§ 11
When a person falls
ill, it is only this spiritual, self acting (automatic) vital force, everywhere
present in his organism, that is primarily deranged by the dynamic1
influence upon it of a morbific agent inimical to life; it is only the vital
force, deranged to such an abnormal state, that can furnish the organism with
its disagreeable sensations, and incline it to the irregular processes which we
call disease; for, as a power invisible in itself, and only cognizable by its
effects on the organism, its morbid derangement only makes itself known by the
manifestation of disease in the sensations and functions of those parts of the
organism exposed to the senses of the observer and physician, that is, by
morbid symptoms, and in no other way can it make itself known.2
Foot Note:1 Materia peccans!
Foot Note:2 What is dynamic
influence, - dynamic power? Our earth, by virtue of a hidden invisible energy,
carries the moon around her in twenty-eight days and several hours, and the
moon alternately, in definite fixed hours (deducting certain differences which
occur with the full and new moon) raises our northern seas to flood tide and
again correspondingly lowers them to ebb. Apparently this takes place not through
material agencies, not through mechanical contrivances, as are used for
products of human labor; and so we see numerous other events about us as
results of the action of one substance on another substance without being able
to recognize a sensible connection between cause and effect. Only the cultured,
practiced in comparison and deduction, can form for himself a kind of
supra-sensual idea sufficient to keep all that is material or mechanical in his
thoughts from such concepts. He calls such effects dynamic, virtual, that is,
such as result from absolute, specific, pure energy and action of the one
substance upon the other substance.
For instance, the
dynamic effect of the sick-making influences upon healthy man, as well as the
dynamic energy of the medicines upon the principle of life in the restoration
of health is nothing else than infection and so not in any way material, not in
any way mechanical. Just as the energy of a magnet attracting a piece of iron
or steel is not material, not mechanical. One sees that the piece of iron is
attracted by one pole of the magnet, but how it is done is not seen. This
invisible energy of the magnet does not require mechanical (material) auxiliary
means, hook or lever, to attract the iron. The magnet draws to itself and this
acts upon the piece of iron or upon a steel needle by means of a purely
immaterial invisible, conceptual, inherent energy, that is, dynamically,
and communicates to the steel needle the magnetic energy equally invisibly
(dynamically). The steel needle becomes itself magnetic, even at a distance
when the magnet does not touch it, and magnetizes other steel needles with the
same magnetic property (dynamically) with which it had been endowered
previously by the magnetic rod, just as a child with small-pox or measles
communicates to a near, untouched healthy child in an invisible manner
(dynamically) the small-pox or measles, that is, infects it at a distance
without anything material from the infective child going or capable of going to
the one to be infected. A purely specific conceptual influence
communicated to the near child small-pox or measles in the same way as the
magnet communicated to the near needle the magnetic property.
In a similar way,
the effect of medicines upon living man is to be judged. Substances, which are
used as medicines, are medicines only in so far as they possess each its own
specific energy to alter the well-being of man through dynamic, conceptual
influence, by means of the living sensory fibre, upon the conceptual
controlling principle of life. The medicinal property of those material
substances which we call medicines proper, relates only to their energy to call
out alterations in the well-being of animal life. Only upon this conceptual
principle of life, depends their medicinal health-altering, conceptual
(dynamic) influence. Just as the nearness of a magnetic pole can communicate
only magnetic energy to the steel (namely, by a kind of infection) but cannot
communicate other properties (for instance, more hardness or ductility, etc.).
And thus every special medicinal substance alters through a kind of infection,
that well-being of man in a peculiar manner exclusively its own and not in a
manner peculiar to another medicine, as certainly as the nearness of the child
ill with small-pox will communicate to a healthy child only small-pox and not
measles. These medicines act upon our well-being wholly without communication
of material parts of the medicinal substances, thus dynamically, as if through
infection. Far more healing energy is expressed in a case in point by the
smallest dose of the best dynamized medicines, in which there can be, according
to calculation, only so little of material substance that its minuteness cannot
be thought and conceived by the best arithmetical mind, than by large doses of
the same medicine in substance. That smallest dose can therefore contain almost
entirely only the pure, freely-developed, conceptual medicinal energy,
and bring about only dynamically such great effects as can never be reached by
the crude medicinal substances itself taken in large doses.
