ஹோமியோபதி
மருத்துவத்தில் பணம் ,பேராசை மற்றும் கருமித்தனம் .
தற்போது நாம் வாழும் பூமியில், மனிதத்துவம் மறைந்து போய் , சுயநல வாழ்விற்காக பணம் தேடும் மக்களையே அதிகம் கொண்டுள்ளது. தனது தேவைக்கு மேல் மிஞ்சியதை தானம் செய்து மகிழும் மனிதர்கள்
அரிதாகிவிட்டார்கள். பணமே தங்களது அந்தஸ்த்தையும் , எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்வதாக கற்பிதம் செய்து அதை தேடி அலைகிறார்கள். தான் பெரிய பணக்காரனாக வாழ வேண்டும் என்ற பேராசையால் (AVARICE)
தூண்டப்பட்டு “மனிதன் கண்டுபிடித்த காகிதப் பணத்திற்கு” அவனே அடிமையாகி வாழ்கிறான் .
தற்போதைய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி , மக்களை பொது நலத்திலிருந்து மாற்றி சுயநலமிகளாக்கிவிட்டது என்றே கருதுகிறேன். தனக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு கூட மனமில்லாமல், கருமித்தனமாக (MISER) பணத்தை சேமிக்கிறார்கள். அதாவது , நாளைய வளமான வாழ்விற்காக அல்லது மருத்துவச் செலவிற்காக இன்று தனது உடல் நலத்தைப் கெடுத்துக் கொண்டு பணம் சேர்க்கிறார்கள்.
ஹோமியோபதி மருந்துகளின் நிரூபணத்தின் போது இத்தகைய பேராசை, கருமித்தனம் , பணமில்லையென்றால் ஏழையாகிவிடுவோம் என்ற பயம் போன்ற குணங்களை வெளிக்கொணர்ந்த பல மருந்துகள் உள்ளன. அம்மருந்துகளைப்
பயன்படுத்தி நலப்படுத்திய பல துயரர்களின் வரலாறும் பல நூல்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அம்மருந்துகளை ஆராயும் போது , சுவாரசியமான பல தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
பேராசை( AVARICE): ஒருவனுக்கு அதிகப்படியான பொருளும் , உடைமைகளும் வேண்டும் என்ற அளவுகடந்த விருப்பத்தின் காரணமாக அவற்றை சேமிக்க ஆரம்பிக்கிறான் என்றால் அவனை பேராசைக்காரன் என்று கருதலாம்.. அவன் பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு , களைப்பைக் கூட பெரிது படுத்தாமல் உழைத்து தனது சொத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்
.
அவனது மனம் முழுவதிலும் பணத்தை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு , தமக்குத் தேவையான, அவசரமான செலவைக்கூட தவிர்த்து விடுகிறான் . அதனால் அவன் , தமது தேவைக்கு மேல் அதிகம் விருப்பம் உள்ளவனாக வாழ்கிறான். (ஆர்சனிக்கம்
ஆல்பம்) .
பேராசை பிடித்த அத்தகைய மனிதர்கள் , தங்கள் கருமித்தனமாக வாழுகிறோம் என்பதைக்கூட ஒப்புக் கொள்ள மறுப்பார்கள்; அதனால் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கும். அவர்கள் , ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் பல கடைகளில் ஏறி இறங்கி , விலையை விசாரித்து , பின்பு குறைந்த விலையுள்ள கடையில் தான் அப்பொருளை வாங்குவார்கள். ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும் , விலை அதிகமாக இருந்தால் அதை வாங்க மாட்டார். என்னதான் அதிகப்படியான பொருள்வசதி அவர்களுக்கு இருந்தாலும் , செலவில்லாமல் கருமியாக வாழ்வதையே ( பொருளை சேமிக்க) அவர்கள் விருப்புவார்கள் . விதிவிலக்காக ஒருசிலரே, அதிகப்படியான பணம் சேர்ப்பதோடு , அதிகம் செலவு செய்வதிலும் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். ஹோமியோ மருத்துவத்தில் , "விராட்ரம் ஆல்பம் " என்ற மருந்து தேவைப்படும் துயரர்கள் இத்தகைய குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பணமும் தேவை ; அத்தோடு சமூகத்தில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளவும் வேண்டும் அதனால் பணத்தை வாரி இரைப்பார்கள்.
கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் ( MISER) : இவர்களுக்கு பணத்தின் மீது அதிகம் விருப்பம் இருப்பதோடு கட்டாயமாக செலவு செய்ய வேண்டிய தருணத்தில் கூட செலவிடமாட்டார்கள். உதாரணமாக , அவரது
"அம்மா" அல்லது
"அப்பா " இறந்தபோது , அவர்களை அடக்கம் செய்யக்கூட செலவு செய்ய விரும்பமாட்டார்கள். அதை,அவரது சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசாமல் இருந்து விடுவார்கள். அதே போல் உடல்நலம் குன்றிய போது , மருத்துவமனைக்குச் சென்றால் செலவாகும் என்று எண்ணித் தவிர்த்து விடுவார். அதனால், இவர்கள் பெரும்பாலும் சுயநலவாதியாகவும் , தன்மோகியாகவும் (
NARCISSIST) மற்றும் சமூகத்திற்கு எதிரானவராகவுமே (
ANTISOCIAL PERSONALITIES) இருப்பார்கள்.
ஹோமியோபதி
மருந்துகாண் ஏட்டில், இவ்விரண்டு
தன்மைகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்டுள்ளது. மருத்துவர் S.R. பதக் , தமது
மருந்துகாண் ஏட்டில் பேராசை( AVARICIOUS) என்ற தலைப்பின் ( பக்கம்-23 ) கீழ் தனியாப் பேராசை ( GREEDY) மற்றும்
கருமித்தனத்தையும் (
MISERLY) இணைத்து 5 மருந்துகளைக் கொடுத்துள்ளார். அவையாவன; ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), லைகோபோடியம் (LYC), பல்சாட்டில்லா(PULS), செபியா(SEP) மற்றும்
சல்பர் (SULPH).
மரு.
ராபின் மர்பி ,
தமது மருந்துகாண் ஏட்டில் , தணியாப்பேராசை
(
GREEDY) என்ற தலைப்பின் கீழ் ( பக்கம்- 1616 ) இல் 75 மருந்துகளை கொடுத்துள்ளார். அதில் முதல் தரத்தில் ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), லைகோபோடியம் (LYC), பல்சாட்டில்லா(PULS), சினா (CINA) மற்றும் சிலிகா(SIL) என்ற 5
மருந்துகளும் , இரண்டாவது
தரத்தில் சைனா(CHIN), ஹயாசியாமஸ்(HYOS), காலி-பைக்(KALI-BI) , நக்ஸ்வாமிக்கா(NUX-V) , பாஸ்பாரிக் –ஆசிட்(PH-AC), செபியா (SEP) போன்ற 6
மருந்துகளையும் கொடுத்துள்ளார்.
எசன்ஷியல்
சிந்தஸிஸ்
(ESSENTIAL SYNTHESIS) மருந்துகாண் ஏட்டில் , பேராசை ( AVARICE) என்ற தலைப்பில் ( பக்கம்- 23 ) ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS) , பாரிடா –கார்ப்(BAR-C), பிரையோனியா(BRY) , கல்கேரியா-கார்ப் (CALC), கல்கேரியா-புளுவாரிக்கம் (CALC-F), சினா(CINA) , காலோசிந்தேசிஸ் (COLOC), டல்காமரா (DULC), லைகோபோடியம் (LYC) , மெடோரினம்(MED), மெலிலோட்டஸ் (MELI), மெர்குரியஸ்(MERC), நேட்ரம்-கார்ப் (NAT-C), பிளாட்டினா (PLAT), சோரினம் (PSOR), பல்சாட்டில்லா(PULS), ரீயம்(RHEUM), செபியா(SEP) , சிலிகா(SIL) மற்றும் சல்பர் (SULPH) என்ற 21 மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மரு.கெண்ட் (J.T.KENT) தமது
மருந்துகாண் ஏட்டில் , பேராசை ( AVARICE)
என்ற தலைப்பில் (
பக்கம்- 9 ) இல் 12 மருந்துகளை
கொடுத்துள்ளார் . அவையாவன; ஆர்சனிக்கம் ஆல்பம்(ARS), பிரையோனியா(BRY) , கல்கேரியா-கார்ப் (CALC), கல்கேரியா-புளுவாரிக்கம் (CALC-F ), சினா(CINA) , காலோசிந்தேசிஸ் (COLOC), லைகோபோடியம் (LYC), மெலிலோட்டஸ் (MELI), நேட்ரம்-கார்ப் (NAT-C), பல்சாட்டில்லா(PULS), ரீயம்(RHEUM), மற்றும் செபியா(SEP) .
