பிரிவு: தாவரம்
நிரூபணம் செய்தவர் : மரு.ஹானிமன்
நிரூபணம் செய்தவர் : மரு.ஹானிமன்
முன்னுரை(Introduction) :
இம்மருந்து , உடலில் வேருன்றி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நாடப்பட்ட
நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. சுவாச கோசங்களில் உள்ள பூந்தசைகளிலும் , ஜீரண மண்டலப்
பகுதிகளிலும் , சிறுநீரகம், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் பாதையிலும் நன்றாக
செயலாற்றக்கூடியது. முக்கியமாக நுரையீரல் , கல்லீரல் நோய்களால்
தாக்கப்படுபவர்களுக்கு நன்கு வேலை செய்கிறது. அத்தகைய மனிதர்கள் கை,கால் விரல்களின் கீல்வாத பாதிப்பிற்கு உள்ளாகும்
தன்மையுடையவர்களாய் இருப்பார்கள். இளைஞர்கள்
தமது வயதிற்கு மீறிய கிழத்தோற்றத்துடனும் (ARG.N)
நெற்றியில் சுருக்கங்களை உடையவனாகவும் இருப்பார்கள்.
தலை மட்டும் நன்றாக வளர்ச்சியடைந்து உடல்
மெலிந்தும், பலவீனமும்
, வியாதியில்
அடிபட்ட தோற்றமும் உள்ள குழந்தைகள். நோயுற்ற தருணங்களில் குழந்தைகளுக்கு
அதிகக்கோபமும் ,பரபரப்பும், கட்டுக்கு
அடங்காமல் நடக்கும் தன்மையும் இருக்கும்.
லைகோபோடியம் துயரர் மிகவும் விவேகமுள்ளவர்களாகவும் ( INTELLIGENT), அறிவுத்திறம் வாய்ந்தவர்களாகவும் (INTELLECTUAL) இருப்பார்கள். மிகவும் ஆணவத்துடன்
அதிகாரம் செலுத்துகிறவர்களாகவும் ( IMPERIOUS & DOMINEERING) , அதை விரும்புகிறவர்களாகவும்
திகழுவார்கள் (LOVE
OF POWER). அதே சமயத்தில் உள் மனதில்
கோழைத்தனம் கொண்டவர்களாகவும் (COWARDICE) , தமக்குள்ள
பொறுப்புகளை செயலாற்ற இயலாதவர்களாகவும் இருப்பார்கள்.
தனக்கு
கீழ்நிலையில் இருப்பவர்களிடம் கடுமையாகவும், தனக்கு மேல் நிலையில்
இருப்பவர்களிடமோ அல்லது அதிகாரம் படைத்தவர்களிடமோ மிகவும் பணிவுடனும்
நடந்துகொள்வார்கள். குறிப்பாக பொது வாழ்க்கையில் ஈடுபடும் பாதிரியார்கள்,வக்கீல்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள்
போன்றவர்களுக்கு இம்மருந்து அடிக்கடி தேவைப்படுகிறது ( ஜார்ஜ் வித்தொல்காஸ்).
இம்மருந்து பொதுவாக
வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும்
அடிக்கடி கொடுக்கப்படும் மருந்தாக உள்ளது. நோய்நிலையில்
சோரா, சைகாசிஸ்
மற்றும் சிபிலிஸ் என்ற மூன்று மியாசங்களையும் நீக்கும் தன்மை கொண்டது.
இம்மருந்துக்கான சிறப்புக் குணங்கள்(Nucleus)
லைகோபோடியத்தின் மிகச் சிறந்த குறிகளாக
கீழ்வருபவைகள் உள்ளன;
·
மாலை 4 மணியிலிருந்து இரவு
8 மணி
வரை தொல்லைகள் அதிகரித்தல்.
·
வியாதிகள்
வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு பரவுதல். ( Reverse
Of LACH)
·
அடி
வயிற்றில் அதிகமான வாயு உப்பிசம் .
·
ஆண்தன்மை
குறைவு (IMPOTENCE).
