மெடோரினம்
பிரிவு : நோய்க்கழிவு
நிருபணம் செய்தவர் : மரு .
ஸ்வான்
1. முன்னுரை
(Introduction) :
மெடோரினம் மேகவேட்டை நோய் கிருமியிலுருந்து
(கோள நுண்மம்= cocci) தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை முதலில் நிரூபணம் செய்தவர்
மருத்துவர் ஸ்வான் ஆவார். இம்மருந்தின் நிரூபணங்கள்
பெரும்பாலும் ஐந்தாவது வீரியத்தில் செய்யப்பட்டுள்ளன
.
இது சைக்கோசிஸ் மியாசத்தை அடிப்படியாகக்
கொண்டதாக இருக்கிறது. மரபு வழியாகவோ
அல்லது முயன்று பெற்ற மேகவெட்டை பாதிப்பிற்கு
இம்மருந்து பல அற்புதமான ஹோமியோபதி நலமாக்கலைக்
கொடுத்துள்ளது.
இந்த நோயாளிகளுக்கு , உடல் முழுவதும் உள்ள நிணநீர் சுரப்பிக்கள் பெருத்துவிடும்
என்பது பொதுவான விதியாக இருக்கிறது. இவர்கள்
, வெளிறிய முகத்துடன் , மஞ்சள் கலரில்
, குறிப்பாக கண்களைச் சுற்றி கன்றிப்போன காயத்துடன் , நெற்றியில் தலைமுடிக்கு
அருகில் மஞ்சள் பட்டையுடனும் , தோல் பச்சை நிறத்தில் பளபளப்பான
தோற்றம் தருவார்கள். வாத வலிகள் , விசித்திரமான பற்கள், உடலில் துர்நாற்றம்,
கண் இமைகளின் செதில் விளிம்புகள் மற்றும் விழி மயிர்கள் உதிருதல் ஆகியவை மெடோரினத்தின்
குறிகளாக இருக்கிறது.
மேகவெட்டை பாதிப்பிற்குள்ளான நமது
மூதாதையர்களிடமிருந்து மரபு வழியாக கடத்தப்பட்டு வரும் நோய்த்தொற்றின் காரணமாக நமக்கு
பல நோய்கள் உருவாகின்றன. அவையாவன; கருப்பைக் கட்டிகள் (Ovarian tumours) , சினைப்பையின் வேக்காடு(oophoritis) , பெலோப்பியின் குழாயில் வேக்காடு (salpingitis), கருப்பையில் வேக்காடு(metritis) , கருப்பையைச்
சுற்றிலும் வேக்காடு (parametritis), கருப்பையின் உட்ப்புறத்திலிலுள்ள தோலில் வேக்காடு
(endometritis) , மண்டை ஓட்டினுள் நீர்க்கோவை (hydrocephalus) , மூக்கில் தசைவளர்ச்சி(nasal polypi) , மூக்கிலிருந்து
இரத்தம் கொட்டுதல்(epistaxis) , தடிப்புத் தோல் அழற்சி (,psoriasis ) , சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் (albuminuria), மூத்திரப்பையின் வேக்காடு (cystitis) ,விரைகளில் உள்ள சிறு உறுப்புகளில் வேக்காடு(epididymitis) , சுக்கிலச்சுரப்பி அழற்சி (prostatitis)
,மற்றும் மூட்டுச்சுரப்பி சவ்வுகளில்
வேக்காடு (synovitis ) ஆகியவை ஆகும்.
மேற்கூறியவற்றைப் தவிர , குழந்தைகளில்
உடலமைப்பில் மறைந்திருக்கும் மேகவெட்டை நோய்க்கிருமிகளின்
தாக்குதலால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்
. அத்தகைய குறைபாடுகளை களைய மெடோரினம் சரியான மருந்தாக இருக்கிறது. அக்குழந்தைகளுக்கு இம்மருந்தைக் கொடுத்த பிறகு, அவர்களிடமிருந்த மனம் மற்றும் உடல் ஆகியவற்றில் இருந்த தடை நீங்கி
, அவர்களின் மனம் , ஒழுக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பான நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் சுறுசுறுப்பானவர்களாக மாறிவிடுகிறார்கள்.
