Tuesday, 19 August 2025

ஹோமியோபதியில் நோயறிதல் மற்றும் மேம்பட்ட மூலக்கூறு அம்சங்கள் பற்றிய கருத்தரங்கம்- ஒரு கண்ணோட்டம்

 

ஹோமியோபதியில் நோயறிதல் மற்றும் மேம்பட்ட மூலக்கூறு அம்சங்கள் பற்றிய கருத்தரங்கம்- ஒரு கண்ணோட்டம்

மரு. கணேஷ் லட்சுமணன்., BHMS, Ph.D

மரு. சுரேஷ் சம்பத், BHMS., Msc [Psy]., Msc[ Phy]., SCPH


மரு. சுரேஷ் சம்பத், BHMS., Msc [Psy]., Msc[ Phy]., SCPH


மரு. கணேஷ் லட்சுமணன்., BHMS, Ph.D

ஹோமியோபதி மருத்துவத்தில்  "நோயறிதல் கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது " மற்றும் ஹோமியோபதியின் சில “மேம்பட்ட மூலக்கூறு அம்சங்கள் குறித்த விளக்கங்களையும் மற்றும் அதன்  பொதுவான கொள்கைகளையும்  அறிவியல் கண்ணோட்டத்தில் [Integrating diagnostic findings into homeopathic practice and some advanced molecular aspects of Homeopathy] ஆராயும் விதமாக மூன்று நாள் கருத்தரங்கம் , ஆனைக்கட்டி அருகில் உள்ள சத்தர்ஷன் மையத்தில் ஆகஸ்ட் 8  முதல் 10  ந்தேதி வரை நடைபெற்றது.  மருத்துவர்கள். கணேஷ் லட்சுமணன்., BHMS, Ph.D ,  சென்னை, மற்றும்  சுரேஷ் சம்பத், BHMS., MD , ஓசூர் ஆகியோர்கள் கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.   

 Ø  மருத்துவர் பிரபுல் விஜயகர் வழிகாட்டியுள்ளபடி, அறிவியல் புரிதலின் வழியில் மரபணுக்களின் [ Genes] புதிய பரிமாணங்களை புரிந்து கொள்வது.

Ø  ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில்  கற்பிக்கப்படாத நோய்மூலக்கூறுகளின் [ Miasms] பல்வேறு பின்காட்சித் தோற்றங்கள் அல்லது உள்விழி நிழலுரு [ Different Spectrum] பற்றிய புரிதல்.

Ø  உயிரணுக்களின் மூலக்கூறு இயக்கவியல் [Molecular dynamics of the cells] மற்றும் அதன் உளவியல்-உயிரியல் எதிர்செயல் [Psycho-biological response] 

Ø  இரத்த பரிசோதனையை பொதுவாகப் பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ள மனநோயியலைப் [Psycho-pathology ] புரிந்துகொள்வது.

Ø  வெவ்வேறு பரிசோதனை குறிப்புகள் மூலம் நோய்மூலக்கூறுகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் தன்னுடல் எதிர்ப்பு சக்தியைக் கண்டறிதல் [Auto-immunity].

Ø  ஹோமியோபதியின் தொலைநோக்கு பார்வையில் பரிசோதனை குறிப்புகளில் உள்ளவற்றை கண்டறிதல்.

Ø  துயரரின்  செயல்முறையை குறிமொழியாக  மாற்றுதல், மருந்தளித்தல், மற்றும் பின்தொடர்தல் பற்றிய அளவுகோல்கள்.

Ø  ஹோமியோபதி மருத்துவத்தில்  எது சரி? எது தவறு?. செய்ய வேண்டியவை [DOs] மற்றும் செய்யக்கூடாதவை [DON’Ts].

Ø  கருவியல் ஆய்வு அடிப்படையில்  [Embryology] ஹெரிங் நலமாக்கல் விதிகளை எளிமையாக புரிந்து கொள்ளுதல்.

