Thursday, 13 June 2019

பெல்லடோன்னா




பெல்லடோன்னா
BELLADONNA (BELL)
பிரிவு: தாவரம்
நிரூபணம் செய்தவர் :  மரு.ஹானிமன்






1.    முன்னுரை (Introduction) :

இது மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் பயன் படுத்தப்படாத உபரி நிலங்களில் முக்கியமாக சுண்ணாம்பு சத்துள்ள மண்ணில் விளைகிறது. இது சோலனீசியா (SOLANACEAE) என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. லத்தின்  மொழியில் இதற்கு அழகிய பெண்மணி (BEATIFUL LADY) என்று அழைக்கப்படுகிறது. காரணம் , இத்தாலியப் பெண்கள் இதன் சாற்றிலிருந்து தயாரிக்கும் களிம்பை தங்களது கண்களில் தேய்த்து , கண்பாப்பாவை  விரிவடையச் செய்து அழகுற தெரிவார்கள். அதனாலேயே  இதற்கு அழகிய பெண்மணி என்று பெயரிட்டு அழைப்பார்கள்.  இம்மருந்தின்  தாக்குதல் மிக கடுமையாக இருப்பதால், இதற்கு  கொடிய  தாவரம் (DEADLY NIGHTSHADE)  என்ற பெயரும் உண்டு.

படர் கொடியினத்தைச் சேர்ந்த இத்தாவரத்தின் முழுப் பகுதியிலிருந்தும் இந்த மருந்தைத் தயாரிக்கிறார்கள். இந்த தாவரங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த காரகங்கள் அல்லது வெடிய கலப்புடைய வேதியியல் மூலப்பொருளை (NITROGEN) உள்ளடக்கியது (ALKALOIDS).  இந்தக் குடும்பத்தில் தான் ஹயாஸ்சியமஸ் (HYOS), ஸ்ட்ராமோனியம் (STRAM) போன்ற பல மருந்துகளும் இருக்கிறது.


ஹானிமனின் நிரூபணம் செய்த பல்முனைநிவாரணியான இந்த மருந்து இல்லாமல் யாரும் ஹோமியோபதி மருத்துவம் செய்ய இயலாது. மருத்துவர் கிளார்க் அவர்கள் குழந்தைகளுக்கான சிறந்த மருந்துகளாக A,B,C  மருந்துகளைக் குறிப்பிடுகிறார். அவைகள்; அகோனைட், பெல்லடோன்னா மற்றும்  சாமோமில்லா  ஆகும். பெல்லடோன்னா மூளையில் (சிறுமூளை) இடர்பாடுகளையும் (TURMOIL) , அகோனைட் , சாமோமில்லா மருந்துகள் இரத்த ஓட்டங்களிலும் மற்றும் மனோநிலையிலும்  (TEMPERAMENT) இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.


பெல்லடோன்னா என்றாலே நோய்க்குறிகள் கடுமையாகவும் (VIOLENT), திடீரென்று தோன்றுவதும் (SUDDENESS) தான் முக்கியமான குறியாகும். பொதுவாக பெல்லடோன்னா துயரர்கள் ஆரோக்கியமான (HEALTHY) , உயர்நிலையான (VITAL) மற்றும் வலுவான (ROBUST) உடலமைப்பை பெற்றிருப்பார்கள். பித்த (BILIOUS) , நிணநீர் (LYMPHATIC) மற்றும் மிகுதியான இரத்தப்பெருக்கு (PLETHORIC) உடல்வாகு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது மிக இன்பமாகவும் , உடல் நலம் குன்றியவுடன் மிகக் கடுமையாகவும் (VIOLENT),  பல சமயங்களில் மனக்குழப்பத்துடனும் (DELIRIOUS)  நடந்து கொள்வார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மென்மையான தலைமயிருடன் , நீலநிறக்கண்கள் , அழகிய தோற்றம் , பூப்போன்ற மென்மையான தோல் மற்றும்  உணர்ச்சி வசப்படும் தன்மையுடனும் வலிப்பு ஏற்படும் தன்மையுடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் அதிக சூடான தலையுடன் (HOT)  ,உடல் சிவந்து (RED SKIN) , சிவந்த  முகம் (FLUSHED FACE) , ஒளியுடன் பிரகாசிக்கும் கண்களுடன்( GLARING EYES), கழுத்துக் குருதி நாளங்களில்  தெறிக்கும் வலியுடன் (THROBBING CAROTIDS), அதிக மனக்கிளர்ச்சியுடன், புலன் உணர்ச்சிகள் அதிகரித்து , நல்ல தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள் மனக்குழப்பம், வலிப்பு , கண்மணி விரிதல், இழுத்தல் மற்றும் முறுக்குதல்   ஏற்படும். அவர்களின் வாயும், தொண்டையும் வறட்சியுடன் இருக்கும் ; இருந்தாலும் தண்ணீர் தாகம் இருக்காது. நரம்பு வலிகள் ( NEURALGIC PAINS) திடீரென்று வரும் அதேபோல் திடீரென்று மறைந்துவிடும். இவர்களுக்கு குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது ; அதே போல் வறண்ட குளிர் காற்று இவர்களை பாதிக்கும்; குறிப்பாக தலையை மூடாமல் இருக்கும் போதும், முடிவெட்டிக் கொண்ட போதும் பாதிக்கப்படுவார்கள். குளிர்ந்த காற்றில் பயணம் செய்த பிறகு இவர்களின் அடிநாசதை ( TONSIL) வீங்கிக் கொள்ளும்.

