Sunday, 27 May 2012

மருந்துகாண் எடு அல்லது மருந்தியல் களஞ்சியம்


ஹோமியோபதி மருத்துவத்தில் ஏறத்தாழ  3500 மருந்துகள் தற்பொழுது உபயோகத்தில் உள்ளன. இம்மருந்துகளை பற்றி விரிவாக பல  சிறந்த நூல்களை ஹோமியோபதி வல்லுனர்கள் எழுதியுள்ளார்கள். அவற்றில் சில;

(Sources of remedies - Animal / Plant/ Mineral / Nosode / Sarcode / Imponderablia
 Sources of symptoms - Proving, Toxicology / overdosing, Animal experimentation,
                                  Observation on sick & clinical experience )
The Materia  Medica Pura –Dr.Samuel Hahnemann
The Chronic Diseases Vol.I &II-–Dr.Samuel Hahnemann
The Encyclopedia of Pure Materia Medica - TF Allen
The Guiding Symptoms of our Materia Medica - C Hering
Keynotes and Characteristics with Comparisons – Allen HC
Keynotes of The Materia Medica - Guernsey H. N
Keynotes of The Homoeopathic Materia Medica – A Von Lippe
Keynotes And Red Line Symptoms of The Materia Medica - A Von Lippe
A Synoptic key of the Materia Medica – Boger CM
Comparative Materia Medica - RH Gross
Comparative Materia Medica - EA Farrington
The Study Of Remedies By Comparison – HA Roberts
Clinical Materia Medica - Farrington E. A.
Pocket Manual of Homeopathic Materia Medica – Boericke W
A Manual of Materia Medica Therapeutics and Pharmacology - Blackwood AL
Physiological Materia Medica – WH Burt
Text Book of Materia Medica with Therapeutics - Cowperthwait
Materia Medica of Homoeopathic Medicines – Phatak
Lectures on Homoeopathic Materia Medica – Kent JT
Homoeopathic Drug Pictures - ML Tyler
A study on Materia Medica - NM Choudhuri
A dictionary of Practical Materia Medica (3 vols) - JH clarke year - 1900
A Manual of Homoeopathic Therapeutics - EA Neatby & TG Stonham
Lectures on Materia Medica – Dunham C
Plain Talks on Materia Medica with Comparisons - WI Pierce
New old and forgotten Remedies – Anschultz EP


மேற்கண்ட நூல்களில் உள்ள அனைத்து மருந்துகளையும் முழுமையாக படிக்காவிடினும் , சில மருந்துகளைப் பற்றி ( 300) இந்த வலைப்பூவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இம்மருந்துகளை நல்ல ஹோமியோபதி மருத்துவரின் பரிந்துரையின்படியே சாப்பிட வேண்டும் என்பதை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம்.

ஆர்கனான் மணிமொழி-3



If the physician clearly perceives what is to be cured in diseases, that is to say, in every individual case of disease (knowledge of disease, indication), if he clearly perceives what is curative in medicines, that is to say, in each individual medicine (knowledge of medical powers), and if he knows how to adapt, according to clearly defined principles, what is curative in medicines to what he has discovered to be undoubtedly morbid in the patient, so that the recovery must ensue - to adapt it, as well in respect to the suitability of the medicine most appropriate according to its mode of action to the case before him (choice of the remedy, the medicine indicated), as also in respect to the exact mode of preparation and quantity of it required (proper dose), and the proper period for repeating the dose; - if, finally, he knows the obstacles to recovery in each case and is aware how to remove them, so that the restoration may be permanent, then he understands how to treat judiciously and rationally, and he is a true practitioner of the healing art.

ஒவ்வொரு நோயிலும் என்னென்ன கோளாறுகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும்?  (நோய் பற்றிய அறிவு, அது சுட்டிகாட்டும் குறிகள் ) ஒவ்வொரு மருந்திலும் என்னென்ன கோளாறுகளை நீக்கும் சக்தி இருக்கிறது? (மருந்துகளின் ஆற்றல் பற்றிய அறிவு) இவற்றை பற்றிய அறிவு ஒரு மருத்துவரிடம் இருந்தால்  நோயாளியின், உடலில் மறைந்திருக்கும் நோயை தெளிவாக தெரிந்து கொண்டு  வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், சந்தேகத்திருக்கு இடம் இல்லாமல் மருந்து தேர்ந்தெடுக்க இயலும்அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளில் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நோயைப் போக்க எது சரியான மருந்து ? அம்மருந்தை எப்படித் தயாரிப்பது ? எந்த அளவில் , எவ்வளவு வேளைகள் , எந்தந்த நேரங்களில் கொடுப்பது ? இவற்றைத்தவிர ஒவ்வொரு நோயிலும் குணம் ஏற்படுவதைத் தடை செய்யக் கூடியவை எவை? அத்தடைகளை நீக்கி நிரந்தர குணம் ஏற்படும்படிச் செய்வது எப்படி? இத்தகைய எல்லா விபரங்களையும் அந்த மருத்துவர் பெற்றிந்தால் நலத்தை மீட்பது நிரந்தரமாக இருக்கும். அவர் தான் நலமாக்கல் கலையை அறிந்த உண்மையான மருத்துவராவார்.