Ø  நோயெதிர்ப்பியல் பற்றிய அறிக்கைகள் [Immunological reports] மற்றும் ஹோமியோபதியுடன் அதன் பகுப்பாய்வு.

Ø  முற்றிய நோய்நிலை மற்றும் நோயியல் செயல்முறையை மாற்றியமைப்பது எப்படி?

Ø  ஹோமியோபதியில் நோய்மூலக்கூறு கோட்பாடுகள் மற்றும் மருந்துகளின் வீரியங்கள்.

Ø  மூலக்கூறு உயிரியல் அடிப்படையில் மருந்தியல் களஞ்சியத்தை அறிந்து கொள்ளுதல் [ Molecular biology of Materia Medica] .

 

மேற்கண்ட தலைப்புகளில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் , குறிப்பாக கரு உருவான தொடக்கம் முதல் நோய் தாக்குதல் ஏற்படுவதையும், அது மருத்துவர் ஹெரிங்  விதிப்படி நலமாவதையும் தெளிவாக விளக்கினார்கள். கரு வளருவதால் மருத்துவர் பிரபுல் விஜயகர் கொடுத்துள்ள புறப்படலம் [Ectoderm], அகப்படலம் [Endoderm], இடைமுதலுருப்படை [(இடைத்தோற்படை) -Mesoderm ] என்ற மூன்று அடுக்குகளின் முக்கியத்துவம் பற்றி தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள்.

 கரு வளர்ச்சி குறைப்பாட்டின் காரணமாகத் தான்    சில குழந்தைகள் பிறக்கும் போதே மேககிரந்தி நோய்மூலக்கூறு சார்ந்த நோய்களுடன் அதாவது,  மதியிருக்கக்குறைபாடு  [ Autism] , பெருமூளை சிதைவு அல்லது திசுச்சுருக்கம்  [ Cerebral atrophy], குழந்தைகளுக்கு ஏற்படும் ஜன்னி [ Infantile spasm] , இரத்தப்புற்றுநோய் [ Leukaemia] மூளையில் கட்டி [ Brain tumor]  மற்றும் முதல்வகை நீரழிவு [ Diabetes Insipidus] நோயாளியாகவும் பிறக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

 மற்றும், மாமேதை ஹானிமன் , தனது "நாள்பட்ட  நோய்கள்" நூலில் விளக்கியுள்ள சொறி-சிரங்கு [ Psoric] , மேகவெட்டை[ Sycotic] மற்றும் மேககிரந்தி [ Syphilitic] என்ற மூன்று நோய்மூலக்கூறுகளையும் [ Miasms] , பின்னர் வந்த டூபர்குலினம் [ Tuberculinam] மற்றும் பிற நோய்மூலக்கூறுகள் [ Cancer., Vaccination., AIDS] பற்றிய அருமையான விளக்கத்தைத் தந்தார்கள்.

 நவீன அறிவியலின் கதிரியக்க நோயறிதல் [ Radio-diagnosis] மற்றும்  ஆய்வகப் பரிசோதனைக்குறிப்புகள் [ Laboratory investigations]  நமக்கு நோயியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.  துயரரின் பாதிப்பு செயல்முறை சார்ந்ததா?, கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? அல்லது அழிவு நிலையில் இருக்கிறதா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்பது ஹோமியோபதியில் புதிய பார்வையாக இருக்கிறது.. 