சளி, காய்ச்சல் , தலைவலி போன்ற   உடனடி அல்லது திடீர் நோய்களை குணப்படுத்துவதில் பெல்லடோன்னா மிகச்சிறந்த மருந்து.  துயரர்களின் உடல் அதிக சூட்டுடன் , முகம் சிவந்து , கண்கள் பிரகாசித்து , விழிகள் விரிந்து அவதிப்பட்டாலும் இவர்கள் கை,கால்கள் குளிச்சியாக இருக்கும்.  தொல்லைகள் புயல் போல் வரும்; ஆனால் நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்காது. நாட்பட்ட காய்ச்சலை பெல்லடோன்னா குணப்படுத்தாது. பெல்லடோன்னா துயரர்களுக்கு தாகம் இல்லாவிடினும் எலுமிச்சை சாறு குடிக்கப்  பிடிக்கும். பாதிப்படைந்த பகுதியில் வீக்கமும்  தெறிக்கும் வலியும் மற்றும் துடிக்கும் வலியும் இருக்கும். அத்தோடு வீங்கிய பகுதி நல்லசிவப்பு நிறத்தில் இருக்கும். திடீர் காய்ச்சலின் போது பிதற்றலும் , தெளிவான மாயத்தோற்றமும் ஏற்படும்.

2.    இம்மருந்து வேலை செய்யும் உடல்பகுதிகள் (REGION):

1.       நரம்பு மண்டலங்கள் (Nerve centers).
2.       மூளை (Brain), குறிப்பாக பெருமூளை(CEREBRUM)
3.       இரத்தநாளங்கள் (Blood-vessels).
4.       இரத்ததந்துகிகள் (Capillaries).
5.       சளிச்சவ்வுகள் - கண்கள், வாய் மற்றும் தொண்டை (Mucous membranes: Eyes. Mouth. THROAT).
6.       தோல் பகுதிகள் (Skin).
7.       வலது பக்கம்.  Right side.


3.    மனக்குறிகள்(Mind):

Ø  திடீரென்று வெடிக்கும் இயல்புடைய கோபம்.
Ø  உக்கிரமான அல்லது கொடுமையான பிதற்றல் (VIOLENT DELIRIUM), பித்து  (MANIA) அல்லது மனச்சிதைவு (PSYCHOSIS),  குறிப்பாக அவர்களது உடல்பலம் அளவிற்கு மேலாக அதிகரிக்கும்.
Ø  மாயத்தோற்றம் (HALLUCINATION: மிகவும் தெளிவான  தன்மையுடன் கூடிய மாயத்தோற்றம்) , குறிப்பாக காய்ச்சலின் போது. பயங்கரமான , ஒளிந்திருக்கும் உருவங்கள் தெரிதல் (HYOS., LACH., STRAM).
Ø  பயம் : நாய்களின் மீது பயம். அருகில் யாராவது வந்தால் தாக்கிவிடுவோம் என்ற பயம் . இறப்பைப்பற்றிய முன்னெண்ணம் இருக்கும்.
Ø  பிதற்றல்: பிதற்றலுடன் கடுஞ்சினமும் (FURIOUS DELIRIUM) , வெறித்த பார்வையும் (WILD LOOK) இருக்கும்.
Ø  அருகில் இருப்பவரை அடிக்கவும் (STRIKE), கடிக்கவும் (BITE), தலை மயிரை பிடித்து இழுக்கவும் (PULL THE HAIR) மற்றும் எச்சில் துப்பவும் (SPIT) விருப்பம் (  மற்றவர்கள் முகத்தில்).
Ø  ஏறத்தாழ நிரந்தரமான முனங்கல் (MOANING).
Ø  பல் கடித்தல்( BRUXIUM).
Ø  அடிக்கடி சிரிப்பார்கள் மற்றும் கோபத்தில் பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.
Ø  உணர்விழந்த முழு மயக்கநிலை (COMA),
Ø  எல்லா புலன்களிலும்  கூருணர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்; காதுகள் நன்றாக கேட்கும்.
Ø  விரைவாக , அவசரமாக தண்ணீர் குடிப்பார்கள்; சாப்பிடுவார்கள்; வேக வேகமாக நடப்பார்கள்.
Ø  அவசரமாக பேசுவார்கள்; திக்குவாய் (STAMMERING) ஏற்படும்.
Ø  அடிக்கவும், சுவற்றில்  தலையை மோதிக்கொள்ளவும் செய்வார்கள்.
Ø  தப்பித்து ஓட  வேண்டுமென்று தோன்றும்; ஒளிந்து கொள்ளவும் தோன்றும்.
Ø  பொருட்களை கிழிப்பார்கள் (TEARS THINGS).
Ø  கனவுகள்: தீ, சண்டைபோடுதல் மற்றும் பயத்தைத் தருகிற கனவுகள் ஏற்படும்.
Ø  மனப்போக்கு: நடனமாடவும், சிரிக்கவும், பாடவும் , வாயில் ஒலி எழுப்பவும் செய்வார்கள்.
Ø  இவர்கள் கடுமையாகவும் (FIERCE) துணிச்சலாகவும் (BRAVE) இருப்பார்கள் {(STRAM- வெறித்த பார்வையும் (WILD) மற்றும் கோழைத்தனமாகவும் (COWARDLY) இருப்பார்கள்}
Ø  சில சமயம் தேவதை; சிலசமயம் பிசாசு .
Ø  பெல்லடோன்னா துயரர்களை கீழ்காணும்  மூன்று வகையாகப் பிரித்துக்  கொள்ளலாம்.

