Monday, 27 July 2015

ஆர்கனான் மணிமொழி-12

§ 12

It is the morbidly affected vital energy alone that produces disease1, so that the morbid phenomena perceptible to our senses express at the same time all the internal change, that is to say, the whole morbid derangement of the internal dynamis; in a word, they reveal the whole disease; consequently, also, the disappearance under treatment of all the morbid phenomena and of all the morbid alterations that differ from the healthy vital operations, certainly affects and necessarily implies the restoration of the integrity of the vital force and, therefore, the recovered health of the whole organism.

Foot Note-1: How the vital force causes the organism to display morbid phenomena, that is, how it produces disease, it would be of no practical utility to the physician to know, and will forever remain concealed from him; only what it is necessary for him to know of the disease and what is fully sufficient for enabling him to cure it, has the Lord of life revealed to his senses.

நுண்ணிய நச்சுபொருளால் பாதிக்கப்பட்ட உயிர்ப்புச்சக்தியே உடலில் நோயை உண்டாக்குகிறது. அதனால் நோயாளியிடம் நம் புலன்களுக்கு தென்படும் நோய் குறிகள் உடலின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள மாறுதலை, அதாவது உயிர்ப்பு சக்தியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் முழுவதையும் எடுத்துக்காட்டுகின்றன. குறிகளின் மூலம் நோயின் முழு உருவத்தை அறியலாமென்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆதலால் நாம் செய்யும் சிகிச்கையினால் , ஆரோக்கியமான உயிரியக்கச் செயல்பாடுகளில் இருந்து வேறுபட்டவையாக இருந்த நோயின் எல்லா இயற்காட்சிகளும் , எல்லா நோய்நிலை மாற்றங்களும் மறைந்துவிட்டன என்றால் அந்த உயிராற்றல் தனது பழைய ஒழுங்குநிலைக்கு திரும்புகிறது என்றும்,உடல் முழுவதிலும் ஆரோக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது என்றும் நிச்சயமாக நம்பலாம்.

அடிக்குறிப்பு-1


உயிராற்றல் உடல் உறுப்புகளில் நோயின் இயற்காட்சியையும் , நோய்த் தன்மையையும் எவ்வாறு வெளிபடுத்திக் காட்டுகிறது என்பதை மருத்துவர் தெரிந்து கொள்வதும் அவரது செயல்முறைப் பயன்பாட்டிற்குத் தேவையற்றதாகும். அது அவரிடம் எப்போதும் உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ளவையாகவே இருக்கும். அவர் நோயைப்பற்றித் தேவையான அளவிற்கு தெரிந்திருக்க வேண்டியதும் , அந்நோயைக் குணப்படுத்துவதற்கு தேவையான அறிவையும், உயிர் வாழ்வைத் தீர்மானிக்கும் இயற்கை ஆற்றல் அம்மருத்துவரின் அறிவுப்புலன்களுக்கு தெரியுமாறு வெளிப்படுத்தும்.

No comments:

Post a Comment