 உதாரணமாக, கொழுப்பு நிறைந்த கல்லீரல் [ Fatty liver] , அதன் திரண்டிருக்கும் தன்மையை அல்லது குவிப்பைக் [Accumulations] குறிக்கிறது,  அதனால் அது  மேகவெட்டை நோய்மூலக்கூறைக் [ Sycitic miasm] குறிக்கிறது. அதே சமயம் கல்லீரல்ச் சுருக்கம் [ Cirrhosis]  அதன் அழிவைக் குறிக்கிறது; ஆகவே அது மேககிரந்தி நோய்மூலக்கூறைச் [ Syphilitic miasm ] சார்ந்தது. எனவே, படமெடுத்தல் அல்லது படமாக்கல் [ Imaging] என்பது துயரரின் செயல்பாட்டில் இருக்கும் நோய்மூலக்கூறை நாம் அடையாளம் காண உதவுகிறது.  இது துயரருக்கு உரிய ஒத்த மருந்துத் தேர்விலும் பிரதிபலிக்கும். ஆகவே ஒரு ஹோமியோபதி மருத்துவர், "ஒவ்வொரு நோயியல் நிகழ்விலும், நாம் நோயைப் பெயரிடுவதைத் தாண்டி செல்ல வேண்டும்.  அங்கே பாதுகாப்பு வழிமுறை செயலில் உள்ளதா ?  செயல்பாட்டில் மாற்றம் நிகழ்ந்து உள்ளதா [ Psoric]? இது கட்டிகளை உருவாக்கும் தன்மையைக் கொண்டதா [Sycotic]?  அல்லது அழிவுப்பாதையில் இருக்கிறதா [ Syphilitic] ? என்பதை  நாம் கேள்விகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்த அணுகுமுறை நோயியல் அறிக்கைகளை ஒரு நோய்மூலக்கூறு சார்ந்த  நோயறிதலாக [ Miasmatic diagnosis] மாற்றுகிறது என்ற விளக்கம் கிடைத்தது.

 அதே போல்   “ மனித இரத்த அளவுருக்கள் [ BLOOD PARAMETERS],  வாழ்க்கையின் போர்க்களத்தை பிரதிபலிக்கின்றன.  இரத்தத்தின் ஒவ்வொரு கூறுகளும் ஒரு பாதுகாப்பு சக்தியைக் குறிக்கின்றன. சிவப்பணுக்கள் , வெள்ளையணுக்கள் மற்றும் தட்டையணுக்கம் அனைத்தும் நோய்மூலக்கூறுகளின் போக்கை வெளிப்படுத்துகின்றன.  அவற்றின் மாற்றங்களை முறையாகப் படிக்கும் போது , சொறி-சிரங்கு , மேகவெட்டை  அல்லது மேகந்தந்து நோய்மூலக்கூறுகள்  ஆதிக்கம் செலுத்துகிறதா ? என்பதை நாம் அடையாளம் காணலாம்.”

இவற்றை சற்று விரிவாகப் பார்க்கும் போது ,  “சிவப்பு இரத்த அணுக்கள் [Red blood cells = RBC] ஆக்ஸிஜன் மற்றும் இரும்புச்சத்தை உடலின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது - இது  ஊட்டச்சத்துக்கு மிகவும்  அவசியமானவை. இதன் குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது, இது ஒரு சொறி-சிரங்கு நோய்மூலக்கூறு சம்பந்தமான பலவீனம் ஆகும்.  ஆனால்  நாள்பட்ட இரத்த சோகை இருக்கும் போது , அது அழிவுடன் கூடியதாக இருக்கும், அதனால் மேககிரந்தி நோய்மூலக்கூறைக் கொண்டிருக்கும்.  எனவே, ஒரு எளிய இரத்த எண்ணிக்கை கூட செயலில் உள்ள நோய்மூலக்கூறை   வெளிப்படுத்தும்.”

 அதே போல், "செந்நிற இரத்தஅணுக்கள் [Hemoglobin] ஊட்டச்சத்து நிலையை பிரதிபலிக்கிறது. எந்தவொரு நாள்பட்ட நோய்நிலையின் போது, செந்நிற இரத்த அணுக்களில் முன்னேற்றம் இருந்தால், அது சரியான சிகிச்சையின் அறிகுறியாகும்.  சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் செந்நிற இரத்தஅணுக்கள் குறைவாக இருந்தால், ஊட்டச்சத்து இல்லாதது அல்லது ஆழமான நோய்மூலக்கூறு நோயியல் மீட்பைத் தடுக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .”