மெடோரினத்தின் நோய் தோற்றங்கள் கீழ் வருமாறு
இருக்கிறது;
Ø மூளை மற்றும் மற்றும் முதுகெலும்பு பாதித்து பக்கவாதம், நடுக்கம் மற்றும் சஞ்சலமான நிலையோடு நினைவாற்றல் இழப்பையும் உருவாக்குகிறது.
Ø இதய இரத்தநாளங்கள் மற்றும் சுவாச கோசங்களில் ஏற்படும் பாதிப்பினால்
மூச்சுத்திணறல், வலி மற்றும் இருமல் தோன்றும் .
Ø மூட்டுகளில் முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் ஏற்படும்.
Ø உடல் முழுவதும் உள்ள நிணநீர் சுரப்பிக்கள் பெருத்துவிடும்
மெடோரினம் மேகவெட்டை சார்ந்த நோய்களை சைக்கோசிஸ் மட்டுமல்லாது , சோரா மற்றும் சிபிலிஸ்
(மேகப்புண்) வகை சார்ந்த நோய்களையும் நலமாக்கும் ஆற்றல் கொண்டது என்று ஹானிமன் கண்டறிந்து
கூறியுள்ளார். அதேபோல் தோல் , சளி சவ்வுகளில்
ஏற்பட்டுள்ள நாட்பட்ட பாதிப்புகளுக்கு சோரினமும்,
மேகப்புண் வகை சார்ந்த நோய்களுக்கு சிபிலினமும் நன்றாக வேலை செய்து குணப்படுத்துகிறது.
2.
இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION):
மெடோரினம் முக்கியமாக நரம்பு மண்டலம் மனம், , மூளை, முதுகெலும்பு
(முள்ளந்தண்டு) மற்றும் அதன் உறைகள் , நிணநீர்
கோளங்கள், தோல் மற்றும் சளி சவ்வு, மூட்டுகள், இதய இரத்தநாளங்கள் மற்றும் சுவாச அமைப்பு, இரைப்பை குடல் பாதை, பெண்
பிறப்புறுப்பு உறுப்புகள், சிறுநீர் மற்றும் பாலியல் உறுப்புகள், ஆகியவற்றை பாதிக்கிறது.
3.
மனக்குறிகள்(Mind):
Ø
இவர்கள், மனக்கிளர்ச்சி அல்லது திடீர் எழுச்சிக்கு ஆளாகிற
(IMPULSIVE) , திடீரெண்டு துண்டித்துக் கொள்கிற (ABRUPT) , முரட்டுத்தனமான(RUDE), சராசரியான
(MEAN) , கொடூரமான (CRUEL) மனிதர்களாக இருப்பார்கள்.
Ø
பலவீனமான
நினைவாற்றல் , உரையாடலின் இழையை இழப்பது அதாவது தொடர்ந்து பேச இயலாதது , இவர்களால் அழாமல் பேச முடியாது, பேசியதையே மீண்டும்
மீண்டும் பேசுவது.
Ø
பொதுவாக
பேசிக்கொள்ளும் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கமாட்டார்கள்.
Ø
ஞாபக
மறதி: பிரபலமான பெயர்கள், பெயரின் எழுத்துக்கள், சொற்கள், மிக நெருக்கமான நண்பரின் பெயர் , ஏன் தன்பெயரைக்கூட மறந்து விடுதல்.
Ø
எப்போதும்
அழுதுகொண்டிருத்தல் (PULS., LIL-T) ; இவர்களால் அழாமல் பேச முடியாது; அழாமல் நோய்குறிகளைக் கூற இயலாது( PULS) (SEP உடல் நலத்தைப்பற்றி கேட்கும் போது அழுவார்கள்).
Ø
நேரம் மிக மெதுவாக
செல்வதாகத் தோன்றும்
( ALUM., ARG-N., CANN-I) . அவசரம், பொறுமையின்மை
, முக்கியமில்லாத விஷயங்களுக்கெல்லாம் பதட்டமடைதல்.
