Friday, 3 August 2012

ஆர்கனான் மணிமொழி-8


§ 8

It is not conceivable, nor can it be proved by any experience in the world, that, after removal of all the symptoms of the disease and of the entire collection of the perceptible phenomena, there should or could remain anything else besides health, or that the morbid alteration in the interior could remain uneradicated.1

1 When a patient has been cured of his disease by a true physician, in such a manner that no trace of the disease, no morbid symptom, remains, and all the signs of health have permanently returned, how can anyone, without offering an insult to common sense, affirm in such an individual the whole bodily disease still remains interior? And yet the chief of the old school, Hufeland, asserts this in the following words: Homoeopathy can remove symptoms, but the disease remains. (Vide Homoopathie, p.27, 1, 19.) This he maintains partly from mortification at the progress made by homoeopathy to the benefits of mankind, partly because he still holds thoroughly material notions respecting disease, which he is still unable to regard as a state of being of the organism wherein it is dynamically altered by the morbidly deranged vital force, as an altered state of health, but he views the disease as a something material, which after the cure is completed, may still remain lurking in some corner in the interior of the body, in order, some day during the most vigorous health, to burst forth at its pleasure with its material presence! So dreadful is still the blindness of the old pathology! No wonder that it could only produce a system of therapeutics which is solely occupied with scouring out the poor patient.

நோயின் அனைத்துக்குறிகளும், மற்றும் அறிவால்  உணரக்கூடிய அதன் அனைத்துத் தன்மைகளும் அறவே நீக்கப்பட்டபின் , அங்கே நலத்தைத் தவிர வேறெதுவும் இருந்திட முடியாது அல்லது இருந்திடவும் கூடாது அல்லது உள்ளுக்குள் இருக்கும் அந்த நோய்த்தன்மை அடியோடு நீக்கப்படாமல் தொடர்ந்து  இருக்கிறது*. என்பதை எந்தவொரு உலக அனுபவத்தினாலும் எண்ணிப்பார்கவோ அல்லது மெய்பிக்கவோ முடியாது.

*ஒரு துயரர், உண்மையான மருத்துவரால் நலமாக்கப்பட்டபிறகு , அவரின் உடலில் நோயின் எந்தத் தடையமும், நோயுற்ற குறியும் இல்லாத விதத்தில் குணமடைந்து , ஆரோக்கியத்தின் அனைத்து அடையாளங்களும் அவரிடம் நிரந்திரமாக திரும்பி வந்த பிறகும் , அவரின் உடலைச்சார்ந்த நோய் இன்னமும் உள்ளுர எஞ்சி இருக்கிறதென்று எவராயினும் கூறினால், அது பகுத்தறிவை அவமதித்து விட்டு தானே அவ்வாறு கூற முடியும்?. அலோபதி மருத்துவத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஹூப்லாண்டு கீழ்க்கண்டவாறு கூறிகிறார்," ஹோமியோபதி,  நோய்க்குறிகளை வேண்டுமானால் நீக்கலாம், ஆனால்  அந்த நோய் தொடர்ந்து நீடித்திருக்கும் '. அவர் இவ்வாறு கூறுவதற்கு  காரணம் என்னவென்றால் ,' நோய் தோன்றுவதற்கு ஸ்தூலமான பருப்பொருள் தான்.காரணம்' என்று அவர் நம்புவது தான். உயிர் ஆற்றலின் பாதிப்பை , ஆற்றல் வடிவிலே (ஹோமியோபதி மருந்துகள் ) சரி செய்து விட முடியும் என்பதை அவர் ஏற்க மறுப்பதோடு ,'நோய் என்பது பருப்பொருள் வடிவிலானதே ( நுண்ணுயிரி ) , அது நோய் குணமான பின்பும் உடலின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் , திடிரென்று ஒரு நாள் மீண்டும் வெடித்துக் கிளம்பும் என்று அவர் கருதுவது தான்.  இந்த அச்சந்தருகிற காரணம் அவர்கள் இன்னமும் நம்பும் உடல்கூறு இயலின் (PATHOLOGY) குருட்டுத்தனமே . இது (அலோபதி மருத்துவம்), அப்பாவி துயரர்களை முழுவதுமாக கைப்பற்றியுள்ள  நோய் நீக்க நலஞ்சார்ந்த சிகிச்சை முறை ( THERAPEUTICS)  என்பதால் இதில் எவ்வித வியப்பும் இல்லை.       

No comments:

Post a Comment