Wednesday, 16 September 2015

ஆர்கனான் மணிமொழி-38

§ 38

II

Or the new dissimilar disease is the stronger. In this case the disease under which the patient originally labored, being the weaker, will be kept back and suspended by the accession of the stronger one, until the latter shall have run its course or been cured, and then the old one reappears uncured. Two children affected with a kind of epilepsy remained free from epileptic attacks after infection with ringworm (tinea) but as soon as the eruption on the head was gone the epilepsy returned just as before, as Tulpius1 observed. The itch, as Schopf2 saw, disappeared on the occurrence of the scurvy, but after the cure of the latter it again broke out. So, also the pulmonary phthisis remained stationary when the patient was attacked by a violent typhus, but went on again after the latter had run its course3 If mania occur in a consumptive patient, the phthisis with all its symptoms is removed by the former; but if that go off, the phthisis returns immediately and proves fatal4 When measles and smallpox are prevalent at the same time, and both attack the same child, the measles that had already broken out is generally checked by the smallpox that came somewhat later; nor does the measles resume its course until after the cure of the smallpox; but it not infrequently happens that the inoculated smallpox is suspended for four days by the supervention of the measles, as observed by Manget5 after the desquamation of which the smallpox completes its course. Even when the inoculation of the smallpox had taken effect for six days, and the measles then broke out, the inflammation of the inoculation remained stationary and the smallpox did not ensue until the measles had completed its regular course of seven days6 In an epidemic of measles, that disease attacked many individuals on the fourth or fifth day after the inoculation of smallpox and prevented the development of the smallpox until it had completed its own course, whereupon the smallpox appeared and proceeded regularly to its termination7 The true, smooth, erysipelatous-looking scarlatina of Sydenham, with sore throat, was checked on the fourth day by the eruption of cow-pox, which ran its regular course, and not till it was ended did the scarlatina again establish itself; but on another occasion, as both diseases seem to be of equal strength, the cow-pox was suspended on the eighth day by the supervention of the true, smooth scarlatina of Sydenham,8 and the red areola of the former disappeared until the scarlatina was gone, wherein the cow-pox immediately resumed its course, and went on its regular termination 9 The measles suspended the cow-pox; on the eighth day, when the cow-pox had nearly attained its climax, the measles broke out; the cow-pox now remained stationary, and did not resume and complete its course until the desquamation of the measles, had taken place, so that on the sixteenth day it presented the appearance it otherwise would have shown on the tenth day, as Kortum10 observed.


Even after the measles had broken out the cow-pox inoculation took effect, but did not run its course until these measles had disappeared, as Kortum likewise witnessed.11

I myself saw the mumps (angina parotidea) immediately disappear when the cow-pox inoculation had taken effect and had nearly attained its height; it was not until the complete termination of the cow-pox and the disappearance of its red areola that this febrile tumefaction of the parotid and submaxillary glands, that is caused by a peculiar miasm, reappeared and ran its regular course of seven days.

And thus it is with all dissimilar disease; the stronger suspends the weaker (when they do not complicate one another, which is seldom the case with acute disease), but they never cure one another.

1 Obs., lib. I, obs. 8.
2 In Hufeland's Journal, xv, 2.
3 Chevalier, in Hufeland's Neuesten Annalen der franzosichen Heikunde, ii, p.192.
4 Mania phthisi superveniens eam cum omnibus suis phaenomenis auffert, verum mox redit phthisis et occidit, abeunte mania. Reil Memorab., fasc. iii, v, p.171.
5 In the Edinb. Med. Comment., pt. i, 1.
6 John Hunter, On the veneral Disease, p.5.
7 Rainey, in the Edinb. Med. Comment., iii, p.480.
8 Very accurately described by Withering and Plenciz, but differing greatly from the purpura (or Roodvonk), which is often erroneously denominated scarlet fever. It is only of late year that the two, which were originally very different diseases, have come to resemble each other in their symptoms.
9 Jenner, in Medicinische Annalen, August, 1800, p.747.
10 In Hufeland's Journal der praktischen Arzneikunde, xx, 3, p.50.
11 Loc. cit.


