§ 67
These
incontrovertible truths, which spontaneously offer themselves to our notice and
experience, explain to us the beneficial action that takes place under
homoeopathic treatment; while, on the other hand, they demonstrate the
perversity of the antipathic and palliative treatment of diseases with
antagonistically acting medicines.1
1 Only in the
most urgent cases, where danger to life and imminent death allow no time for
the action of a homoeopathic remedy - not hours, sometimes not even
quarter-hours, and scarcely minutes - in sudden accidents occurring to
previously healthy individuals - for example, in asphyxia and suspended
animation from lightning, from suffocation, freezing, drowning, etc. - is it
admissible and judicious, at all events as a preliminary measure to stimulate
the irritability and sensibility (the physical life) with a palliative, as for
instance, with gentle electrical shocks, with clysters of strong coffee, with a
stimulating odor, gradual application of heat, etc. When this stimulation is
effected, the play of the vital organs again goes on in its former healthy manner,
for
there is here no disease* to be removed, but merely an obstruction
and suppression of the healthy vital force. To this category belong various
antidotes to sudden poisoning: alkalies from mineral acids, hepar sulphuris for
metallic poisons, coffee and camphora (and ipecacuanha) for poisoning by opium,
etc.
It does not
follow that a homoeopathic medicine has been ill selected for a case of disease
because some of the medicinal symptoms are only antipathic to some of the less
important and minor symptoms of the disease; if only the others, the stronger
well-marked (characteristic), and peculiar symptoms of the disease are covered
and matched by the same medicine with similarity of symptoms - that is to say,
overpowered, destroyed and extinguished; the few opposite symptoms also
disappear of themselves after the expiry of the term of action of the
medicament, without retarding the cure in the least.
* And yet the
new sect that mixes the two systems appeals (though in vain) to this
observation, in order that they may have an excuse for encountering everywhere
such exceptions to the general rule in diseases, and to justify their
convenient employment of allopathic palliatives, and of other injurious
allopathic trash besides, solely for the sake of sparing themselves the trouble
of seeking for the suitable homoeopathic remedy for each case of disease - and
thus conveniently appear as homoeopathic physicians, without being such. But
their performances are on a par with the system they pursue; they are corrupting.
ஹோமியோபதி
மருத்துவச் சிகிச்சையின் உடல்நலம் விளைவிக்கிற குணம் மற்றும் எதிர்நிலை ( நோய்தணிவிப்பு) மருத்துவச் சிகிச்சைமுறையில்
உள்ள நெறிபிறழ்வுகள் பற்றிய உண்மையான விளக்கங்கள் .
மேலே குறிப்பிட்ட மறுக்கமுடியாத உண்மைகள் ,
இயற்கையின் வழியாகவும் மற்றும் பட்டறிவின் மூலமாகவும் நமது கவனத்திற்கு கொண்டு வருவதோடு , ஹோமியோபதி
மருத்துவச் சிகிச்சையினால் ஏற்படும்
நன்மைகளைப் பற்றியும் விளக்குகிறது. அதே நேரத்தில், அதற்கு மாறாக , நோய்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளின் மூலம் நோய்களுக்கு செய்யப்படும் நேர் எதிர்பண்புடைய மற்றும் நோய்தணிப்பு
சிகிச்சையினால் ஏற்படும் நெறிபிறழ்வு தன்மைகளை
அவைகள் நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுகிறது-1.
அடிக்குறிப்பு-1:
ஹோமியோபதி
மருந்துகள் வேலை செய்வதற்கு போதுமான அவகாசம் இல்லாத நிலையில், உதாரணமாக , ஏற்கனவே ஆரோக்கியமாக இருந்த ஒருவர்
திடீரெண்டு விபத்தில் சிக்கி இன்னும் சில மணிநேரத்தில் அல்லது கால்மணி நேரத்தில் அல்லது சில நிமிடத்திலோ உயிர் போய்விடும் என்ற ஆபத்தான நிலையிலும் மற்றும் திடீர் மூச்சடைப்பு
, மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட இயக்கமற்ற நிலை , மூச்சுத்திணறல் , உடல்
குளிரால் தாக்குண்டு பனிக்கட்டிபோல் உறைந்தநிலை மற்றும் தண்ணீரில் மூழ்குதல் போன்ற மிக நெருக்கடியாக தருணங்களில் மட்டுமே இந்த நோய்தணிவிப்பு மருந்துகளைப்
பயன்படுத்தலாம். அது
போன்ற ஆபத்தான நேரங்களில்
முதலுதவியாக பாதிக்கப்பட்டவரின் உடலின்
இயக்கம் (உறுத்தல்) மற்றும் உணர்வுகள் (உடம்பின் உயிர்வாழ்வு) ஆகியவற்றை
உடனடியாகத் தூண்டும் நியாயமான செயலாக இந்த
நோய்த்தணிவிப்பு முறையை மேற்கொள்ளலாம். இதற்குச் சான்றாக, மென்மையான மின்னாற்றல்
சிகிச்சை, மிகக்கெட்டியான காபிச்சாறு, நறுமணப் பொருள்களால் கிளர்ச்சியைத்
தூண்டுதல் , படிப்படியாக உடம்பை சூடாக்குதல் போன்ற செயல்முறைகளைச் செய்யலாம்.