It is not in the
corporal atoms of these highly dynamized medicines, nor their physical or
mathematical surfaces (with which the higher energies of the dynamized
medicines are being interpreted but vainly as still sufficiently material) that
the medicinal energy is found. More likely, there lies invisible in the
moistened globule or in its solution, an unveiled, liberated, specific,
medicinal force contained in the medicinal substance which acts dynamically by
contact with the living animal fibre upon the whole organism (without
communicating to it anything material however highly attenuated) and acts more
strongly the more free and more immaterial the energy has become through the
dynamization.
Is it then so
utterly impossible for our age celebrated for its wealth in clear thinkers to
think of dynamic energy as something non-corporeal, since we see daily
phenomena which cannot be explained in any other manner? If one looks upon
something nauseous and becomes inclined to vomit, did a material emetic come
into his stomach which compels him to this anti-peristaltic movement? Was it
not solely the dynamic effect of the nauseating aspect upon his imagination?
And if one raises his arm, does it occur through a material visible instrument?
a lever? Is it not solely the conceptual dynamic energy of his will
which raises it?
ஒருவர் நோய்வாய்பட்டால்
முதலில் தாக்கப்படுவது அவரது உடலெங்கும் பரவி இயங்கும் உயிர்ப்புச் சக்தியே. உயிரைக்
குடிக்கும் வல்லமையுள்ள ஏதோ ஒரு நோய்ப்பொருளால் தான் மிகநுட்பமான முறையில்
இருக்கும் உயிர்ப்பு சக்தியில் கோளாறு அடைந்த உயிர்ப்புச்சக்தி வேதனையை
அனுபவிக்கிறது. தான் அனுபவிக்கும் வேதனையை நோய்
என்று (அதாவது) உடலில் நடைபெறும் வேலையை தாறுமாறாக்கி விடுகிறது. இப்படி
தாறுமாறாக்கியபின்பு தான் நாம் அந்த மாற்றத்தை நோய் என்கிறோம். இப்படி செய்தது
உயிர்ப்பு சக்திதான் என்பதை உணரவேண்டும். (அதற்கு உதாரணம்) கண்களுக்கு புலப்படாத
உயிர்ப்பு சக்தியே தான் தன்னுடைய சக்தியை உடலின் மூலமே தானே காட்ட முடியும்.
ஆதலால்,
தான் அடைந்த (நோயை)
எடுத்துக்காட்ட வைத்தியருக்கும் மற்றும் பார்ப்போருக்கும் எடுத்துக்காட்டும்
விதத்தில் உடல் உறுப்புகளை தாக்கி அவ்வுறுப்புகளின் உணர்ச்சிகளிலும் வேலைகளிலும்
மாறுதல்களை உண்டாக்குவது ஒன்றே உயிர்ப்பு சக்திக்கு உள்ள வழியாகிறது. வேறு
எவ்வழியும் அதற்கு இல்லை.
அடிக்குறிப்பு-1: நச்சு
நோய்ப்பொருள்கள்.
அடிக்குறிப்பு-2 : இயக்கம் சார்ந்த செயல் விளைவு (Dynamic influence) அல்லது இயக்கஆற்றல் (Dynamic power) என்பது என்ன?. நமது பூமியானது, கண்ணிற்குப் புலப்படாத வகையில் அதற்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலால்
இருபத்தெட்டு நாட்களிலும் மற்றும் சில மணி நேரங்களிலும் பூமியையை தன்னைச் சுற்றி சுழலுமாறு செய்கிறது. நிலவும் மாறி மாறி
குறிப்பிட்ட நேரங்களில் ( முழுநிலவு ,அமாவாசையின் போது ஏற்படும் சில வேறுபாடுகளுக்கு ஏற்ப சில
மணி நேரத்தைக் குறைத்துக் கொள்ள நீண்டும் )
வடக்குப் பகுதி கடலை வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு பொங்குமாறும் , அலைகளை ஏற்படுத்தியும் மற்றும் அதற்கேற்ற அளவிற்குத் தணியுமாறும்(Ebb= எழுச்சி தணிவு) செய்கிறது. இத் தோற்றமானது மனித
உழைப்பிற்கு பயன்படும் பருப்பொருள் ஆற்றலாலோ , இயந்திரபாணியான
ஆற்றலாலோ நிகழவில்லை என்பது கண்கூடாக
அறியத்தக்கதே. இவ்வாறே ஒரு
பொருளின் மீது மற்றொரு பொருள் உண்டாக்கும் விளைவையும் , காரண காரிய தொடர்பையும் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளமுடியாதவாறு
நம்மைச்சுற்றிலும் பல நிகழ்வுகள் காணப்படுகின்றன. அறிவுத்திறன் உள்ளவரும் , பண்பட்டவரும், ஒப்புநோக்கும் திறத்தின் மூலம் முடிவுசெய்யும் பயிற்சி
உடையவருமான ஒருவரால் மட்டுமே தமது
புலனறிவிற்கு உகந்த வகையில் இத்தகைய
பருப்பொருள், இயந்திரப்பொருள் போன்றவைகள் ஒரு பொருளின் மீது இன்னொரு
பொருள் செய்யும் விளைவுகளை அறிந்துகொள்ள இயலும். இத்தகைய செயலைச் செய்யும்
விளைவுகளை இயக்கநிலைபட்டதாகவும் , நடைமுறையில் உள்ளதாகவும் , அதாவது முழுமையானதாகவும் (absolute), குறிப்பானதாகவும் (specific) தூய்மையானதாகவும்
உள்ள ஆற்றலின் விளைவுகள் (Pure
Energy) என்று அவர் அழைக்கிறார்.