Ø
குறிப்பிட்ட
நேரத்திற்குள் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இவர்களுக்கு பதட்டம்
வந்து விடும்.
Ø
எதையும்
செய்யும் போது மிகுந்த அவசரம் (HURRIEDNESS), அது அவர்களுக்கு சோர்வளிக்கும் அளவுக்கு அவசரமாக இருக்கிறது.
Ø
நோயிலிருந்து
நலமாவதில் நம்பிக்கை இழத்தல் .
Ø
தங்களது
நோய்களை பற்றி நினைக்கும் பொழுது மனக்குறிகள் அதிகரித்து தொல்லைகள் கூடும்.
Ø
உச்சமான
நிலை (EXTREME) என்பது இதனுடைய முக்கிய வார்த்தையாக இருக்கிறது. அன்பை
செலுத்துவதிலும் , வெறுப்பதிலும் உச்சம் தான் .
Ø
இருட்டிற்கு
அச்சம்; பைத்தியம் பிடித்துவிடும் என்ற பயம்.
Ø
எல்லாவற்றையும்
அனுபவிக்க ஆசை, தடைசெய்யப்பட்டதை அதிகம் விரும்புவார்கள்.
Ø
பகல்
சிடுசிடுப்பாகவும் , இரவில் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இரவு இவர்களுக்கு மிகுந்த
மகிழ்ச்சியைத் தரும்; சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இரவு மனிதர்கள்.
Ø
வாழ்க்கையை
உண்மையற்றதாக உணர்வார்கள் , இவர்களுக்கு எல்லாம்
உண்மையற்றதாகத் தெரியும்.
Ø
ஒரு
வேலையைச் செய்ய நேரம் நிர்ணயிக்கப்படும் போது இவர்களுக்கு பதட்டம் வந்துவிடும். அதனால்
வேலைத் தள்ளிப்போடும் குணம் இவர்களுக்கு இருக்கும் (POSTPONES WORK).
Ø
கூச்சசுபாவம்
உள்ளவர்கள்; அதனால் நேர்முகத் தேர்வுகளில் இவர்களால் பதிலளிக்க இயலாது. எப்படி முடிக்க வேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியாது.
Ø
தொடுவதற்கான
வெறுப்பு.
Ø
உணர்ச்சிக்கு
ஆட்பட்ட (PASSIONATE) , நாகரீகமற்ற (WILD), அதிக காமஉணர்வு (STRONG SEX DRIVE) கொண்டவர்கள்.
Ø
திருமணம்
செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைத் தரும்.
Ø
சுய
கட்டுப்பாடு இல்லாத (LACK OF SELF CONTROL , கொடுமையான (CRUEL) மற்றும் சுயநலமான மனிதர்கள்( SELF CENTERED).
Ø
வெளி
உலகத்திலிருந்து விலகிச் சென்று , உள் கனவு உலகத்தில் வாழ்வார்கள்.
Ø
அழகு,
பூக்கள், இயற்கை ஆகியவற்றிற்கு மட்டுமீறிய கூருணர்வு உடையவர்களாக இருப்பார்கள்.
Ø
மிருகங்களுடன்
மிகவும் பாசமாக இருப்பார்கள் (AETH).
Ø
பிற
மனிதர்கள் , குழந்தைகள் மற்றும் மிருகங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும்
, கொடுமையானவர்களாகவும் நடந்து கொள்வார்கள்
(ANAC., MOSCH., TARENT).
Ø
அச்சம்
கொள்கிற , ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று
எதிர்பார்ப்பது , வெகு தொலைவில் இருப்பது போன்ற உணர்வு , இன்று செய்யப்பட்ட
விஷயங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தது போல தோற்றம் இவர்களுக்கு ஏற்படும்
.
Ø
சோகமான, மோசமான பார்வை (SAD DISMAL LOOK) > அழுகை அவர்களது தொல்லைகளைக் குறைக்கிறது.
