Saturday, 21 January 2017

ஆண்மைக் குறைபாடும் ஹோமியோபதி மருத்துவமும்

ஆண்மைக் குறைபாடும் ஹோமியோபதி மருத்துவமும்
(IMPOTENCY AND HOMEOPATHY)


ஆண்களுக்கு உடலுறவின் மீது விருப்பம் குறைந்தாலோ அல்லது உடலுறவு  கொள்வதற்கான சக்தியை இழந்தாலோ அவருக்கு ஆண்மைக்குறைபாடு ( IMPOTENCE) ஏற்பட்டு இருப்பதாக கருதப்படும் . இவர்களால் முழுமையான இல்லற சுகத்தை நுகர முடியாது. இவர்களுக்கு உடலுறவின் போது விந்து விரைவாக வெளியேறுதல் அல்லது ஆண்குறியின் விரைப்புத் தன்மை தளர்ந்து விடுதல் அல்லது விரைப்புத்தன்மை நிகழாமை போன்ற குறிகள் இருக்கும். இக்குறைபாடு பிறவியிலிருந்தோ (CONGENITAL) அல்லது பாலுறுப்புகளில் குறைபாடு ஏற்பட்டதாலோ மற்றும் அளவிற்கு மீறிய சுயஇன்ப பழக்கத்தினாலும் உருவாகிறது. பொதுவாக இரண்டு சதவீதமான ஆண்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்குறைபாடு கீழ்க்காணும் காரணங்களால் ஏற்படுகிறது.

Ø  ஆண்குறி இல்லாமை அல்லது முழுவளர்ச்சியின்மை.
Ø  ஆண்குறியில் கட்டிகள் , வீக்கம் மற்றும் முடிச்சுக்கள் ஏற்படுதல். 
Ø  விரைகளில் அறுவை சிகிச்சை (CASTRATION) செய்துகொண்டபின்  உருவாகும் பின்விளைவுகள்.
Ø  புற்று, நீரழிவு, தண்டுவட அழற்சி மற்றும் மனச்சிதைவு நோய் போன்ற நீண்ட கால நோய்களின் தாக்குதல்.
Ø  இயக்குநீரின் (HORMONE) சமச்சீரற்ற  நிலை. குறிப்பாக ஆண்பால் கூறுக்கான டெஸ்டோஸ்டெரோன் ( TESTOSTERONE) ஹார்மோன் குறைபாடு.
Ø  தொடர்ந்து அமைதியூட்டுகிற மயக்க மருந்துகள் , இரத்த அழுத்த ,  மன அழுத்த  எதிர் மருந்துகள் போன்றவைகள் எடுத்து வருதல்.
Ø  வெட்கம்( BASHFULNESS) , தோல்விப்பயம்(FEAR OF FAILURE), பதட்டம் (ANXIETY), மனஅழுத்தம், கோபம் மற்றும் கருத்து முரண்பாடு போன்ற மனஉணர்வுகளின் பாதிப்பு.
Ø  நரம்புதளர்ச்சிக்கோளாறு ( NERVOUSNESS).
Ø  விலை மகளிரிடம் சென்று இன்பம் பெறும் ஆண்களுக்கு மனைவியின் மீது தோன்றும் விருப்பைக்குறைவு. அதேபோன்று உடலுறவின் போது மனைவி சரிவர ஒத்துழைக்கவில்லையென்றாலும் நாளடைவில் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும். 
Ø  மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல். குறிப்பாக நிகோடின் ( NICOTIN) என்ற நச்சுப் பொருள் ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பை உருவாக்குகிறது.
Ø  சுயஇன்பப் பழக்கத்தினால் ( MASTURBATION) ஏற்படும் நரம்புத்தளர்ச்சியானது ஆண்குறியின் விரைப்புத் தன்மையை குறைத்து தளர்ச்சியடைய செய்து விடுகிறது.