உதாரணமாக , நலமாக உள்ள மனிதரின்
உடம்பில் நோயை உண்டாக்கும் இயக்க நிலைப் பாதிப்பும், அதே போன்று இயக்கம் சார்ந்த ஆற்றலின் மீது செயல்பட்டு
நலத்தை மீட்டளிக்கும் மருந்துகளின் இயக்கநிலைப்பட்ட ஆற்றலும் ஒருவகையான உள்விளைவாக இருப்பதேயன்றி வேறு
எந்தவகையான பருப்பொருள் சார்ந்ததாகவோ இயந்திரமயமான ஆற்றலாகவோ இல்லை. அது, காந்தக்கல் எப்படி ஒரு இரும்புத் துண்டை கவர்ந்திழுப்பது
பருப்பொருள் ஆற்றலாகவும்,
இயந்திரபாணியான
ஆற்றலாகவும் ஆகாததைப் போன்றதேயாகும் .ஒருவரால் , காந்தத்தின் ஒருதுருவம் அந்த
இரும்புத் துண்டைக் கவர்ந்து இழுப்பதைத் தான் பார்க்கமுடியுமேயன்றி , அது எவ்வாறு செய்யப்படுகிறது
என்பதைக் காண முடியாது. அந்த இரும்புத்
துண்டை இழுப்பதற்குக் காந்தத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத ஆற்றலுக்கு , ஒரு இயந்திரமயமான (
பருப்பொருள் சார்பான ) துணைக் கருவிகளான கொக்கியோ அல்லது நெம்புகோலோ தேவை இல்லை. அக்காந்தம் , அந்த இரும்புத்துண்டின் மீதோ அல்லது இரும்பு ஊசியின் மீதோ தானாகவே செயலாற்றி
இழுத்துக் கொள்கிறது. அவ்வாறு இழுப்பதற்கு , சற்றும் பருப்பொருள் சார்பு இல்லாததும், கண்ணுக்குப் புலப்படாததும், கருத்தளவிலே மட்டும் அறியக் கூடியதுமான காந்தத்தில் உள்ள ஆற்றல் அந்த இரும்பு
ஊசிக்குள் செலுத்தப்படுகிறது. அந்த இரும்பு ஊசியும்
-அக்காந்தத்தை தொடாத அளவுக்குத் தூரத்தில் இருந்தாலும் அதுவும் காந்தத்தன்மை
உடையதாகின்றது. இது பெரியம்மை அல்லது
மணல்வாரி அம்மை நோயை உடைய ஒரு குழந்தையைத் தொடாமலேயே , அருகில் உள்ள வேறு ஒரு குழந்தைக்கும் அதே பெரியம்மை அல்லது மணல்வாரி அம்மை
நோயை கண்ணுக்குப் புலப்படாதவாறு (இயங்குஆற்றலுக்குரிய ) தொற்றாகப் பரப்புவதைப்
போன்றதாகும். அதாவது, அத்தொற்றுநோயை உடைய குழந்தைக்கும், அத் தொற்றுநோயினால் பாதிக்கப்படாதவாறு சற்று தொலைவில் உள்ள வேறு ஒரு
குழந்தைக்கும் இடையே எத்தகைய பருப்பொருள் சார்ந்த தொடர்பும் இல்லாமலேயே
அத்தொற்றுநோய் பரவும் வல்லமை உள்ளதாக இருக்கிறது. இது எந்தவகையில் காந்தத்திற்கு அருகில் இருந்த ஊசியின் மீது
காந்தத்தின் பண்புகள் செலுத்தப்படுகிறதோ , அதேபோன்ற குறிப்பிட்ட கருத்தளவான (அடிப்படைக்கோட்பாடு) உள் விளைவால் (Conceptual influence) ஒரு குழந்தையிடமிருந்த
பெரியம்மை அல்லது மணல்வாரி அம்மைநோய் இன்னொரு குழந்தைக்குப் பரவுகிறது.