 இரத்தத்தில் உள்ள  “தட்டை அணுக்கள் [ Platelets]  இரத்தப்போக்கிற்கு எதிராக அதைத் தடுக்கும் பாதுகாவலர்கள் ஆகும் . அவை குறைவான எண்ணிக்கையில்  இருக்கும் போது , இரத்தப்போக்கு உறையாமல் அதிகரிக்கும் போக்கு இருக்கும்  , இது மேககிரந்தி நோய்மூலக்கூறு ஆகும்.  அவை உயர்ந்த எண்ணிக்கையில் இருந்தால் , அது அழற்சி அல்லது மேகவெட்டை நோய்மூலக்கூறு  போக்குகளைக் காட்டக்கூடும். எனவே, நோயியலில், துயரர்  பாதுகாப்பான நிலையில் இருக்கிறாரா  அல்லது அழிவுகரமான நிலையில்  இருக்கிறாரா என்பதைப் பார்க்க தட்டை அணுக்கள் எண்ணிக்கை நமக்கு உதவுகிறது.”

 அதே போல், "வெள்ளை இரத்த அணுக்கள் (WBCs)  உடலின் பாதுகாப்புப் படை போன்றது.  இவை 20,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் போது மேகவெட்டை- மேககிரந்தி இடையிலான  அல்லது வெளிப்படையான மேககிரந்தி   நோய்மூலக்கூறு சார்ந்த நோயியலைக் குறிக்கின்றன.

 அடுத்து ஈசினோபில்கள் (Eosinophils) என்பது வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உளவுத்துறை அதிகாரிகள் போன்று செயல்படுகிறது. உடலில் தோன்றும்  ஒட்டுண்ணிகள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் இதன் அளவு , இயல்பான (1–4%) இருந்தால், அது சொறி-சிரங்கு நோய்மூலக்கூறு வகை ஆகும் , இவர்கள் கூருணர்ச்சி [ Sensitive] உள்ளவர்களாக இருப்பார்கள் , ஆனால் சமநிலையில் இருப்பார்கள் . இரத்தத்தில் இதன் அளவு 5–10% இருந்தால் , அது மேகவெட்டை நோய்மூலக்கூறு ஆகும் , இவர்கள் அதிககூருணர்ச்சி [ Hypersensitive] உள்ளவர்களாக இருப்பார்கள் , ஒவ்வாமை [ Allergy], ஈளை நோய் [ Asthma] போன்ற நோய்கள் இவர்களைத் தாக்கும். இது  10% மேல் இருந்தால், தன்னுடல் எதிர்ப்புசக்தி [ Autoimmunity] அல்லது புற்றுநோய் [ Cancer]  ஏற்படும். எனவே, ஈசினோபில்ஸ் நோய்மூலக்கூறு  அறிதலுக்கான  முக்கிய குறிகாட்டிகளாகும்.

 இதை உறுதிப்படுத்தும் விதமாக , கீழ்க்காணும்  துயரர் வரலாறு கொடுக்கப்பட்டது;

 ஒரு பெண் துயரர் ;  அஜி---(34 வயது) :  “பருவமடைந்ததிலிருந்து ஒழுங்கற்ற, நீடித்த மாதவிடாய் கொண்ட 34 வயது பெண். அவருக்கு தொடர்ச்சியான இரத்தப்போக்கு, இரத்த சோகை, பல வருட மருந்துகளுக்குப் பிறகு உடல் பருமன். PCOD இருந்தது, Hb 8 % மட்டுமே காட்டியது. அவருக்கு மாதவிடாயின் போது தலைவலி, விரல் நுனியில் வெடிப்பு , உடலில் நீர்வீக்கம், பெருத்திருத்தல் ஆகியவை இருந்தது.

 வாழ்க்கை முறை : புறக்கணிக்கப்பட்ட உணர்வு. குழந்தைப் பருவம் முதல் மனம் மற்றும்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட நிலை .  கூச்ச சுபாவம், பயம், பதட்டம், மற்றும் மற்றவர்களை சார்ந்து வாழும் நிலை இருந்தது . இந்த நிலை மேகவெட்டை - மேககிரந்தி இணைந்த நோய்மூலக்கூறின் பின்னணியை வெளிப்படுத்துகிறது.

 அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே மற்றவர்களை சார்ந்து இருந்தாள், தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டாள், யாராவது பழி சுமத்தினால் மனம் வருந்துவாள்; கூருணர்ச்சி உடையவள். பின்னர் தனது மாமாவால் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டாள், அதனால் , சமூக தொடர்புகளைத் தவிர்த்தாள். ஒரு கூச்ச சுபாவமுள்ள மனிதனை மணந்தாள், நிதி ரீதியாக பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது, மாமியார் உறவினர்களால் அவரது நகைகள் பிடுங்கிக் கொள்ளப்பட்டன. அவள் தன்னை ஒரு அடிமையாக உணர்ந்தாள், தனது மகனின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு  குறித்து கவலை கொண்டிருந்தாள்.  இவை அனைத்தும் பாதுகாப்பின்மை (Insecurity=Sycotic) மற்றும் அழிவு (Syphilitic) ஆகியவற்றின் நோய்மூலக்கூறு  நிலையை உருவாக்கியது.

 துயரர் பகுப்பாய்வு மற்றும் மருந்தளித்தல் :

 அந்தப் பெண் மேகவெட்டை-மேககிரந்தி நோய்மூலக்கூறில் இருந்ததால் , அவளுக்கு நேட்ரம் மூர் [ Nat-m], இக்னேஷியா [Ign], செபியா [ Sep], தூஜா [Thuj]  ஆகிய  மருந்துகள்  குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கப்பட்டன. ஆனால், துயரருக்கு முழுநலம் கிடைக்கவில்லை. இந்த கட்டத்தில், அவரின் நோயியல் [ Pathology] அதிகரித்தது, அதனால் , அந்தப் பெண்ணிற்கு உரிய மருந்து அவரின் உண்மையான நோயியல் சார்ந்து கொடுக்கவேண்டும் என்று கருதி அவரை MRI பரிசோதனை எடுக்குமாறு ஆலோசனை தெரிவித்தோம்.

 MRI கண்டுபிடிப்புகள்: பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் ஸ்பெனாய்டு எலும்பில் அழுத்தப்பட்டிருந்தது , பார்வை நரம்பில்  செங்குத்தாக  வளைந்த தன்மை இருந்தது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மூளை அறைகளில் மூளைத்தண்டுவடத் திரவம் இருந்தது [ CSF]. மண்டை ஓட்டின் உள்ளே  உயர் இரத்த அழுத்தம் இருப்பதைக்  காட்டியது. இது அவளுடைய தலைவலி மற்றும் பார்வை குறைபாட்டிற்கான காரணத்தையும்  விளக்கியது. மேலும், இந்த நிலை மேககிரந்தி  நோயியலையும் உறுதிப்படுத்தியது.  அவருக்கு, கீழ்க்காணும் குறிமொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன;

Head– congestion;

Face – haggard;

Female; Menses suppressed with cerebral congestion.

 மேற்கண்ட குறிமொழிகளின் அடிப்படையில் அவருக்கு ,  வெராட்ரம் விராயிடு மருந்து , 200 வது வீரியத்தில் [ VERAT-V 200 C] கொடுக்கப்பட்டது .  மருந்திற்குப் பின்னர்  அவருடைய மாதவிடாய் சீரானது, வலி இல்லை, 7 நாட்களில் நின்றுவிட்டது, தலைவலி மறைந்துவிட்டது. அவருக்கு நான்கு மாதங்கள் வரை SL கொடுத்து நன்றாகப் பராமரிக்கப்பட்டது. பின்னர், வெராட்ரம் விராயிடு- 1M, 10M வீரியத்தில்  மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டது .  இறுதியில், மரபணு உடலமைப்பு அடிப்படையிலான    மருந்து    BAR-M 200- C கொடுக்கப்பட்டது [GCS] .  அந்தப் பெண் நன்றாக நலமடைந்தார்.