அல்லது புதியதாக வரும் மாறுபட்ட (ஒற்றுமையில்லாத) இயற்கை நோய் அதிக பலம் பொருந்தியதாக இருக்கும். நோயாளியிடம் முதலில் தோன்றி துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிற நோய் பலவீனமுடையதாக இருந்தால், பலம் பொருந்திய புதிய நோய் தலைமைப் பொறுப்பேற்றவுடன் அந்நோய் பின்னுக்குத் தள்ளப்பட்டு சில காலத்திற்கு நீக்கி வைக்கப்படுகிறது. புதிய நோய் முழுவீச்சில் ஓடி ஆடி அடங்கியபின் அல்லது குணமானவுடன் , உள்ளுறைந்திருக்கும்  குணமடையாத பழைய நோய் மறுபடியும் வெளிப்படுகிறது. வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு தலையில் படர்தாமரை நோய் ( உடல் மேல் பரவும் பூஞ்சக்காலான்கள்) வந்தவுடன் வலிப்பு வருவது நின்று விட்டது , ஆனால்   படர்தாமரைநோய் குணமானவுடன் முன்பிருந்தவாறு வலிப்புகள் வர ஆரம்பித்துவிட்டன என்று மரு. துல்பியஸ் தெரிவித்துள்ளார். சொறி,சிரங்குகள் இருந்தவர்களுக்கு ஊட்டக்குறைவு கோளாறு நோய் தோன்றியவுடன் அந்நோய் மறைந்துவிட்டது. ஆனால் ஊட்டக்குறைவு கோளாறுகள் குணமானவுடன் அந்த சொறி, சிரங்குகள் திரும்பவும் தோன்றியதை மரு.ஸ்காப் பார்த்திருக்கிறார்.


நுரையீரல் காசநோய் இருந்தவருக்கு கடுமையான பெருவாரிக்காய்ச்சல் தோன்றியது. அந்தக் காய்ச்சல் இருந்த வரையில் உள்ளடங்கி இயங்காமல் இருந்த நுரையீரல் காசநோய் , பெருவாரிக்காய்ச்சல் குணமான பின்பு திரும்பவும் நடமாடத் துவங்கியது. காசநோய் (எலும்புருக்கி நோய்) உள்ளவருக்கு மூளைக்கோளாறு தோன்றினால் , மூளைக்கோளாறு  சரியாகும் வரை காசநோய் உள்ளே மறைந்திருந்து , பின்பு மறுபடியும் தோன்றி , மிகக்  கடுமையாகத் தாக்கி இறுதியில் மரணத்தைக் கொடுத்துவிடும். தட்டம்மையும் (சின்னம்மை ) பெரியம்மையும் சேர்ந்தாற்ப்போல் தோன்றும் காலங்களில்  இரண்டு  நோய்களும் ஒரே குழந்தையை ஒரே நேரத்தில் தாக்கும் பொழுது , முதலில் தட்டம்மையும் பின்னர் பெரியம்மையும் தோன்றினால் தட்டம்மை அடங்கிப்போய் பெரியம்மை குணமான பிறகே வெளி வருகிறது. ஆனால் மரு.மான்கெட் கூறியவாறு பெரியம்மை நோய்த்தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் அது நான்கு நாட்கள் தடுத்துநிறுத்தப்பட்டு தட்டம்மை ஆடி அடங்கியபின் மீண்டும் பெரியம்மைப்பாதிப்பு தோன்றி தன் தாக்கத்தை உண்டாக்குவதும் , பிறகு செதிளுரிந்து முழுமையாக குணமாவதும் அவ்வப்போது காணப்படுகிறது.  