1.       இசிப்பு நோய் அல்லது மிகை உணர்ச்சிக்கோளாறு உள்ளவர்கள் (HYSTERICAL TYPE): இவர்கள் முட்டாள்தனமாக பதில் சொல்லுவார்கள் (ANSWERS FOOLISH). கரண்டியினால் உணவு சாப்பிடமாட்டார்கள். கடிக்க விருப்பம் (DESIRE TO BITE) இருக்கும்.

2.       பயந்த சுபாவம் உள்ளவர்கள் (FEARFUL): இவர்கள் தன்னை மறைத்துக் கொள்ள விரும்புவார்கள் (HIDE, DESIRE TO). தப்பித்துக்  கொள்ள விரும்புவார்கள் (ESCAPE ATTEMPT TO). வெகுளித்தனமாக இருப்பார்கள் (NAÏVE).

3.       துணிச்சலானவர்கள் (AUDACIOUS) : தற்பெருமை பேசுவார்கள் (VANITY). நடிப்பு காதல் புரிகிற பசப்புக்காரிக்கு இயல்பான அல்லது தன் மீது ஆண்கள்  ஆசை கொள்ளும்படி மினுக்கி நடந்து கொள்வார்கள் (COQUITTISH). குற்றவாளியாக அல்லது சட்டத்தை மீறுபவர்களாகவும்  (CRIMINAL) இருப்பார்கள்.




4.    சிறப்பியல்புக்குறிகள் (Characteristic Symptoms) :