மேற்கண்ட காரணங்களால் ஆண்மைக்குறைபாடு ஏற்படுகிறது. அதேபோல் சில ஆண்கள் மலட்டுத் தன்மையால் ( STERILITY) அவதிப்படுகிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஆண்மைக்குறைவு உள்ளவர்களால் உடலுறவில் திருப்திகரமாக செயல்பட முடியாது. ஆனால் மலட்டுத்தன்மை ஏற்பட்டவர்களால் உடலுறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும். அதனால் திருப்தியோ அல்லது குழந்தைப் பாக்கியமோ பெற இயலாது. மலட்டுத்தன்மையில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலுறவின் போது விந்து சுரக்காமை அல்லது விந்து வெளியேறாமை அல்லது விந்தின்மை ( ASPERMIA) . மறறொன்று, விந்தில் கருவினை உருவாக்கும் ஆற்றலுள்ள உயிரணு சிறிதும் இல்லாத நிலை ( AZOOSPERMIA) . இவற்றிற்கான காரணங்கள்;

Ø  உயிரணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் அல்லது குறைபாடு.
Ø  விதைப்பையில் , விதை ( TESTICLES) இல்லாமலிருத்தல்.
Ø  பிறப்பிலேயே குறைபாடுடன் இருக்கும் விதைகள், விதைப்பையில் இல்லாமல் வேறிடத்தில் இருத்தல். அதனால் உடலுறவின் போது உருவாகும் விந்து வெளியேறாமல் மூத்திரப்பையிற்கு சென்று விடும்.
Ø  பிட்டியூட்டரி சுரப்பியின் சரிவர செயலாற்றாத தன்மை.
Ø  விதைகளில் ஏற்படும் காயங்கள் , விதைவீக்கம் போன்ற பாதிப்புகள்.


இத்தகைய குறைபாடுகளை நலமாக்குவதில் ஹோமியோபதி மருந்துகள் மிகச் சிறப்பாக செயலாற்றுகின்றன. இவ்வாறான பாதிப்பிற்குள்ளான துயரர்களிடம் தென்படும் குறிகளின் அடிப்படையில் ஒத்த ஹோமியோபதி மருந்தினை தேர்வு செய்து கொடுக்கும் போது பலர் நலமடைகிறார்கள். இக்குறைபாட்டிற்கான சில முக்கியமான மருந்துகளையும் , அம்மருந்துகளின் குறிகளையும் இப்போது பார்க்கலாம்.


ஆக்னஸ் காஸ்டஸ் ( AGNUS CASTUS)

இம்மருந்து தேவைப்படும் துயரர்களுக்கு பெண்ணைக் கட்டித் தழுவியவுடன் தன் உடலில் வலிமை குறைந்து இலேசாகி இருப்பது போல் தோன்றும். ஆண்குறி சிறுத்து சில்லிட்டுத் தளர்ந்து இருக்கும். மிக அதிகமான தளர்ச்சியினால் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆண்குறியில் விரைப்பு உண்டாவதில்லை. ஆண்தன்மை அடியோடு அழிந்து விடும், புணர்ச்சியில் ஆசையும் இருக்காது. விதைகள் சில்லிட்டு வீங்கிக் கடினமாகவும் வலியுடனும் இருக்கும். மலம் கழிக்க மூக்கும் போதும், மூத்திரம் கழிக்கும் போதும் விந்து வெளியேறும். இந்திரிய நரம்புகளில் இழுக்கும் உணர்ச்சி, அளவுக்கு மீறிய புணர்ச்சியினால் இளம் பருவத்தினருக்கு உரிய காலத்திற்கு முன்பே கிழப்பருவம் ஏற்படுதல். வயதானவர்களுக்கு , இளமைப்பருவத்தில் அளவுக்கு மீறிய சிற்றின்பத்தில் எடுப்பாட்டத்தின் காரணமாகவும், சுயஇன்பம் அனுபவித்ததின் காரணமாகவும் ஆண்தன்மை குறைதல். ஆனால் , உடல் சக்தி குன்றிய  போதிலும் இளமைப்பருவத்தில் இருந்ததை போன்று புணர்ச்சியில் அளவு கடந்த ஆசை இருக்கும். மேகவெட்டை நோயின் தாக்குதலினாலும் உடல் நலம் குன்றி , தளர்ச்சியுற்ற தமது நிலையை எண்ணிப் பதட்டமும் , பெருந்துன்பமும் இவர்களிடம் தென்படும்.