·
தூங்கி
எழுந்தவுடன் குழந்தை கோபமாக இருத்தல்.
·
மூக்கின்
நுனித்தோல் விசிறுவது போல் விரிந்து சுருங்குதல் (நிமோனியா சுரத்தில்)
·
மூத்திரத்தில்
சிவப்பான மணல் வெளிவருதல்.
·
தூங்கும்
போது பாதிக் கண்கள் திறந்திருத்தல், வாய் திறந்திருக்கும்.
·
அதிகப்பசி; ஆனால் சிறிது
சாப்பிட்டதும் வயிறு நிறைந்துவிட்ட உணர்வு.
·
கூர்மையான
அறிவும், பலவீனமான
உடலும் கொண்டவர்கள்.
·
இனிப்பு
மற்றும் சூடான பானங்களில் அதிக விருப்பம் ( குளிர்ச்சியான
பானங்களால் தொல்லைகள் அதிகரிக்கும்).
·
உடலின் மேற்பாகமும், கழுத்தும் மெலிந்து , இடுப்புக்குக் கீழே நீர்ச்சுரப்பு இருப்பது போல் பருத்து
இருப்பவர்கள்.
பண்பியல்பு குறிகள் (Characteristic Symptoms)
·
வெப்ப
உடல்வாகு. ஆனால்
குளிர்ச்சியான பானங்கள் ஒத்துக்கொள்ளாது; எல்லாமே சூடாக வேண்டும்.
·
வலிகளும்
மற்ற கோளாறுகளும் திடீரென்று தோன்றும் ; திடீரென்று மறையும்.
·
மூத்திரத்தில்
சிவப்பான மணல் வெளிவருதல் (Red sand in the Urine).
·
அதிகப்பசி; ஆனால் சிறிதளவு
உணவு சாப்பிட்டதும் வயிறு நிறைந்துவிட்ட உணர்வு தொண்டை வரை
இருக்கும்.
·
வெட்டும் வலி (Cutting pain ) வலது விலா பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு
பரவுதல் . அனைத்து வியாதிகளும் வலது பக்கத்திலிருந்து இடது
பக்கத்திற்கு பரவுதல் ( Throat, Abdomen, Chest, liver, Ovary, Kidney)
·
கடுமையான மலச்சிக்கல்; மலத்தை வெளித்தள்ள இயலாது.
·
இளைஞர்களுக்கும்
, குழந்தைகளுக்கும்
சுவாசகோச நோய்களில் மூக்கின் நுனித்தோல் விசிறுவது போல் விரிந்து சுருங்குதல் ( Fan-like motion of alae nasi )- Dr. Wilson.
·
மாலை 4 மணியிலிருந்து இரவு
8 மணி
அல்லது ஒன்பது மணி வரை தொல்லைகள் அதிகரித்தல். இதுவே
லைகோபோடியத்தின் தலைசிறந்த குறி.
·
வாய்
புளிப்பாக இருத்தல்; புளிப்பான
ஏப்பம், புளிப்பான
வாந்தி, மேல்
வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிற்றில் புளிப்பு.
·
உணவு
ஜீரணமாகிக் கொண்டிருக்கும் போது நெஞ்சு படபடப்பு
(Palpitation) .
·
சிறு
குடல்களில் அதிகப்படியான காற்று உப்பிசம் (FLATULANCE). அடிவயிற்றில் இடைவிடாமல் காற்று உறுமும் ஓசை; அடிவயிற்றின்
கீழ்பாகத்தில் வாயு உப்பிசம் இருக்கும். ஏப்பம் விடுவதால் உப்பிசம் குறைவதில்லை.
·
குழந்தைகள்
சிறுநீர் கழிக்கும் முன்பு அழும் அல்லது கூக்குரலிடும் (BORAX,SARS).
·
வலதுபக்க
சிறுநீரகக் கற்கள். வலதுபக்க குடலிறக்கம்.
·
ஒரு பாதம் (
வலது ) சூடாகவும், மறு
பாதம் ( இடது) சில்லென்றும் இருக்கும்.