Ø  நோய்க்குறிகள் திடீரென்று தோன்றும் ; அதே போல் திடீரென்று மறையும் (வீக்கம், சீழ்பிடித்தல், தொண்டை கரகரப்பு, பித்தக்கற்கள் வலி, மாதவிடாய் வலி போன்றவைகள்).
Ø  முடிவெட்டிய பிறகு தொல்லைகள் அதிகரிக்கும்.
Ø  தலை மற்றும் முகத்திற்கு இரத்தம் வேகமாக பாய்தல். முகம் சிவத்தல், எரிச்சலான சூடு, இறுக்கும்  மற்றும் தெறிக்கும் வலிகள்.
Ø  தலைசுற்றல் : தீவிரமாகவும் , நீடித்தும் இருக்கும்; தலையை திருப்பும் போதும், படுக்கையிலிருந்து திரும்பும் போதும் மோசமாகும். அதேபோல் முன்புறம் குனியும் போதும்   தொல்லை அதிகரிக்கும்.
Ø  ஒருபக்கத் தலைவலி (mIGRAINE).
Ø  தலைவலி மாலை 3 மணிக்கு வரும் அல்லது 11 மணிக்கு ஏற்படும்; மாலை 3 மணிக்கு உச்சத்தில் இருக்கும்.
Ø  தலைவலி அதிகமாகுதல் : வெளிச்சம், சப்தம், மெல்லிய அசைவு, இடம்பெயர்தல், சூரியவெப்பம், மாதவிடாய், சூடு, தலைகுளித்தல், நடக்கும் போது, தொட்டால், குனிந்தால் மற்றும் இருமும் போது.
Ø  தலைவலி குறைதல்: குளிர்ந்தநீரால் ஒத்தடம் கொடுக்கும் போது, இருட்டு அறையில் படுத்திருக்கும் போது, அமுக்குவதால், தலையை கட்டிக்கொள்வதால், வயிற்றை அழுத்தி குப்புறப்படுத்தல்.
Ø  சீழ்பிடித்த எலும்புக்கு குழி அல்லது புரையழற்சி (sinusitis), மெல்லுத்தசை (maxillary) அல்லது மூளையின் முன்பகுதியில் வலி.
Ø  பிடிப்புகள் (SPASMS),  சுண்டுதல் அல்லது திடீரென இழுத்தல் (JERKINGS), தசைவலி (TWITCHINGS), விரிந்த கண்மணி (DILATED PUPILS) மற்றும் ஒளியைக் கண்டால் கண்கூச்சம் (photophobia) . 
Ø  வலிகள் யாவும் தலையை மையமாக கொண்டிருக்கும் ( ACON- TOWARDS HEART & CHEAT).
Ø  தலை மார்பு, வயிற்று பகுதிகளில் சூடாகவும், கை-கால்கள் குளிர்ச்சியாகவும் இருக்கும்; இரத்தம் தெறிக்கும் கண்கள் (BLOOD-SHOT). 
Ø  தலையில் அதிக குருதிதேக்கத்தினால் தலைவலி.
Ø  வலிப்பு ஏற்படும் போது சுண்டெலி ஓடுவது போன்ற உணர்வு.
Ø  தூக்கம் வரும் ; ஆனால் தூங்க இயலாது.
Ø  தலையை , தலையணைக்குள் நுழைத்துக் கொள்வார் (HYDROCEPHALUS).
Ø  மனஅமைதியின்மை ; தப்பித்து ஓட நினைப்பார்; ஒளிந்து கொள்ளவும் நினைப்பார்.
Ø  பித்தக்கற்கள் வலி.
Ø  வயிற்றின் குறுக்கேயுள்ள குடல் வீங்கி விடும் மற்றும் முண்டு (PAD) இருப்பது போன்ற உணர்வு இருக்கும். 
Ø  கனவுகள்: பயத்தைத் தரும் கனவுகள்; சண்டை போடுவது போன்ற கனவு, தீ மற்றும் திருடர்கள் பற்றிய கனவு. 
Ø  காய்ச்சல்:  முதலில் குளிர்காய்ச்சல் பின்பு சூடும் , வியர்வையும் ஏற்படும்.
Ø  வியர்வை: திடீரென்று தோன்றி திடீரென்று மறையும்.
Ø  மூடிய பகுதிகளில் மட்டும் வியர்வை (ACON-DRY SKIN)
Ø  வலிகள் யாவும் மேல் நோக்கியும் (UPWARD) , குறுக்குவெட்டாகவும் (CROSS-WISE) ஏற்படும்.
Ø  வலதுபக்க நோய்த்தாக்குதல்.
Ø  நேராக நிற்கும் போது நோய்க்குறிகள் குறைதல்.
Ø  செந்நிறம் அல்லது சிவத்தல் (REDNESS) என்பது பெல்லடோன்னாவின் முக்கியமான சிறப்பியல்பு குறியாகும். அதேபோல் காந்தள் அல்லது எரிச்சல்(BURNING) என்பதும் முக்கியமான சிறப்பியல்பு குறியாகும்

வழிகாட்டும் குறிகள் (GUIDING SYMPTOMS):
Ø  வலதுபக்க நோய்த்தாக்குதல் (RIGHT SIDED).

Ø  திடீரென்ற (SUDDEN) மற்றும்  உக்கிரமான(VIOLENT) நோய்த்தாக்குதல். அநேகமாக பெல்லடோன்னாவின்   எல்லா நோய்தாக்குதலும் இப்படித் தான் இருக்கும்.

Ø  நெருக்கடி அல்லது இறுக்கம் (CONGESTION) என்பது இம்மருந்தின் திறவுகோல் குறி.


Ø  செந்நிறம் அல்லது சிவத்தல் (REDNESS) என்பது பெல்லடோன்னாவின் முக்கியமான சிறப்பியல்பு குறியாகும். பாதிக்கப்பட்ட உடலின் பாகங்கள் அனைத்தும்  சிவந்திருக்கும்.

Ø  சூடு அல்லது வெப்பம் (heat) :  வீக்கம் உள்ள இடத்தில இறுக்கத்தின் காரணமாக கடுமையான சூடு இருக்கும்.   அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதியில்   கடுமையான சூடும் , காந்தள் உணர்வும் இருக்கும்.  மருத்துவர்கள் தொட்டுப்பார்க்கும் போது அச்சூட்டை உணர்ந்து கொள்ளமுடியும்; உடனே கைகளை எடுத்து விடுவார்கள்.

Ø  காந்தள் அல்லது எரிச்சல் (BURNING) என்பதும் முக்கியமான பெல்லடோன்னாவின் சிறப்பியல்பு குறியாகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளும், புறமும் காந்தள் உணர்வு இருக்கும். அதாவது , தோல், மூளை, தொண்டை, அடிநாசதை, வயிறு  மற்றும் கல்லீரல் போன்ற பகுதிகளில் இதை உணர முடியும்.

Ø  பாதிக்கட்ட பகுதியை தொடும் போது (TOUCH)  கூருணர்ச்சி ஏற்படும். அதனால் துயரர்கள் எங்கேயும் தொட விடமாட்டார்கள்.