Sunday, 20 May 2012

ஆர்கனான் மணிமொழி-2



The highest ideal of cure is rapid, gentle and permanent restoration of the health, or removal and annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable, and most harmless way, on easily comprehensible principles.

நோயற்ற நிலை விரைவில் ஏற்பட வேண்டும். நோயாளிக்கு எவ்வகையான துன்பமும் நேரக்கூடாது. நோய் மீண்டும் திரும்ப வராமல் வேருடன் வீழ்த்தபடவேண்டும் . முற்றிலும் நம்பத்தகுந்த எள்ளளவுத் தீங்கையும் உண்டாக்காத எளிதிலே புரிந்து கொள்ளக்கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆர்கனான் மணிமொழி-1


மரு.ஹானிமன் எழுதிய ஆர்கனான் என்ற தத்துவ நூலில் 294 மணிமொழிகள் உள்ளன. அதன் ஆங்கில மூலத்தையும், தமிழ் வடிவத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.

The physician's high and only mission is to restore the sick to health, to cure, as it is termed-1.


Foot Note:1-His mission is not, however, to construct so-called systems, by interweaving empty speculations and hypotheses concerning the internal essential nature of the vital processes and the mode in which diseases originate in the interior of the organism, (whereon so many physicians have hitherto ambitiously wasted their talents and their time); nor is it to attempt to give countless explanations regarding the phenomena in diseases and their proximate cause (which must ever remain concealed), wrapped in unintelligible words and an inflated abstract mode of expression, which should sound very learned in order to astonish the ignorant - whilst sick humanity sighs in vain for aid. Of such learned reveries (to which the name of theoretic medicine is given, and for which special professorships are instituted) we have had quite enough, and it is now high time that all who call themselves physicians should at length cease to deceive suffering mankind with mere talk, and begin now, instead, for once to act, that is, really to help and to cure.

தன்னிடம் சிகிச்சை பெற வருகிறவர்களின் நோய்களை வேருடன் களைந்து , இது தான் நலமென்று சொல்லாற் குறிப்பீட்டுக் கூறியது போல் மீண்டும் அவர்கள் நோயற்ற வாழ்வு வாழ வழி செய்வது ஒன்றே மருத்துவரின் உயர்ந்த பணி ; கடமையுமாகும்.

அடிக்குறிப்பு-1: ஒரு மருத்துவரின் மேற்கொண்ட பணி (Mission) எவ்வாறு இருக்க வேண்டுமென்றால் ஓர் உயிரியின் கண்ணுக்கு புலப்படாத உள்ளார்ந்த உயிர் இயக்கத்தில் நோய் எவ்வாறு தோண்டுகிறது, உயிர் இயக்கம் பற்றிய சாராம்சமான இயற்கைதன்மை என்ன எனபது பற்றிய வெற்றுக் கருத்துகளையும் ஊகங்களையும் புனைந்து பழையமாதுரியான மருத்துவமுறைகளை கட்டி அமைப்பதாக  இருக்ககூடாது .( அவ்வாறான ஊகங்களின் மேல் நிறைய மருத்துவர்கள் தங்களது திறமையையும் நேரத்தையும் ஆர்வமுடன் வீனடிதுள்ளர்கள்). நோய், அதற்கான உத்தேசமான காரணம் (காரணம் என்பது எப்போதும் மூடுமந்திரமாகவே உள்ளது) மற்றும் நிலைமைகள் பற்றி ஏராளமான விளக்கங்களைச் சொல்லவும் , ஆறிவுக் கூர்மையற்ற சொற்களால் பொதிந்து விஸ்தாரமான அனால் புரியாத பூடகமான வழிமுறையில் வெளிபடுத்தவும் முயற்சிப்பதுதானா ஒரு மருத்துவரின் இயக்கம்?. உதவிக்காக வெறுமனே பெருமூச்சு விட்டு ஏங்கிக்  கொண்டிருக்கும்  உடல் நலிந்த அப்பாவி மனிதகுலத்தை வியப்படையச் செய்ய மேதாவித்தனமாக முயற்சி செய்வதாகும்.அப்படிப்பட்ட பகர்கனவுக்காரர்களின்  (அவர்களுக்காக புத்தகத்திலுள்ள மருத்துவ பெயர்களும் தனிச்சிறப்பான பேராசிரியர் பட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன ) நம்மிடையே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களை மருத்துவர்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லலுறும் மனித குலத்தை வெறும் பேச்சால் மட்டும் ஏய்க்கும் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள இது நல்ல சிறந்த தருணமாகும். உண்மையாகவே உதவி செய்யவும் நலபடுத்தவும் இப்பொழுதே தொடங்கவேண்டும் ; நலமாக்குவதுபோல் நடிப்பதை விட்டுவிட வேண்டும்.