பெரியம்மை தடுப்பூசி போட்டு ஆறு நாட்களுக்கு அதன் விளைவை எற்படுத்திய பிறகு தட்டம்மை தோன்றுமாயின் , அது ஏழு நாட்களுக்கு முழுமையாகச் செயலாற்றி அடங்கும் வரை பெரியம்மைத் தடுப்பூசியின் அழற்சியும் அதே நிலையில் நிறுத்தப்பட்டு அதன் பின்னரே பெரியம்மையின் பாதிப்பு தலை தூக்குகிறது.  தட்டம்மை பெருவாரியாகத் தொற்றிப்பரவும் காலங்களில் பெரியம்மை நோய்த்தடுப்பூசி போட்டுக்கொண்ட பல மனிதர்களிடம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை பெரியம்மையின் பாதிப்பு ஏற்படாமல் தட்டம்மையின் பாதிப்பு முழுவதும் நீங்கிய பின்னரே பெரியம்மைத் தடுப்பூசியின் விளைவு வெளிப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது.


உண்மையாக கூறுவதென்றால் , மெல்லிழைவான அக்கி நோய் போன்றதும் , தொண்டைப் புண்ணுடனும் கூடிய விஷத்தன்மையான  செங்காய்ச்சல்  சைடன்காம் நகரில் பாதித்திருந்தபோது   நான்காவது நாளில் சரும எழுச்சியுடன் கூடிய மாட்டம்மை அல்லது கோமாரிநோய்  தோன்றியவுடன் செங்காய்ச்சல் தடுத்து நிறுத்தப்பட்டு , கோமாரி நோய் செயலாற்றி முடித்தவுடன்  செங்காய்ச்சல் மீண்டும் எழுந்தது. ஆனால் , வேறொரு சூழ்நிலையில் இந்த இரண்டு நோய்களும் சமவலிமையுடன் காணப்பட்டபோது கோமாரிநோய் அதனுடைய எட்டாவது நாளில் செங்காய்ச்சலினால் தடுக்கப்பட்டு அந்நோய் மறைந்தவுடன் மீண்டும் முழுமையாகத் தோன்றி மறைந்துள்ளது. மற்றும் கோமாரிநோய்க் கொப்பளத்தின் செம்மைநிறம் , செங்காய்ச்சல் தாக்குதல் இருந்தவரை மறைந்திருந்து பின்னர்  கோமாரிநோய் வெளிப்பட்டவுடன் திரும்பவும் தோன்றி குணமாகி முடிவுக்கு வந்துள்ளது. அதே போல் கோமாரிநோய் கொப்பளங்கள் தோன்றிய எட்டாவது நாளில் அதனுடைய உச்சநிலையை அடைந்து முடிவுறும் தருவாயில் இருக்கும் பொழுது தட்டம்மை வெடித்துக் கிளம்பியதால் கோமாரிநோய் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு தட்டம்மை முழுவதும் குணமாகி செதில் உறிந்து வெளியேறிய பின்னர் பதினாறாவது நாளில்   கோமாரிநோய்  திரும்பவும் தலைதூக்கி அதன்பிறகு குணமடைந்துள்ளது. இல்லாவிடின் பத்தாவது நாளிலேயே  கோமாரிநோய் குணமாக்கப்பட்டிருக்கும் என்று மரு. கோர்டும் கவனித்துக் கூறியுள்ளார்.



தட்டம்மை பாதிப்பு தொடங்கிய பிறகு கோமாரிநோய்க்கான நோய்தடுப்பூசி போட்டவுடன் அதன் விளைவுகள் தட்டம்மை நீங்கும் வரை அடங்கியிருந்து அதன் பின்னரே வெளிப்பட்டது என்பதையும் மரு, கோர்ட்டும் உறுதிப்படுத்துகிறார். 


கோமாரி நோய் தடுப்பூசியினால் கொப்புளப்பாதிப்பு தோன்றி  அதன் உச்சத்தை அடைந்தபோது அதற்கு முன்பிருந்த புட்டாளம்மை அல்லது பொன்னுக்குவீங்கி ( உமிழ்நீர் கோளவீக்கம்) உடனே மறைந்து விட்டதையும் , கோமாரி நோய் முற்றிலும் நீங்கி அதன் செம்புள்ளிகளும் மறைந்த பிறகே புட்டாளம்மை தோன்றிக் காய்ச்சலுடன் காதுகளுக்கு பின்புறம் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கமும் மற்றும் கீழ்த்தாடை சுரப்பிகளிலும் வீக்கம் ஏற்பட்டு , ஒரு வினோதமான மியாசத்தினால் ( நோய் மூலம் ) திரும்பவும் தோன்றி அதற்குரிய ஏழு நாட்கள் நீடித்திருந்ததையும் நான் ( ஹானிமன் ) பார்த்திருக்கிறேன்.