Ø  இவர்களுக்கு தாகம் இருக்காது (THIRSTLESS);  குறிப்பாக  காய்ச்சலின் போது தாகம் இருக்காது,

Ø  நலமாக இருக்கும் போது தேவதை (ANGEL) போல் அதாவது மிகவும் சந்தோசமாகவும் , நாகரீகமாகவும் மற்றவர்களிடம் நடந்து கொள்வார்கள்; நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பிசாசு போல் (DEVIL) அதாவது  மூர்க்கமாகவும் , கொடியவர்களாகவும்  நடந்து கொள்வார்கள்

Ø  துயரர்களுக்கு தூக்கம் வரும் ; ஆனால் தூங்க இயலாது (SLEEPY BUT CANNOT SLEEP).


5.    நோய்க்கான காரணங்கள் (Causation or Ailments from):

மனதின் உணர்ச்சிகள் தொடர்பான தூண்டுதல்கள்; திகில் அல்லது அச்சம்; துக்கம்; காதல் தோல்வி; பயம் மற்றும் பதட்டத்துடன் கோபம்;

குளிர்ந்த காற்று வீச்சு. தலைமுடி வெட்டிய பிறகு (HAIR CUTTING), தலை நனைந்த பிறகு ( HEAD GETTING WET), தேவையான பக்குவப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கொத்துக்கறி சாப்பிட்டபிறகு (SAUSAGES) , சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் அல்லது வெப்பத்தாக்கு நோய் (SUN STROKE). வெளிக்காற்றில் அல்லது காற்றின் வீச்சில்  நடந்த பிறகு ( WALKING IN WIND OR DRAUGHT), கோடைகாலத் தொல்லைகள்; உள்ளமுக்கப்பட்ட வியர்வை ஆகியவைகள்.


6.    ஆண்கள் (Male):

பெல்லடோன்னா ஆண்களுக்கு உடலுறவின்  மீது அதிக ஆர்வமும் தூண்டுதலும் இருக்கும். பெல்லடோன்னா ஆண்களின் சுறுசுறுப்பையும் , திடமாத்திரமான உடலையும் பார்த்து அவர்களுக்கு  உடலுறவின்  மீது அதிக ஆர்வமும் தூண்டுதலும் இருக்கும் என்று தவறாக எடை போடக்கூடும் . மாறாக , இவர்களுக்கு உடலுறவின் மீது சராசரியான விருப்பமே இருக்கும்.  ஆனால் , பித்துவெறி சார்ந்த நிலையில்  ( MANIC STATE) இவர்களின் காமஉணர்வு அதிகரிக்கும். அதனால் சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள்; அம்மணமாகத் திரிவார்கள்; விந்து அதிகமான வெளியேறியிருக்கும். ஆண்குறி தானாக விறைத்துக்கொள்ளும். சூடாக இருக்கும் ; அந்தரங்க முடி உதிரும்; கைகளில் ஆண்குறியை பிடித்து விளையாடுவார்கள்.  விதைப்பையில் கொப்பளங்கள் (VESICLES) தோன்றும். சீறுநீர் கழிக்கும் போது விந்தினை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாயில் வெட்டும் வலி (CUTTING PAIN)  ஏற்படும். ஆண்குறியில் அழுத்தும் வலியும் (PRESSING PAIN)  , குதத்தில் இறுக்கமும் மாறிமாறித் தோன்றும். ஆண்குறியின் மொட்டுப்பகுதியில் வலியில்லாத, மென்மையான கட்டி ஏற்படும்.


7.    பெண்கள் (Female):

பெல்லடோன்னா பெண்களுக்கு உடலுறவின்  மீது மிகுந்த விருப்பம் இருக்கும்; அதனால் திருமணம் ஆகாத பெண்களுக்கு   திருமணமத்தின் மீதே சிந்தனை இருக்கும். மாதவிடாயிற்கு முன்பும்,  கர்ப்பமாக இருக்கும் போதும் காமஉணர்வு அதிகரிக்கும். வலிமிகுந்த மாதவிடாய் (DYSMENORRHOEA). மாதவிலக்கை ஒட்டியே இவர்களுக்கு எல்லா தொல்லைகளும் ஏற்படும். வலது சினைப்பையில் வீக்கமும் , சீழ்கட்டியும் இருக்கும். வலதுபக்க சினைப்பையில் நீர்க்கட்டி (APIS, LYC, PALL, PODO). சினைப்பைகளில் ஏற்படும் வலிகள் பின்புறத்திற்கு நீட்டிக்கும்; இந்த வலிகள் , சப்தத்தினால், நடப்பதால், அசைவினால் மற்றும் தும்மினால் அதிகரிக்கும்.


மாதவிடாய் அடிக்கடி ஏற்படும்; நல்ல சிவப்பு நிறத்துடனும், வேகமாகவும் சூடாகவும் வெளியேறும் அல்லது நாற்றத்துடன் கறுப்புநிறத்தில்  கட்டியாக வெளிப்படும். கருப்பையின் உட்புற சவ்வில் வீக்கம் (ENDOMETERIOSIS) ஏற்பட்டதால் இறுக்கமான உணர்வு இருக்கும். கருப்பையில் வலிகள் திடீரென்று ஏற்பட்டு திடீரென்று மறையும். கருப்பை கீழே  நழுவும் ; வலியும் இருக்கும்., உந்தித்தள்ளுவது போன்ற உணர்வு இருக்கும்; நேராக நிற்கும் போது தொல்லைகள் குறையும்.