 இதே போன்று , கல்லீரல் பிரச்சனைகள் [ Liver Functional  Disorder  ] , முடக்குவாதம் [Rheumatoid Arthritis ] , தைராயிடு இயக்குநீர் [ Thyroid] , உயர் இரத்த அழுத்தம் [ Hypertension] மற்றும் நீரழிவு [ Diabetes] , சிறுநீரகச் செயலிழப்பு [ Renal failure], இரத்தத்தில் பரவும் தொற்று மூலம் விஷமாகுதல் [ Septicemia] ,  சிறுநீர் பிரச்சனைகள்  போன்ற பல நோய்நிலைகளை  ஆய்வக பரிசோதனைக் குறிப்புகள், MRI , வருடல் நுட்பம் [ Scan]  மற்றும் இரத்தப்பரிசோதனைக் குறிப்புகள் மூலம் அந்தந்த நோய்நிலையில் உள்ள நோய்மூலக்கூறை அறிந்து,  உரிய ஹோமியோபதி மருந்தைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது..   

 இவை தவிர , கீழ்காணும் பகுதிகள் விரிவாக விளக்கப்பட்டன;

 

Ø  ஒரு விஷயத்தை உயிரியல் அடிப்படையில்  [ Biology of perception] எவ்வாறு சரியாக புரிந்து கொள்வது ?

 

Ø  மனப்பிரமை அல்லது மருட்சி [ Delusion], போலி எண்ணம் அல்லது போலிக்கருத்து, [ போலி நம்பிக்கை, விழிமாறாட்டத் தோற்றம் =Illusion] , மாயத்தோற்றம் அல்லது பிறழ்த்தோற்றம் [ Hallucination]  பற்றிய வேறுபட்ட புரிதல்.

 

Ø  மருட்சி [ Delusion] மற்றும் பிதற்றல் [ Delirium] இவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடு.

 

Ø  ஆய்வகங்களில் கிடைத்த பரிசோதனைக்குறிப்புகள் மூலம் குறிமொழிகளை எப்படி உருவாக்குவது?

 

Ø  இதயக்கோளாறுகளை அறிந்துகொள்ள உதவும் ECHO, ECG, Angiogram, ECG  - பரிசோதனைக் குறிப்புகள் ஆகியவற்றின் பயன்பாடுகள்.

 

Ø  துயரருக்கு மருந்தளித்த பின் " ஹெரிங் விதிகளின் அடிப்படையில் " நலமாக்கல் எவ்வாறு நிகழும்?

              Ø  கூட்டு நோய்களை [Ex: Diabetes & Hypertension] எவ்வாறு நலப்படுத்துவது ?

          Ø  துயரரின் மனமும் , உடலும் பேசும் மொழி ஒன்றாகவே இருக்கிறது ?. அதை எவ்வாறு                       புரிந்து கொள்வது?

 

மேற்கண்ட நவீன நோயறிதல்களை தூய ஹோமியோபதியுடன் இணைத்து விளக்கிய விதம் மிகவும் ஆழமான மற்றும் உயர்ந்த நிலையில் இருந்தது.

 

இறுதியாக, மருந்தியல் களஞ்சியத்தில் உள்ள மருந்துகளை  அதன் மூலக்கூறு சார்ந்த வகையில் [ Molecular Materia Medica]  எவ்வாறு புரிந்து கொள்வது ?  அதில் உள்ள இயங்குமுறை [ Mechanism] மற்றும் காரப்போலிகள் [ Allkoloids] என்னென்ன ? அம்மருந்தை நிரூபணம் செய்த பிறகு அதன் நலமாக்கும் ஆற்றல்  என்ன? என்பதை நக்ஸ் வாமிக்கா, டிஜிடாலிஸ் , ஆரம் மெட்டாலிக்கம், காக்டஸ், நாஜா மற்றும் லாரொசிரவஸ் போன்ற மருந்துகள் மூலம் விளக்கியவிதம் மிகவும் அருமை. மருந்துகளை , மூலக்கூறுகள் சார்ந்த வகையில் அறிந்து கொள்வதற்கு ரிச்சர்ட் ஹுஜஸ் எழுதிய மருந்தியல் களஞ்சியம் [ A cyclopaedia of Drug Pathogenesy- Richard Hughes]  மிகவும் பயனுள்ளது என்ற குறிப்பையும் கொடுத்தார்கள்.  இதில் ஓ.ஏ. ஜூலியன் எழுதிய “ Dictionary of Homeopathic Materia Medica” என்ற மருந்தியல் களஞ்சியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது எனது பரிந்துரை ஆகும்.