எனவே, மாறுபட்ட அல்லது ஓததன்மையில்லாத நோய்கள் இங்கு கூறிய முறையிலே தோன்றுகிறது என்பதையும்வலிமையானது  பலவீனமானதை விலக்கி வைக்கிறது என்பதையும் (பொதுவாக அவைகள் ஒன்றுக்கொன்று சிக்கல்படுத்திக் கொள்வதில்லை என்றாலும் திடீர் நோயின் போது  அத்தகைய சிக்கலைத் தோற்றுவிக்கும் நிலையும் எப்பொழுதாவது ஏற்படுவதுண்டு) ஆனால் அவைகள் ஒன்றையொன்று எப்போதும் குணப்படுத்துவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.



Monday, 7 September 2015

ஆர்கனான் மணிமொழி-37

§ 37

So, also under ordinary medical treatment, an old chronic disease remains uncured and unaltered if it is treated according to the common allopathic method, that is to say, with medicines that are incapable of producing in healthy individuals a state of health similar to the disease, even though the treatment should last for years and is not of too violent character.1 This is daily witnessed in practice, it is therefore unnecessary to give any illustrative examples.

Foot Note-1:  But if treated with violent allopathic remedies, other diseases will be formed in its place which are more difficult and dangerous to life.

அதனால் பல ஆண்டுகளாக நீடித்துள்ள ஒரு இயற்கை நோயிற்கு, சாதாரண மருத்துவ சிகிசையாகவும், ஆரோக்கியமான நிலையில் இருப்பவர்களிடம் ஒத்த செயற்கை நோயைத் தோற்றுவிக்காததாக்வும் உள்ள ஆங்கில மருத்துவமுறையில் மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை செய்தால் , எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த நீடித்தநோய் (நீண்டகாலநோய்) அவ்வளவு கடுமையான தன்மையில் இல்லாதபோதும் அந்தநோயில் எந்த மாற்றமும் தோன்றுவதில்லை மற்றும் நலமாவதும் இல்லை. இவ்விசயத்தைதான் ஒவ்வொரு நாளும் நம் மருத்துவத்தொழிலில் கண்கூடாக காண்கிறோம் ஆதலால் இதற்கு வேறு உதாரணங்கள் கூற தேவையில்லை.

அடிக்குறிப்பு -1 


ஆதலால் , கடுமையான குணம்படைத்த ஆங்கில மருந்துகளின் மூலம் சிகிச்சை செய்யும்போது, அந்த நோய் உள்ள இடத்தில் இன்னும் கடுமையாகவும் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மற்ற நோய்களும் தோன்றி விடுகின்றன.   

Wednesday, 2 September 2015

ஆர்கனான் மணிமொழி-36

§ 36

If the two dissimilar diseases meeting together in the human being be of equal strength, or still more if the older one be the stronger, the new disease will be repelled by the old one from the body and not allowed to affect it. A patient suffering from a severe chronic disease will not be infected by a moderate autumnal dysentery or other epidemic disease. The plague of the Levant, according to Larry, 1 does not break out where scurvy is prevalent, and persons suffering from eczema are not infected by it. Rachitis, Jenner alleges, prevents vaccination from taking effect. Those suffering from pulmonary consumption are not liable to be attacked by epidemic fevers of a not very violent character, according to Von Hildenbrand.

Foot Note-1:  Mémoires et Observations, in the Description de l' Egpte, tom. i.