கருப்பை கீழே  நழுவும் ; வலியும் இருக்கும்., உந்தித் தள்ளுவது போன்ற உணர்வு இருக்கும்; நேராகநிமிர்ந்து  நிற்கும் போது தொல்லைகள் குறையும்.  கருப்பை கீழே  நழுவும் ; முழுவதும் வெளியே வந்து விடுவது போன்ற உணர்வு இருக்கும். அதே போல் மலம் கழிக்கும் போதும், மாதவிடாயின் போதும்  கருப்பை கீழே  நழுவும்;  நடக்கும் போது தொல்லை கூடும்; அப்போது வயிற்றை அழுத்திக்  கொண்டு கைகளினால் உள்ளே தள்ளும் போது சரியாகும். பெண்ணின் மார்பகங்கள் கடினமாக அல்லது கனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்; மற்றும் சிவந்திருக்கும். இவர்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் வேகமாகவும் , சூடாகவும் வெளியேறும். அதே போல் பிரசவத்தின் போது  பிறப்புறுப்பும் சூடாக இருக்கும்.  பிரசவநேரத்தில் கூபக எலும்பு விரிவடையாது. பிரசவ வலி நின்ற பிறகு வலிப்பு வரும்.


8.    குழந்தைகள்(Children):

பெல்லடோன்னா குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் , இங்குமங்கும் ஓடிக்கொண்டும் இருப்பார்கள். வீட்டில் உள்ள மேஜை , நாற்காலிகள் மீது ஏறி விளையாடுவார்கள்; மருத்துவமனைக்கு வந்தால் ஒரு இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் ஓடுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும் , கற்பனாசக்தியுடன்  எளிதில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் , இரவில் அதற்கு எதிர்மறையாக இருப்பார்கள் , அதிக தொல்லைகள் ஏற்படும்; அமைதியான தூக்கம் இருக்காது; இரவு தூக்கத்திலிருந்து எழுந்திருக்க விருப்பம் இல்லாததால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும்.  

 இவர்களுக்கு  அடிக்கடி பிதற்றல் ஏற்படும். அத்துடன் பயங்கரமான உருவங்கள் கண்ணுக்குத் தெரியும். தலையில் அதிக வியர்வை இருக்கும், ஆனால் கால்கள் பனிக்கட்டி போல் குளிர்ச்சியாக இருக்கும்.  தண்டனைக்கு உள்ளான குழந்தைக்கு அதற்குப்  பிறகு வலிப்பு. பல் முளைக்கும் தருவாயில் இருக்கும் குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது வலிப்பு வரும். குரல்வளை நரம்பு  இழுத்துக்  கொள்ளும் அல்லது பிடித்துக் கொள்ளும். உடல் நலம் நன்றாக இருக்கும் போது தேவதை போல் இருக்கும் (மகிழ்வான மற்றும் பொழுதுபோக்கான); ஆனால் உடல் நலம் குன்றிய நிலையில்  பிசாசு போல் நடந்து கொள்ளும் (வன்முறையாக) . தூக்கத்தில் பற்களை அரைக்கும் (GRINDING TEETH). தூக்கத்தின் போது காது வலியால்  குழந்தை திடீரென்று அழும்; பிறகு அழுகையை நிறுத்தி எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்ளும். காய்ச்சலின் போது தலை சூடாகி, முகம் சிவந்து உடல் கடுமையாக திருகிக்   கொள்வதுடன் வலிப்பும் ஏற்படும் (காய்ச்சல் இல்லாமல்-MAG-P).  அருகில் இருப்பவரை கடிக்க விருப்பம் (MERC., STRAM). 


மூளை  காய்ச்சலின்  போது குழந்தை வெறித்த பார்வையுடன் திகிலுடன் இருப்பார்கள்; அமைதி இல்லாமல் இருப்பார்கள்;  அருகில் உள்ளவரை அடிப்பார்கள். காய்ச்சல் முற்றி பிதற்றல் ஏற்படும் அப்போது தங்களது பெற்றோர்களைக்கூட அடையாளம் தெரியாது; வலிப்பும் ஏற்படும். பெல்லடோன்னா குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் போது நமக்கு சாமோமில்லா மற்றும் சினா மருந்துகளும் நினைவிற்கு வரும். வலிப்பின் போது குழந்தைகள் மூக்கைக் குடையும்; அப்படி மூக்கைக் குடைவதை தடுத்தால் வலிப்பு மீண்டும் வரும். கல்கேரியா கார்பானிக்கம் மருந்தின் உடல்வாகு உள்ள குழந்தைகளுக்கு பெல்லடோன்னா அடிக்கடி தேவைப்படும்.