Ø
கவனக்குறைவு அல்லது
ஒருமித்த கவனம் குறைதல்.
Ø
பொறுப்புகளை
தவிர்த்து விடுவார்கள்.
Ø
பொய்
பேசுபவர்கள் (LIARS) ; சுயநலமிகள்.
Ø
நகம்
கடிப்பார்கள், கால்விரல் நகங்களைக் கூட கடிப்பார்கள்..
Ø
கடிக்க
வேண்டும் (BITES) என்ற பலமான ஆசை இருக்கும்.
Ø
உணர்ச்சி
வசப்படும் நிலை அதிகரிக்கும் : ஞான திருஷ்டி அல்லது புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல்
(CLAIRVOYANCE).
4.
சிறப்பியல்புக்குறிகள் (Characteristic Symptoms) :
Ø பொதுவாக குள்ளமானவர்கள் (DWARFISH) , வளர்ச்சி குன்றியவர்கள் (STUNTED),
புளிப்பு மணம் கொண்ட குழந்தைகள், மன மந்தமான மற்றும் பலவீனமான குழந்தைகள். மேகவெட்டை
நோய்தாக்குதல் வரலாறு கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளில் மங்கோலிய சாயல் இருக்கும்
(MONGOLISM= DOWN’S DYNDROME ; இது ஒரு பிறவி குறைபாடு . வட்டமான
முகத்துடனும் , மூக்கு , கண் மற்றும் வாய்
சுருங்கியும் , மனவளர்ச்சி மிகவும் குன்றிய நிலையில் உள்ள பிறவிக் கோளாறான குழந்தைகள். இக்குழந்தைகளுக்கு மண்டை அகன்று
குட்டையாக இருக்கும். அகண்ட கைகளும், குட்டையான விரல்களும் இருக்கும்.) .
Ø காரமான, அரிப்பைத் தரும் ஏராளமான
கழிவுகள்; மீன் துர்நாற்றத்தைத் தருகிறது.
Ø உடலில் துர்நாற்றம் இருக்கும்
, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இருக்கும்.
Ø தளர்ச்சியில் வீழ்ந்து விடுவார்கள் (COLLAPSE) ; எப்போதும் காற்று வீசிக் கொண்டே இருக்கவேண்டும் (carb-v., lach).
Ø உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் காந்தல் அல்லது எரிச்சல் உணர்ச்சி
(SULPH., PULS.,CHAM., & lach).
Ø வெப்ப உடல்வாகு.
Ø கடுமையான தலைவலி எரிச்சல் தன்மையுடன் இருக்கும். தலைவலி சிறுமூளையில் தோன்றி
முதுகெலும்பை நோக்கி கீழ்நோக்கிப் பரவும்.
Ø நரம்புத்தளர்ச்சியுடன் உடல் முழுவதும் நடுக்கமும் மற்றும் களைப்பும் மேலோங்கி இருக்கும் ( gels.,
arg-n., & merc) .
Ø உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருந்தாலும் போர்த்திக் கொள்ள விரும்பமாட்டார்கள்,
போர்வையை தூக்கி எறிவார்கள்( camph., sec).
Ø கால்களிலும், பாதத்திலும் தீவிரமான அமைதியற்ற நிலை (ஆட்டிக் கொண்டேயிருப்பார்கள்) மற்றும் சஞ்சலமாக
இருக்கும்(zinc).
Ø இடுப்பு வலியில், சிறுநீர் அதிகமாக
வெளியேறினால் குறையும் (lyc).
Ø மதுபானங்கள் , உப்பு, அமில உணவு
ஆரஞ்சு , புளிப்பு பொருள்கள் மற்றும் இனிப்பு பொருள்களின் மீது அளவு கடந்த விருப்பம்.
குறிப்பாக மதுபானத்தின் மீது மிகுந்த நாட்டம்.
Ø முகத்தை கீழே கவிழ்த்திப் படுத்தால் மூச்சுத்திணறல் குறையும். அதே போல்
நாக்கை உள்ளே மற்றும் வெளியே இழுத்தாலும் குறையும்.