ஆனால் , மரு.
கலவர்த்தின் ( J.P.GALLAVARDIN) அவர்கள்
மட்டுமே தமது மனோதத்துவ மருந்துகள் மற்றும்
மருந்துகாண் ஏடு என்ற புத்தகத்தில் , ( பக்கம்- 90 மற்றும் 140 ) பேராசையின்
( AVARICE) கீழ், சிலிகா(SIL), லாக்கசிஸ் (LACH) , கல்கேரியா-கார்ப் (CALC), ஹயாசியாமஸ் (HYOS), மற்றும்
சல்பர் (SULPH) என்ற 5 மருந்துகளையும் , அவற்றுடன் நேட்ரம்-மூர் (NAT-M) மருந்தைச் சேர்த்து 6 மருந்துகளை கருமித்தனத்திலும் ( MISER) கொடுத்துள்ளார் .
அதனால் இவ்வார்த்தைகளை வேறுபடுத்திக் காட்டும்
குறிமொழிகளையும், அதில்
உள்ளடங்கியிருக்கும் மருந்துகளையும் இப்போது பார்க்கலாம்;
1. AVARICE:
Mind; avarice; alternating with squandering: calc lach
merc sulph
Mind; avarice; anxiety about future, from: gink
NUX-V(3) PH-AC(3) stann
Mind; avarice; generosity toward strangers, avarice as
regards his family: carb-v hyos nat-m nux-v
Mind; avarice; squandering on oneself, but: calc hyos
marm-a nux-v sep
Mind; avarice; wants all for himself: nux-v puls
Mind; irresolution, indecision; marry, to; avarice,
from: lyc
Mind; ungrateful; avarice, from: bry puls sil sulph
Mind; extravagance; sometimes, sometimes miserly: ars
lach merc
Mind; extravagance; themselves, for, and miserly as
regards others: calc caust nux-v sep
( Source: Complete Dynmics)
2. MISERS:
Mind; misers (person), but spends for himself : calc,
nux-v, sep, hyos
Mind; misers, because of anxiety for the future, which
causes hate and malice and (made him): ph-ac
Mind; misers, towards family, generous towards others:
nat-m, carb-v, nux-v, hyos
Mind; misers,sometimes, sometimes spenders: lach, merc
( Source: Psychiatry Remedies : MM & Repertory)
ஆகவே, நம்மிடம் சிகிச்சைக்காக வரும் துயரர்களுக்கு மேலே குறிப்பிட்ட (மனக்குறிகள்) குறிமொழிகளின்
அடிப்படையிலும் , அந்தந்த துயரர்களுக்குரிய தனித்துவமான குறிகளின்
அடிப்படையிலும் சரியான மருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் , பேராசை
மற்றும் கருமித்தனத்தில் ஒவ்வொரு துயரர்களும்
எவ்வாறு வேறுபடுகிறார்கள் , அவர்களுக்குரிய சரியான மருந்து எது என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும்
முக்கியம். அதனால் மேலே குறிப்பிட்ட மருந்துகளில் சிலவற்றை விபரமாகப் பார்க்கலாம்.
ஆர்சனிக்கம் ஆல்பம்:
இம்மருந்திற்குரிய துயரர்கள் , உலகம் தங்களை மிகவும்
பயமுறுத்துவதாகவும் , குழப்பமிக்கதாக
இருப்பதாகவும் எண்ணுவார்கள்.
அவர்களுக்கு வயதாகி பலவீனமாகிப் போனதால், பிறரை சார்ந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அதே சமயத்தில் இவர்கள்
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால் , தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு எதுவும்
செய்யமாட்டார்கள்; அதனால் அவர்கள் விலகிப் போய் விடுவார்கள் என்ற பயமும்
இருக்கும். இந்த சூழலில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ( INSECURITY)
ஏற்பட்டு மனஅமைதியின்மையும் , பயமும் உருவாகும்.