மனித உடலில்மாறுபட்ட தன்மையுடையதாகவும் , சம வலிமையானதுமான இரண்டு நோய்கள் ஒரே நேரத்தில் சந்திக்கும் போது புதிய நோயை விடப் பழைய நோய் அதிக வலிமை வாய்ந்ததாய் இருந்தால் பழைய நோய் புதிய நோயை உடலிலே தங்க இடம் கொடுக்காமல் விரட்டி விடுகிறது. நீண்டகால நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு துயரருக்கு இலையுதிர் காலங்களில் தோன்றும் வயிற்றுக்கடுப்போ அல்லது பெரிவாரியாக தோன்றும் இயல்புள்ள மற்ற நோய்களோ ஏற்படுவது கிடையாது. ஊட்டசத்துக் குறைவினால் ஏற்படும் சொறி,கரப்பான் நோயின் பாதிப்பிற்கு (Scurvy) உள்ளானவர்களை லெவெண்ட் பகுதியைத் தாக்கிய ( கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவையும் இணைக்கும் பகுதி ) கொள்ளைநோய் (Plauge) தாக்குவதில்லை என்று மருத்துவர்.லாரி (Dr.Larry) என்பவர் கூறுகிறார். அதேபோல கரப்பான்புண் (Eczema)  உள்ளவர்களையும் கொள்ளைநோய் தொற்றுவது கிடையாது. ஊட்டசத்துக்குறைவினால் குழந்தைகளுக்கு வரும் எலும்புநோய்கள் அல்லது கணைநோய் (Rahitis) உள்ளவர்களின் உடலில் பெரியம்மை தடுப்புமருந்தைச் செலுத்தினால் அம்மருந்து வேலை செய்வதில்லை என்று மருத்துவர்.ஜென்னர் ( Dr.Jenner)  வாதிடுகிறார். நுரையீரல் காசநோய் (Pulmonary consumption) உள்ளவர்களை பெருவாரி காய்ச்சல், அவை அதிக கடுமையானதாக இல்லாவிட்டால் தாக்குவது இல்லை என்று வான்ஹில்டன் பிராண்ட் (Von Hildenbrand) குறிப்பிடுகிறார்.  

ஆர்கனான் மணிமொழி-35

§ 35

In order to illustrate this, we shall consider in three different cases, as well what happens in nature when two dissimilar natural diseases meet to in one person, as also the result of the ordinary medical treatment of diseases with unsuitable allopathic drugs, which are incapable of producing an artificial morbid condition similar to the disease to be cured, whereby it will appear that even Nature herself is unable to remove a dissimilar disease already present by one that is un-homoeopathic, even though it be stronger, and just as little is the un-homoeopathic employment of even the strongest medicines ever capable of curing any disease whatsoever.


இதை தெளிவாக்குவதற்கும் , மாறுபட்ட இரண்டு இயற்கை நோய்கள் ஒருவரிடத்தில்  ஒரே நேரத்தில் ஒன்றாகத் தோன்றும் போது அங்கு இயற்கையாகவே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கும் மூன்று வேறுபட்ட நோய் வரலாறுகளை ஆழ்ந்து ஆராயலாம் . அதில் , நலமாக்கப்படவேண்டிய நோயிற்கு தேவையான  ஒத்ததன்மையை உடைய செயற்கை நோயைத் தோற்றுவிக்காத தன்மையையும் , அதற்குப் பொருத்தமில்லாத ஆங்கில மருந்துகளைக் கொடுத்து மருத்துவம் செய்வதால் ஏற்பட்ட முடிவினையும் காண முடியும். அத்தோடு ஒத்ததன்மையற்ற நோயாகவும் அதனால் ஹோமியோபதி முறையற்றதாகவும் இருக்கும் நோயை வலிமைமிக்க இயற்கை அன்னையாலும் கூட நீக்க முடியாமல் இருப்பதையும் பார்க்கலாம். மேலும் ஹோமியோபதி முறைக்கு பொருந்தாத மருந்துகள் ( ஆங்கில மருந்துகள்) அவைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவையாக இருந்த போதும் கூட அவற்றால் எந்த நோயையும் நலப்படுத்த முடியாத நிலையைக் காணலாம்.