( அடிக்குறிப்பு தொடர்கிறது )
இத்தகைய ஒத்த முறையில் தான், உயிர் வாழும்
மனிதர்களின் மீது மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளையும் தீர்மானிக்கவேண்டும். மருந்தாகப் பயன்படும் மூலப்பொருள்கள் , ஒவ்வொன்றும் அதன் இயல்பிற்கு ஏற்றவாறும் , தனிச் சிறப்பான ஆற்றலுடனும் , இயக்க நிலைப்பட்டும் , அடிப்படைக்
கோட்பாடுடனும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணர்வு நரம்புகளின் வழியாக, ஆரோக்கியமாக மனிதர்களின் உயிராற்றலில் உண்டாக்கக்கூடிய கருத்தளவான மாற்றத்தின் தன்மையைப் பொறுத்தே
மருந்துகளாகின்றன. சரியான மருந்துகள் என்று
நம்மால் அழைக்கப்படும் அப்பருப்பொருள்களின் மருத்துவப்பண்புகள் நலமான வாழ்க்கை நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய
அவற்றின் ஆற்றலோடு ஒத்திருக்க வேண்டும். உயிர் வாழ்க்கையின் இக்கருத்தளவான
நெறிமுறையைச் சார்ந்ததாகவே , ஆரோக்கியமான நிலையில் அம்மருந்துகளால் உண்டாக்கும்
மாற்றங்களும் கருத்தளவான (இயக்கம் சார்ந்த ) பாதிப்புகளாக அமைகின்றன. இது எப்படி என்றால் அருகில் இருக்கும் இரும்புத்
துண்டின் மீது காந்தத்தின் துருவம் அதனுடைய காந்தஆற்றலை மட்டுமே செலுத்தக்
கூடியதாகவும் ( தொற்றுநோய் பரவுவது போல என்று எடுத்துக் கொள்ளலாம்) வேறு வகையான
பண்புகளை ( உதாரணத்திற்கு அதன் கடினத்தன்மை அல்லது உடையாமல் கம்பிகளாக
இழுக்கப்படும் ஆற்றல் போன்றவை ) செலுத்த முடியாததாகவும் இருப்பதைப் போன்றதாகும். இவ்வாறு
தான் ஒவ்வொரு சிறப்பான மருந்துப் பொருளும் ஒருவகையான தொற்றுநிலையின் மூலம் அந்த
மருந்துப் பொருளுக்கே உரியதான தனியியல்பான
முறையில் , அதாவது வேறொரு மருந்துப் பொருளுக்குரிய தனியியல்பான
முறையில் இல்லாமல் மனிதனின் நலமான நிலையில் தனியியல்பான மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது. இது, பெரியம்மை நோயினால்
பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, அதனருகில் நலமாக உள்ள வேறொரு குழந்தைக்கு பெரியம்மை நோயைத்
தான் பரப்பக்கூடியதாகவும் , மணல் வாரி அம்மை நோயைச் செலுத்த முடியாததாவும் இருப்பதைப்
போன்றதாகும். இந்த மருந்துகள் அவற்றின் பருப்பொருள்
இயல்புகளைப் மனிதனின் ஆரோக்கிய நிலையில் செலுத்தாமல், இயக்க நிலையில் (தொற்று நோயைப் பரப்புவது
போல் செயலாற்றுகின்றன. அம்மருந்துகள் மிக மிகக்
குறைந்த அளவிலும் , இயக்க முறையிலும்
தயாரிக்கப்பட்டதால் (=வீரியப்படுத்துதல்) அதன் நலமாக்கும்
சக்தி (ஆற்றல்) சிறப்பாக வெளிப்படுகிறது. மிகச் சிறந்த கணக்கு அறிவு
உள்ளவராலும் , அம்மருந்தின் பருப்பொருள் அளவை சிறதளவு கூட உணரமுடியாத அளவிற்கு அதன்
குணப்படுத்தும் ஆற்றல் மிகப் பெரிய அளவில் வெளிப்படுகிறது. ஆனால் அதே மருந்தை பருப்பொருளில் பெரிய அளவில் கொடுத்தாலும்
அத்தகைய நன்மையைப் பெற முடியாது. ஆகவே மிகக் குறைந்த
(நுண்ணிய) அளவில் தயாரிக்கப்படும் மருந்து
மிகவும் முழுமையான அளவில் தூயதாகவும் , சுலபமாக தயாரிக்கப்பட்டதும் , கருத்தளவானதாகவும் உள்ள மருந்தாற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அது
இயற்கைமேனியான மருந்தின் மூலக்கூறுகளை
அதிகமான அளவில் எடுக்கும்போது எட்டமுடியாத அளவிற்கு (குறைந்த மருந்தளவு ) மாபெரும்
பாதிப்பை தருவதாக இருக்கிறது.