9. உணவு, ( விருப்பம், வெறுப்பு ) மற்றும் தாகம் (Food and Drinks)


விருப்பம்: எலுமிச்சை(LEMONS), எலுமிச்சை சாறு (LEMONADE). மூக்குப்பொடி போடவிருப்பம் (SNUFF). புளித்த உணவுகள், காய்கறிகள், இனிப்புகள்.

பொதுவாக தாகம் இருக்காது . ஆனால் வாய் வறட்சியுடன் தாகம் இருக்கும். குளிர்ந்த தண்ணீர் குடிக்க விருப்பம். ஆனால் , காய்ச்சலின் போது தாகம் இருக்காது,

வெறுப்பு: மாமிசம், அமில உணவுகள், காபி, பால், பீர் (BEER). காய்கறிகள் மீன்,கொழுப்பு, பழங்கள் மற்றும் விதைகள்.


10. மாறுமைகள்: (Modalities):

நோய்க்குறி அதிகரித்தல்(Aggravation)

சூரிய வெப்பம்; மாலை 03.00 மணிக்கு (03.00 PM). காற்று அல்லது குளிர்ந்த காற்று தலையில் படும்பொழுது; தலையை கழுவும் போது; சப்தம் (JAR)அல்லது அசைவு (MOTION) ; நடு இரவிற்குப் பிறகு; பிரகாசமான வெளிச்சத்தை பார்த்த பிறகு; கீழே படுக்கும் பொழுது ; கால்கள்  தொங்கிய நிலையில் (LIMBS HANGING DOWN).


நோய்க்குறி குறைதல்(Amelioration)

சூடான அறை; ஓய்வு; போர்த்திக்கொண்டால், நேராக உட்க்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ நோய்க்குறிகள் குறையும்; தலையை பின்புறம் சாய்த்துக் கொண்டாலும் அல்லது ஏதாவது ஒன்றில் தலையை சாய்த்துக் கொண்டாலும்  தொல்லைகள் குறையும்.


11. இம்மருந்துக்கான (சிறப்புக் குணங்கள்) உட்கரு:  (Nucleus):

Ø  திடீரென்ற (SUDDEN) மற்றும்  உக்கிரமான(VIOLENT) நோய்த்தாக்குதல். தெறிக்கும் ( THROBBING) மற்றும் துடிக்கும் (PULSATTING) வலிகள். விரிந்த , பிரகாசிக்கிற அல்லது ஒளி விடுகிற கண்மணி. (SHINING PUPILS).

Ø  சிவத்தல், காந்தள் மற்றும் சூடு. இரத்தம் அதிவேகமாக தலைக்கும்  முகத்திற்கும் பாய்ந்ததால் ஏற்படும் தொல்லைகள் . தொட்டால் உடல் சூடாக இருக்கும்.   விரிந்த , பிரகாசிக்கிற அல்லது ஒளி விடுகிற கண்மணி. (SHINING PUPILS).

Ø  உக்கிரமான அல்லது கடுமையான மனக்குறிகள்: அடித்தல், கடித்தல், துப்புதல், உதைத்தாள், தலைமயிரை இழுத்தல், பயத்தைத்தரும் மாயத் தோற்றங்கள், .   விரிந்த , பிரகாசிக்கிற அல்லது ஒளி விடுகிற கண்மணி. (SHINING PUPILS).

Ø  தொடுதல், சிரிய சப்தங்கள், வெளிச்சம் மற்றும் இரைச்சல் போன்றவற்றிற்கு அதிக கூருணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள்.

Ø  தலையில் குளிர்ச்சி ஏற்பட்டால் தொல்லைகள் அதிகரிக்கும். 

Ø  நலமாக இருக்கும் போது தேவதை போல் நடந்து கொள்வார்கள்; நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பிசாசு அல்லது கொடியவர்கள் போல்  நடந்து கொள்வார்கள்.


12.      உடனடி அல்லது துரித நோய்களிகளில் பெல்லடோன்னா :

Ø  அடிக்கடி ஏற்படும்  வலிப்பை தடுக்கும்.

Ø  மூளைக்காய்ச்சல் (MENINGITIS). மூளைஅழற்சி( ENCEPHALITIS).

Ø  இடை செவியழற்சி (OTITIS MEDIA); குறிப்பாக வலது பக்கம்; இரவில் படுக்கையில் அதிகமாகும், கடுமையான வலியினால் கோபம் கொண்ட குழந்தை அழும். செவிப்பறை சவ்வு வீங்கி சிவந்து காணப்படும்.

Ø  கருவிழிச்சவ்வு வீக்கம் (IRITIS).

Ø  நன்றாக சிவந்த நிறத்துடன்  அடி தொண்டை அழற்சி (PHARYNGITIS) , அடி நா சதையழற்சி(TONSILITIS). அடிநா சதை வீங்கியிருக்கும்; வலது பக்கமே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும்; விழுங்க இயலாது.

Ø  தீவிர பித்தப்பை அழற்சி ( CHOLECYSTITIS).

Ø  நுரையீரல் சவ்வின் அழற்சி (PLEURISY). கபவாதம் (PNEUMONIA).