Ø பெண்களின் மாதவிலக்கு ஏராளமாகவும்,
அதிகக் கறுப்பாகவும், கட்டியாகவும், சுத்தம்
செய்ய கடினமாக இருக்கும் வகையில் கறைபடிந்தும் வெளியாகும் (MAG-C).
Ø மார்பகம் மற்றும் முலைக்காம்புகளில் புண் ஏற்படும் மற்றும் தொடுவதற்கு கூருணர்ச்சி ஏற்படும்.
Ø வெள்ளைப்பாடு - மெல்லிய மற்றும் மீன் வாசனையுடன் கூடிய வெள்ளைப்பாடு இருக்கும்.
Ø இதயப்பகுதியில் உச்சியிலுருந்து அடிப்பகுதி வரை வலி ஏற்படும் ( சிபிலினம் (syph) அடியிலிருந்து
உச்சி வரை பாயும்; இதயத்தின் அடியிலிருந்து கழுத்துப்பட்டை எலும்பு அல்லது தோள்பட்டை
வரை- SPIG).
Ø சூரியன் உதிக்க ஆரம்பித்தலிருந்து , சூரியன் மறையும் வரை அவர்களது தொல்லைகள்
அதிகரிக்கும். அதே போல் தங்களுடைய நோய்களைப்பற்றி நினைக்கும் போதும் , வெப்பத்தினாலும்,
உடலை மூடினாலும் மற்றும் வியர்வையினாலும் அத்தொல்லைகள் கூடும். கடற்கரையில் இருக்கும் போது தொல்லைகள் குறையும் (
NAT-M., SYPH இதற்கு எதிரானது ).
Ø சாப்பிட்ட உடனேயே திரும்பவும் கடுமையான
பசி ஏற்படும்.
Ø குளிர் பானங்கள், குளிர் உணவு, பட்டாணி, பீன்ஸ், முட்டை மற்றும் மெலிதான உணவுகள் மீது வெறுப்பு.
Ø ஆஸ்த்மா : கடற்கரை பகுதியில் மற்றும் ஈரமான பருவத்திலும் தொல்லை குறையும். முழங்கால்
-முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து படுத்தாலும்
குறையும்.
Ø மலம்-குடலின் மந்தநிலை, விடாப்பிடியான , களிமண் போன்ற அல்லது பந்து போன்ற,
மந்தமான மலம் , மற்றும் மலக்குடல் வெளியே வந்துவிடும் என்ற உணர்வு எழுவதால் மலத்தை வெளித்தள்ளுவதில் சிரமம்
ஏற்படும்.
Ø மலச்சிக்கல்> உடலை பின்னோக்கி வளைத்தல் மலம் வெளியாகும்.
Ø மலக்குடலில் கூர்மையான ஊசியால்
குத்துவது போன்ற வலிகள் .
Ø சிறுநீரக பகுதியில் கடுமையான வலி>
அதிக சிறுநீர் கழித்தல் உபாதைகள் குறையும்.
Ø சிறுநீர்க்குழாய்களில் கடுமையான வலியுடன் சிறுநீரக வேக்காடு , சிறுநீரகங்கள் நகர்ந்து செல்வது
போன்ற உணர்வோடு ( LYC., BERB., SARS) , சிறுநீரகத்தில்
குமிழ் உணர்வு(BERB)- (BUBBLING). < பனி கட்டியினால் வலி குறையும்.
Ø இரவில் படுக்கையில் தானாக சிறுநீர்க் கழித்தல் , ஒவ்வொரு இரவும் படுக்கையில் சிறுநீர்க் கழித்தல்
- அதில் அதிக அளவு அம்மோனியாவும் , அடர்த்தியான
வண்ணமும் இருக்கும். இது , < அதிக வேலை அல்லது அதிக விளையாட்டு, வெப்பம் அல்லது குளிர்
அதிகமான தருணங்களில் அதிகரிக்கும்.