மிக உயர்ந்த வகையில்
வீரியப்படுத்தப்பட்ட மருந்தின் ஆற்றல் அம்மருந்துகளின் பருப்பொருள் அணுக்களிலோ, இல்லை அவற்றின் பௌதிக அமைப்பிலோ அல்லது கணக்கிட்டுத்
தெரிந்து கொள்ளும் வகையிலோ (பெரிதும் இயக்கப்படுத்தப்பட்ட மருந்துகளின் உயர்வான
ஆற்றல்கள் இன்னும் போதுமான அளவில் அப்பருப்பொருள்களில் இருப்பதாகக் கருதிக் கொண்டு
அவை வீணாக மதிப்பிடப்படுகிறது.) காணப்படுவதில்லை. மருந்து கலக்கப்பட்ட சக்கரை உருண்டையிலும் அல்லது
மருந்துக் கரைசலிலும் கண்ணுக்குப் புலப்படாத வகையில் உள்ள அம்மருந்துகளின் ஆற்றல்
தடையேதும் இல்லாமல் திரை
விலக்கப்பட்டதாகவும் , சுதந்திரமாகவும், குறிப்பாகவும் உயிர்வாழும்
மனிதர்களின் நரம்புத் திரள்களுடன் தொடர்பு கொண்டு இயக்க நிலையில் செயலாற்றுகிறது
என்பதே மிகச் சரியானதாகும். இவ்வாறு, அந்த ஆற்றல் மிகவும் வலிமையாகவும் , மிகச் சுலபமாகவும் , பருப்பொருள் தன்மை சிறிதும் இல்லாத
நிலையிலும் சிறப்பாக செயல்படுவதற்கு அதன்
வீரியபடுத்தும் முறையே காரணமாகின்றது.
தெளிவான சிந்தனைக்கு புகழ்
பெற்ற இக்காலத்தில் , நாம் தினமும் தெரிந்து கொள்ளக்கூடியவற்றிற்கு சரியான
விளக்கம் கூற முடியாதபோது , உடல் நிலைக்கு அப்பாற்பட்டு இயக்க ஆற்றல் இருக்கிறது என்று
எண்ணுவதை சிறிதும் பொருந்தாது என்று கூற முடியுமா? . குமட்டலை ஏற்படுத்தும் ஒரு
பொருளை கண்ட உடனே ஒருவர் வாந்தி எடுத்து விடுவார் என்றால் , வாந்தியை உண்டாகும் அப்பொருள் அவர் வயிற்றுக்குள் புகுந்து அவர் குடல்தசையில்
எதிர்நிலையான அசைவு இயக்கத்தை ஏற்படுத்தி வாந்தி எடுக்குமாறு கட்டாயப்படுத்தியது
என்பதாகுமா?. அவர் மனதில் உருவகப்படுத்திக்கொண்ட அப்பொருளின் வாந்தியை
ஏற்படுத்தும் தன்மையினால் உருவான இயக்க நிலைப்பட்ட உணர்வே வாந்தி உருவாகக் காரமாக அமைந்தது என்பதுதானே
உண்மை?. ஒருவர் தமது கையை
உயர்த்துகிறார் என்றால் அது கண்ணால் காணக் கூடிய பருப்பொருள் அல்லது நெம்புகோல்
மூலம் தான் நடைபெற்றது என்பதாகுமா? . அவரின் விருப்பப்படி கருத்தளவாக அமைந்த இயக்கநிலை
ஆற்றலே அவர் கையை உயர்த்துவதற்குக் காரணமானது என்பது தானே உண்மை?.