் பேசும் பொழுது எனது ஆசிரியரும் திட்டுவார். ஒவ்வொருவரும் நான் விரும்பியவாறு நடந்து கொள்ளவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அவர்கள் என்னை விளையாட அனுமதிக்க வேண்டும். எனக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான். அவன் குறும்புக்காரன் அத்துடன் என்னிடம் சண்டையும் போடுவான். பிறகு, எங்களுடைய அம்மா எங்களைத் திட்டுவார்கள். சிலசமயம் என் அம்மா என்னை அடித்தும் உள்ளார். எனக்கு படிக்கவும், கிரிக்கெட் விளையாடவும் பிடிக்கும். எப்பொழுதெல்லாம்  நான் விளையாட வேண்டும் என்று விரும்புவனோ அப்போது என்னைப் படிக்கச் சொல்வார் என் அம்மா, பிறகு எப்போது நான் விளையாடுவது?. என் அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் என்னை திட்டியதே இல்லை. அவர் என்னை பாராட்டவும் செய்வார்.

கேள்வி: நீ எதற்காவது பயப்படுவாயா?
துயரர்: திருடர்களுக்கும், இருட்டிற்கும் நான் பயப்படுவேன். திருடர்கள் என்னை பிடித்துக் கொள்வார்கள் என்று நினைப்பேன் ( தொலைகாட்சி பார்ப்பதால் ஏற்ப்பட்ட விளைவு). அத்துடன் பாம்பைக் கண்டும் பயப்படுவேன். நான் சிறுகுழந்தையாக இருக்கும் போது ஒரு முறை பாம்பை பார்த்துள்ளேன். காய்ச்சலின் போது என் முன்னாள் பேய்கள் இருப்பதைப் பார்ப்பேன். பனி படர்ந்த மலைப் பகுதியில் துப்பாக்கிச் சுடுதல் நடைபெறுவதாக உணருவேன்.

கேள்வி: உன் அம்மா உன்னைத் திட்டும்போது நீ என்ன செய்வாய்?
துயரர்: பதில் இல்லை! அமைதி!
துயரரின் அப்பா: அறைக்குள் சென்று தனியாக அழுவான். அவனுடைய அம்மா அவனைத் திட்டும்போது அவன் முகத்தில் கோபம் தெரியும். நான் திட்டினால் அவன் அழ ஆரம்பித்து விடுவான்.

கேள்வி:  உங்கள் மகனின் சுபாவம் எப்படி?
துயரரின் அப்பா: அவனுடைய சகோதரனுடன் விளையாடும் போது குறும்புத்தனம் செய்வான். என்னவெல்லாம் மற்றவர்கள் செய்யக்கூடாது என்று அவன் சொல்லுவானோ அத்தனையும் அவன் செய்வான். இன்னுமொரு செய்திதான் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்றும், எனக்கு கார் வேண்டும் என்றும் எப்பொழுதும் அவன் சொல்லுவான்.

நுட்பக்கவனம் (OBSERVATION) :

அந்தத் துயரர் மிகவும் வெளுத்தும், சுட்டித்தனமாக முகத்துடன் காணப்பட்டார். தோல் வறண்டு இருந்தது. மிகவும் வருத்தமாகவும், இரங்கத்தக்க வகையில் தெரிந்தார். அவருடன் நடந்த உரையாடலின் போது, அவருக்கும் சுதந்திரம் தருவதில்லை என்று அவருடைய குடும்பத்தினர்கள் மீது குறை கூறினார். எப்பொழுதும் அம்மாவுடனும், சகோதரனுடனும் அவர் முரண்பாடு கொண்டிருந்தார். அப்பாவுடன் நெருக்கமாக இருந்தார். 

ஒட்டுமொத்தக்குறிகள்  (TOTALITY):
Ø  வெப்ப உடல்வாகு
Ø  அம்மாவின் மீது கோபம்/பயம்( குறிப்பிட்ட நபரின் மீது வெறுப்பு)
Ø  இருட்டில் பயம்
Ø  கீழ்ப்படிய மறுக்கின்ற குணம்
Ø  எதிர்த்துப் பேசினால் இவரால் பொறுத்துக்கொள்ள இயலாது.
Ø  அழும்தன்மை
Ø  புகழார்வம்
Ø  கனவு: பாம்பு கடித்தல்
Ø  புற்றுநோய்க் கட்டி வளர்ச்சி
Ø  உள்ளங்கையிலும்,பாதங்களிலும் அதிகமான வியர்வை.
Ø  தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுதல்; இரவில் அதிகரித்தல்
Ø  டான்சில் கோளம் பாதிக்கும் தன்மை
Ø  புளிப்புச்சுவையில் விருப்பம்

  
மருந்திற்குப் பிறகு விளைவு (REACTION ):