இவ்வாறு
கிளர்ச்சிசெய்து தூண்டியபிறகு ,உடலின் முக்கியமான உறுப்புகள் அவை முன்பிருந்த ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புகின்றன,
ஏனென்றால் அங்கே நீக்க வேண்டிய நோய் என்று
எதுவும் இங்கே இல்லை , ஆனால் நலமான உயிராற்றலுக்கு அங்கே ஏற்பட்டிருந்த தடையும் மற்றும்
உள்ளமுக்கமும் மட்டுமே இருந்தன * .
திடீரென்று
ஏற்பட்ட நச்சுத்தன்மைக்கு கொடுக்கும் முறிவு மருந்துகள் அனைத்தும் இவ்வகையைச்
சேர்ந்தது தான் : எடுத்துக்காட்டாக கனிம அமிலங்களுக்கு வேதியியல் பொருள்களையும் ,
உலோகப்பொருள்களின் நச்சுத்தன்மைக்கு ஹீபர் சல்பரும் , அபினியின் (ஓபியம்)
நச்சுத்தன்மையை போக்க காபி மற்றும் கற்பூரம் ( மற்றும் இபிகா) கொடுப்பது போன்றவற்றைக் சொல்லலாம்.
சில
நோய்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருந்தின் குறிகள் அந்த நோயின்
ஒரு சில முக்கியமற்ற குறிகளுக்கும்
மற்றும் சிறிதளவு
குறிகளுக்கான எதிர்நிலையான
மருந்தாக இருப்பதாலேயே , அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மருந்து தவறானது என்ற
முடிவிற்கு நாம் வந்துவிடக்கூடாது. அந்நோயின் நன்றாகத் தெரிகிற வலிமை
வாய்ந்த குறிகள் ( தனிச் சிறப்புப்பண்புக்குறிகள் ) , மற்றும் பிற விசித்திரமான குறிகள் அந்த மருந்திற்கு ஒத்துவருவதாகவும்
மற்றும் பொருத்தமானவையாகவும் இருந்தால்
அவை அடக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் மற்றும் துடைத்தழிக்கப்பட்டும் விடுகின்றன.
அம்மருந்தின்
முழுமையாக செயல்பாடு முடிந்த பிறகு அங்கே
எஞ்சியிருக்கும் ஒரு சில எதிரான குறிகளும் கூடத் தாமாகவே மறைந்து
விடுகின்றன, இறுதியில் நலம் ஏற்படுகிறது.
[ * இருந்த
போதிலும், இருவேறு மருத்துவ முறைகளையும் கலந்து தருகின்றவர்களாகிய ஒரு பிரிவினர்
இத்தகைய கூர்நோக்கு பற்றி ஒரு
முறையீட்டைச் செய்கின்றனர் ( பயனற்றது
என்றாலும் ) , அதாவது, நோய்களை பற்றிக்
கூறப்பட்ட பொதுவான விதிகளுக்கு எதிரான அத்தகைய விதிவிலக்குகளே எங்கும் எதிர்
கொள்ளப்படுபவையாக இருக்கிறது என்றும் , அதனால் தாங்கள் இருவேறு
மருத்துவமுறைகளையும் கலந்து மருத்துவம்
செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் , மிகவும் வசதியாக உள்ள இந்த அலோபதி
நோய்த்தணிவிப்பு மருந்துகளையும் , தீங்கு தரும்
அம்மருத்துவ குப்பைகளையும் தருவதை அவர்கள் நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள்.
அவர்கள்
இவ்வாறு செய்வதெல்லாம் , ஒவ்வொரு நோய்க்குமான சரியான ஹோமியோபதி மருந்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டிய தொல்லையிலிருந்து தங்களை முழுமையாகக் காத்துக் கொள்வதற்காக மட்டுமே அவர்கள்
அச்செயலைச் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள்
ஹோமியோபதி மருத்துவர்களாக இல்லாமலேயே , தங்களை தகுந்த ஹோமியோபதி மருத்துவர்களாக
காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். ஆனால் , அவர்களது செயல்திறனை அவர்கள் பின்பற்றும் மருத்துவமுறையோடு சமநிலைப்படுத்திப் பார்க்கும் போது ; அவைகள் கேடு
விளைவிப்பதாக உள்ளது ].