Ø முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து வைத்து கொண்டு தூங்கும் (KNEE-CHEST POSITION), கைகளை நெற்றியின் மேல் வைத்து,
முதுகுப்புறமாகத் தூங்குவார்கள் (PULS).
Ø தோள்பட்டை மற்றும் கைகளில் வாத
நோய் ( RIGHT-SANG; LEFT-FERR), வலிகள் விரல்களுக்கு
நீட்டிக்கும், > அசைவினால் வலிகள் குறையும்
.
Ø கால்களின் கனத்தன்மையினால் , ஈயம் போல உணருவார்கள், நடப்பது மிகவும் கடினம்,
கால்கள் மிகவும் கனமாகவும் , தளர்வுற்றும் இருக்கும்.
Ø இரவு முழுவதும் கால்களில் வலி,
அந்த வலி தூக்கத்தைத் தடுக்கும்.
Ø இடுப்புச்சந்து வாதம் (SCIATICA) : இடது பக்கம் பாதிக்கும்; அதிகாலையில்
வலி கூடும்; கடற்கரை பகுதியில் வலி குறையும்.
Ø நடக்கும்போது கணுக்கால் எளிதில் திரும்பும். உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டும்
விறைப்பாக இருக்கும். கை விரல் மூட்டுகள் உருக்குலைந்து காணப்படும். மேலும் விரலில்
உள்ள மூட்டு எலும்புகளில் வீக்கம் அல்லது புடைத்திருக்கும்.
Ø நகங்களில் குறுக்குவெட்டாக ஒடுக்கமான நீண்ட கரைமேடு (RIDGE) இருக்கும்
( செங்குத்தாக இருப்பது * THUJ) .
Ø சிவப்பு முடுச்சுகள் அல்லது மச்சம்.
Ø அதிகமான வியர்வை ஏற்படும் , குறிப்பாக
கால்களில் அதிகம் வியர்த்தல்.
Ø தொல்லைகள் திடீரென்று ஆரம்பித்து படிப்படியாகக் குறையும்.
5.
நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):
Ø உள்ளமுக்கப்பட்ட மேகவெட்டை நோய்களினால் ஏற்பட்ட விளைவுகள். மரபு வழியாக
வந்த மேகவெட்டை நோய்த்தன்மையினால் ஏற்படும்
தொல்லைகள்.
Ø எதிர்பார்ப்பு (ANTICIPATION) .
Ø கெட்ட செய்திகள் (BAD NEWS).
6.
ஆண்கள் (Male):
ஆண்மையின்மை ( AGN., CALAD). சுக்கிலச்சுரப்பி பெருத்து
வீங்கி வலியைத் தரும்; அத்தோடு அடிக்கடி சிறுநீர்
கழிக்க வேண்டும் என்ற உணர்வும், சிறுநீர் கழிக்கும் போது வலியும் ஏற்படும் (STAPH)
. வெட்டை நீர்; சிறுநீர் வெளியேறும் குழாய் முழுவதும் புண்ணாகுதல்
(HEP). காமஇச்சை மிகவும் அதிகமாக இருக்கும் (SATYRIASIS).
7.
பெண்கள் (Female):
மலட்டுத்தன்மை (STERILITY). பெண்களின் மாதவிலக்கு ஏராளமாகவும், அதிகக் கறுப்பாகவும், கட்டியாகவும், சுத்தம் செய்ய கடினமாக
இருக்கும் வகையில் கறைபடிந்தும் வெளியாகும்
(MAG-C). மார்பகம் மற்றும் முலைக்காம்புகளில் புண் ஏற்படும் மற்றும் தொடுவதற்கு கூருணர்ச்சி ஏற்படும்.
மாதவிடாயின் போது முலைகள் குளிர்ச்சியாகவும் , வலியுடமும் இருக்கும். மாதவிடாய் நிற்கும்
காலத்தில் அதிக இரத்தப்போக்கு , ஏராளமான இரத்தப்போக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். கர்ப்பப்பையில் உயிருக்கு ஆபத்தைத் தரும் நோய்கள் ஏற்படும். கருப்பை வாயிலும், யோனியிலும் அரிப்பு; அதைப்பற்றி நினைக்கும்
போது அரிப்பு இன்னும் அதிகரிக்கும்; வெதுவெதுப்பான நீரில் குளித்தால் தணியும்.