இவர்களிடம் யாராவது பணஉதவியோ அல்லது நன்கொடையோ கேட்டால் கடும்கோபம்
வந்துவிடும். அதுமட்டுமல்லாமல் , தங்களை சுற்றி
திருடர்கள் இருப்பதாகவும், அவர்கள் , இவர்களது
பலவீனத்தை பயன்படுத்தி ஏமாற்றி விடுவார்கள் என்ற சந்தேகமும் பயமும்
இருக்கும். தங்களது எதிர் கால வாழ்விற்காக
எப்போதும் பணத்தையும், உடமைகளையும்
சேமிப்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருப்பார்கள். எதையும் தேவைக்கு அதிகமாவே
விரும்புவார்கள். இவர்கள் செலவு செய்வது என்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.
பொதுவாக இவர்கள் பணம், உறவுகள் மற்றும் உடைநலம் போன்றவற்றில்
யாரையும் நம்பாதவர்களாகவும், சந்தேமுள்ளவராகவும்
, எச்சரிக்கை மற்றும் பதட்டத்துடனும்
காணப்படுவார்கள்.
பல்சாட்டில்லா:
இவர்களது அமைதியான , சாந்தமான உருவத்திற்குள்ளே அவர்களது சுயநலமும்
ஒளிந்திருக்கும். அவர்களது அதீத சுயநலத்தின் காரணமாக அதுவும் தனக்குத்தான் வேண்டும்
என்ற விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். பணத்தின் மீது பேராசை இருக்கும். அதனால் , மற்றவர்களுக்கு பணம் கடன்கொடுத்து அதன் மூலம் அதிகம் வட்டி வாங்குபவர்களாகவும்
இருப்பார்கள்.
சிலிகா:
இவர்களுக்கு அதிகப்படியான பதட்டமும், எதிர்காலத்தில்
ஏதாவது தவறு நடந்து விடும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் பணம் சம்பந்தமான
விஷயத்தைக் கையாளுவதில் இயலாதவராக அல்லது பலவீனமுள்ளவராக இருப்பார்கள். இந்த
மனப்பான்மை அவர்களுக்கு , தங்கள் ஏழையாகிவிடுவோம் என்ற பயத்தை மனதில் ஆழமாக
பதிய செய்துவிடும். அதனால் உள்ளூர பலவீனமிக்கவர்களாக இருப்பார்கள். அதை மூடி
மறைத்து வாழ அதிகப்படியான பணத்தையும், சொத்தையும்
சேர்ப்பார்கள். அதனால் செலவிடுவதை தவிர்த்து சிக்கனத்துடன் வாழ்வார்கள்.
கல்கேரியா கார்பானிக்கம்:
இவர்களுக்கு பணம் இல்லையென்றால் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்துவிடும் என்ற பயம்
இருக்கும். அதனால் பணத்தின் மீதும் , உணவின்
மீதும் தணியாத பேராசை ( GREEDY) இருக்கும்.
சைனா:
தங்கள் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்றும் , பலவீனமாகிப் போனதாகவும் நினைத்துக் கொள்வார்கள். அதனால் எதிரிகளின் தொடர்ந்த
தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பய உணர்வு இருக்கும். இத்தகைய உணர்விலிருந்து வெளிவர
பேராசைப் படுவார்கள்.
லைகோபோடியம்:
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 200 முதல் 300 மீட்டர் உயரம் வரை வளரும் மரமாக இருந்த லைகோபோடியம் , காலப்போக்கில் இயற்கை மாற்றங்களினால் அதன் வளர்ச்சி குன்றி , தனது உயர்ந்த நிலையை இழந்து இப்போது சிறிய செடியாக மாறிவிட்டது. அதனால் , இத்தாவரத்திற்கு தான் சிறியதாக இருப்பதாகவும் , மிகுந்த உயரத்திற்குச் செல்ல
வேண்டும் என்ற தணியாத பேராசை இருக்கும்.
இக்குறியே துயரர்களிடமும் காணப்படும். இவர்களுக்கு அதிகாரமுள்ள உயர்ந்த பதவிகளின்
மீது பேராசையும் , மிகுந்த விருப்பமும் இருக்கும். அதே சமயத்தில் கஞ்சத்தனத்திற்கும்
இது மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. K.C. பாஞ்சா.