லைகோபோடியம் ( LYCOPODIUM)

இயற்கைக்கு மாறான வழிகளில் ( சுய இன்பம்) அளவு  கடந்த சிற்றின்பத்தில் ஈடுபட்ட இளைஞ்ர்களுக்கு ஆண்குறி சிறுத்துச் சில்லிட்டு தளர்ந்து ஆண்தன்மை குறைந்து விடுதல். வயதானவர்களுக்கு புணர்ச்சியில் அதிகமான ஆசை இருந்தும் ஆண்குறி போதிய அளவு விரைக்காமல் போய்விடும் . புணர்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது தூக்கிப் போய்விடுவார்கள். வயதானவர்கள்,  இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களால் உடலுறவில் ஈடுபடமுடியாமல் தவிக்கும் நிலையில் இம்மருந்து அவர்களின் நரம்புகளில் முறுக்கேற்றி மறுவாழ்க்கை கொடுக்குகிறது. மற்றும் புகையிலையை அதிகமாக உபயோகித்தினால் உண்டாகும் ஆண்தன்மைக் குறைவு. சிலர் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பொறுப்புக்களை விரும்பாமல் திருமணம் செய்து கொள்ளாமலே இன்பத்தைப் பெற விலை மகளிரை நாடிச் செல்வார்கள். இம்மருந்து தேவைப்படும் துயரர்களுக்கு எல்லாத் தொல்லைகளும் மாலை நான்கு மணி முதல் எட்டு  மணி வரை இருக்கும் என்பது சிறப்பு இயல்பு குறியாக  இருக்கிறது. வியாதிகள் வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் பரவும் . வயிற்றில் அளவு கடந்த வாயு உப்பிசம் இருக்கும், குறிப்பாக அடிவயிற்றில்.

பாஸ்பாரிக் ஆசிட் ( PHOSPHORICUM ACIDUM)

அளவுக்கு மீறி சிற்றின்பத்தில் ஈடுபட்டதால் ( விந்து அதிகமாக வெளியேறியதால் ) பலவீனம் , தளர்ச்சி அல்லது ஆண்தன்மை குறைவு. அடிக்கடி விந்து நழுவி மிகுதியான பலவீனத்தை உண்டாக்கும். ஒரே இரவில் பல தடவை விந்து வெளியேறி விடும். இவ்விதம் விந்து  செலவழிந்து விடுவதினால் பாதிப்பிற்குள்ளானவர்களின் உடல், மனம் இரண்டும் பலவீனமடையும். அதனால் வருத்தமாகவும், தலையைக் குனிந்து கொண்டும் , தன வியாதி குணமாகும் என்ற நம்பிக்கை இல்லாதவராகவும் இருப்பார். ஆயினும் , இயற்கைக்கு மாறான வழிகளில் ( சுய இன்பம் ) சிற்றின்பத்தை பெற வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருக்கும். தான் செய்யும் இழிவான செயலைப் பற்றி இவர்கள் மிகவும் மனம் புழுங்குவார்கள். இவர்களுக்கு ஆண்குறி விரைத்த சிறுது நேரத்திற்குள் விந்து வெளிப்பட்டு விடும் அல்லது விறைப்பே இல்லாமலும் விந்து வெளியாகும். சிலருக்கு உடலுறவிற்குப் பின்பும் , விந்து வெளியாகிய பின்னரும் கிளர்ச்சி அதிகரிக்கும்.


செலினியம் ( SELENIUM)

ஆண்மைக்குறைபாடுள்ள பெரும்பாலான துயரர்களை செலினியம் மருந்து நலப்படுத்துகிறது. விந்து தானாக வெளியேறுவதாலும், இயற்கைக்கு மாறான முறையில் சிற்றின்பம் அனுபவித்ததாலும் இத்துயரர்கள் மிகுந்த பலவீனத்துடன் இருப்பார்கள். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இரவில் தானாக விந்து வெளியாகிக் காலையில் கண்விழித்தவுடன் முதுகில் முடமாகிவிட்ட உணர்ச்சி தோன்றும். விந்து வெளியேறிய பின்பு தலைவலி, பாரிசவாதம் , பலவீனம், அதிக வருத்தம் மற்றும் மனவேதனை தோன்றும். புணர்ச்சி செய்யும் போது மிகச் சீக்கிரத்தில் விந்து வெளியாகும், அதனால் வேதனையும், பலவீனமும் உண்டாகும். புணர்ச்சி செய்ய ஆரம்பித்தவுடன் ஆண்குறி தளர்ந்து போகுதல். ஆண்குறி சிறிதளவு விரைத்து, மிக விரைவில் விந்து வெளியேறியவுடன் காமவெறியுள்ள உணர்ச்சி நீண்டநேரம் நீடித்திருக்கும்.