·
இனிப்பு
பொருட்கள்,
சூடான உணவு மற்றும் பானைங்களில்
விருப்பம்.
·
பூப்பெய்திய
பிறகும் ,
குழந்தை பிறந்ததிலிருந்து மற்றும் வீட்டை
விட்டு வெளியில் தங்கும் போதும் மலச்சிக்கல் ஏற்படும்.
·
உடலின் மேல்
பகுதி இளைத்தும், கீழ்பகுதி
பெருத்தும் இருக்கும் (Reverse of AMM.M).
·
உடல் மெலிவு
கீழே இறங்கும். அதாவது மெலிவு உடலின்
மேல்பாகத்தில் ஆரம்பித்துப் பிறகு
கீல்பாகத்துக்குப் பரவும்.
·
கண்பார்வை
குறைவு (HEMIOPIA): பார்க்கப்படும் பொருள்களின்
பாதிப் பகுதிதான் தெரியும்.குறிப்பாக இடது பாதி தான்
தெரியும். (கீழ் பகுதியின் பாதி-AUR).
·
வலிப்பு
உடலின் வலது புறத்தில் தோன்றும் (Bell, Caust,Nux.V) .
·
தொல்லை தரும்
இடுப்புவலி (Lumbar Pain) சிறுநீர்
கழித்த பிறகு குறையும்.
·
சப்தங்களை
தாங்கமுடியாது. அதேபோல் கடுமையான வாசனையை தாங்க இயலாது. கல்லீரல் பகுதியில் அதிக
வலி இருக்கும் ,
தொட இயலாது.
·
தொண்டைப்புண்: தூங்கிய பிறகும், குளிர்ச்சியான பானங்களாலும் அதிகரிக்கும். (சூடான
பானங்களால் அதிகரிக்கும் –LACH).
·
சரியாக
குணப்படுத்தபடாத அல்லது கவனிக்கப்படாத நிமோனியா காய்ச்சல். குறிப்பாக வலது
நுரையீரலின் அடிப்பாகம் பாதிக்கப் பட்டிருக்கும். நிமோனியா
காய்ச்சலுக்கு அடிக்கடி பயன்படும் மருந்து (Phos) .
·
காய்ச்சல்
அல்லது குளிர் சுரத்தின் போது புளித்த வாந்தி (Rob).
·
மூக்கடைத்துக்
கொள்ளும். இரவில் அல்லது பகலில் மூச்சுவிட இயலாது.
தூக்கத்தில் உள்ள போது மூக்கு மற்ற்ம்
வாய் வழியாக உரத்த ஓசையுடன் மூச்சு விடுவார்கள் (Snoring
Breathing).
·
நாக்கு, கடிகாரத்தில் உள்ள
கோல் போல் இருபுறமும் அசைந்து கொண்டிருக்கும்( Cupr, LACH).
·
இனிப்பில்
அதிக விருப்பம் (Arg.N., Calc., Merc).
·
இரவில், வாயில் கசப்பு சுவை
இருக்கும் (Ant.t.,Lach.,Rhus.t).
·
தோல் பகுதி
குறிப்பாக உள்ளங்கைகள் மிகவும் வறண்டிருக்கும்.
·
வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறி மாறித் தோன்றுதல்.
·
பித்தக்
கற்களால் கடுமையான வயிற்று வலி (GALL STONE COLIC).
·
கால்களில்
அசுத்த இரத்தக் குழாய்கள் வீங்கிச் சுருட்டிக்கொள்ளும் (VARICOSE VEINS).
·
சாப்பிடவில்லை
என்றால் தலைவலி ஏற்படும்; பசியினால்
இரவில் விழித்துக் கொள்வார்.
மனக்குறிகள்(Mind):
செருக்குடையவர் (Haughty). சர்வாதிகாரி போல் நடந்து கொள்வார் (Dictatorial) . பிடிவாதமான
கொள்கைகளை உடையவர் (Dogmatic). தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக கவனிக்கும் குணம்
படைத்தவர்கள் ( Observing Disposition- Dr. Raue) .
பொதுக் கூட்டங்களில் எழுந்து பேசப் பயப்படுதல் ; பேசிப் பழக்கமுள்ள வக்கீல்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்குக் கூட சிற்சில
சமயங்களில் இவ்விதமான பயம் தோன்றும். எடுத்துக்காட்டாக , ஒரு வக்கீல் தோற்றுவிடுவோம் என்ற
பயத்தால் நீதிமன்றத்திற்குப் போகாமல் தைரியம் வரும் வரை காத்திருப்பார்.
அச்சமயத்தில் எழுதுவதில், பேசுவதில்
தவறு செய்வார் ;
ஆனால் பேச
ஆரம்பித்தவுடன் பயம் மறைந்து எடுத்த காரியம் ஒழுங்காய் நிறைவேறும்.
தனியாக இருக்கப் பயம் இருந்தாலும்
, தனித்திருக்கவே விரும்புவார். புதிய நபர்கள், பார்வையாளர்கள்
ஆகியோர்களுடன் சேர்ந்திருக்க விரும்பமாட்டார்கள். எப்போதும் அருகில் இருப்பவர்கள், தெரிந்தவர்கள்
மத்தியில் இருக்கவே விரும்புவார். ஆனால்
முற்றிலும் தனியாக இருக்க விரும்பமாட்டார்; வீட்டில் அல்லது அருகில் யாராவது இருக்கவேண்டும்
என்று நினைப்பார். அதாவது வீட்டின் அறையில் அவர் மட்டுமே இருக்கவும் மற்றவர்கள் பக்கத்துக்கு
அறையில் இருக்கவேண்டும் என்று விரும்புவார்.
எளிதில் கோபப்படுவார்; எதிர்த்துப்
பேசுவதையோ அல்லது கருத்து முரண்பாட்டையோ பொறுத்துக் கொள்ளமாட்டார்.
கோழைத்தனம்; ஒரு முடிவுக்கு வரமுடியாமை. தன்னம்பிக்கை குறைவு, ஞாபக மறதி, குழப்பமான பேச்சு மற்றும் தவறான வார்த்தைகளை பேசுவார், எழுதுவார்.
எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகக்கூடியவர்கள் ; நண்பர்களை வரவேற்கும் போது அல்லது இலவசமாகக்
கொடுக்கப்படும் பொருளைப் பெற்றுக்கொள்ளும் போது அளவு கடந்த வருத்ததுடன் அழுதல்.
பிறர் அவருக்கு நன்றி கூறினாலும் கதறி அழுவார்.
கூர்மையான அறிவும், பலவீனமான உடலும் கொண்டவர்கள். அதிகாரத்தை
பெரிதும் விரும்புவார்கள் . தனக்கு கீழ்நிலையில் இருப்பவர்களிடம் கடுமையாகவும், தனக்கு மேல் நிலையில் இருப்பவர்களிடமோ அல்லது அதிகாரம்
படைத்தவர்களிடமோ மிகவும் பணிவுடனும் நடந்துகொள்வார்கள்.
பெரிய பொறுப்புகளை சுமப்பதற்கு தயக்கம்
காட்டுவார்கள்; உதாரணமாக
திருமணம் செய்வதையோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதையோ விரும்ப மாட்டார்கள் (AVOID RESPONSIBILITIES) .குழந்தைகளை
விட்டு விலகிப்போக விரும்புவார்கள்.
நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):
திகில் அல்லது பேரச்சம் (FRIGHT) , இழிவுபடுத்தப்பட்டதால் (Mortification) அல்லது
தொந்தரவிற்கு உள்ளாகி (Vexation) மனக்குறை ஏற்படுதல். காய்ச்சல். சுயஇன்பம். ஒயின். புகையிலை மெல்லுவது போன்றவைகள்.
ஆண்கள்
(Male):
ஆண்தன்மை குறைவு ( IMPOTENCE) ஆனால் உடலுறவின் மீது அதிக விருப்பம் இருக்கும் (AGAR, CALAD,CON,PHOS) . இயற்கைக்கு மாறான
வழிகளிலும் , அளவு
கடந்து சிற்றின்பத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆண்குறி சிறுத்துச் சில்லிட்டுத்
தளர்ந்து ஆண்தன்மை குறைந்துவிடுதல் (AGN) .வயதானவர்களுக்கு உடலுறவில் அதிக ஆசையும் ஆனால்
போதுமான அளவு குறி விரைக்காமல் ஆண்தன்மை
குறைவு ஏற்படும். குறிப்பிட்ட
நேரத்திற்கு முன்பே விந்து வெளியாகி விடும் . உடலுறவின் போதே
தூங்கிப்போய்விடுவார்கள். புகையிலை அதிகமாக உபயோகப்படுத்தியதால் உண்டாகும்
ஆண்தன்மை குறைவிற்கும் லைகோபோடியம் சிறந்த மருந்து.
பெண்கள்
(Female):
மாதவிடாய் நீண்ட நாட்கள் கழித்து வெளிவரும் அல்லது
ஒழுங்கற்றதாகவும் தொல்லை கொடுப்பதாகவும் இருக்கும். பூப்பெய்திய இளம் பெண்களுக்கு , முழுமையாக
வளர்ச்சியடையாத மார்பகங்களுடன் மாதவிடாய் தாமதித்து வெளிவரும். பொங்கி வெளிப்படும்
வெள்ளைப்பாடு. பிறப்புறுப்பு வறட்சியுடன் இருப்பதால் உடலுறவின் போதும் அதற்குப்
பிறகும் எரிச்சல் இருக்கும் ( Lyss, Nat,m) .
அத்துடன் வலியும் இருக்கும். குழந்தை பெற்ற பிறகு தலை மயிர் கொட்டுதல்; வழுக்கை விழுதல். பிறப்புறுப்பிலிருந்து காற்று
வெளியாகும் – (
Physometra -
LAC.C., NUX.MOS.,SANG.,BROM) . மலம்
கழிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம்
வெளிப்படுதல். கருவில்
இருக்கும் குழந்தை திரும்பி குட்டிக்கரணம் ( SOMERSAULTS) போட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றும்.
குழந்தைகள்(Child):
குழந்தைகள் உடல் நலம் குன்றி பகல் முழுவதும் அழுது
கொண்டிருக்கும் இரவில் நன்றாகத் தூங்கும் (Reverse of
JALAPPA, PSOR). கூர்மையான அறிவும், பலவீனமான உடலும்
கொண்டவர்கள். சத்துக்
குறைவான உணவினால் உடல் இளைத்துப்போய் , முன் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்து , வயதிற்கு மீறிய
கிழதோற்றத்துடன் காணப்படுவார்கள்.
தூங்கும் போது பாதிக் கண்கள் திறந்திருத்தல். இரவில் மூக்கடைத்துக் கொள்ளுவதால் வாய் வழியாக
சுவாசம் செய்யும். குழந்தை மூக்கைத் தேய்த்துக் கொண்டு தூக்கத்திலிருந்து
திடுக்கிட்டு எழுந்திருக்கும். தூங்கி எழுந்தவுடன் முகம் கடுத்து எல்லோரையும்
கோபத்துடன் தள்ளி தன் ஆடைகளைத் தொக்கி எறியும். மூத்திரத்தில்
சிவப்பான மணல் வெளிவருதல். படுக்கையில்
மூத்திரம் கழித்தல் .
வலது பக்கத்தில் தொடை அடிவயிருக்கிடையே ஏற்படும் குடலிறக்கம் ( RIGHT SIDE INGUINAL HERNIA)
. குழந்தைகள்
சிறுநீர் கழிக்கும் முன்பு அழும் அல்லது கூக்குரலிடும்.
உடல் மெலிந்த சிறுவர்களுக்கு வறண்ட, அலைக்கழிக்கும்
குணமுள்ள இருமல் (DRY TEASING COUGH). இனிப்பு பொருட்களின் மீது மிகுந்த பிரியம் இருக்கும்.
உணவு,
( விருப்பம்,
வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks)
பசி : சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு.
பசி : சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு.
விருப்பம் : மாமிசம் (Meat) , இனிப்பு (Sweets) , சூடான உணவு மற்றும் பானங்களில் விருப்பம்.
வெறுப்பு : ரொட்டி ( Bread), பால் (Milk), வெங்காயம் (Onions) , சிப்பிகள் ( Oysters) . காபி (Coffee) மற்றும்
புகையிலை (Tobacco) . முட்டைக்கோசு (Cabbage) தொல்லைகளை அதிகரிக்கும்.
மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation): மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை தொல்லைகள் அதிகரித்தல் [ இதர மருந்துகள் Chel, Coloc, Hell (4-9) Mag.p] . குளிர்ச்சியான பானங்கள் ( Diphtheria -Reverse of LACH) . முதல் அசைவு ( First Motion) . தூங்கி எழும் போது( Temper, Cough) . வெப்பத்தினால் ( Headache). வலது பக்கம் படுத்தல் (Liver troubles). ரொட்டி மற்றும் சூடான காற்று. ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்ளாததால் தொல்லை அதிகரிக்கும் (Missing a Meal).
நோய்க்குறி குறைதல் (Amelioration): சூடான பானங்கள் ( Stomach and throat symptoms) , இறுக்கமில்லாமல் ஆடை அணிதல் ( Loose Clothes) , தொடர்ச்சியான அசைவுகள், நடு இரவிற்கு பின்பு, ஏப்பமிடுதல் ( Eructations) மற்றும் சிறுநீர் கழித்தல் ( Urination) போன்றவற்றினால் தொல்லைகள் குறையும்( Pain in back) . ஈரமான பருவநிலை ( Rheumatism)
வீரியம்: குறைந்த வீரியம் முதல் மிக உயர்ந்த வீரியம் வரை பயன்படுத்தலாம். நாட்பட்ட நோய்களில் , இம்மருந்தை கொடுக்க நேரிட்டால் முதலில் ஏதாவது சோரா முறிவு மருந்து கொடுத்த பின்னரே லைகோபோடியம் கொடுக்க வேண்டும். குறிப்பாக லைகோபோடியதிற்கு முன்பு நக்ஸ்வாமிக்கா அடிக்கடி தேவைப்படும் என்று மரு. ஜெ.பி.பெல் குறிப்பிடுகிறார். லைகோ ஆழ்ந்து , நீடித்து வேலைசெய்யும் என்பதால் , துயரர் நலமடையத் துவங்கிய பின்னர் திரும்பவும் இம்மருந்தைக் கொடுக்கக்கூடாது. அதேபோல் லைகோ (Lyc) கொடுத்த பிறகு ஒவ்வொரு எட்டாவது நாளிலும் Carb.v கொடுத்தால் லைகோ நன்கு செயலாற்றும். ஆனால் பனிரெண்டாவது வீரியத்திற்குக் கீழ் இம்மருந்தின் நோய்தீர்க்கும் ஆற்றல் தெரியவில்லை என்று மரு.இ.பி.நாஷ் குறிப்பிடுகிறார்.
மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை(Relationship):
சல்பர், கல்கேரியா .கார்ப்,
கார்போ.வெஜி ஆகிய மருந்துகளுக்குப் பிறகு
லைகோபோடியம் நன்றாக வேலை செய்கிறது.
கிராபைடிஸ் , லாச்சசிஸ்,
லேடம்பால் , பாஸ்பரஸ் , சிலிகா ஆகியவை லைகோபோடியதிற்குப் பிறகு நன்றாக வேலை செய்கிறது.
ஐயோடியம் , செலிடோனியம்,
லாச்சசிஸ் ஆகிய மருந்துகள் லைகோபோடியதிற்குப் முன்பும்
பிறகும் வேலை செய்யும்.
காபியா குருடா இம்மருந்திற்குப் பகை மருந்து.
தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகள் படிப்பவர்களுக்கு பயன்படும்
ReplyDeleteபல மருந்துகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் உண்டு. ஊக்கப்படுத்தியதிற்கு நன்றி.
Deleteexcellent sir
ReplyDeleteSuper sir very nice
ReplyDelete