தீவிர
நோய்தாக்குதலின் போது , துயரர்களிடமிருந்து குறிகளை பெறுவது சற்று எளிதாக
இருக்கும். பெரும்பாலான துயரர்கள் தங்களது குறிகளை மிகவும் சரளாகமாகவும் ,
துல்லியமாகவும் குறிப்பிடுவார்கள். நாம் தான் கவனத்துடன் இருந்து அவர்கள் கூறும்
குறிகளையும், அறிகுறிகளையும் சேகரிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் சரியான
கேள்வியைக் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆனால் , நாம் தொகுத்து வகைப்படுத்திக்
கொள்ளும் குறிகள் சரியானதாகவும் , அந்த துயரரின் தனித்தன்மையை உள்ளடக்கியதாகவும் இருக்க
வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்து தேர்வும் தவறாகி விடும். இப்படியொரு அனுபவம் சமீபத்தில்
எனக்கு கிடைத்தது.
ஒரு ஆண் துயரர்.
திரு. M ; வயது 48 . திடீரென்று வயிற்றில்
கடுமையான காற்று உப்பிசம். காலை எழுந்தவுடன்
மூன்று முறை வயிற்றுப்போக்கு . அவரால் காலை உணவையும் சாப்பிடமுடியவில்லை. சிறுது சாப்பிட்டவுடன்
குமட்டல் வந்துவிட்டது. நிறுத்திவிட்டார். தொண்டையில் உணவையும் , தண்ணீரையும் விழுங்கமுடியவில்லை.
உள்ளே செல்லாமல் வெளியே வந்து விடுகிறது. வயிற்றின் மேல் பகுதியில் வலி இருக்கிறது
என்று கூறினார். மனக்குறிகள் எதுவும் பிரதானமாக தென்படவில்லை. அதனால் அவரது குறிகளை
கீழ்வரும் குறிமொழிகளாக குறித்துக் கொண்டேன்;
1.
Stomach;
appetite; diminished; morning: carb-v chin gels
2.
Stomach;
flatulence; with: CARB-V CHIN
3.
Stomach;
nausea; eating; after: CARB-V CHIN
4.
Throat;
swallowing; difficult; food; will not go down:
CARB-V chin
5. Rectum; diarrhea; morning: CARB-V chin
(Source:
Complete Dynamics)
மேற்கண்ட குறிகளின் அடிப்படையில் அவருக்கு கார்போ.வெஜ் அல்லது
சைனாவை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் சைனாவில் இருக்கக்கூடிய தளர்ச்சி அவரிடம் இல்லை. அதனால் அதை நீக்கி விட்டேன். ஆனால் , கார்போ.வெஜ்
வயிற்றின் மேல்பகுதியில் வலியை ஏற்படுத்தும் தன்மையையும் , ஜீரண உறுப்புகளையும் சரி
செய்யும் ஆற்றலும் டைத்தது. அதனால் கார்போ.வெஜ் 30 வது வீரியத்தில் நான்கு உருண்டைகள்
கொடுத்து விட்டு சரியாகி விடும் என்று அனுப்பி வைத்தேன்.
ஆனால் , அந்தத்
துயரர் நலமடையவில்லை. அடுத்த நாள் காலை மீண்டும் வந்தார். மருந்து வேலை செய்ததற்கான
அடையாளமே இல்லை என்று தெரிவித்தார். அத்தோடு,
ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாததால் சோர்வாகவும் இருந்தார். இப்போது சைனாவை
30 வது வீரியத்தில்
நம்பிக்கையோடு கொடுத்தேன். ஆனால், மாலை நான்கு மணி வரை அவரது உடல் நலத்தில்
எந்த முன்னேற்றம்
தெரியவில்லை. சிறுதளவு தண்ணீரைக்கூட அவரால் விழுங்க இயலவில்லை. இப்போது துயரரை மீண்டும்
ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. உங்களால் ஏன் உணவையும் , தண்ணீரையும் விழுங்கமுடியவில்லை
?. தொண்டையில் என்ன செய்கிறது? சொல்லுங்கள்
! என்றேன்.
அதற்கு அவர்,
" தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது போல் இருக்கிறது; எதையும் விழுங்க முடியவில்லை
" என்றார். அடடா! இதை நாம் முதலிலேயே
கேட்டிருக்க வேண்டுமல்லவா! இதற்கு மருந்து ஜெல்ஜிமியம் அல்லவா! தவறு செய்து விட்டோமே
என்ற குற்ற உணர்வும் என்னுள் எழுந்தது. அதற்கான குறிமொழி இது தான்;
Throat;
lump sensation; swallowing; could not be swallowed: gels
அதனால், ஜெல்ஜிமியம் மருந்தை 30 வது வீரியத்தில் மாலை ஐந்து மணிக்குக் கொடுத்தேன். ஆறுமணிக்கு துயரர்
நலமடையத் துவங்கினார்; உணவும்,நீரும் எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் இயல்பான நிலைக்கு
திரும்பி அலுவலகம் சென்று விட்டார்.
முதலில் வகைப்படுத்தப்பட்ட குறிகளின் அடிப்படையில் கார்போ.வெஜ்
மற்றும் சைனா மருந்துகள் என்னதான் துயரரின் குறிகளோடு ஓத்திருந்தாலும் , அவரின் உணர்வு நிலைக்கு பொறுத்தமான மருந்தாக " ஜெல்ஜிமியமே
" இருந்திருக்கிறது.
இதைத்தான் மாமேதை ஹானிமன் தமது மணிமொழி 19 இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்; “ஆரோக்கியமான ஒருவரின் ஆரோக்கியநிலையில்
ஏற்பட்டுள்ள மாறுதல்களே நோய் என்று அழைக்கப்படுகின்றன, அம்மாறுதல்கள்களே
நோய்க்குறிகளாக தோற்றமளிக்கின்றன. நோயுற்ற அவரிடம் காணப்படும் அந்நோய்க்குறிகள் நீங்கி ஆரோக்கியநிலை திரும்பினால் தான் நோய்
குணமடைவது சாத்தியமாகும். ஆகவே, உணர்வுநிலை மற்றும் செயல்நிலை (sensations
and functions) சார்ந்து வாழும் அம்மனிதனின் ஆரோக்கிய
நிலைமையை மாற்றும் சக்தி மருந்துகளுக்கு இல்லாவிட்டால் அவைகளால் நோயுற்ற மனிதனிடம்
ஏற்பட்டுள்ள நோய்த்தன்மையை நீக்கமுடியாது என்பது இதிலிருந்து தெளிவாகும். உண்மையிலேயே மருந்துகளின்
குணப்படுத்தும் ஆற்றல் என்பது , மனிதர்களுடைய ஆரோக்கியமான நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைப்
பொறுத்ததே ஆகும்.”
எனக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்த துயரராக இவர் இருக்கிறார்.