Friday, 22 March 2013

பாஸ்பரஸ்


பாஸ்பரஸ்
 (PHOS)




பிரிவு : தனிமங்கள்
நிருபணம் செய்தவர் : மரு . ஹானிமன்
முன்னுரை(Introduction) :

பாஸ்பரஸ் மருந்து தேவைப்படும் நபர்கள் மிகவும் இனிமையானவர்களாக, வெளிப்படையாகப் பேசும் தன்மையுடன் , நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். மிகவும் புத்திசாலியாகவும் , நாகரிகமாகவும் நடந்து கொள்வார்கள். மனதில் எதையும் மறைத்து வைக்காமல் நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள் (மரு.வித்தொல்காஸ்). புகையானது எப்படி காற்றுவெளியில் பரவுகிறதோ, தேயிலை எப்படி தண்ணீரில் பரவுகிறதோ அப்படி சமுதாயத்தில் கலந்து வாழ்வார்கள் (Diffusion). இவர்களுக்கு பருவநிலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகும். புயல்காற்றும் , இடியுடன் கூடிய புயல்காற்றும் , இவருக்கு ஒத்துக்கொள்ளாது. " இடி இடித்து புயல்காற்று அடிக்கும்போது தலைவலி வந்துவிடும்". இத்தலைவலிகளை பாஸ்பரஸ் குணப்படுத்தும். அதனால் இந்த மருந்தை காலநிலையை அறிவிக்கும் மனிதக்கருவி ( Human Parameter) என்றே கூறலாம்.

இம்மருந்தின் மையக்கருவான   குணங்கள்(Nucleus):

Ø  உயரமாகவும் , ஒல்லியாகவும் , மெலிந்தும் உள்ள உடலுடன் தைரியம் வாய்ந்தவர்கள். மிக வேகமாய் வளர்ந்து முதுகு கூன் விழுந்துவிடும் தன்மையுடையவர்கள்.
Ø  உப்பு, உப்புச்சத்து நிறைந்த உணவு, மீன், ஐஸ்க்கிரீம் , குளிர்ந்த பால், உற்சாகமளிக்கும் பானங்கள் போன்றவற்றில் விருப்பம்.
Ø  தனியாக இருக்கப் பயம்; மற்றவர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.
Ø  மற்றவர்கள் சிரமப்படுவதைக் கண்டு மிகவும் இரக்கப் படுவார்கள்.
Ø  சிறிய காயங்களில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியாகும் ; சீக்கிரத்தில் உறையாது. நல்ல சிவந்த இரத்தம் அதிகமாக வெளியாகும்.
Ø  சிற்றின்பத்தில் அதிக விருப்பம் இருக்கும்.
Ø  குளிர்ந்த பானங்களில் விருப்பம்; அது அவர்களது தொல்லைகளை சமனப்படுத்தும். ஆனால் குளிர்ந்த பானங்களோ அல்லது தண்ணீரோ வயிற்றிற்குள் சென்ற சிறிது நேரத்தில் (சூடாக மாறிய பின்னர்) வாந்தியெடுக்க நேரிடும்.
Ø  இடது பக்கமாகவோ , முதுகை கீழே வைத்தோ அல்லது வலியுள்ள பாகத்தைக் கீழே வைத்து படுத்தால் தொல்லைகள் அதிகமாகும்.
Ø  தூங்கி எழுந்தபின்னர் தொல்லைகள் குறையும்.(குட்டித் தூக்கம்)
Ø  உடலில் ஒவ்வொரு இடத்திலும் எரிச்சல் அல்லது காந்தள் பிரதானமாக இருக்கும்; அதாவது வாய், வயிறு, சிறுகுடல்,ஆசனவாய்,தோள்ப்பட்டை மற்றும் எலும்புகளுக்கு இடையில் மிகவும் கடுமையாக இருக்கும். முதுகுத் தண்டுவடத்தில்  எரிச்சல் மேலே ஏறுவது போல் இருக்கும். உள்ளங்கையில் ஆரம்பித்து முகத்திற்குப் பரவும் (DR. E.B.NASH).