இந்தத் துயரருக்கு முதலில் நேட்ரம் மூர் மருந்து  முப்பதாவது வீரியத்தில் ( NAT-M 30) ஒரு தடவை கொடுத்தேன். ஆனால் அவருடைய உடல் நிலையில்  எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இதற்கிடையில் அவர் என்னிடம் சிகிச்சைக்கு வருவதை நிறுத்திவிட்டதால் அவரை மறந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பிறகு அவருடைய தந்தை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு  மருந்து கொடுக்குமாறு கேட்டார்.  அந்தச் சூழ்நிலையில் , அவருக்கு நிணநீர் கோளத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பதை கழுத்துப் பகுதியில் உள்ள திசுக்களைச் சோதித்துப் பார்த்து உறுதி செய்யப்பட்டிருந்தது ( Cervical Biopsy)  . அத்தோடுஅவருக்கு  புற்று நோய்க் கிருமிகளை அழிக்கும்  திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு  நோயைக் குணப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது( Chemotherapy). ஆனால் அதை இத்துயரின் தந்தை மறுத்துவிட்டார். 

ஏற்கனவே கொடுத்திருந்த மருந்து எனக்கு திருப்தி தராததால் அவரை திரும்பவும் வரவழைத்து அத்துயரின் குறிகளை மறுபரிசீலனை செய்தேன். அவரிடம் முன்பு காணப்பட்ட குறிகள் அவ்வாறே இருந்தன. மேற்க்கொண்டு அவர் தனது அம்மாவின் மீது கடுமையான மனவெறுப்புக் கொண்டிருப்பது தெரிந்தது ( அம்மா தன்மேல் கவனம் செலுத்துவதில்லை என்றும் , பலதடவை அடித்திருப்பதையும், திட்டுவதையும்  அவர் குறை கூறினார்). அவருடைய அம்மாவைப் பற்றிக்கேட்டபோது, அவர் என்னுடைய உண்மையான அம்மாவாக நான் உணரவில்லை என்று பதில் அளித்தார். அத்தோடு, அவரிடம் கருத்தியல் கோட்பாடு ( Idealism) இருப்பதை கண்டுபிடித்தேன். அவர் சிறந்த கனவு காண்பவராக இருந்தார். மிகப்பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்றும் , சொந்தமாகக் கார் வாங்க வேண்டும் என்ற விருப்பமும் அவரிடம்  இருந்தது. இத்தோடு எனது இரண்டாவது கலந்துரையாடலை முடித்துக்கொண்டேன்.

இத்துயரரின் உள்மனதை  ஜான் ஸ்கால்டன் கூறியிருக்கும் ஆய்வுப் பொருள் (Theme) அடிப்படையிலும் , கிளார்க் விளக்கத்தின் அடிப்படையிலும் கூர்ந்து கவனிக்கும் போது அம்மோனியம் மூரியாட்டிகம் மிகச் சரியாக பொருந்துவதாக இருந்தது. முடிவாக , அம்மோனியம் மூரியாட்டிகம் முப்பதாவது வீரியத்தில் ( AMM-M 30) ஒரு தடவை கொடுத்தேன்.

மருந்து எடுத்துக் கொண்ட நாள் முதல்  அவர்  நலமடையத் துவங்கினார்.  மிகப் பெரியதாக வீங்கி இருந்த நிணநீர்க் கோளங்களில் வீக்கம் குறைய ஆரம்பித்தன . ஆனால் எல்லா மூட்டுக்களிலும் வலிகள்  ஏற்பட்டன.  அவருடைய உணவிலும், நலத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. அதனால் வேதியியல் மருந்தைச் செலுத்தும் மருத்துவச் சிகிச்சை ( Chemotherapy) தேவைப்படவில்லை. மேலும் அவர் எடுத்துக் கொண்டிருந்த அலோபதி மருந்துகளும் நிறுத்தப்பட்டன.  அந்தத் துயரர் நன்றாக நலமடைந்தார். அவருடைய தந்தையும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மருந்துகளில் வேறுபாடு:

இந்தத் துயரரின் குறிகளோடு நேட்ரம் மூர் மருந்து  மிகவும் ஒத்திருந்தாலும் , துயரரிடம் காணப்பட்ட கருத்தியல் கோட்பாடு (Idealism) , அத்துடன் அம்மாவின் மேல் அவருக்கு இருந்த  வன்மம் (Grudge) மற்றும் மனக்காழ்ப்பு (Rancour)  போன்ற உணர்வுகள்  நேட்ரம்-மூரை விட அம்மோனியம் மூரியாட்டிகம் மருந்தில் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதால் அம்மோனியம் மூரியாட்டிகம் மருந்து அவரை நலப்படுத்தியது.  அதனால் , குறிகள் ஒத்திருந்தாலும் நேட்ரம் மூர் மருந்து இந்தத் துயரரை நலப்படுத்த உதவி செய்யவில்லை.


 ஆங்கிலம் : மருத்துவர். அமர் டி  நிகாம் ( Dr. AMAR D NIGAM )

2 comments: