2. கல்கேரியா
பாஸ்பாரிக்கம் [CALC-P]
இந்த குழந்தைகளின் வரைபடத்தை முன்வைக்கும்
போது, இவர்கள் உடலின் கொழுப்புச்சத்தை இழப்பவர்களாக இருக்கிறார்கள், அவ்வளவு எளிதில்
இவர்களுக்கு எடை அதிகரிக்காது, மற்றும் இவர்களுக்கு அடிநாசதை மற்றும் கழுத்துச் சுரப்பிகள் வீங்கிப் பெருப்பதற்குப் பதிலாக, அதிகமாக
மூக்கடி சதை வளர்ச்சியைக் [ADENOIDS] கொண்டுள்ளது; மற்றும் மூக்கடி சதை வளர்ச்சி
சார்ந்த தொல்லைகள் இருக்கும். கூடுதலாக, இந்த குழந்தைகள் மற்றவர்களுடன் அதிகமாக பழகும்
தன்மையில்லாதவராகவும் இருப்பார்கள், பள்ளியில்
கொஞ்சம் பிரகாசமாகவும் இருப்பார்கள், ஆனால் அதிக வேலை செய்தால் தலைவலி ஏற்படும் மற்றும்
அவர்கள் விஷயத்தில் தலையிட்டு யாரும் தொந்தரவு
செய்வதை விரும்பமாட்டார்கள் , குழந்தை பெரும்பாலும் கல்கேரியா கார்பானிக்கம் மருந்திலிருந்து
, கல்கேரியா பாஸ்பாரிக்கம் மருந்திற்கு கடந்து சென்றிருக்கலாம்.
மேலும், குழந்தைகளின் உடலில் பலபுள்ளிகள்
தென்பட்டு, மெலிந்து, அவர்கள் வளர்ந்து வரும் வலியினால் அவதிப்படத் தொடங்கினால், அவை கல்கேரியா பாஸ்பாரிக்கம்
மருந்தைக் குறிக்கும் கூடுதல் அறிகுறிகளாகும்.
இது சம்பந்தமாக, முக்கியமான விஷயம் என்னவென்றால்,
கல்கேரியா பாஸ்பாரிக்கம் குழந்தைகளின் வலிகள்
அனைத்தும் நிச்சயமாக தசைநார்கள் தொடர்புடையதாக இருக்கும். இதே மாதிரியான வேறு சில குழந்தைகளிடத்தில், தசைகளுக்குப்
பதிலாக எலும்புகளில், குறிப்பாக தாடை எலும்புகளில் வலிகள் ஏற்படுவதைக் காணலாம், அவர்கள் கல்கேரியா பாஸ்பாரிக்கம் போன்று கூச்சசுபாவம் இல்லாதாவர்களாக இருந்தால்
, அது மங்கனீசியம் மெட்டாலிகம் [MANGANESIUM METALLICUM] மருந்திற்குரிய அறிகுறியாகும். எனவே சிறிய வேறுபாடுகள்
இருக்கும் போது, கல்கேரியா மருந்துகளின் குழுவிற்கு வெளியே புதிய மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்
என்பது தெளிவாகிறது.
இவர்கள்
மிகநுண்ணிய ஒல்லியான எலும்புகள் கொண்ட , மெலிந்த மற்றும் உயரமான, மென்மையான, இரத்த
சோகை உள்ள குழந்தைகள். குழந்தை தாயின் மார்பில் பால்குடிக்க மறுக்கும், தாய்ப்பால் உப்பு சுவையாக இருக்கும். கைக்குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பாலூட்ட வேண்டும் என்ற நிலை இருக்கும்
மற்றும் எளிதில் வாந்தி எடுக்கும் , பலவீனமான செரிமானம். காய்ச்சல் இல்லாமல் வலிப்பு
ஏற்படும் . குழந்தைகளின் தொப்புளில் இருந்து இரத்தம் தோய்ந்த திரவம் வெளியேறும். தொடர்ந்து
பாலை வாந்தியெடுக்கும் (தாய்ப்பால் அல்லது மற்ற வகை ). மேலே தூக்கும்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்
(BOR), தாமதமாக நடக்கக் கற்றுக்கொள்ளும். தலைவலியின் போது, கைகளால் தலையைப்
பிடித்துக்கொண்டு அலறும் [
S.M.Gunavante] .
மனக்குறிகள்:
கல்கேரியா பாஸ்பாரிக்கம் குழந்தைகள் எரிச்சல்
மற்றும் சிணுங்கக்கூடியவையாக இருக்கும். அழுது கொண்டேயிருக்கும் மற்றும் தொடர்ந்து குழந்தையின் மீது கவனம் தேவையாக
இருக்கும். சாமோமில்லா, சினா அல்லது ஆன்டிமோனியம்
குரூடம் போன்ற மருந்துகளை நினைவூட்டும் வகையில் அவர்களை தூக்கி வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
வயதான கல்கேரியா பாஸ்பாரிக்கம் குழந்தைகள் மிகவும் கூருணர்ச்சி உடையவர்கள் மற்றும்
பெரும்பாலும் பள்ளியின் அழுத்தங்களுக்கு உள்ளாகி
சிரமப்படுவார்கள். பள்ளிக்குச் செல்லும் வயதில், குழந்தை அடிக்கடி பள்ளிக்குச் செல்ல
பயப்படும், பள்ளிக்குச் செல்வதால் தலைவலி அல்லது வயிற்று வலி போன்ற தொல்லைகள் பகல் நேரத்தில் ஏற்படும் , பெரும்பாலும் மாலை 3 மணிக்கு, அல்லது பள்ளி நாள்
முடியும் நேரத்தில் ஏற்படும் [Roger
Morrison] .
இந்தக்
குழந்தைகளுக்கு வளர்ச்சிப் பிரச்சனைகளும் (மெதுவான, கடினமான பல்முளைத்தல் ) மற்றும்
உள ஆற்றல் பெயல்பாடு திறன்களின் மெதுவான வளர்ச்சி
(15 மாதங்களுக்குப் பிறகு நடக்கக் கற்றுக்கொள்வது) உள்ளன. அவர்களின் சிறுநீரில், அதிக அளவு கால்சியம் பாஸ்பேட்
படிகங்களைக் காணலாம். அவர்களுக்கு மூக்கடிச்
சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்
[ Didier
Grandgeorge ].
இக்குழந்தைகளின்
பெற்றோர் பொதுவாக முதிர்ச்சியற்ற தன்மை, பொறுப்பற்ற அல்லது சமூக விரோத நடத்தை, போதைப்பொருள்
துஷ்பிரயோகம், பொருளாதார மன அழுத்தம் மற்றும் நெருக்கடி, திருமண ஒற்றுமையின்மை, குழந்தைகளின்
மீது வெறுப்பு, மன அழுத்தத்தை சகித்துக்கொள்ள இயலாதநிலை கொண்ட பெற்றோர்களாக இருப்பார்கள்.
ஒற்றைப் பெற்றோராக இருப்பது நிச்சயமாக கல்கேரியா
பாஸ்பாரிக்கம் நிலையை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் [ Farokh Master] .
மோசமான
நினைவாற்றல் காரணமாக, மன வேலைகளை தொடர்ந்து
செய்வதில் சிரமம் இருக்கும். வயதிற்கு மீறிய அறிவாற்றல் உள்ள குழந்தையாக இருக்கும். பயணம் செய்யவும் இங்கும் அங்கும் அலையவும் வலுவான
ஆசை இருக்கும். குழந்தை எப்போதும் நள்ளிரவில் கூட காரில் மகிழ்ச்சியுடன்
சவாரி செய்ய தயாராக இருக்கும்.
இக்குழந்தைகளுக்கு
பாலியல் ரீதியாக அல்லது உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் நோய்கள் ஏற்படும்
. வகுப்பில் மற்றொரு குழந்தை தண்டிக்கப்படும்
போது அல்லது நிந்திக்கப்படும்போது (Nat-m, Staph), இந்தக் குழந்தைகளுக்கு காரணமற்ற
குற்ற உணர்ச்சியுடன் கவலையும் பதற்றமும் ஏற்படும்.
எப்பொழுதும்
நகங்களைக் கடித்துக் கொண்டேயிருக்கும் அல்லது அவர்களது விரல்களை வாயில் வைத்துக் கொள்ளும். குழந்தைக்கு,
எல்லா நேரத்திலும் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் (Cina, Cham ).
அதிகப்படிப்பு,
வாசிப்பு, அல்லது மன உழைப்பு ஆகியவற்றால் மனதில் மந்தம் மற்றும் குழப்பம் ஏற்படும்.
எழுத்து மயக்கம் அல்லது கற்றல் குறைபாடு கொண்ட
[புரிந்து படிக்க இயலாத குழந்தைகள்=DYSLEXIC] குழந்தையாக இருக்கும். அதிகப்படியான கூச்சசுபாவம்
[ TICKLISH] இருக்கும்.
கோழிகளுக்கு
பயம் இருக்கும், அதேபோல் இருள் மற்றும் இடியுடன் கூடிய மழை ஆகியவற்றிற்கும் பயம் இருக்கும்.
கல்கேரியா
பாஸ்பாரிக்கம் குழந்தைகள் விலங்குகளை நேசிக்கும். தண்ணீரில் விளையாடுவது, பொம்மைகளுடன்
விளையாடுவது, கிறுக்கித் தள்ளி விளையாடுவது
போன்றவற்றை விரும்பும் . இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளை விரும்பி அணிவார்கள்.
குழந்தைகள்
எழுதுவதிலும் பேசுவதிலும் பல தவறுகளைச் செய்யும் , எடுத்துக்காட்டாக, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அல்லது வார்த்தைகளைத்
திரும்பத் திரும்பப் பயன்படுத்துதல் போன்ற தவறுகளை செய்யும்.
இவர்கள்
குடும்ப உறுப்பினர்களை விட (Lac-c) நண்பர்களுடன் மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள், அது
அவர்களுக்கு வசதியாகவும் இருக்கும். விமர்சனங்களுக்கும் மற்றவர்களின் கருத்துகளுக்கும்
கூருணர்ச்சி இருக்கும். மேடை ஏறிப் பேச பயம்
இருக்கும். இவர்களைக் கண்டித்தால் அழுவார்கள்
[ Farokh Master] .