நேட்ரம் ஆர்சனிக்கம்
(NAR-AR)
NATRUM ARSENICUM
ஆர்சனிக்கம் ஆல்பம்
போன்று பதட்டத்தோடும் , நேட்ரம் குடும்பத்திற்குரிய கவலை மற்றும் வாயில் புண்களோடு
வரும் துயரர்களுக்கு இம்மருந்து பயன்படும். அதேபோல் நிலக்கரி சுரங்களில் வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு அத்தூசியினால் உருவாகும் ஈழை நோயிற்கும் இது சிறந்த மருந்து (MINER’S
ASTHMA).
மார்பிலும் , இருதயத்திலும்
தாங்க முடியாத துன்பநிலை இருக்கும். இருதயத்தில் நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்காது;
எண்ணிக்கையில் மாறுபடும்; வழக்கத்தை விட மெதுவாகத் துடிக்கும் ( DIGIT, CANN-I,
OP). நுரையீரல் பகுதியில் புகையை நுகர்ந்து அடைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
புகை இவர்களுக்கு ஒவ்வாது. நுரையீரல் காச நோயிற்கு இது முக்கியமான மருந்து.
உடல் முழுவதும் களைப்பு
இருக்கும். தைராய்டு சுரப்பியை கட்டை விரலை வைத்தோ அல்லது விரல்களை வைத்தோ நெருக்கி
அமுக்குவது போன்ற உணர்வு இருக்கும். உடல் நலத்தைப் பற்றிய பதட்டமிருக்கும். உடல் எடை
குறைந்திருக்கும்.
கவலை. உணர்ச்சிகள்
உள்ளமுக்கப்பட்டிருக்கும். பேராவல் உடையவராகவும் (AMBITIOUS) , மிகப் பெரிய சாதனை புரிபவர்களாகவும்
, நேர்த்தியான குணம் படைத்தவர்களாகவும் (PERFECTIONISM) இருப்பார்கள். சுலபத்தில் திருப்தியடையாதவர்களாகவும் , குற்றம் காணுபவர்களாகவும் இருப்பார்கள்.சிறிய
விஷயத்திற்கும் கோபம் ஏற்படும். கருத்து வேறுபாடு அல்லது முரண்பாட்டினாலும் கடுங்கோபம்
ஏற்படும்.
கோபத்திற்குப் பிறகு
தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் மனவேலை செய்ய வெறுப்பு ; அதேபோல் படிப்பதற்கும்
வெறுப்பு. மனதை ஒருநிலைப் படுத்த முடியாது. ஞாபக மறதி (ANAC, APIS).
சந்தேககுணம். சலித்து
அலுத்துக் கொள்கிற (LISTLESS) அல்லது அக்கறையற்ற குணம் (GELS, NUX-V, PH-AC).
குளிர்ச்சியான உடைவாகு.
உடலைச் சுற்றி போர்த்திக் கொண்டிருப்பார்கள் அல்லது தீ அல்லது சூட்டின் அருகில் உட்க்கார்ந்திருப்பார்கள்.
தலை முழுவதும் சூட்டுடனும்
, நிரம்பியது போன்றும் இருக்கும். ஒவ்வொரு அசைவிலும் தலையில் ஒலி அதிர்வை ஏற்படுத்தும்.
படிக்கும் போதும்,
எழுதும் போதும் கண்களில் சோர்வும் மற்றும் வலியும் ஏற்படும் (MYRICA, NAT-M, PHOS,
RUTA, SEP).
மணம் அறியும்ஆற்றல்
குறைந்திருக்கும் அல்லது இல்லாதிருக்கும். மூக்கு அடைத்துக் கொள்ளும் ; இரவிலும் ,
காலையிலும் தொல்லை அதிகரிக்கும் (NUX-V).
இரவில் வாயின் மூலமாக
சுவாசிக்க வேண்டியதிருக்கும் ; அதனால் வாய் திறந்திருக்கும் (AM-C).
இவர்களுக்கு உடல்
உழைப்பினால் தொல்லைகள் ஏற்படும். அசைவினாலும் தொல்லைகள் அதிகரிக்கும். அதனால் படுத்துக்
கொண்டிருப்பதையே விரும்புவார்கள்; யாரும் தொந்தரவு செய்வது பிடிக்காது. படுத்துக் கொண்டிருந்தாலும்
தொல்லைகள் அதிகரிக்கவே செய்யும். அசைவதையே
வெறுப்பார்கள்.
தொல்லைகள் வலது பக்கமே
ஏற்படும்.
கடுமையான இருமல் ; இருமிக் கொண்டேயிருப்பார்கள்; மூக்கிலிருந்து
மஞ்சள் நிறத்தில் சளி ஒழுகிக் கொண்டேயிருக்கும் (KALI-BI, HYDRAS). மூக்கில் சளி காய்ந்து
கட்டிதட்டியிருக்கும் ; அதை நீக்கினால் இரத்தம் வெளியாகும்.
தொண்டையடைப்பான்
(DIPTHERIA) . தாகம் அதிகமிருக்கும்; குறைந்த
அளவு தண்ணீரை அடிக்கடி குடிப்பார்கள் (ARS, HYOS) . தண்ணீர் குடித்தவுடன் தொல்லைகளும்
அதிகமாகும்.
பால் ஒத்துக் கொள்ளாது.
மலச்சிக்கலும் , வயிற்றுப்போக்கும்
மாறி மாறித் தோன்றும் ( ANT-C,CIMIC,NUX-V, PODO).
காலையில் எழுந்தவுடன்
மலங்கழிக்க ஓடுவார்கள்; மலம் மஞ்சள் நிறத்தில் , தண்ணீராக , ஏராளமாக வலியில்லாமல் போகும்.
சில சமயம் மலங்கழிப்பதற்கு
முன்பு வலி ஏற்படும்; மலங்கழித்த பிறகு அந்த வலி நீங்கி விடும் (COLOC).
யானைச்சொறி- சருமத்தில்
செதில் செதிலாக உரியும் நீடித்த வகை சருமத் தடிப்பு நோய் (PSORIASIS).
இவர்களது தொல்லைகள்
யாவும் காலையிலும் , சாப்பிட்டபிறகும் அதிகமாகும். திறந்த வெளிக்காற்றில் நடக்கும் பொழுது தொல்லைகள் குறையும்.
No comments:
Post a Comment