கலாடியம்

சிற்றின்பத்தில் அளவுக்கு மீறி ஈடுபட்டதால் ஆண்தன்மை குறைவுடன், அதிக ஞாபகமறதியும் , எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் இருக்கும். இம்மருந்து தேவைப்படும் நபர்கள் வழியில் போகும் பெண்களின் உடலமைப்பைக் கண்டுகளிக்கும் போதே அவர்களின் விந்து நழுவி விடும். சுயஇன்பப்பழக்கத்தினால் ஆண்குறியின் கொண்டைப்பகுதி தொள தொளவென்று இளகி மிருதுவாகி விடும். சிலருக்கு பெண்களைக் கட்டித் தழுவி முத்தமிட்டாலும் ஆண்குறி  விரைப்பதில்லை.  புணர்ச்சியின் முடிவில் விந்தும் வெளிவதில்லை. இன்பம் ஏற்படுவதும் (ORGASM) தெரிவதில்லை.


ஸ்டாப்பிசாக்கிரியா ( STAPHYSAGRIA )

இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்ச்சி இன்பத்தைப்பெற்ற செய்கையினால் ( MASTURBATION) ஏற்பட்ட உடல் வெளுப்பு , தளர்ச்சி மற்றும் களைப்பிற்கு ஸ்டாப்பிசாக்கிரியா மிகச்சிறந்த மருந்து. இம்மருந்து தேவைப்படும் துயரர்களுக்கு அளவிற்கு மிஞ்சிய சிற்றின்பத்தில் விளைவாக வருத்தம், ஏக்கம், வெறுப்பு, அலட்சியம் மற்றும் பலவீனம் போன்ற குறிகள் இருக்கும். எந்நேரமும் சிற்றின்ப விசயங்களையே சிந்தனை செய்து கொண்டு அதிலேயே நாட்டம் கொள்வார்கள். புணர்ச்சி செய்து முடிந்தவுடன் மூச்சுத்திணறல் ஏற்படும். சிறுவயதிலிருந்தே சுயஇன்பாக் பழக்கத்திற்கு அடிமையான இளைஞ்ர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்கும் பொழுது அவர்களுக்கு இம்மருந்து  கொடுத்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கிறது.


யோகிம்பினம் ( YOHIMBINUM)


பாலுணர்வு தூண்டும் நரம்புகள் செயலிழந்ததால் ஏற்படும் ஆண்மைக் குறைபாடு . ஆண்குறி விரைப்புத் தன்மையை முழுமையாக இழந்து விடுதல். இத்தகையவர்களுக்கு , உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது இம்மருந்து.


மேற்கண்ட மருந்துகளைத் தவிர , கல்கேரியா கார்பானிக்கம், காபியாகுருடா , காலிக் கார்பானிக்கம்  , கிரியோசோட்டம் , நேட்ரம் மூரியாட்டிகம் , நக்ஸ்வாமிகா , நூபர்லூட்டியம் மற்றும் டாமியானா போன்ற மருந்துகளும் ஆண்மைக் குறைப்பாட்டை நீக்குவதில் நன்கு வேலை செய்கின்றன. அதேபோல் ஆண் மலட்டுத்தன்மையை போக்குவதில் காஸ்டிகம் , சல்பர், சோரினம் மற்றும் எக்ஸ்ரே  போன்ற மருந்துகள் நன்கு வினையாற்றுகின்றன. இம்மருந்துகளை துயரர்களின் குறிகளுக்குத் தக்கவாறு சரியான மருந்தினைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். ஆகவே, இத்தகைய ஆண்மைக் குறைபாடுகள் உள்ளவர்கள் பத்திரிக்கைகளில் வரும் பல்வேறு விபரங்களை நம்பி ஏமாறாமல் நல்ல ஹோமியோபதி மருத்துவர்களை அணுகி இழந்து போன இன்பத்தையும் , வாழ்க்கையையும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். ஆண்மைக் குறைபாட்டைப்போக்கி மகிழ்ச்சிகாரமான இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கே உண்டு.

குறிப்பு: ஹோமியோபதி மருந்துகளின் செயலாற்றலும் , வீரியமும்  பிற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபடுவதால் , இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தகுந்த ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும்.

(இக்கட்டுரை " ஹோமியோ தோழன் " அக்டோபர்-2010 இதழில் "செல்வா" என்ற பெயரில் நான் எழுதியது.)


1 comment:

  1. ஐயா,உங்கள் தொலைபேசி கிடைக்குமா?

    ReplyDelete