தனிசிறப்பான குறிகள் (Characteristic Symptoms) :

Ø  குளிர்ச்சியான உடல்வாகு; உடல் சூடாகவும் ஆனால் தலையும், முகமும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
Ø  அடிக்கடி இரத்தப் பெருக்கெடுக்கும் உடல்வாகு .
Ø  அடிக்கடி இரத்தப் பெருக்கெடுக்கும் உடல்வாகு( Haemorrhagic Diathesis).  உடலிலுள்ள பற்பல உறுப்புகளிலிருந்தும் , துவாரங்கள் வழியாகவும் இரத்தம் வெளிப்படலாம். சிறிய காயங்களில் இருந்தும் ஏராளமாய் இரத்தம் வெளியாகும்(LACH,NIT-AC) . மாதவிடாயிற்குப் பதிலாக சுவாச கோசங்களில் இருந்தோ, மூக்கிலிருந்தோ இரத்தம் கொட்டுதல் (Vicarious Menses).
Ø  எரிச்சல்: வாய், வயிறு, சிறுகுடல்,ஆசனவாய்,தோள்ப்பட்டை (Scapulae) மற்றும் எலும்புகளுக்கு இடையில் மிகவும் கடுமையாக இருக்கும். முதுகுத் தண்டுவடத்தில் (Spine) எரிச்சல் மேலே ஏறுவது போல் இருக்கும். உள்ளங்கை , உள்ளங்கால்களில் எரிச்சல்.
Ø  வயிற்றின் உட்புறம் கூடாகவும் காலியாகவும் இருப்பது போல் தோன்றும்( All gone sensation).
Ø  தலை மயிர் கொத்துக் கொத்தாக கொட்டும். குறிப்பிட்ட இடத்தில் வழுக்கை ஏற்படும்.
Ø  டைப்பாய்டு காய்ச்சலுக்குப் பிறகு மற்றும் மின்னல் ஒளி தாக்குதலுக்குப் பின் கண் குருடாகும்; பார்வை நரம்பு பாதிக்கப்படும்.
Ø  விழிகளில் மெல்லிய தோல் வளருவதையும்(Cataracts), விழிமிகை அழுத்தம் (Glaucoma) ஏற்பட்டதையும் நலமாக்கும்.
Ø  எழுத்துக்கள் சிவப்பாகத் தெரியும்.
Ø  அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வாந்தி.
Ø  காது கேட்பதில் சிரமம், குறிப்பாக மனிதர்கள் பேசுவது காதில் விழாது.  
Ø  வறண்ட இருமலும் , மார்பில் இறுகக் கட்டிய உணர்ச்சியும் , இரத்தம் துப்புவதும் ஏற்படலாம்.
Ø  ஆசனவாய் திறந்தே இருப்பது போன்ற உணர்வு. மலப்பையினுள் ஏதேனும் ஒரு பொருள் நுழைந்து விட்டால் உடனே வயிற்றுப்போக்கு ஏற்ப்படும். வயதானவர்களுக்கு காலையில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
Ø  மலம் நீளமாய் மெலிந்து, இறுகி நாயின் மலம் போல் காணப்படுவதுடன்சிரமப்பட்டுத்தான் வெளியாகும்.
Ø  முகத்தில் இடதுபக்கப் பாரிசவாதம்.
Ø  இரவில் ஏராளமாக பிசுபிசுவென்று ஓட்டும் குணமுள்ள வியர்வை ( கந்தக நாற்றமுள்ள வியர்வை) ; தூங்கும் போது அதிகமாதல். அதனால் நலம் ஏற்படாது.   
Ø  சரியான தூக்கமின்மை; தூக்கம் குறைவதால் பாதிப்பு; தூங்கி எழுந்தால் நலமாகும். தூக்கத்தில் நடக்கும் வியாதி ( Somnambulism),  தூக்கத்தில் பேசுதல்.
Ø  நிமோனியாக் காய்ச்சல், இடது பக்கம் எரிச்சலூட்டும் தொல்லைகளால் நோய்க்குறி அதிகமாதல்.
Ø  பாஸ்பரஸ் துயரரால் வலது பக்கம் மட்டுமே படுக்க இயலும் (LYC).
Ø  காய்ச்சலின் போது அதிகப்பசி ஏற்படும் (Ravenous Hunger).
Ø  கல்லீரல் பருத்தும், கடினமாகவும் இருத்தல்; விஷத் தன்மை வாய்ந்த மஞ்சள் காமாலை நோய்.
Ø  இரத்தப்போக்கை ஏற்படுத்தும் மூலநோய் ( Bleeding Haemorrhoids) .