Friday, 18 May 2012

சாமுவெல் ஹானிமன்



மருத்துவ உலகத்தையே புரட்டிபோட்டு புதிய வரலாறு படைத்தவர்  மரு. சாமுவேல் ஹானிமன்.ஜெர்மனி நாட்டில் மெய்சன் நகரில் கி.பி 1755 ஆம் ஆண்டு எப்ரல் 10 இல் ஒரு ஏழை மண்பாண்ட தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் . தூயஉள்ளம், கடின உழைப்பு ,நேர்மை தவறாத பண்பு போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர். மருத்துவம் என்ற பெயரில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் அடிப்படையான காரணங்களை தெரிந்து கொள்ளாமல் ,சூடு போடுதல் ,ரத்தத்தை வெளியேற்றுதல், தனிமைபடுத்துதல்  போன்ற மிருகத்தனமான சிகிச்சை முறைக்கு சாவு மணியடித்தவர் . ஹோமியோபதி என்ற புதிய மருத்துவ முறையை தனியொரு மனிதனாக கண்டெடுத்த மாமேதை.

 கி.பி  1790 இல் மரு. கல்லன் என்பவரின் மருத்துவ புத்தகத்தை மொழிபெயர்க்கும் பொழுது சின்கோனா மருந்தின் மூலம் ஹானிமனுக்கு ஏற்பட்ட தெளிவு அதாவது எப்பொருள் ஒரு நோய் தன்மையை உருவாக்குகிறதோ அப்பொருள் அதே நோய் குறிகளை சரிசெய்யும் அல்லது குணபடுத்தும் . இதுவே ஒத்ததை ஒத்தது போக்கும் என்ற தத்துவம். இதை ஜெர்மனி மொழியில்”Simillia Similibus Curenturஎன்றும், ஆங்கிலத்தில்”Like cures Like” என்றும் அழைக்கபடுகிறது. அதன்பிறகு ஹோமியோபதி மருந்துகளை நிருபணம் செய்ய ஆரம்பித்தார் .

அவரது ஆய்வுகளை கி.பி 1796 இல், ” An essay on a new principle for ascertaining the curative powers of Drug”. என்ற கட்டுரையாக  வெளியிட்டார். இதுவே ஹோமியோபதியில் வெளிவந்த முதல் கட்டுரை. ஹானிமன் தமது வாழ்நாளில் 99 மருந்துகளை நிருபணம் செய்துள்ளார். இந்த மருந்துகளின் தொகுப்பே "மருந்து காண் ஏடு" (MATERIA MEDICA) என்று அழைக்கப்படுகிறது .


அதன்பிறகு தொடர்ந்து ஆய்வு செய்து ஹோமியோபதிக்கான ஒரு தத்துவத்தையும் உருவாக்கினர். அது கி.பி.1810 இல் ,” ORGANAN OF THE RATIONAL ART OF HEALING”  என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். சுருக்கமாக " ORGANAN" என்று அழைக்கப்படுகிறது. இந்நூல்களே ஹோமியோபதிக்கு மூலம். ஏறத்தாள 53 ஆண்டுகள் ஹோமியோபதிக்கு உழைத்த அந்த பெருந்தகை கி.பி.1843 இல்( 02/07/1843) மறைந்தார். இவர் மறைந்த பொழுது எழுதி வைத்திருந்த   வாசகம், " நான் என் வாழ்வை வீணாக கழித்துவிட வில்லை " என்பது  உண்மை .

Sunday, 13 May 2012

ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பு!

நண்பர்களே ! இந்த வலைப்பூ ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பினையும் , அது மனிதர்களை எவ்வாறு நலபடுத்துகிறது என்பதையும் ஆழமாக பதிவு செய்யும் தளமாக இருக்க போகிறது.வாருங்கள் ! எளிமையான மருத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் .