 மொத்தத்தில், இந்த கருத்தரங்கத்தின் மூலம் ஆழமான புதிய செய்திகளை அறிந்து கொண்டோம்.   ஆசிரியர்கள் மரு. கணேஷ் லட்சுமணன்., BHMS, Ph.D , மற்றும்  மரு. சுரேஷ் சம்பத்,  BHMS., MD, ஆகியோர்களின் உழைப்பும், பட்டறிவும் மிகவும் பிரமிக்க வைக்கிறது. இவர்களின் திறமை உலக தரத்தில் உள்ளது. இவர்களை பயன்படுத்திக் கொள்வது தமிழக ஹோமியோபதி உலகிற்கு நன்மை தரும் என்ற திடமான நம்பிக்கையும் எழுதுகிறது. இந்தக் கருத்தரங்கில்,  உரை நிகழ்த்தியதற்காக  ஆசிரியர்கள் இருவரும் எந்த பணப்பரிசையும்   விரும்பவில்லை என்பது, அவர்களின் மீது பெருமதிப்பை வரவழைத்தது. ஹோமியோபதியில், குறிமொழிகள் கூறுவதற்குக்கூட பணம் பெற்றுக் கொள்ளும் இக்காலத்தில் , தமது பரந்துபட்ட அறிவை , உழைப்பை  எந்தப் பிரதிபலனும் பாராமல்  இளம் சந்ததியினருக்கு கடத்துவதை  மிகப்பெரிய சமூகக் கடமையாக கருதுகிறேன்.

 உண்மையில் , இந்த கருத்தரங்கம்  மிகவும் நிறைவாகவும்  , பயனுள்ளதாகவும் இருந்தது. இரவில், சிறுவாணி ஆற்றுப்படுகையில் நடந்த ஹோமியோபதி உரையாடல்களும், மகிழ்ச்சியான குளியல்களும், மின்மினிப்  பூச்சிகளின் ரீங்காரமும்  மனதில் மகிழ்ச்சியைக் கூட்டியது. இளம் மருத்துவர்கள் அனைவரும் உரையாடலில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது, தமிழகத்தில் ஹோமியோபதி மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது என்ற நம்பிக்கையைத் ஏற்படுத்தியது .


 

இந்த அருமையான வாய்ப்பை எங்களுக்குத் தந்த கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் கோவிந்தராஜ் BHMS., மற்றும் அன்பரசு BHMS மற்றும் சத்தர்ஷன்  மையத்தின் உரிமையாளர் அன்புக்குரிய நண்பர் ஆனந்தகுமார்  ஆகியோர்களுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் .

 

கருத்தரங்கில் சில காட்சிகள்:

























அன்பான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டிருக்கும்....

 

சு.கருப்பையா,

மதுரை.

அலைபேசி எண் :+91 94861 02431

19/08/2025

 

தொடர்புக்கு:

 

மரு. கணேஷ் லட்சுமணன்., BHMS, Ph.D; அலைபேசி எண் :+91 98949 99243

மரு. சுரேஷ் சம்பத், BHMS., Msc [Psy]., Msc[ Phy]., SCPH, அலைபேசி எண் :+91 98438 72260

மரு. K.S. கோவிந்தராஜ் BHMS., அலைபேசி எண் :+91 93630 44336

மரு. R. அன்பரசு BHMS., அலைபேசி எண் :+91 98420 42299

திரு. ஆனந்தகுமார், சத்தர்ஷன், அலைபேசி எண் :+91 94896 63755