மனக்குறிகள்(Mind):
Ø  மிகவும் இரக்கச் சுபாவம் படைத்தவர்கள்
Ø  தனியாக இருக்கப் பயம்; மற்றவர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள். அதேபோல் இருட்டு, இடி இடித்தல் , வியாதி, பேய் , பூச்சிகள் மற்றும் இறப்பு  போன்றவற்றுக்கும் பயம் .
Ø  மற்றவர்களின் நலத்தைப்பற்றி மிகவும் பதட்டமடைவார்கள். யாருக்காவது துன்பம் நேரிட்டால் அது தனக்கு வந்ததுபோல் உணர்ந்து வருத்தமடைவார்கள்.
Ø  சுலபத்தில் திடுக்கிடுவார்கள் ( STARTLES)
Ø  தங்களுக்கு யாரவது வசியம் பண்ண ( MAGNETIZED) அல்லது உற்சாகப் படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.
Ø  ஞாபக மறதி;மூளை களைத்துப்போய் விட்டதாக உணருவார்கள்.
Ø  மிக எளிதில் கோபம் ஏற்ப்பட்டு தூக்கி எரிந்து பேசுவார்கள்.
Ø  தனக்கு பணிவிடை செய்யும் பெண்ணின் மீது துப்புவது அல்லது தன அருகில் வரும் போது முத்தமிடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
Ø  மாதவிடாய்  வெளியாவதற்கு முன்பு அழுகை.
Ø  மந்த குணம், மெதுவாகப் பதில் சொல்லுவார்கள்; மெதுவாக நடப்பார்கள்.
Ø  வாழ்க்கையில் வெறுப்பு (VEXED)
Ø  அமைதியின்மை அல்லது நிலைகொள்ளாமை(RESTLESSNESS) , பரபரப்பு, இடைவிடாமல் நடந்து கொண்டிருப்பார். ஒரு வினாடிகூட உட்காரமாட்டார், நிற்க மாட்டார் ( உடலில் உயிர்த்   தண்ணீர் சேதமாகிவிட்டபோதும்  , அளவிற்கு மீறி சிற்றின்பத்தில்  ஈடுபட்டு இந்திரியம் செலவான போதும் இத்தகைய மனக்குறிகள் தோன்றும் –DR.K.C.BHANJA)

நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

கோபம்,பயம்,கவலை,மனவேலை மற்றும் கடுமையான மன எழுச்சிகள்;இசை;பலமான நறுமணங்கள்; மலர்கள்(மயக்கமடைதல்) ;இடி இடித்தல் ; மின்னல் (கண் குருடாகி விடுதல்) ;மிகுதியான சிற்றின்ப நுகர்வு; உயிர்த் திரவங்கள் இழத்தல் (இரத்தம்);துணி மணிகள் துவைப்பதால்;புகையிலை ( பார்வை மந்தம்); தலையில் முடி வெட்டிக்கொள்ளுதல் ; உப்பு; நீண்ட நாட்களாக மதுகுடிக்கும் பழக்கம் மற்றும் மழைக் காலம் .


ஆண்கள் (Male)

அளவுக்கு அதிகமான காம இச்சை இருக்கும் ஆனால் ஆண்தன்மை ( Impotent) குறைந்திருக்கும். கடுமையான சிற்றின்ப ஆசையால் வெறி பிடிக்கசெய்யும்; பிறப்பு உறுப்புகளைப் பிறர் கண்ணில் படும்படித் துணியை விளக்கிக் கொள்வார். ஆண்குறியில் விறைப்புதன்மை குறைந்திருக்கும் அல்லது இருக்காது. சிறுநீர்ப் பாதையில் மெல்லிய நூல்போன்ற , நிறமற்ற திரவம் நிரந்தரமாக வெளிவந்து கொண்டிருக்கும்.

பெண்கள் (Female):

மாதவிடாய் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்படும் , நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் ஆனால் ஏராளமாக இருக்காது. மாதவிடாயிற்குப் பதிலாக அரிப்புடன் கூடிய வெள்ளைப்பாடு (Leucorrhoea) ஏற்படும். அதேபோல் மாதவிடாயிற்குப் பதிலாக சுவாசகோசங்களிருந்தோ, மூக்கில் இருந்தோ இரத்தம் கொட்டுதல். மாதவிடாய்ப் போக்கு குறைவாய் இருக்கும் போது மூக்கு , வயிறு, ஆசனவாய், மூத்திரக்குழாய் முதலிய ஏதோ ஒரு இடத்திலிருந்து இரத்தம் பெருகுதல்.  அளவிற்கு அதிகமான சிற்றின்ப நுகர்வால் மலட்டுத்தன்மை (Sterlity) . கர்ப்பகாலத்தின் போதும் , குழந்தைக்கு பால் கொடுக்கும் காலத்திலும் அதீத காம இச்சை. கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் புற்றுநோய். கர்ப்பபையில் தசைவளாச்சி. இடதுபக்க மார்பகத்தின் உட்புறத்தில் வலிகள். உடலுறவின் போது காமக்கிளர்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக பெண்குறியில் மரத்துப் போன உணர்வு தோன்றும்.  முலைக்காம்பு சூடாகவும், புண்ணாகவும் இருக்கும்.


குழந்தைகள்(Child)

குழந்தைகள் உயரமாகவும் , மெலிந்தும், மிக வேகமாய் வளைந்து கூன் விழுந்துவிடும் தோற்றத்தில் காணப்படுவார்கள். சுலபமாக அனைவருடனும் பழகுவார்கள், ஒதுங்கி இருக்கமாட்டார்கள். குழந்தைப் பருவத்தில் எலும்பு வியாதியால் தாக்கப்பட்டவர்கள். அதிகமான பசி இருந்து சாப்பிட்டாலும் இளைத்திருப்பார்கள். தாமதமாக நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள். தூக்கத்தில் நடக்கும் வியாதி ( SOMNAMBULISM) .

உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):

விருப்பம்: உப்பு; ஐஸ்க்கிரீம் ; சாக்லேட்;ஒயின்;குளிர்ந்த பானங்கள், உணவுகள்; மீன்; குளிர்ச்சியான பால்;
                 அமில மற்றும் மசால் உணவுகள்.
வெறுப்பு: இனிப்பு; மீன்;பழங்கள்; இறைச்சி;வெண்ணை;சிப்பிகள்; காய்ச்சிய பால்;சூடான உணவு
பசி: அளவிற்கு அதிகமான பசி; இரவில் அதிகரிக்கும்.

மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):
இடதுபக்கமாகவோ, முதுகை கீழே வைத்தோ அல்லது வலியுள்ள பாகத்தைக் கீழே வைத்துப் படுத்தால் வியாதி அதிகமாகும். மன உணர்ச்சிகள் சற்றே அதிகரித்தாலும் , சூடான உணவு, உப்பு ஆகியவைகளைச் சாப்பிட்டாலும் , பருவநிலையில் திடீரென்று மாறுதல் ஏற்ப்படும் போதும் , குளிர் காற்றினால் , அளவுக்கு மீறிச் சிற்றின்பத்தில் ஈடுபட்டாலும் , மனவேளைசெய்து சோர்வு தோன்றினாலும் தொந்தரவுகள் அதிகரிக்கும். பெண்கள் பருவம் எய்தும் தருணத்தில் ஏற்படும் இரத்த இழப்பு . இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது (Human parameter). தூக்கம் கெடுவதாலும் தொல்லைகள் கூடும். காலை  மாலையிலும் மற்றும் முகச்சவரம் செய்தாலும் தொல்லைகள் கூடும்.

நோய்க்குறி குறைதல்(Amelioration):

சாப்பிட்டால் (Eating) , உடம்பைத் தேய்த்து விட்டால் ( Rubbing), உட்கார்ந்தால்(Sitting)  தொல்லைகள் குறைந்து நலம் உண்டாகும். தூங்கினால் (குட்டிதூக்கம்)  நன்றாக இருக்கும் , குளிர்ச்சியான உணவு மற்றும் பானங்களால் ( அதிக விருப்பம்) தொல்லைகள் நலமாகும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினாலும் நலம் தெரியும்.


வீரியம்:

மூன்று, முப்பது மற்றும் உயர்ந்த வீரியங்கள் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்த வீரியத்தில் தொடர்ந்து கொடுக்கக் கூடாது. இம்மருந்து நாற்பது நாட்கள் வரை வேலை செய்யும். சுவாசகோச சயரோகதில் இம்மருந்தை மிக உயர்ந்த வீரியங்களில் கொடுக்கக்கொடாது. இந்தச் சமயங்களில் 30 அல்லது 200 வது வீரியம் போதுமானது.

கடுமையான காய்ச்சல் உள்ள எல்லா வியாதிகளிலும் பாஸ்பரஸின் குறிகள் ஒத்திருந்து இம்மருந்து கொடுக்கப்பட்டால் ஒரே ஒரு வேளையில் காய்ச்சல் தணிந்து விடும். காய்ச்சல் தணிந்த பிறகு இரண்டாவது வேலை கொடுத்தால் நீக்கமுடியாத கெடுதியைச் செய்துவிடும்.

மருந்துகளுக்குள் உறவு./ஒற்றுமை(Relationship):

ஆர்சனிகம் ஆல்பம்( ARS), அல்லியம் சீபா(ALL.C) இவ்விரண்டு மருந்துகளும் பாஸ்பரஸ் மருந்திற்கு நட்பு/நிறைவு மருந்தாகும்.

இம்மருந்திற்கு முன்பு கொடுக்கவேண்டியது: CALC.C, CHIN, KALI.C,LYC,NUX.V,PIC.AC,RHUS.T,SIL,SULPH.
இம்மருந்திற்கு பின்னர் கொடுக்கவேண்டியது: ARS, CARB.V, RHUS.T,SULPH
இம்மருந்திற்கு பின் காஸ்டிகம்(CAUST) கொடுக்கப்படக்கூடாது.

காபியாக்குருடாவும் (COFF), நக்ஸ்வாமிகாவும் (NUX.V)  பாஸ்பரஸ் மருந்தை முறிக்கும் தன்மை உடையது.




1 comment:

  1. ஹோமியோபதி மருந்துகளை பற்றி தொடர்ந்து எழுதவும்,

    ReplyDelete