மெர்குரியஸ்:
இவர்கள் புரட்சிகரமாக கருத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அத்தோடு
இவர்களுக்கு எல்லாவற்றையும் தங்களது சக்திக்குள் கட்டுப்படுத்தி வைத்து
கொள்ளவேண்டும் என்ற தணியாத பேராசை இருக்கும். அதனால் , தங்களுக்கு எதிரான ஆற்றலை முறியடிக்கக்கூடிய
வலிமை வேண்டும் என்ற பேராசை இருக்கும்.
அது பணமாகவோ அல்லது அதிகாரமாகவோஅல்லது சக்தியாகவோ இருக்கலாம்.
செபியா:
செபியா துயரர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் கணவருக்காகவே வாழபவர்கள்.
இவர்களுக்கு மனதில் உடன்பாடு
இல்லையாயினும் , அவர்களது ( கணவர்/குழந்தைகள்) ,சந்தோஷத்திற்காக தங்களது மாற்றிக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலை இருக்கும்.
அதனால் செபியா துயரர்களுக்கு சுதந்திரமாகவும்
, தனியாகவும் செயல்பட வேண்டும் என்ற தணியாத பேராசை
இருக்கும்.
விராட்ரம் ஆல்பம்:
அதிகம் பொய் பேசுபவர்கள். பணத்தின் மீது அதிக பேராசை இருக்கும். அதே சமயத்தில்
பணத்தை தாராளமாகவும் செலவு செய்வார்கள். சமூகத்தில் , தங்களது அந்தஸ்த்தை அல்லது மரியாதையை உயர்த்திக் கொள்ள பணத்தை தண்ணீராக செலவு
செய்வார்கள். அதனால் , மேன்மேலும் பணம் சம்பாதிக்கவும் , செலவு செய்யவும் தணியாத பேராசை இருக்கும். தற்போதுள்ள பெருவாரியான
அரசியல்வாதிகளுக்கு இம்மருந்து தேவைப்படும்.
பாஸ்பாரிக்கம் ஆசிட்:
இடைவிடாத போராட்டமும், தளர்ந்து/ சோர்ந்து விடுதலும் எல்லா அமில
மருந்துகளுக்கும் பொதுவானது. தங்கள் சந்திக்கும் எல்லாப்போராட்டங்களிலும்
தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் இம்மருந்தில் உள்ளது. அதனால்
முன்னெச்சரிக்கையுடன் அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற பேராசை இவர்களுக்கு
இருக்கும்.
இதே போன்று பிற மருந்துகளின்
சாராம்சத்தையும் நன்றாக புரிந்து கொண்டு
ஆயிரக்கணக்கான துயரர்களை நலப்படுத்தி , நல்ல
ஹோமியோபதி மருத்துவர் என்று பெயர் எடுக்க
வேண்டும் என்று நீங்களும் பேராசைப்படுங்கள்; பணம் சம்பாதிக்க அல்ல.
இக் கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்:
1.
Homeopathic Medical repertory III Edition- Dr.Robin
Murphy
2.
Repertory of the Homeopathic Materia Medica- Dr.
J.T.Kent.
3.
The Essential Synthesis- Dr. Frederik Schroyens
4.
A concise Repertory of the Homeopathic Medicines-
Dr.S.R.Phatak
5.
Psychiatry Remedies- Dr. J.P.GALLAVARDIN
6.
Decoding the Rubrics of Mind- Dr. Amulya Ratna Sahoo
& Dr. Samaresh Chandra Mishra.
7.
ACSOTROM- Dr. Shreepad Arun Khedekar, Dr. Chirag R. Upadhyay.
8.
Repertory of Striking Rubrics of mind in Homeopathy-
Dr.H.L.Chitkara
9.
The Spirit of Homeopathic Remedies- Dr. Dider Grandgeorge
10.
Complete Dynamics –Online Repertory.
(இக்கட்டுரையில் ஏதாவது தவறு அல்லது பிழை இருந்தால் அதைத் தவறாமல்
சுட்டிக்காட்டவும் . அத்துடன் புதிதாக இணைக்க வேண்டிய பிற குறிப்புகள் இருந்தால்
அதையும் பதிவிடவும். ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு அது உதவி புரியும். மேலும் , இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை தானாக யாரும் எடுத்துக்
கொள்ளக்கூடாது. தகுந்த ஹோமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரிலே எடுத்துக்
கொள்ளவேண்டும்)
No comments:
Post a Comment