பெலோப்பியின் குழாயில் வேக்காடு (salpingitis), கருப்பையில் வேக்காடு(metritis) , கருப்பையைச்
சுற்றிலும் வேக்காடு (parametritis), கருப்பையின் உட்ப்புறத்திலிலுள்ள தோலில் வேக்காடு
(endometritis) , மூத்திரப்பையின் வேக்காடு (cystitis) போன்ற நோய்கள் தாக்கும்.
காமஇச்சை மிகவும் அதிகமாக இருக்கும்
(NYMPHOMANIA).
8.
குழந்தைகள்(Children):
குழந்தைகளில் உடலமைப்பில் மறைந்திருக்கும் மேகவெட்டை நோய்க்கிருமிகளின் தாக்குதலால்
குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்.
குள்ளமானவர்கள் , வளர்ச்சி குன்றியவர்கள் , புளிப்பு மணம்
கொண்ட குழந்தைகள், மன மந்தமான மற்றும் பலவீனமான குழந்தைகள்.
குழந்தைகளுக்கு வெறியெழுச்சி (AGGRESSION). மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவார்கள்; உதைப்பார்கள்;
அடிப்பார்கள்; கடிப்பார்கள். அதேபோல் தான் பெற்றோர்களிடமும் , உறவினர்களிடமும் நடந்து
கொள்வார்கள்.
கேள்விகளை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும்; திரும்பவும்
கேள்வி கேட்க வேண்டும் (BAR-C). பிறந்த சில நாட்களே
ஆன இளம் குழந்தைகளுக்கு ஆசன வாயிற்குப் பக்கத்தில் நெருப்புப் போல் சிவந்த சருமக் கோளாறு
தோன்றுதல். குழந்தைகள்
வயிற்றின் மேல் தூங்கும் , முழங்கால் -முழங்கை
ஊன்றி மார்போடு சேர்த்து வைத்து கொண்டு தூங்கும் (KNEE-CHEST POSITION).] சிறிய குழந்தைகளுக்கு சிரங்கு
ஏற்படும்.
மிருகங்களிடத்தில் அதிகமான அன்பும் , கொடூரமும் இருக்கும்
(CRUEL TO ANIMAL) . இவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வயதிலேயே காமஉணர்வுகள் துளிர்க்க
ஆரம்பித்துவிடும். குழந்தைப்பருவத்திலேயே சுயஇன்பம் அனுபவிக்காத துவங்குவார்கள்.
குழந்தைகளின் கால்கள் மிகவும் சூடாக இருக்கும் ; அதனால்
தங்களது காலணிகளை கழட்டச் சொல்வார்கள்; வெறுங்கால்களில்
குளிர்ச்சியான தரையில் நடக்க விரும்புவார்கள்.
9.
உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks):
சாராயம்( பிராந்தி) , உப்பு,
அமில உணவு ஆரஞ்சு , புளிப்பு பொருள்கள் மற்றும் இனிப்பு பொருள்களின் மீது அளவு கடந்த
விருப்பம். குறிப்பாக சாராயத்தின் மீது மிகுந்த நாட்டம். பசுமையான பழங்கள் , ஐஸ் க்ரீம் மற்றும் குளிர்ச்சியான பானங்களில்(ICY)
விருப்பம் இருக்கும்.
சாப்பிட்ட உடனேயே
திரும்பவும் கடுமையான பசி ஏற்படும் ( RAVENOUS APPETITE) .
எப்போதும் தாகம் இருந்து கொண்டேயிருக்கும் (CONSTANT
THIRST).
குளிர் பானங்கள், குளிர் உணவு, பட்டாணி, பீன்ஸ், முட்டை
மற்றும் மெலிதான உணவுகள் மீது வெறுப்பு.
10.
மாறுமைகள்: (Modalities):
நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation):
Ø பகலில் தொல்லைகள் அதிகரிக்கும். சூரியன் உதிக்க ஆரம்பித்தலிருந்து , சூரியன்
மறையும் வரை அவர்களது தொல்லைகள் அதிகரிக்கும்.
Ø அதே போல் தங்களுடைய நோய்களைப்பற்றி நினைக்கும் போதும் , வெப்பத்தினாலும்,
உடலை மூடினாலும் மற்றும் வியர்வையினாலும் அத் தொல்லைகள் கூடும்.
Ø விடியற்காலை முக்கியமாக
3 மணியிலிருந்து 4 மணி வரையில் குறிகள் அதிகரிக்கும். மேகவெட்டை
சம்பந்தமான காசநோய் விடியற்காலை 2 மணியிலிருந்து 4 மணி வரையில் அதிகமாக
இருக்கும்.
நோய்க்குறி குறைதல்(Amelioration):
Ø கடற்கரையில் இருக்கும் போது தொல்லைகள் குறையும் ( NAT-M., SYPH இதற்கு எதிரானது ).
Ø வயிற்றில் படுக்கும் போது அதாவது குப்புறப் படுத்தால் தொல்லைகள் குறையும்;
முழங்கால் -முழங்கை ஊன்றி மார்போடு சேர்த்து படுத்தாலும்
குறையும் (KNEE-CHEST POSITION).
Ø முதுகை பின்பக்கமாக எவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவு தூரமும் வளைத்தால்
மலத்தைச் சுலபமாக வெளியேற்ற முடியும்.
Ø பலமாக தேய்த்தல் (HARD RUBBING).
Ø சிறிய தூக்கம் (SHORT SLEEP) .
Ø ஈரமான பருவநிலை (DAMP WEATHER).
Ø சூரியன் மறைந்த பிறகு தொல்லைகள் குறையும்.
11.
இம்மருந்துக்கான (சிறப்புக் குணங்கள்) உட்கரு: (Nucleus):
Ø உள்ளமுக்கப்பட்ட மேகவெட்டை நோய்களினால் ஏற்பட்ட விளைவுகள். மரபு வழியாக
வந்த மேகவெட்டை நோய்த்தன்மையினால் பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் பிற தொல்லைகள் ஏற்படும்.
Ø நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நோய்த்தன்மை, எளிதில் குணப்படுத்த முடியாத பிடிவாதமான தொல்லைகள்.
Ø காந்தள் அல்லது எரிச்சல் தன்மை.
Ø குமட்டுகிற அல்லது நாற்றத்தைத் தருகிற கழிவுகள்.
12.
வீரியம் (POTENCY):
உயர்ந்த வீரியங்கள் ; 200 வது வீரியத்திற்கு மேல் தான் பயன்படுத்த வேண்டும்.
மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) : ஒரு வேளை மருந்து மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF
ACTION):
குறிப்பிடப்படவில்லை.
நிறைவு மருந்துகள்:
தூஜா (THUJ), நேட்ரம் சல்பூரிக்கம் (NAT-S), சல்பர் (SULPH), கன்னாபீஸ் இண்டிகா(CANN-I),
பல்சாட்டில்லா (PULS).
13. ஒப்பீடுகள் (COMPARISIONS) :
சல்பர் (SULPH): தன்முனைப்பு,
ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமை , கொழுப்பு உணவு , இனிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவுகளில்
விருப்பம், சிரங்கு, நகம் கடித்தல், கால்களை போர்த்திக்கொள்ள விரும்பாதது.
நக்ஸ்வாமிக்கா
(NUX-V) : ஆஸ்த்மா மற்றும் ஒவ்வாமை , கொழுப்பு உணவுகளில் விருப்பம் , மூத்திரப்பை அழற்சி
, அதிக காமஉணர்வு.
லாக்கஸிஸ் (LACH)
: எளிதில் உணர்ச்சிவசப்படுதல். பொறாமை. அதிக காம இச்சை, ஆஸ்த்மா.