Ø  வலப்பக்க சினைப்பையில் நீர்க்கட்டி ஏற்படுதல் மற்றும் வலி; குறிப்பிடத்தக்க வகையில் வலி இருந்து கொண்டேயிருக்கும்; மாதவிடாயிற்கு முன்போ அல்லது மாதவிடாயின் போதோ வலி அதிகமாகும்; அதேபோல் சப்தத்தின் காரணமாகவோ அல்லது அசைவின் மூலமாகவோ தொல்லை அதிகரிக்கும். 

Ø  இடுப்புசந்து வாதம் அல்லது தொடை நரம்பு வலி (SCIATICA) மற்றும் முதுகின் கீழ் வலி; அசைவினாலும், சப்தத்தினாலும் மற்றும் நடக்கும் போது கால் பிசகினாலும் வலி அதிகமாகும்.

Ø  தீவிரமான  கீல்வாதம் (ACUTE ARTHRITIS). மூட்டுக்கள் அழற்சியுடன், வீங்கி, சிவந்து காணப்படும். அசைவினாலும், சப்தத்தினாலும் வலி அதிகமாகும். குளிர்ந்த  நீரில் ஒத்தடம் கொடுத்தால் வலிகள் குறையும்.
Ø  சளி காய்ச்சல் அல்லது குளிர் கபசுரம் ( INFLUENZA). மேற்பக்க நுரையீரல் பகுதியில் நோய்த்தொற்று.

Ø  ஆரம்பநிலையில் ஏற்படும் தடிப்புக்காய்ச்சல் அல்லது வெளிக் கொப்பளம் (EXANTHEM), மணல்வாரி (RUBELLA) மற்றும் தாளம்மை ( பொன்னுக்குவீங்கி-MUMPS) போன்றவற்றில் நன்கு செயல்படும்.

Ø  செங்காய்ச்சல் (SCARLET FEVER).

Ø  குடல்வால் அழற்சி (APPENDICITIS).


13.        வீரியம் (POTENCY):

முதல் வீரியம் (1/C)  முதல் 200/c  வீரியம் வரை நன்றாக வேலை செய்யும். மனக்குறிகளும் , திறவுகோல் குறிகளும் தெளிவாக இருக்கும் பட்சத்தில் உயர்ந்த வீரியங்களைப் பயன்படுத்தலாம். காய்ச்சல் ,அழற்சி மற்றும் விட்டுவிட்டு தாக்கும் நோய்களில் குறைந்த வீரியத்தை பயன்படுத்துவது நல்லது.

மருந்தை திரும்பக் கொடுத்தல் (REPETITION) :

 உடனடி அல்லது தீவிர நோய்நிலையில் அடிக்கடி திரும்பக் கொடுக்கலாம்.

மருந்து வேலைசெய்யும் காலம் (DURATION OF ACTION):

ஒன்று முதல் ஏழு நாட்களுக்கு வேலை செய்யும். (J.H. கிளார்க்).

நிறைவு செய்யும் மருந்து (COMPLEMANTORY) : பெல்லடோன்னா முதலில் கொடுத்து துயரர் குணமானாலும் மீண்டும் மீண்டும் அவை தோன்றுமானால் கல்கேரியா  கார்பானிக்கம் கொடுக்க முழுவதும் குணமாகும். ஆகவே பெல்லடோன்னாவிற்குப் பிறகு நன்றாக வேலை செய்யக்கூடிய மருந்து கல்கேரியா  கார்பானிக்கம். பெல்லடோன்னாவின் நாட்பட்ட மருந்து இது.


14.        மருந்துகளுக்குள் உறவு ./ ஒற்றுமை(Relationship):
Ø  நோய்க்குறிகள் திடீரென்று தோன்றும் ; அதே போல் திடீரென்று மறையும்: BELL., CACT., CARB-AC., IGN., KALI-BI., MAG-P., NIT-AC., PETR., TUB.
Ø  முடிவெட்டிய பிறகு தொல்லைகள் அதிகரிக்கும்: ACON., BELL., GLON.
Ø  தூக்கம் வரும் ; ஆனால் தூங்க இயலாது: BELL., CHAM., OP.
Ø  தலை மற்றும் முகத்திற்கு இரத்தம் வேகமாக பாய்தல்: AMYL-N., BELL., GLON., MELLILOTUS.
Ø  நேராக நிற்கும் போது நோய்க்குறிகள் குறைதல்: (ARS., BELL., DIOS., KALI-P).
Ø  தலையில் அதிக குருதிதேக்கத்தினால் தலைவலி: AMYL-N., AUR., BELL., CROT-H., FERR., GLON., MAG-M., NUX-V.
Ø  வலிப்பு ஏற்படும் போது சுண்டெலி ஓடுவது போன்ற உணர்வு: BELL, CALC., ign., NIT-AC., SIL., SULPH.,
இது பெல்லடோன்னாவின் முழுமை அல்ல. மருத்துவர்கள் இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்....


No comments:

Post a Comment